ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்

4 posters

Go down

கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Empty கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்

Post by sikkandar Fri Sep 12, 2014 11:06 am

ஒரு மனிதனுக்கு கடவுளை காண வேண்டும் என்று ஆசை. அவரை எப்படி சந்திப்பது ?

நிறைய பேரை கேட்டான் " கோவிலுக்கு போ !" என்றார்கள் .

உடனே புறப்பட்டான் .

போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான்

அவர் கேட்டார் .

" எங்கே போகிறாய் ?"

" கடவுளை காண போகிறேன் !"

" எங்கே ? "

" கோவிலில் !"

" அங்கே போய் ........"

" அவரை வழிபட போகிறேன் ! "

" அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ?"

" தெரியாது "

" எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை . அப்படி இருக்கும் போது எப்படி நீ அவரை வழிபட முடியும்?"

" அப்படியென்றால் "

" உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காக தான் இருக்க முடியும் "

அவன் ரொம்பவே குழம்பி போய்ட்டான்

ஞானி தெளிவு படுத்தினார்

" ஏ, மனிதனே ..... நீ செய்யபோவது உண்மையான வழிபாடு அல்ல .... இன்றைக்கு மனிதர்கள் " வழிபாடு " என்ற பெயரில் ஆண்டவனிடம் தங்கள் ஆசைகளை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள் . தங்களது கோரிக்கைகளை குரல் மூலம் பட்டியலிட்டு சொல்லி கொண்டிருக்கிறார்கள் .தங்களது புகார்களை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள் அவ்வளவுதான் "

" நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன் ..."

" நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ?"

" அப்படியானால் ..  ஆண்டவனை நான் சந்திக்க என்னதான் வழி ?"

" அவரை நீ சந்திக்க முடியாது . உணர முடியும் !"

" அதற்க்கு வழி ?"

" தியானம்"

" தியானத்திற்கும் , கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா ?"

" இல்லை "
மனிதன் வியப்போடு நிமிர்ந்தான் . அவர் சொன்னார் :

" தியானம் உன் மனதோடு சம்பந்தப்பட்டது . அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும் , அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில் கடவுள் இருப்பதை நீ உணர தொடங்குவாய்  . உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும் . தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும் "

அந்த மனிதனும் ஞானியும் பேசிக்கொண்டு இருக்கும் போதே , வெளிநாட்டுக்காரர் ஒருபார் அங்கெ வந்தார் . ஞானியின் முன்னால் வந்து பணிவோடு நின்றார் .

தன்னுடைய தேவையை சொன்னார் :

" I WANT PEACE"

ஞானி சொன்னார்:

" முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு , மூன்றாவது வார்த்தையை நீ நெருங்கலாம் !"   எனக் கூற , வந்தவர் யோசித்தார் .

' I ' . ' WANT ' இரண்டையும் விட்டு விலகினால் 'PEACE ' நெருங்கி வருகிறது !

' நான் ' என்ற அகங்காரத்தை விலக்குங்கள் . ' என்னுடையது ' என்கிற ஆசைகளை விலக்குங்கள். ' அமைதி ' என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள் .

வெளிநாட்டுகாரருக்கு விளக்கம் கிடைத்தது .மனநிறைவோடு திரும்பி சென்றார் . கொஞ்ச நேரத்தில் இன்னொரு மனிதன் அங்கெ வந்தான் .

" சுவாமி ! இப்பத்தான் கோவில்லே சாமி கும்பிட்டு வர்றேன் . அருமையான தரிசனம் ! அந்த அளவுக்கு வேறே யாருக்கும்  கிடைச்சிருக்காது !"

" எப்படி அது ?"

" ஸ்பெஷல் தரிசனம் ! 50 ரூபாய் டிக்கெட் ! சுவாமிக்கு நெருக்கமாக போய் சன்னதியிலே கொஞ்ச நேரம் உக்கார முடிஞ்சது !"

அவன் முகத்துல கடவுளை நெருங்கி விட்ட பெருமிதம் !

ஞானி கேட்டார்

" அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் ?"

" ஒரு பத்தடி தூரம் இருக்கும் . அவ்வளவுதான் !"

உற்சாகமாக சொன்னான் .

" உன் அளவுக்கு வேறு யாரும் நெருங்கவில்லையா ?"

"இல்லை "

" அந்த வகையில்  பார்த்தால் உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமானவரும் வேறொருவர் உண்டு !"

" யார் அவர் "

" அங்கே இருக்கிற அர்ச்சகர் !"

வந்தவன் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம் .

" சரி , சுவாமி . நான் வர்றேன் !"

சோர்வோடு நடந்து போனான் .

அதன்பிறகும் விவாதம் தொடர்ந்தது . இறுதியில் மனிதன் எழுந்தான் . ஞானியிடம் விடை பெற்றான் . திரும்பி நடந்தான் .

ஞானி  கேட்டார் :

" எங்கே போகிறாய் ? "

" வீடுக்கு !"

" கோவிலுக்கு போகவில்லையா ?"

" இல்லை "

" அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ?"

" ஆண்டவனை உணர்ந்த பிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதைப் புரிந்துக் கொண்டேன் .

'நான் ' . 'என்னிடம் ' இருந்து விலகினால் தான் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையை தெரிந்து கொண்டேன் "

ஞானி இருகைகளையும் உயர்த்தினார் .

" ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல , விலகுவது ! எவ்வளவு தூரம் விலகியிருக்கிறீர்ககிறீர்களோ , அவ்வளவு தூரம் நெருங்கியிருக்கிறீர்கள் என்பது பொருள் "
avatar
sikkandar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 02/12/2009

kandansamy இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Empty Re: கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்

Post by தமிழ்நேசன்1981 Fri Sep 12, 2014 11:12 am

கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் 103459460
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Empty Re: கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்

Post by M.M.SENTHIL Fri Sep 12, 2014 11:55 am

sikkandar wrote:
" ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல , விலகுவது ! எவ்வளவு தூரம் விலகியிருக்கிறீர்ககிறீர்களோ , அவ்வளவு தூரம் நெருங்கியிருக்கிறீர்கள் என்பது பொருள் "
மேற்கோள் செய்த பதிவு: 1086737

மிக அற்புதமான வரிகள் இவை.. பகிர்வுக்கு நன்றி.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Empty Re: கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்

Post by kandansamy Mon Oct 19, 2020 8:58 pm



மிகவும் அருமை, வாழ்த்துக்கள் ஐயா !

கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் 3838410834
kandansamy
kandansamy
பண்பாளர்


பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

Back to top Go down

கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Empty Re: கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum