புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர்பிள்ளை, Poll_c10மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர்பிள்ளை, Poll_m10மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர்பிள்ளை, Poll_c10 
30 Posts - 50%
heezulia
மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர்பிள்ளை, Poll_c10மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர்பிள்ளை, Poll_m10மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர்பிள்ளை, Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர்பிள்ளை, Poll_c10மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர்பிள்ளை, Poll_m10மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர்பிள்ளை, Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர்பிள்ளை, Poll_c10மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர்பிள்ளை, Poll_m10மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர்பிள்ளை, Poll_c10 
72 Posts - 57%
heezulia
மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர்பிள்ளை, Poll_c10மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர்பிள்ளை, Poll_m10மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர்பிள்ளை, Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர்பிள்ளை, Poll_c10மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர்பிள்ளை, Poll_m10மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர்பிள்ளை, Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர்பிள்ளை, Poll_c10மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர்பிள்ளை, Poll_m10மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர்பிள்ளை, Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர்பிள்ளை,


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri Jan 09, 2015 8:04 pm

மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர்பிள்ளை, 9l4xrwzQr6PI9xekgKyQ+10917300_880575351992795_5248702684016111992_n
மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர்பிள்ளை, 1996-ல் ஹாட் டாப்பிக்கில் இருந்தவர். 1999-ல் ஒரு நிறுவனத்தையும்
தொடங்கி, ஒன்பது மாதங்களில் 15 லட்சம் லிட்டர் 'மூலிகை பெட்ரோலை' உற்பத்தி செய்து விற்பனை செய்தார். விலை மலிவு என்பதால் பலரும் வாங்கினர்.
அதன் பிறகு ராமர் பிள்ளை மீது விதவிதமான குற்றச்சாட்டுகள், ரெய்டு, வழக்கு என்று பல்வேறு
அலைக்கழிப்புகள்... தற்போது வழக்கு விசாரணை முடிவடையும் நிலையில் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார் அவர்.
இதற்கிடையே நண்பர்கள் மூலம் டச்சு நாட்டின் மிக முக்கிய ஆய்வகத்தில் இவரது மூலிகை எரிபொருள் சோதனை செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் அமெரிக்காவில் காப்புரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளார், ராமர் பிள்ளை. அந்தக் காப்புரிமையைப் பெறக்
காத்திருக்கும் ராமர்பிள்ளையை சென்னை சூளைமேட்டில் சந்தித்துப் பேசினோம்.
'மூலிகை எரிபொருள் ஃபார்முலா, மூலப்பொருட்களைத் தெரிவிக்கவேண்டும் என்று எனக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் கழுத்தை நெரித்தன. என் அம்மா, தம்பி,தங்கைகளையும் கூட அவர்கள் நிம்மதியாக விடவில்லை. என் மீது மோசடி வழக்கு, சகோதரர் மீது கொலைவழக்குப் போட்டனர். ஒரு தங்கையின் கணவரையும் கொலை செய்தனர். இவ்வளவையும் தாண்டி இன்று நண்பர்கள் உதவியால், எனது கண்டுபிடிப்பு உலக அரங்கில் அங்கீகாரத்துக்குக் காத்திருக்கிறது...'' என்று குதூகல மாகப் பேசிய ராமர் பிள்ளை, தொடர்ந்து...
நன்றி : ஜூனியர் விகடன்
''என் கண்டுபிடிப்பு பற்றிக் கேள்விப்பட்ட டச்சு நாட்டில் உள்ள டேனிஷ் டெக்னாலாஜிக்கல் இன்ஸ்டிட்யூட் விஞ்ஞானிகள், நேரடியாக சென்னைக்கே வந்தார்கள்.
அவர்கள் முன்னிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எனது கண்டுபிடிப்பை நிகழ்த்திக் காட்டினேன். மூலிகை எரிபொருள் உருவாக்குவதற்கு முன்னர் அந்தத் தண்ணீரை
சோதித்தார்கள். அது எரியவில்லை. பின்னர் நான் மூலிகை பெட்ரோல் செய்து காட்டியதும், அதை பரிசோதித்த அவர்கள், தண்ணீர்தான் எரிபொருளாக மாறியுள்ளது
என்பதை ஒப்புக்கொண்டனர்.
அதைத் தங்கள் ஆய்வகத்தில் பரிசோதித்துப் பார்த்து எனக்கு ஆய்வறிக்கை அளித்தவர்கள், 'உங்கள் கண்டுபிடிப்பால், மிகக் குறைந்த செலவில் எரிபொருளை
உருவாக்க முடியும். இதன் மூலம் உலக அளவில் மிகப்பெரிய சாதனையை செய்துள்ளீர்கள்!' என்று எனக்குக் கடிதம் அனுப்பினர் (நம்மிடம் அந்தக் கடிதத்தை
காட்டுகிறார்). மேலும், 'மற்ற மாற்று எரிபொருள்களுடன் ஒப்பிடுகையில், என்னுடையதுதான் மிகக் குறைந்த செலவில் பெட்ரோல் தயாரிக்கக்கூடியது' என்றும்
தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில்தான் காப்புரிமை பெற, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 'வேர்ல்ட் இன்டலெக்சுவல் பிராப்பர்ட்டி ஆர்கனைசேஷ'னுக்கு (ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அந்தஸ்து பெற்றது) விண்ணப்பித்தேன். அவர்களும் இந்த எரிபொருளால் இயந்திரத்துக்கு ஏதேனும் பாதிப்பு வருமா என்று ஆய்வு செய்து, அதைத் தங்கள்
ஜர்னலில் பதிப்பித்துள்ளனர். இந்தப் பதிப்பு எல்லா நாடு களிலும் வெளியிடப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்திய காப்புரிமை அதிகாரிகளும் என்னைத் தொடர்புகொண்டார்கள். உலக நாடுகள் ஒப்புக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளதால், இந்தியாவும் காப்புரிமை தரத்
தயாராக உள்ளதாக வாய்மொழியாகச் சொன்னார்கள். அதோடு, பல்வேறு நாடுகளில் இருந்தும் என்னைப் பற்றி தங்கள் தூதரகம் வாயிலாக விசாரித்துத் தொடர்பு கொள்கிறவர்கள்,
'மூலிகை எரிபொருள் தயாரிப்பு ஃபார்முலாவை தர வேண்டாம், உங்களுக்குத் தேவையானவற்றைச் செய்து தருகிறோம், நீங்களே செய்து கொடுங்கள்' என்றும்
கூறுகிறார்கள். ஆனால், காப்புரிமை முறைப்படி வரட்டும் என்று காத்திருக்கிறேன்.
கலப்பட பெட்ரோலை வேறு ஒரு இடத்தில் இருந்து பெற்று, விநியோகித்ததாக என் மீது வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதைப் பற்றி நான் எதுவும் கூற முடியாது. ஆனால், டச்சு நாட்டில் இருந்து பெறப்பட்ட ஆய்வறிக்கையின் அடிப்படையில், அவர்கள்
மேற்கொண்ட சோதனையை கோர்ட்டில் காட்டினோம். அப்போது, 'ஐரோப்பிய நாடுகளின் தர அடிப்படையில் என்னுடைய மூலிகை எரிபொருளை பரிசோதித்து ஆய்வறிக்கை கொடுத்துள்ளனர். அதில் வெறும் நான்கு சோதனையைக்கூட நடத்தும் வசதி இந்தியாவில் இல்லை.
பிறகு எப்படி இது உண்மையில்லை?' என்று அரசு தரப்பைக் கேட்டபோது, அவர்களால் பதில் கூற முடியவில்லை.
இந்த 10 ஆண்டுகளில் என் மூலிகை எரிபொருளை நவீனப்படுத்தியுள்ளேன். முன்பு 16 ரூபாய்க்கு மூலிகை எரிபொருளைத் தயார் செய்தேன். இப்போது வெறும் எட்டு
ரூபாய்க்கே லட்சக்கணக்கான லிட்டர்களை தயாரிக்கத் தயாராக இருக்கிறேன். இந்த மூலிகை எரிபொருள் நிச்சயம் ஐரோப்பிய யூனியன் தரத்தில் இருக்கும்.
13 ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சென்னை, டெல்லி, ஹைதராபாத்தில் நான் நடத்திய ஆய்வுகள், தோல்வியடைந்ததாக அதிகாரிகள் கூறினார்கள். அப்போது அதிகாரிகள், 'ஒரு குழாயில் பெட்ரோலை மெழுகால் அடைத்து வைத்ததாகவும், தண்ணீர் வெப்பநிலையில் மெழுகு உருகியபோது பெட்ரோல் கலந்ததாகவும்' சொன்னார்கள்.
டச்சு விஞ்ஞானிகளிடம் இதைக் கூறியபோது, 'சமையல் உப்பைக்கொண்டு தண்ணீரை அடைத்து வைக்க முடியும் என்பதுபோல அது ஒரு தவறான வாதம்' என்றனர்.
நான் இந்திய அரசிடம் எனது கண்டுபிடிப்புக்கு பாதுகாப்புதான் கேட்டேன். பாதுகாப்பு அளித்தால், முழுக் கண்டுபிடிப்பையும் தருவதாகக்கூறினேன். இப்போது
காப்புரிமைக்காக என் முழுக் கண்டுபிடிப்பையும் சர்வதேச அமைப்பிடம் கொடுத்துள்ளேன். எனது வழக்கும் முடிவடையும் நிலையில் உள்ளது. தீர்ப்பு வரும்போது மக்களுக்கு நிஜம் புரியும். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவன் எப்படி இப்படிக் கண்டுபிடிக்கலாம் என்ற எண்ணம் தான் நம் நாட்டில் மெத்தப்
படித்தவர்களிடம் உள்ளது. இந்த 10 ஆண்டுகளில் எத்தனையோ கஷ்டம், தொல்லைகள்,
அவமானங்கள் எல்லாம் பட்டேன். ஆனால், எனது கண்டுபிடிப்பை எதிர்காலத்தில் ஒவ்வொரு
மனிதனும் பயன்படுத்துவான்!'' என்கிறார் ராமர் பிள்ளை.
அடுத்தடுத்து பல சர்சைகளை சந்தித்த மனிதர், இப்போது சர்வதேச அளவில் சவாலுக்குப் போயிருக்கிறார்... பார்க்கலாம்... நல்லது நடந்தால் நாட்டுக்குப் பெருமை!
-- பா.பிரவீன்குமார்
-------------------------------------------------------------
குறிப்பு :
தானிஷ் பல்கலைகழகம் இவரின் ஆராய்ச்சியை உறுதிபடுத்தி குறைந்த விலையில் மாற்று எரிபொருள் தயாரிக்க முடியும் என்று சான்றிதல் வழங்கியுள்ளது
மேலும் இவர் இதை மூலிகை பெட்ரோல் என்று கூறவில்லை ,மாற்று எரிபொருள் என்று தான் சொன்னார் ,ஊடகங்கள் வைத்த பெயர் தான் மூலிகை பெட்ரோல் ,கல்வி அறிவு இல்லாததால் அவரால் போராட முடியவில்லை
facebook

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 09, 2015 8:13 pm

இந்த 10 ஆண்டுகளில் என் மூலிகை எரிபொருளை நவீனப்படுத்தியுள்ளேன். முன்பு 16 ரூபாய்க்கு மூலிகை எரிபொருளைத் தயார் செய்தேன். இப்போது வெறும் எட்டு ரூபாய்க்கே லட்சக்கணக்கான லிட்டர்களை தயாரிக்கத் தயாராக இருக்கிறேன். இந்த மூலிகை எரிபொருள் நிச்சயம் ஐரோப்பிய யூனியன் தரத்தில் இருக்கும்.

வாவ் ! சூப்பர்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

//காப்புரிமைக்காக என் முழுக் கண்டுபிடிப்பையும் சர்வதேச அமைப்பிடம் கொடுத்துள்ளேன். எனது வழக்கும் முடிவடையும் நிலையில் உள்ளது. தீர்ப்பு வரும்போது மக்களுக்கு நிஜம் புரியும். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவன் எப்படி இப்படிக் கண்டுபிடிக்கலாம் என்ற எண்ணம் தான் நம் நாட்டில் மெத்தப்
படித்தவர்களிடம் உள்ளது. இந்த 10 ஆண்டுகளில் எத்தனையோ கஷ்டம், தொல்லைகள்,
அவமானங்கள் எல்லாம் பட்டேன். ஆனால், எனது கண்டுபிடிப்பை எதிர்காலத்தில் ஒவ்வொரு
மனிதனும் பயன்படுத்துவான்!'' என்கிறார் ராமர் பிள்ளை.
அடுத்தடுத்து பல சர்சைகளை சந்தித்த மனிதர், இப்போது சர்வதேச அளவில் சவாலுக்குப் போயிருக்கிறார்... பார்க்கலாம்... நல்லது நடந்தால் நாட்டுக்குப் பெருமை!//


அவர் பட்ட கஷ்டங்கள், அவரின் குடும்பம் பட்ட கஷ்டங்கள் கண்டிப்பாக வீணாகாது........அவர் இதில் ஜெயித்து வருவார் புன்னகை...............வாழ்த்துகள் அவருக்கு ! சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 10, 2015 12:32 pm

வழக்கில் வெற்றிபெற்றுவிட்டால் , இவர் தான் உலகின் பணக்கார மனிதனாக இருப்பார் புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 10, 2015 2:45 pm

கடைசியில் நியாயமே வெல்லும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Jan 10, 2015 4:17 pm

வழக்கில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் இவர் வெற்றி பெற வாழ்த்துவோம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக