புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோடி அரசின் ஓராண்டுச் சாதனைகள் Poll_c10மோடி அரசின் ஓராண்டுச் சாதனைகள் Poll_m10மோடி அரசின் ஓராண்டுச் சாதனைகள் Poll_c10 
21 Posts - 66%
heezulia
மோடி அரசின் ஓராண்டுச் சாதனைகள் Poll_c10மோடி அரசின் ஓராண்டுச் சாதனைகள் Poll_m10மோடி அரசின் ஓராண்டுச் சாதனைகள் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோடி அரசின் ஓராண்டுச் சாதனைகள் Poll_c10மோடி அரசின் ஓராண்டுச் சாதனைகள் Poll_m10மோடி அரசின் ஓராண்டுச் சாதனைகள் Poll_c10 
63 Posts - 64%
heezulia
மோடி அரசின் ஓராண்டுச் சாதனைகள் Poll_c10மோடி அரசின் ஓராண்டுச் சாதனைகள் Poll_m10மோடி அரசின் ஓராண்டுச் சாதனைகள் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
மோடி அரசின் ஓராண்டுச் சாதனைகள் Poll_c10மோடி அரசின் ஓராண்டுச் சாதனைகள் Poll_m10மோடி அரசின் ஓராண்டுச் சாதனைகள் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மோடி அரசின் ஓராண்டுச் சாதனைகள் Poll_c10மோடி அரசின் ஓராண்டுச் சாதனைகள் Poll_m10மோடி அரசின் ஓராண்டுச் சாதனைகள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோடி அரசின் ஓராண்டுச் சாதனைகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 30, 2015 12:16 am

மோடி அரசின் ஓராண்டுச் சாதனைகள் Modi-1yr_page%20banner

நரேந்திர மோடி அரசின் ஓராண்டு நிறைவையொட்டி, இந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட, அறிவிக்கப்பட்டுள்ள முக்கியத் திட்டங்களைப் பற்றிய ஒரு தொகுப்பு:


மோடி அரசின் ஓராண்டுச் சாதனைகள் Make_in_India
மேக் இன் இந்தியா:

தொழில்முனைவோர்கள் வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவேண்டும். இதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி அடையும். உலகின் எந்தப் பகுதியைச் சேர்ந்த நிறுவனமாக இருந்தாலும் சரி, இந்தியாவில் பொருள்களைத் தயாரித்து, அதை வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யவேண்டும். இதன்மூலம் இந்தியாவிலேயே பல கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதுதான் மேக் இன் இந்தியா திட்டத்தின் நோக்கம். இதற்கென பிரத்யேகமாக ஒரு இணையதளத்தையும் ஆரம்பித்துள்ளது மத்திய அரசு.

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க 25 துறைகளைப் பரிந்துரை செய்துள்ளார் மோடி. இதன்மூலம் இந்தியாவில் தொழில் தொடங்க மத்திய அரசு அனைத்து வகையிலும் உதவி செய்யத் தயாராக உள்ளது என்கிற செய்தியை இந்தத் திட்டத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க இந்தத் திட்டம் நல்ல வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஜிடிபியில் உற்பத்தி துறையின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள். (இந்தியாவின் ஜிடிபியில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு 16% மட்டும்தான். ஆனால், சீனாவின் உற்பத்தி அதன் ஜிடிபியில் 36%, தென்கொரியா 34%) சீனா அளவுக்கு உற்பத்தியைப் பெருக்க மேன் இன் இந்தியா சரியான வழிமுறையாக உள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் நாடு முழுக்க ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் உற்பத்தியை அதிகரிக்கவும், 30 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தூய்மை இந்தியா திட்டம்:

இந்தியாவை 5 ஆண்டுகளில் தூய்மைப்படுத்தி ‘தூய்மையான இந்தியா’ என்னும் நிலையை ஏற்படுத்த எண்ணியுள்ளார் மோடி. அதன்படி, மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2 அன்று, ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை மோடி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வுப் பிரசாரத்தை மேற்கொள்ளுமாறு விளையாட்டு, சினிமா தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களுக்கு மோடி அழைப்பு விடுத்தார். நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் இந்தத் திட்டப் பணிக்காக ரூ.20 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மோடி இத்திட்டத்தைத் தொடங்கியபிறகு, நாடு முழுக்க பல இடங்களிலும் அமைச்சர்களும், அதிகாரிகளும், பிரபலங்களும் தூய்மைப் பணியில் ஈடுபட்டார்கள்.

நலத்திட்டங்கள்:

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (வங்கிக் கணக்குகள்), பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி (ஆயுள் காப்பீடு), பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீம யோஜனா (விபத்துக் காப்பீடு), அடல் பென்ஷன் யோஜனா (அமைப்புசாரா துறையினருக்கான ஓய்வூதியம்) போன்ற நல்ல திட்டங்களை மோடி அரசு கொண்டுவந்துள்ளது.

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜ்னா மிக முக்கியமான திட்டம். நாடு சுதந்தரம் அடைந்து 68 ஆண்டுகள் ஆன பிறகும் இந்தியாவில் 68 சதவிகித மக்கள் வங்கிக் கணக்கு இல்லாமல் உள்ளனர். மோடி அரசு அனைவருக்கும் வங்கிச்சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா என்கிற வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. ஏழை மற்றும் பின் தங்கிய மக்கள், அரசு நலத்திட்டங்கள் மூலம் பயன்பெறும் வகையில், 15 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்க திட்டமிடப்படும் என சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். அடுத்தச் சில நாள்களில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட முதல் 7 நாள்களில் நாடு முழுவதும் 5.05 கோடி மக்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. தற்போது 15 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு அதில் 15,800 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

சுகன்ய சம்ரிதி திட்டம் (செல்வமகள்): மோடியின் திட்டங்களிலேயே சூப்பர் ஹிட், செல்வ மகள் சேமிப்புத் திட்டம்தான். பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள், இத்திட்டத்தில் இணையலாம். பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலமாக கணக்கு தொடங்கலாம். இந்தத் திட்டத்தில் இதுவரை இந்தியா முழுவதும் 27 லட்சம் பேர் இணைந்து உள்ளார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 9 லட்சம் பேர். சென்னை மண்டலத்தில் மட்டும் 3.50 லட்சம் பேர். செல்வமகள் திட்டத்தில் இந்திய அளவில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.

எரிவாயு மானியத் திட்டம்:

சமையல் எரிவாயுவுக்கான (எல்பிஜி) நேரடி மானியத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. சமையல் எரிவாயுவுக்கான மானியத்தை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கே நேரடியாகக் கொடுத்து வந்தது. ஆனால் இந்தத் திட்டத்தின் மூலம் எரிவாயுக்கான மானியம் நேரடியாகப் பயனாளிகளுக்கே சென்று விடும். உலகின் மிகப் பெரிய நேரடி மானியத் திட்டம் என்று இத்திட்டம் பாராட்டப்படுகிறது.

அன்னிய முதலீடு

ராணுவம் மற்றும் ரயில்வே துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. பாதுகாப்புத் துறைக்கு தேவையான தளவாடங்களை உற்பத்தி செய்வதில் அன்னிய நேரடி முதலீடு 49% சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரயில்வே துறையில் அன்னிய நேரடி முதலீட்டை ஒரு சில சேவைகளில் 100% வரை அனுமதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது. ரயில்வே துறையின் செயல்பாடுகளில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படாது என்றும் வளர்ச்சி, உள்கட்டமைப்புகளில் மட்டுமே அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி

மோடி அரசு நாடு முழுவதும் 'ஸ்மார்ட் சிட்டி' எனப்படும், அனைத்து நவீன வசதிகளை கொண்ட 100 நகரங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டுக்கு ரூ. 48,000 கோடி ஒதுக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ஸ்மார்ட் சிட்டிக்கும் ஆண்டுக்கு ரூ. 100 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு அளிக்கப்படும். மத்திய அரசு உருவாக்கும் 'ஸ்மார்ட் சிட்டி', 21ம் நூற்றாண்டைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என பிரதமர் மோடி பெருமையுடன் கூறியுள்ளார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலமாக, மென்பொருள் துறைக்குப் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும், அடுத்த 5 முதல் 10 வருடங்களில் சுமார் 4,000 கோடி டாலர் மதிப்பிலான தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று இந்திய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் இத்திட்டத்தை வரவேற்றுள்ளது.

அதிவேக ரயில்கள்

மோடி தலைமையில், ரயில்வே துறை பல சிறப்பான திட்டங்களை நிறைவேற்ற உள்ளது. பெரிய நகரங்களையும், வளர்ச்சி மையங்களையும் இணைக்கும் வகையில் அதிவேக ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதிவேக ரயில்களுக்கான 'வைர நாற்கர' திட்டம் செயல்படுத்தப்படும். மும்பை - அஹமதாபாத் இடையே புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்கு சீனா ஒத்துழைப்பு அளிக்க உள்ளது. இந்தியாவின் 'புல்லட் ரயில்' கனவு நிறைவேறும் காலம் வெகுவிரைவில்.

எய்ம்ஸ் மருத்துவமனைகள்

2015-16 நிதியாண்டில், தில்லியில் உள்ளதைப் போல ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாடு, ஹிமாசல பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி - மருத்துவமனைகள் தொடங்கப்பட உள்ளன. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை ரூ.1,500 கோடி முதல் ரூ.1,800 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துமனை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வங்கதேசத்துடன் நிலப் பகிர்வு ஒப்பந்தம்

அஸ்ஸாம், மேற்கு வங்கம், மேகாலயம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையே ஆங்காங்கே, அண்டை நாடான வங்கதேசத்தின் சில பகுதிகள் உள்ளன. அதேபோல, வங்கதேச எல்லைக்குள்ளும் இந்தியாவுக்குச் சொந்தமான பகுதிகள் உள்ளன. எல்லைகள் முறையாக வரையறுக்கப்படாததால், இரு நாடுகளிலும் ஊடுருவல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்குத் தீர்வு காணும் வகையில், வங்கதேசப் பகுதிகளுக்கு இடையிடையே இருக்கும் இந்தியப் பகுதிகளை அந்நாட்டிடம் கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக இந்தியாவில் இருக்கும் வங்கதேசப் பகுதிகளை எடுத்துக் கொள்வதற்கு ஏற்றவாறு நில எல்லை வரையறைச் சட்டம் மோடி அரசால் கொண்டுவரப்பட்டது. இந்த ஒப்பந்தமானது இந்தியா, வங்கதேசம் ஆகிய இரு நாடுகளுக்கும் பயனளிக்கக் கூடியதாகும்.

வங்க தேசத்துடனான எல்லைப் பிரச்னையைத் தீர்க்க வகை செய்யும், நில எல்லை வரையறை மசோதா, மக்களவை, மாநிலங்களவை என இரண்டிலும் நிறைவேற்றப்பட்டது. மசோதாவை நிறைவேற்ற உறுதுணையாக இருந்ததற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். ‘நில எல்லை வரையறை மசோதா நிறைவேறியிருப்பது இந்தியாவின் ராஜதந்திரத்துக்கு கிடைத்துள்ள வெற்றி’ என வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார்.

கருப்புப் பணம்

வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக சிறப்பு நடவடிக்கைக் குழு ஏற்படுத்தப்படும் என்று பாஜக, தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 3வது நாளில் இதற்கான குழு அமைக்கப்பட்டது. வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.பி. ஷா தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை மோடி அரசு அமைத்தது.

யோகா தினம்

பிரதமர் நரேந்திர மோடி 2014 செப்டம்பரில் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பேசும்போது, சர்வதேச அளவில் யோகா தினம் கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21–ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது ஐ.நா. சபை.

மோடி - ஒபாமா - டைம்

மோடியின் அழைப்பை ஏற்று குடியரசு தினவிழாவில் பங்கேற்றார் அமெரிக்க அதிபர் ஒபாமா. குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முதல் அமெரிக்க அதிபர் என்கிற பெருமையைப் பெற்றார். இந்தியாவுக்கு ஒபாமா வந்தபோது மரபுகளை விலக்கி வைத்து விட்டு, பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்துக்கு நேரில் சென்று ஒபாமாவை ஆரத் தழுவி வரவேற்றார். அந்தத் தருணம் இரு நாடுகளுக்கும் இடையேயான புதிய உறவு மலர்ந்ததற்கான தொடக்கம் என்ற எண்ணம் அனைவருக்கும் எழுந்தது. கடந்த டிசம்பர் மாதம் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு மோடி சென்றிருந்தபோது அவரை "செயல் வீரர்' என்று ஒபாமா பாராட்டியது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. மோடி பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டது முதலே, அவரது தலைமைப் பண்புகளைப் பாராட்டி ஒபாமா பேசி வருகிறார்.

டைம் பத்திரிகை வெளியிட்ட உலக அளவில் புகழ்பெற்ற 100 பேரின் பட்டியலில் நரேந்திர மோடியின் பெயரும் இடம்பெற்றது. அதே பத்திரிகையில், இந்தியத் தலைமை சீர்திருத்தவாதி என்ற தலைப்பில் மோடி பற்றி ஒபாமா கட்டுரை எழுதினார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து ஒரு நாட்டின் பிரதமராக மோடி உயர்ந்ததைப் பற்றி அக்கட்டுரையில் ஒபாமா விவரித்திருந்தார். "உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவராக மோடி விளங்குகிறார்; மோடியின் வாழ்க்கை எவ்வாறு அடிமட்டத்தில் தொடங்கி உச்ச நிலையை அடைந்ததோ அதைப் போலவே, இந்தியாவின் எழுச்சியும் அமைந்துள்ளது' என்று அந்தக் கட்டுரையில் ஒபாமா தெரிவித்திருந்தார்.

பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கி:

இந்தியா, பிரேசில், சீனா, ரஷியா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை அங்கமாக கொண்டது "பிரிக்ஸ்' அமைப்பு. கடந்த வருடம் ஜூலையில் பிரேசிலில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் புதிய வளர்ச்சி வங்கியை ஆரம்பிக்க மோடி ஆலோசனை கூறினார். இந்தியாவின் வலியுறுத்தலை ஏற்று ஆரம்பக் கட்டமாக, 5 நாடுகளும் தங்கள் பங்களிப்பாக இந்திய மதிப்பில் தலா ரூ. 60 ஆயிரம் கோடி வீதம், ரூ.3 லட்சம் கோடியை முதலீடு செய்தன. இந்த வங்கியின் முதல் தலைவர் பதவி இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. புதிய வளர்ச்சி வங்கி தொடங்கப்பட்டது இது, இந்தியாவுக்கு கிடைத்த வெற்றியாக மதிப்பிடப்பட்டது. 'புதிய வளர்ச்சி வங்கி' என்ற பெயர் பிரதமர் நரேந்திர மோடியால் சூட்டப்பட்டது. பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கி குறித்து பேசிய மோடி, இது குறிப்பிடத்தக்க முயற்சியாகும். 2012-ல் டெல்லியில் எடுக்கப்பட்ட முயற்சி இப்போது சாத்தியமாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

பள்ளிகளில் கழிப்பறை:

கோடை விடுமுறைக் காலத்தைப் பயன்படுத்தி பள்ளிகளில் கழிப்பறைகளை கட்டுமாறு மாநில முதல்வர்களுக்கு மோடி வேண்டுகோள் விடுத்தார். குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வகையில் பள்ளிகளில் கழிப்பறை வசதி ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தியவர், பள்ளிகளில் கழிப்பிடங்களைக் கட்டித்தர இந்தியத் தொழில் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

உயர்கல்வி:

ஐஐடி மற்றும் ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாக்கப்படும் என மோடி அரசு அறிவித்தது. அதன்படி, முதல்கட்டமாக 18 உயர்கல்வி நிறுவனங்களை திறப்பதற்கு மத்திய அரசு முடிவெடுத்தது.

முத்ரா வங்கி:

சிறு, குறு மற்றும் நடுத்தர ரகத் தொழிலுக்கு நிதி உதவி கிடைக்க முத்ரா வங்கி தொடங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஏப்ரல் மாதம் முத்ரா வங்கியைத் தொடங்கினார் பிரதமர் மோடி. (Micro Units Development Refinancing Agency Bank என்பதன் சுருக்கம்தான் முத்ரா வங்கி) சரியான நேரத்தில் பணவசதி இல்லாமல் அவதிப்படும் தொழில்துறையினருக்கு நிதி கிடைக்கச் செய்வதற்காகத் தொடங்கப்பட்டுள்ளதுதான் முத்ரா வங்கி திட்டம். இதில் ரூ. 10 லட்சம் வரை குறைந்த வட்டிக்குக் கடன் பெற முடியும்.

சிறு வணிகர்களுக்கான மேம்பாட்டுக்காக முத்ரா வங்கிக்கு இந்த பட்ஜெட்டில் 20,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது மத்திய அரசாங்கம். இதனால் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 10 லட்சம் வரை கடன் வழங்க முடியும். நாட்டில் 5.75 கோடி சுய தொழில் நிறுவனங்கள் உள்ளன. இத்துறைக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைப்பதற்காக முத்ரா வங்கி தொடங்கப்பட்டுள்ளது.

தினமணி




மோடி அரசின் ஓராண்டுச் சாதனைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 01, 2015 12:29 am

வெளிநாட்டுப் பயணங்கள் அர்த்தமுள்ளவைதான் !

ஸ்பெக்ட்ரம், காமன் வெல்த் என முந்தைய ஆட்சியில் நடந்த முறைகேடுகள், ஊழல் வழக்குகள் அனைத்தும் சர்வதேச செய்திகளாக மாறி இருந்தன. அரசு அதிகாரிகள் முடிவுகளை எடுக்கத் தயங்கினர். அதனால், அந்நிய முதலீடுகள் வரவில்லை. இந்திய முதலாளிகளும் இந்தியாவில் முதலீடு செய்வதைத் தவிர்த்து, வெளிநாடுகளில் முதலீடு செய்ய ஆரம்பித்தனர். அரசு நிர்வாகமும் பொருளாதாரமும் மீள முடியாத சரிவை அடைந்து இருந்தது.

அந்தக் காட்சிகள் எல்லாம் இப்போது மாறி இருக்கின்றன. தொழில் செய்ய விரும்புகிற எல்லோருக்கும் சமமான வாய்ப்பு, வெளிப்படையான நடைமுறை என்பது மோடி அரசின் அணுகுமுறையாக இருக்கிறது. ‘கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, பெற வேண்டியதைப் பெறுவது’ என்ற பன்னெடுங்காலப் பழக்கத்தைக் கைவிட்டு, அரசு நிர்வாகம் சரியான பாதையில் செல்லத்தொடங்கி இருக்கிறது.

புதிய அரசின் அரசியல் தலைமை, தான் பயணிக்க வேண்டிய பாதையைத் தீர்மானம் செய்துவிட்டது. ஆனாலும், அதிகாரிகள் வர்க்கம் அரசியல் தலைமையைப் பின் தொடர்ந்து, அதே வேகத்துடன் பயணிக்கவில்லை. இதுகூட, புதிய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் மெதுவாக நடப்பது போன்ற தோற்றத்தை உண்டாக்குகிறது என்று எண்ணுகிறேன். ‘சிகப்பு நாடா’ என்கிற பல கட்ட அனுமதி முதலான நிர்ப்பந்தங்கள், தொழில் நிறுவனங்கள் வேகமாகச் செயல்படுவதற்குத் தடையாக இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் புதிய அரசு நீக்கி இருக்கிறது. பல நிர்ப்பந்தங்கள் இன்னமும் தொடர்கின்றன.

எல்லா கட்டுப்பாடுகளையும் அதிரடியாக நீக்கி, முழுமையான தாராளமய நிலையை உண்டாக்க வேண்டும் என்று தொழிலதிபர்கள் எதிர்பார்க்கிறார்கள். வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இதே காரணத்தால்தான், இந்தியாவுக்கு வர இன்னும் தயங்குகிறார்கள். ஆனால், எல்லா நிபந்தனைகளையும் அதிரடியாக நீக்கிவிடுவது ஆபத்தாகிவிடும் என்ற அச்சம் மத்திய அரசுக்கு இருக்கிறது.

மோடியின் இந்த ஒரு வருட ஆட்சிக் காலத்தில், பொருளாதார ரீதியிலான முன்னேற்றம் என்று சொல்லிக்கொள்ளக்கூடிய மாற்றம் எதுவும் நடந்து விடவில்லை. மத்திய அரசின் பட்ஜெட் பற்றாக்குறை குறைந்து இருக்கிறது. அரசின் நேரடி வரி வருவாய் குறைந்து இருக்கிறது. மறைமுக வரி வருவாய் அதிகரித்து இருக்கிறது. இதுவும் கூட, விற்பனையின் உயர்வால் உண்டாகிவிட்டதாகச் சொல்ல முடியாது. பெட்ரோலியப் பொருட்கள் மீதான சுங்க வரி உயர்வால்தான் இதுவும் கிடைத்து இருக்கிறது.

அரசின் செலவினங்களில் திட்டம் சாராத, அதாவது வருவாயைப் பெருக்க உதவும் செலவினங்கள் குறைக்கப்பட்டு இருக்கின்றன. நிதி சார்ந்த விஷயங்களில் முந்தைய அரசின் நிலைக்கும் மோடி அரசின் நிலைப்பாட்டுக்கும் இடையே பெரிய மாற்றம் இல்லை என்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள். ‘மோடி அரசுக்கு என்று தனித்துவமான பொருளாதாரக் கொள்கை என ஒன்று இருக்கிறதா என்பதே கேள்வியாக இருக்கிறது. மோடி தனது இலக்கை எட்ட தனித்துவமான பொருளாதாரக் கொள்கையை வகுத்துக் கொண்டு செயல்படுத்துவது அவசியம்’ என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் விமர்சனங்களுக்கு உள்ளாகின்றன. இந்த விமர்சனங்கள் மிகவும் தவறானவை. மோடியின் 18 வெளிநாட்டுப் பயணங்களும், வெறும் ராஜாங்க உறவுகள் தொடர்பானவையாக மட்டும் இருக்கவில்லை. வர்த்தகம், தொழில், முதலீடுகள், பாதுகாப்பு ஆகியவற்றை பிரதானமாகக்கொண்டே நிகழ்ந்திருக்கின்றன. வெளிநாடுகளுக்குச் சென்று அரசின் தலைவர், தொழில் அதிபர்களைப் பார்க்கிறார். அங்கு வாழும் இந்தியர்களையும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சந்தித்து உரையாற்றுகிறார். வருங்காலத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை கொண்டு வந்தால் அவர்களுடைய ஆதரவைப் பெறும் வகையில் மோடி இப்போதே முயன்று வருகிறார் என நினைக்கிறேன். ஆக, வெளிநாட்டுப் பயணங்கள் அர்த்தமுள்ளவைதான்!

மானியங்களும் சலுகைகளும் கொடுத்து கவர்ச்சி அரசியல் செய்வதில் இருந்து மோடி அரசு வேறுபட்டு நிற்கிறது. இந்த 60 ஆண்டுகளில் நாடு ஒட்டுமொத்த இயல்பான வளர்ச்சியைக் கூட இன்னும் அடையவில்லை. அதற்கான முயற்சி மேற்கொள்ளும் பிரதமர் நமக்கு கிடைத்துள்ளார். அதற்காக, நாட்டை மோடி சொர்க்கபூமி ஆக்கிவிடுவார் என்று சொல்லவில்லை. ஆனால், நாடு அதை நோக்கி செல்லத்தொடங்கி இருக்கிறது.

வசந்தன் பெருமாள், அரசியல் மற்றும் அரசு நிர்வாக விமர்சகர்.




மோடி அரசின் ஓராண்டுச் சாதனைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 3:00 pm

இத்துடன் இந்த 12 ரூபாய் இன்சுரன்ஸ் திட்டமும் மிக நன்றே



ஈகரை தமிழ் களஞ்சியம் மோடி அரசின் ஓராண்டுச் சாதனைகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jun 01, 2015 3:42 pm

balakarthik wrote:இத்துடன் இந்த 12 ரூபாய் இன்சுரன்ஸ் திட்டமும் மிக நன்றே
மேற்கோள் செய்த பதிவு: 1140331

இந்த திட்டம் 50 வயசுக்கு மேல உள்ளவங்கக்கு தான் .... 50 வயசுக்கு உள்ள இருக்குறவங்களுக்கு வருசத்துக்கு 330-00 சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 5:27 pm

ஜாஹீதாபானு wrote:
balakarthik wrote:இத்துடன் இந்த 12 ரூபாய் இன்சுரன்ஸ் திட்டமும் மிக நன்றே
மேற்கோள் செய்த பதிவு: 1140331

இந்த திட்டம் 50 வயசுக்கு மேல உள்ளவங்கக்கு தான் .... 50 வயசுக்கு உள்ள இருக்குறவங்களுக்கு வருசத்துக்கு 330-00 சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1140341
இல்ல இல்ல இதுக்கு 18-70 வயது இருக்கணும்

மோடி அரசின் ஓராண்டுச் சாதனைகள் Pradhan-mantri-suraksha-bima-yojna-small



ஈகரை தமிழ் களஞ்சியம் மோடி அரசின் ஓராண்டுச் சாதனைகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 5:29 pm

மோடி அரசின் ஓராண்டுச் சாதனைகள் Pradan-matri-atal-pension-yojna



ஈகரை தமிழ் களஞ்சியம் மோடி அரசின் ஓராண்டுச் சாதனைகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 5:30 pm

மோடி அரசின் ஓராண்டுச் சாதனைகள் Pradhan-mantri-jeevan-jyoti-bima-yojna-small



ஈகரை தமிழ் களஞ்சியம் மோடி அரசின் ஓராண்டுச் சாதனைகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 5:35 pm

மேலும் விரிவான விளக்கத்திற்கு இந்த முகவரியில் சென்று பாருங்கள்

jansuraksha.gov.in

முழுமையான திட்டங்களுக்கு

Department of Finance



ஈகரை தமிழ் களஞ்சியம் மோடி அரசின் ஓராண்டுச் சாதனைகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக