புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகவல் அறியும் உரிமைச் சட்டம் - பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்திரம்! Poll_c10தகவல் அறியும் உரிமைச் சட்டம் - பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்திரம்! Poll_m10தகவல் அறியும் உரிமைச் சட்டம் - பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்திரம்! Poll_c10 
20 Posts - 65%
heezulia
தகவல் அறியும் உரிமைச் சட்டம் - பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்திரம்! Poll_c10தகவல் அறியும் உரிமைச் சட்டம் - பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்திரம்! Poll_m10தகவல் அறியும் உரிமைச் சட்டம் - பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்திரம்! Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகவல் அறியும் உரிமைச் சட்டம் - பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்திரம்! Poll_c10தகவல் அறியும் உரிமைச் சட்டம் - பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்திரம்! Poll_m10தகவல் அறியும் உரிமைச் சட்டம் - பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்திரம்! Poll_c10 
62 Posts - 63%
heezulia
தகவல் அறியும் உரிமைச் சட்டம் - பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்திரம்! Poll_c10தகவல் அறியும் உரிமைச் சட்டம் - பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்திரம்! Poll_m10தகவல் அறியும் உரிமைச் சட்டம் - பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்திரம்! Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
தகவல் அறியும் உரிமைச் சட்டம் - பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்திரம்! Poll_c10தகவல் அறியும் உரிமைச் சட்டம் - பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்திரம்! Poll_m10தகவல் அறியும் உரிமைச் சட்டம் - பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்திரம்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தகவல் அறியும் உரிமைச் சட்டம் - பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்திரம்! Poll_c10தகவல் அறியும் உரிமைச் சட்டம் - பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்திரம்! Poll_m10தகவல் அறியும் உரிமைச் சட்டம் - பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்திரம்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் - பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்திரம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 13, 2014 2:28 am


பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்திரம் என போற்றப்படுவது 2005 அக்.,12ல் அமலுக்கு வந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம். இச்சட்டம் வந்து 10வது ஆண்டு நேற்று நிறைவு பெற்றது.

அரசு மற்றும் அரசு துறைகளின் செயல்பாட்டில் வெளிப்படை தன்மையை உறுதி செய்வதற்காக, மலிந்து கிடக்கும் ஊழலை கட்டுப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தை 9 ஆண்டுகளில் பலர் பயன்படுத்தி பலனடைந்துள்ளனர்.மத்திய அரசு துறைகளுக்கென நடுவராக செயல்பட மத்திய தகவல் ஆணையம். மாநில அரசு துறைகளுக்கென நடுவராக செயல்பட மாநில தகவல் ஆணையம் உள்ளது. பொது நலன் சார்ந்து செயல்படுகிற அரசு சாரா நிறுவனங்கள், மனித உரிமை செயல் பாட்டாளர்களுக்கு இச்சட்டம் வரப்பிரசாதம்.

ரூ.200 கோடி அபராதம்:

சென்னையை சேர்ந்த ஒருவர், இச்சட்டத்தை பயன்படுத்தி, தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் சொத்து விபரங்களை தகவலாக பெற்று புத்தகமாக வெளியிட்டுள்ளார். மேலும், ''இச்சட்டத்தின் மூலம் மதுரை மாவட்ட கிரானைட் குவாரிகளின் விபரங்கள் பெற்று, சட்டவிரோத முறைகேடுகள் குறித்து, மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வேலுார் உட்பட சில மாவட்டங்களில் கருங்கல் குவாரிகளில், சட்ட விரோத நடவடிக்கைகளுக்காக, ரூ. 200 கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டு, இன்னும் வசூலிக்கப்படவில்லை என்பதை வெளிக் கொணர்ந்துள்ளேன், என்கிறார் அவர்.தி.மு.க., ஆட்சியில் மின்வாரியத்தில் ரூ. 50 ஆயிரம் கோடி கடன் இருந்தது. எந்த வங்கியில், எவ்வளவு கடன் பெறப்பட்டது. வெளிமாநிலங்களில் குறிப்பாக, ஜார்க் கண்ட் போன்ற மாநிலத்தில் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ.17 வரை விலைகொடுத்து வாங்கப்பட்டது என்ற விபரங்களை பெற்று அம்பலப்படுத்தியுள்ளார். அதன் விளைவாக, இன்று அதே மின்சாரம் யூனிட்டுக்கு ரூ. 6.86ல் இருந்து ரூ. 7 வரை என்கிற விகிதத்தில்தான் வாங்கப்படுகிறது என்கிறார் அவர்.

சொத்து விபரம் :

டில்லியைச் சேர்ந்த 64 வயது சுபாஷ்சந்திர அகர்வால் என்பவர், 'சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி, இச்சட்ட வரையறைக்குள் வரவேண்டும் என்ற தீர்வை பெற்றார். அதன்பின், ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தங்கள் சொத்து விபரத்தை இணைய தளத்தில் வெளியிட்டனர்.கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி, தன்விருப்ப ஓய்வு பெற்று, தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலராக செயல்படுபவர் பொள்ளாச்சி பாஸ்கரன். அவர் தனது மனுக்கள் வாயிலாக, பொள்ளாச்சி அருகே சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இருந்த 28 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது, என்கிறார்.மேலும், 'நாமக்கல் மாவட்ட கல்வித்துறை ஊழல் சம்பந்தமாக, 67 பேரின் தற்காலிக பணிநீக்க உத்தரவு பெற்றேன். அதில் 15 பேர் மட்டும் ஆண்கள். 52 பேர் பெண்கள் என்பது வேதனைக்குரிய அம்சம்' என்கிறார்.

பாரபட்சமில்லை :

மாநில தகவல் ஆணையங்களை ஒப்பிடும்போது கேரள மாநில தகவல் ஆணையம், அந்த மாநிலத்தின் ஆளுநர் அலுவலக பொதுத் தகவல் அலுவலருக்கே பாரபட்சமின்றி அபராதம் விதித்துள்ளது. மேற்கு வங்க தகவல் ஆணைய வழக்கு ஒன்றில், தகவல் கோரிய மனுதாரரின் ஒப்பந்தத்தை போலியாக வேறொருவரிடம் மிரட்டிப் பெற்ற விபரம் செய்தியாக வந்தது. அது குறித்த விபரங்களை ஆணையத்தில் கேட்டபோது, அவர்கள் முழுகுறிப்புகளையும் அளித்தனர். அதில் ஆணையம், குறிப்பிட்ட மனுதாரர் தகவல் பெற்றதாக ஒப்பமிடவில்லை என்பதை, தடயவியல் சோதனைக்கு உட்படுத்தி தெளிவு பெற்றிருப்பதும், அந்தளவிற்கு அச்சட்டத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதும் தெரிய வந்துள்ளது.கேரள மாநிலம் கோட்டயத்தில் மகாத்மா காந்தி பல்கலை கழக துணைப்பதிவாளர் நியமன முறைகேடு தொடர்பாக, பொதுமக்கள் புகார் மனு அனுப்பினர். அதை கவர்னருக்கு அனுப்பிய விபரம் கவர்னர் அலுவலகத்தில் இருந்து தகவலாக கேரள தகவல் ஆணைய தலையீட்டின் பேரில் கிடைத்தது.இச்சட்டம் உருவாக்கியபோதே, இது அமலுக்கு வந்ததில் இருந்து 120 நாட்களுக்குள், அனைத்து பொது அதிகார அமைப்புகளும், அதன் துறைசார்ந்த விபரங்களை தாமாக, முன்வந்து இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் எனக் கூறப்பட்டது.ஆனால் அதை கண்காணிப்பது யார் என்பது தெரிவிக்கப்படாததால், சட்டம் அமலுக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பெரும்பாலான அலுவலகங்கள், தாங்கள் சார்ந்த விபரங்களை பதிவேற்றம் செய்யவில்லை.

பொதுநலன் தீர்வு:

இச்சட்டத்தை 90 சதவீதம் பேர் தங்கள் பிரச்னை மற்றும் பொது நலன் தீர்வுக்காக பயன்படுத்துகின்றனர். ஐந்து முதல் 8 சதவீதம் பேர் தான் பணிபுரிந்த அலுவலகத்தை, குறிப்பிட்ட அலுவலரை துன்புறுத்தும் நோக்கில் பயன்படுத்துகின்றனர் என்ற புகாரும் அரசு அலுவலர்கள் மத்தியில் தெரிவிக்கப்படுகிறது.இந்தச் சட்டத்தை பயன்படுத்தியதற்காக, இதுவரை 139 பேர் தாக்கப்பட்டுள்ளனர். அதில் சிலர் கொல்லப்பட்டுள்ளனர் என்கிறது விக்கிபீடியாவின் தொகுப்பு தகவல். எனவே தகவல்களை சேகரிப்போர், வெளியிடுவோர் பாதுகாப்பிற்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.இச்சட்டம் மீது அவ்வப்போது சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட்டுகள் தலையிட்டு தீர்வளித்துள்ளது. மதுரையை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் கதிர், இச்சட்டத்தை பயன்படுத்தி பல கருணை கொலைகள் தொடர்பான விபரங்களை வெளிக் கொணர்ந்துள்ளோம், என்கிறார்.நிலக்கரி சுரங்க ஊழல், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊழல் போன்றவை இதனால் வெளிக் கொணரப்பட்டவை.குறிப்பாக இச்சட்டத்தை பயன்படுத்தி, இந்திய ஜனாதிபதியாக இருந்த பிரதிபா பாட்டீல், தனது பணிக்காலத்தில் பயணச் செலவாக மட்டும், அரசு பணம் ரூ.205 கோடியை செலவிட்டது, 11 உறவினர்களை 18 முறை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றது வெளிக் கொணரப்பட்டது.

அதிகாரிகள் அச்சம் :

திட்டக் கமிஷன் தலைவராக இருந்த மான்டேக்சிங் அலுவாலியா, தனது வெளிநாட்டு பயணச் செலவாக ரூ.2.34 கோடி பெற்றார். அலுவலக டாய்லெட்டை புதுப்பிக்க ரூ. 35 லட்சம் செலவிட்டார் என்ற விபரங்கள் வெளியாகின. இச்சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வண்ணம், திருத்தங்கள் மேற்கொண்ட முயற்சிகள் நாடெங்கும் நடந்தன. பின்னர் அவை ஆயிரக்கணக்கான தகவல் அறியும் உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்புகளால் கைவிடப்பட்டன.லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் இல்லாததால், மத்திய தலைமை தகவல் ஆணையர் நியமனம் நிலுவையில் உள்ளது. இச்சட்டம் வந்தபின், கடந்த 9 ஆண்டுகளில் தான் ஊழல் என்பது மக்களால் பேசப்பட்டுள்ளது. எனவே இச்சட்டத்தின் பயன்பாடு அதிகரிக்கச் செய்ய, பயிற்சி முகாம்களை அரசு சாரா மனித உரிமை செயற்பாட்டாளர்கள் நடத்த வேண்டும்.

- எஸ்.சம்பத்



தகவல் அறியும் உரிமைச் சட்டம் - பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்திரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Oct 13, 2014 5:19 am

பதவி பலம் பார்த்து செயல்படுகிறது தகவல்ஆணையம் என்பது என் தாழ்மையான கருத்து. ஒரு வழக்கையே பல வழக்காக பதிந்து வேறொரு ஆணையருக்கு அனுப்பி ஏதும் பயனின்றி அப்படியேவிட்டு விடுகின்ற நிலைதான்காண முடிகிறது. சாதா பெட்டிசன்போல .........இதனை கண்டித்து............. சட்ட இயக்கம் ஒன்று போராடி வருகிறது. அன்பரே...........சட்டத்தை மதித்து செயல்படுவோர் சொற்பமாகவே உள்ளது...............

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக