புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 நரகத்தின் மொழி Poll_c10 நரகத்தின் மொழி Poll_m10 நரகத்தின் மொழி Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
 நரகத்தின் மொழி Poll_c10 நரகத்தின் மொழி Poll_m10 நரகத்தின் மொழி Poll_c10 
31 Posts - 44%
jairam
 நரகத்தின் மொழி Poll_c10 நரகத்தின் மொழி Poll_m10 நரகத்தின் மொழி Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
 நரகத்தின் மொழி Poll_c10 நரகத்தின் மொழி Poll_m10 நரகத்தின் மொழி Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
 நரகத்தின் மொழி Poll_c10 நரகத்தின் மொழி Poll_m10 நரகத்தின் மொழி Poll_c10 
1 Post - 1%
சிவா
 நரகத்தின் மொழி Poll_c10 நரகத்தின் மொழி Poll_m10 நரகத்தின் மொழி Poll_c10 
1 Post - 1%
Manimegala
 நரகத்தின் மொழி Poll_c10 நரகத்தின் மொழி Poll_m10 நரகத்தின் மொழி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 நரகத்தின் மொழி Poll_c10 நரகத்தின் மொழி Poll_m10 நரகத்தின் மொழி Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
 நரகத்தின் மொழி Poll_c10 நரகத்தின் மொழி Poll_m10 நரகத்தின் மொழி Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
 நரகத்தின் மொழி Poll_c10 நரகத்தின் மொழி Poll_m10 நரகத்தின் மொழி Poll_c10 
13 Posts - 4%
prajai
 நரகத்தின் மொழி Poll_c10 நரகத்தின் மொழி Poll_m10 நரகத்தின் மொழி Poll_c10 
9 Posts - 3%
jairam
 நரகத்தின் மொழி Poll_c10 நரகத்தின் மொழி Poll_m10 நரகத்தின் மொழி Poll_c10 
4 Posts - 1%
Jenila
 நரகத்தின் மொழி Poll_c10 நரகத்தின் மொழி Poll_m10 நரகத்தின் மொழி Poll_c10 
4 Posts - 1%
Rutu
 நரகத்தின் மொழி Poll_c10 நரகத்தின் மொழி Poll_m10 நரகத்தின் மொழி Poll_c10 
3 Posts - 1%
Guna.D
 நரகத்தின் மொழி Poll_c10 நரகத்தின் மொழி Poll_m10 நரகத்தின் மொழி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 நரகத்தின் மொழி Poll_c10 நரகத்தின் மொழி Poll_m10 நரகத்தின் மொழி Poll_c10 
2 Posts - 1%
Baarushree
 நரகத்தின் மொழி Poll_c10 நரகத்தின் மொழி Poll_m10 நரகத்தின் மொழி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரகத்தின் மொழி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 23, 2015 11:56 pm

 நரகத்தின் மொழி 201504231255192489_Hells-language_SECVPF

'பொய் பேசுதல் மகாபாவம். பொய் நாவு அருவருப்பானது. பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது' என்றெல்லாம் நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

புத்தர் கூறிய இல்லறத்தார்க்குரிய ஐந்து ஒழுக்கங்களில் 'வாய்மையும்' ஒன்று. 'வாய்மையே வாழ்வின் அழகு'.

ஒருவன் பொய்பேசத் துணிந்துவிட்டால், அவன் எந்தப் பாவத்தையும் செய்யத் தயங்கமாட்டான். அக்கிரம அநியாயங்கள் அவனுக்குச் சர்வ சாதாரணமாகிவிடும். வார்த்தையில் உண்மை இல்லாதவனின் வாழ்க்கை அவலட்சணமாக இருக்கிறது. ஏனெனில் பொய் என்பது ஓர் ஒழுக்கக்கேடு.

சிறியவர்கள் பொய் சொன்னால், பெரியவர்கள் அவர்களைக் கண்டித்துத் திருத்தலாம். ஆனால் பெரும்பாலான சிறுவர்கள், மரியாதைக்குரிய பெரியவர்களிடமிருந்து பொய் சொல்லக் கற்றுக்கொள்கிறார்கள்.

பின்னர் அவர்களிடமே பொய்சொல்லத் தொடங்குகிறார்கள். கையில் நூறு ரூபாயைக் கொடுத்து கடையில் பொருள் வாங்கிவரச் சொன்னால், எண்பது ரூபாய்க்கு பொருள் வாங்கிக் கொண்டு, இருபது ரூபாயை கால்சட்டைப் பைக்குள் பதுக்கிக் கொள்வதற்குப் பொய்தான் துணை செய்கிறது.

வீட்டில் தொடங்கிய பொய், பின்னர் வீதிகளில், பள்ளியில், கல்லூரியில், வேலை செய்கிற இடத்தில் என வாழ்வின் எல்லா தளங்களிலும் சங்கிலிக் கண்ணிகள் போல் தொடர்கிறது.

எதற்கெடுத்தாலும் பொய், எங்கே போனாலும் பொய், வாய் திறந்தால் பொய் என்று பொய்யையே பேசிப் பழகியவர்களுக்கு மனதில் வெளிச்சம் இருக்காது. தர்ம நியாயம் பற்றிய சிந்தனையோ, பின்விளைவுகள் பற்றிய அச்ச உணர்வோ துளியளவு கூட அவர்களிடம் நாம் பார்க்க முடியாது.

ஒரு பொய்யை மறைப்பதற்குப் பத்துப் பொய்கள். அந்த பத்துப் பொய்களைப் பேணிக்காப்பதற்கு நூறு பொய்கள். இப்படியே போனால் வாழ்க்கை எதில் போய் முடியும்!

துணிந்து பொய்பேசித் திரிகின்றவர்களின் கால்கள் சுடுகாட்டில் நடக்கின்றன. அவர்களின் கண்கள் இருளையே தரிசிக்கின்றன. அவர்களின் கைகள் பெறுகின்ற அத்தனையும் கொடிய சாபங்களாகின்றன. அவர்கள் வார்த்தைகளைப் போலவே வாழ்க்கையும் பொய்யாகிப் போகின்றது.

ஆனால் உண்மையுடன் வாழ்கின்றவர்களின் வாழ்க்கை தர்மதேவன் கோவிலின் தீபம் போல் திகழ்கின்றது. வாய்மை என்பது விலையேறப்பெற்ற வைரமாய் ஜொலிக்கிறது. வாழ்க்கை அழகு பெறுகிறது. எனவேதான் 'யான் உண்மையாகக் கண்ட அறங்களுள் வாய்மை கூறுவது போல நல்ல அறம் யாதொன்றும் இல்லை' என்றான் வள்ளுவன்.

சிறுவயதிலிருந்து பிள்ளைகளுக்கு வீட்டில் நல்லவற்றைக் கற்பிக்க வேண்டும். மிகச்சிறந்த வாழ்க்கையின் முதல் முக்கிய அம்சமாக இருக்கின்ற வாய்மையின் மகத்துவத்தை அவர்களின் மனதில் பதியச் செய்ய வேண்டும். இதையெல்லாம் செய்வதற்கு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.

ஆனால் பல குடும்பங்களில் பெரியவர்கள் அதைப் பற்றிச் சிந்திப்பதே இல்லை. அப்பா பொய் சொல்கிறார் என்பதை ஒரு விஷயத்தில் பையன் கண்டுகொண்டால் போதும்; அதுவரையில் அவர்மீது அவன் கொண்டிருந்த நம்பிக்கையும் நன்மதிப்பும் அடியோடு தகர்ந்துவிடும்.

அதன்பின்னர், அவர் எதைச் சொன்னாலும் அது பொய்யாகவே அவனுக்குத் தோன்றும். அவர் சொல்வதில் எதையும் முழுமையாக நம்புவதற்குத் தயங்குவான். குறைந்தபட்சம் பாதிக்குப் பாதி பொய் கலந்திருக்கும் என்றுதான் எண்ணுவான்.

'அப்பாவே பொய் சொல்லும்போது நான் சொல்லக்கூடாதா? அவரே அப்படிச் செய்யும்போது நான் இப்படிச் செய்யக் கூடாதா?' என்று தனக்குள்ளே தர்க்கித்து துணிச்சலுடன் பொய்சொல்லத் தயாராகி விடுவான்.

தவறான பாதையில் தாறுமாறாக வளர்த்துவிட்டபின் புலம்புவதில் பயன் இல்லை. உன்னத பண்புகளில் பிள்ளைகள் வளர வேண்டுமெனில், அதற்கேற்ற விதத்தில் பெரியவர்கள் தங்களை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும்.

உள்ளதை உள்ள படிச் சொல்வதே வாய்மை. சிலர் தங்களைப் பற்றிய சின்னச் சின்ன விஷயங்களையும் மிகைப்படுத்திப் பேசுவார்கள். ஆனால் அடுத்தவர்கள் பற்றிய அருமையான விஷயங்களை விழுங்கி விழுங்கி அரைகுறையாகப் பேசுவார்கள். மிகைப்படுத்தல், குறைத்துரைத்தல், புனைந்துரைத்தல் இவையெல்லாம் பொய்யின் அம்சங்கள்தான்.

பொய் எங்கிருந்து புறப்படுகிறது?அது பொல்லாத இதயத்திலிருந்து புறப்பட்டு வார்த்தைகளில் வெளிப்படுகிறது.

பொய்சாட்சி சொல்கிறவன் தனது மனச்சாட்சியைக் கொன்று விடுகிறான். அதுமட்டுமல்ல, யாரோ ஒரு நிரபராதியின் வாழ்க்கையை அவன் அழிக்கிறான்.

பேராசை கொண்டவன் குறுக்கு வழியில் சம்பாதிப்பதற்காக பெரிய பெரிய பொய்களைச் சொல்கிறான். மற்றவர்களைச் சுரண்டுகிறான்.

பொறாமைப்படுகிறவன் அடுத்தவன் பெயரைக் கெடுப்பதற்காக ஆயிரம் பொய்களைப் புனைந்துரைக்கிறான். அதிலே மகிழ்ச்சி அடைகிறான்.

ஆணவக்காரன் தன்னைப் பெருமைப்படுத்திக் கொள்வதற்காக பல்வேறு பொய்களைச் சொல்கிறான். அதன்மூலம் மற்றொருவனின் பெருமைகளை இருட்டடிப்புச் செய்வதில் மனநிறைவு காண்கின்றான்.

பொய் பொல்லாதது. பொய் என்னும் விஷம் நற்பண்புகளை அழிக்கும். நாலு பேருக்கு மத்தியில் மதிப்பைக் கெடுக்கும். குடும்பத்திற்குள் கலகமூட்டும். உறவுகளுக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தும். ஏனெனில் பொய் என்பது நரகத்தின் மொழி. அதனால்தான் பொய்பேசுதல் கொடிய பாவம் என்று அறநூல்கள் பேசுகின்றன.

பஞ்ச பாண்டவர்களில் மூத்தவர், தான தர்மங்களில் கர்ணனுக்கு நிகரானவர்; சத்தியத்தின் முழு வடிவமாக விளங்கியவர் தர்ம புத்திரர். அத்தகைய சிறப்புகள் மிக்க தர்மபுத்திரரே ஒரு முறை நரகத்துக்குச் செல்ல நேர்ந்தது. ஏன் தெரியுமா? தமது வாழ்நாளில் பொய்யே பேசி அறியாத தர்மர், யுத்த களத்தில் ஒரே ஒரு பொய்யைச் சொன்னார், அதனால்தான்!

பாரத யுத்தம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. பாண்டவர்க்கும் கவுரவர்க்கும் போர்க்கலைகளைக் கற்றுக்கொடுத்து வளர்த்த துரோணாச்சாரியார், கவுரவர்களுக்கு ஆதரவாகப் பாண்டவர்களின் படைகளை வீழ்த்திக் கொண்டிருந்தார்.

துரோணரை யாராலும் வெல்ல முடியாது. அவர் கையில் அஸ்திரங்கள் இருக்கும்வரை, நேருக்கு நேர் நின்று அவரை வெல்ல வேண்டும் என்று யார் நினைத்தாலும் அது நடக்காது. ஆனால் கண்ணபிரானோ பாண்டவர் பக்கம்.

போர் தொடங்குவதற்கு முன் துரோணாச்சாரியார், 'மக்களின் நம்பிக்கைக்கு உரியவர்களில் யாரேனும் ஒருவர், என் மனம் விரும்பத்தகாத ஒரு விஷயத்தைச் சொல்லக் கேட்கின்ற நிலை எனக்கு ஏற்பட்டால், அப்போதே என் கையில் உள்ள அஸ்திரங்களைத் தூக்கி எறிந்துவிட்டுத் தியானத்தில் ஆழ்ந்துவிடுவேன்' என்று சொல்லியிருந்தார்.

அதை பாண்டவர்களுக்கு கண்ணன் நினைவுபடுத்தினான்.

இந்த தர்ம யுத்தத்தில் நாம் வெற்றிபெற வேண்டுமெனில், துரோணர் தமது கையிலிருந்து அஸ்திரங்களைத் தூக்கி எறிய வேண்டும். எனவே அதற்கான வழிகளைச் சிந்தியுங்கள் என்று கண்ணபிரான் சொல்ல, பாண்டவர்கள் சிந்தனையில் ஆழ்ந்தனர்.

பீமசேனனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அதனை எல்லாரிடமும் சொல்லிவிட்டு, அங்கிருந்து துரோணரின் அன்புமகன் அசுவத்தாமன் போர் புரிந்து கொண்டிருந்த இடம்நோக்கித் தன் தேரைச் செலுத்தினான். பின்னர் அவனுடன் கடும்போர் புரிந்தான். தேருடன் தூக்கி வீசப்பட்ட அசுவத்தாமன், யுத்த களத்தில் இருந்து வெகுதூரத்தில் போய் விழுந்தான்.

உடனடியாக பீமசேனன், கவுரவர்களின் படையில் இருந்த 'அசுவத்தாமா' என்னும் பெயர் கொண்ட யானையை அடித்து வீழ்த்திக் கொன்றான். அதன்பின் விரைந்து சென்று துரோணாச்சாரியாருக்குக் கேட்கும்படி 'அசுவத்தாமன் கொல்லப்பட்டான்' என்று உரத்த குரல் எழுப்பினான்.

அதைக்கேட்ட துரோணர் பதறிப் போனார். ஆனாலும் பீமசேனின் வார்த்தைகளை அவர் நம்பவில்லை. உண்மையைத் தெரிந்து கொள்வதற்காக, அவர் தமது தேரை தர்ம புத்திரர் இருந்த இடம் நோக்கிச் செலுத்தினார்.

தர்மபுத்திரருக்குத் தர்மசங்கடமான நிலை. 'பீமன் சொல்வது உண்மையா?' என்று துரோணர் கேட்க, வேறு வழியின்றி 'ஆம், அசுவத்தாமன் கொல்லப்பட்டான்' என்று சொல்லிவிட்டார் தர்மபுத்திரர்.

அவ்வளவுதான்! தமது கையிலிருந்த அஸ்திரங்களைத் தூக்கி எறிந்துவிட்டுக் கண்ணீருடன் அங்கிருந்து அகன்றார் துரோணர்.

தமது வாழ்நாளில் எந்தவொரு பொய்யும் கூறியிராத தர்மபுத்திரர், யுத்த களத்தில் துரோணரிடம் சொன்ன அந்த ஒரே ஒரு பொய்யின் காரணமாக, ஒரு முறை மட்டும் நரகத்தைக் காணும்படி நேர்ந்ததாம்.

ஆனால் இங்கு நாம் காண்கின்ற மனிதர்களில் பெரும்பாலானோர் சரளமாகப் பொய் பேசுகிறார்கள். சுயநலத்துக்காகக் கூட்டியும் குறைத்தும் எப்படியெல்லாமோ கதையளக்கிறார்கள். ஒரு பொய் எத்தகைய பொல்லாத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதே இல்லை.

ஒருவரிடம் கூறிய பொய்யை, மீண்டும் ஒருமுறை கண்ணாடி முன் நின்று சொல்லிப் பார்த்தால் தெரியும், பொய் முகத்தின் அவலட்சணம்.

பொய்சொல்லிப் பெறுகின்ற லாபம் சாபமாகிறது. பொய்யும் புரட்டும் புரிகின்ற வாழ்க்கை நரகமாகிறது. எனவே, எந்தச் சூழ்நிலையிலும் பொய்சொல்லக் கூடாது என்னும் மன உறுதிப்பாடு, நல்ல வாழ்க்கைக்கு அவசியமாகிறது.

உண்மை துலங்கும் வீடுகளில் எல்லா நன்மைகளும் உண்டாகும். பெற்றோர்கள் பெருமிதம் கொள்ளும் வகையில் பிள்ளைகள் நற்பண்புகளில் செழித்தோங்குவார்கள். பழிபாவங்கள் அவர்களை அண்டாது.

எனவே வாய்மையைப் போற்றுங்கள். நேர்மையுடன் வாழுங்கள்.

அதுதான் வாழ்வெனச் சொல்லுகிறேன்.
நீங்கள் வாழ்வாங்கு வாழ்ந்திடச் சொல்லுகிறேன்.

தினத்தந்தி
 நரகத்தின் மொழி Purple10




 நரகத்தின் மொழி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக