புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளை விட்டுவிடுங்கள்! Poll_c10குழந்தைகளை விட்டுவிடுங்கள்! Poll_m10குழந்தைகளை விட்டுவிடுங்கள்! Poll_c10 
20 Posts - 65%
heezulia
குழந்தைகளை விட்டுவிடுங்கள்! Poll_c10குழந்தைகளை விட்டுவிடுங்கள்! Poll_m10குழந்தைகளை விட்டுவிடுங்கள்! Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளை விட்டுவிடுங்கள்! Poll_c10குழந்தைகளை விட்டுவிடுங்கள்! Poll_m10குழந்தைகளை விட்டுவிடுங்கள்! Poll_c10 
62 Posts - 63%
heezulia
குழந்தைகளை விட்டுவிடுங்கள்! Poll_c10குழந்தைகளை விட்டுவிடுங்கள்! Poll_m10குழந்தைகளை விட்டுவிடுங்கள்! Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
குழந்தைகளை விட்டுவிடுங்கள்! Poll_c10குழந்தைகளை விட்டுவிடுங்கள்! Poll_m10குழந்தைகளை விட்டுவிடுங்கள்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
குழந்தைகளை விட்டுவிடுங்கள்! Poll_c10குழந்தைகளை விட்டுவிடுங்கள்! Poll_m10குழந்தைகளை விட்டுவிடுங்கள்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளை விட்டுவிடுங்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 18, 2014 10:58 pm

பூங்கொத்தைப் போல ஏந்த வேண்டிய குழந்தையை, தலைசிதறிய பிணமாக ஏந்திக்கொண்டிருக்கிறார் ஒரு தந்தை

குழந்தைகள் இந்த உலகத்துக்குத் தேவையற்றவர்கள் ஆகிவிட்டார்களா? கைவிடப்பட்ட காருக்குள் விளையாடப் போனபோது கதவு தாழிட்டுக்கொண்டதால் உள்ளுக்குள் சிக்கி, மூச்சுத் திணறி நான்கு குழந்தைகள் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் மேற்கண்ட கேள்விதான் என்னுள் எழுந்தது.

ஆழ்துளைக் கிணறு மரணங்கள், குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படும் சம்பவங்கள், பிள்ளைகளை விற்றுத் தகப்பன்கள் குடிப்பது, பெண் சிசுக்கள் கொல்லப்படுவது, அதிகார மட்டத்தின் பொறுப் பற்றதனத்தால் பள்ளிக் குழந்தைகள் தீயில் கருகிச் சாவது என்றெல்லாம் நீண்டுகொண்டேபோய் காஸா, சிரியா, நைஜீரியா போன்ற நாடுகளில் நடக்கும் போர்களில் கொத்துக்கொத்தாகக் குழந்தைகள் கொல்லப் படுவது என்று முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு உலகமே ஒன்றுசேர்ந்து குழந்தைகளுக்கு எதிராகப் போரை நடத்திக்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் சற்றும் குறையாத விதத்தில் நவீன வாழ்வும், அதன் பிரிக்க முடியாத அம்சமான உலகமயமாதலும், உலக மயமாதலின் முகவர்களான பெருநிறுவனங்களும் குழந்தைகள் மீது போர் நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன.

நம்பிக்கையற்றவர்களின் உலகம்

ஒரு குழந்தை பிறக்கும்போது உள்ளூர அது இந்த உலகத்தின் மேல் ஏதோ நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. பிறக்கும்போது இந்த உலகம் அதற்குப் பரிச்சயமே இல்லாத ஒரு இடமாகத்தான் இருக்கிறது. அந்தக் குழந்தை பெண் குழந்தையாக இருக்குமானால், அதற்கு உள்ளூர நம்பிக்கை என்ற ஒரு விஷயம் ஏற்படுவதற்கு முன்பே அது கொல்லப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம். அப்படிப் பிறந்துவிட்டாலும்கூட, பத்து வயதுக்குள் பாலியல் வன்முறைக்குள்ளாகும் சாத்தியங்களும் அதிகம். அந்தக் குழந்தை யார் மீது அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறதோ அவர்களாலேயே அப்படிப்பட்ட கொடுமைக்குள்ளாக்கப்படுவதற்கான சாத்தியங்கள் தான் அதிகம்.

ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ கருவுலகில் வெற்றி பெற்று வெளியுலகுக்கு உயிருடன் வந்துசேர்ந்த பிறகு நோய், இயற்கைச் சீற்றம் போன்றவற்றையும் தாண்டிப் பிழைத்திருக்குமென்றாலும், இந்த உலகில் அவர்களைக் கொல்வதற்குக் காத்திருக்கும் விஷயங்கள் ஏராளம். சாலையிலோ, வாய்க்கால் வரப்புகளிலோ நடக்கும்போது பெரியவர்கள் எப்போதும் மிகுந்த கவனத்துடன் நடப்பார்கள். அவர்களுக்கு இந்த உலகின் நயவஞ்சக வலைகளைப் பற்றி நன்கு தெரியும்: எந்த இடத்திலும் பாதாளச் சாக்கடை திறந்திருக்கலாம்; எந்த நேரத்திலும் பைக் ரேஸ்கள் பொதுச் சாலையில் நிகழலாம்; குடித்துவிட்டு யார் வேண்டுமானாலும் கார் ஓட்டிக்கொண்டு வரலாம்; வரப்புகளை ஒட்டிக் கிணறுகள் இருக்கலாம்; எங்காவது மின்கம்பிகள் அறுந்து விழுந்திருக்கலாம்… இப்படியாக இந்த உலகின் மீது ஏராளமான அவநம்பிக்கைகளை நாம் வளர்த்துக் கொண்டிருக்கிறோம். உயிர் வாழ்வதற்குச் சக மனிதர்களின் மீது நம்பிக்கை கொள்வதைவிட, அவ நம்பிக்கை கொள்வது மிகவும் அவசியமாகிறது.

ஆனால், இவையெல்லாம் பெரியவர்களான நமக்குத்தான். குழந்தைகளைப் பொறுத்தவரை இந்த உலகமே விளையாட்டுக் களம்தான், வாழ்க்கையே ஒரு விளையாட்டுதான். அதனால்தான் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். கடுமையாகப் போர் நடந்துகொண்டிருக்கும்போதுகூட அவர்களால் விளையாட முடியும். எந்த இடத்தையும் தாங்கள் விளையாடுவதற்கான இடமாக மாற்றிக்கொள்ள அவர்களால் முடியும். எதையும் தங்களுடைய விளை யாட்டுப் பொருளாக ஆக்கிக்கொள்ள அவர்களால் முடியும். நிறுத்தியிருக்கும் காருக்குள் நுழைவதும், சிறு குழியென்று குதித்து விளையாட நினைத்து ஆழ் துளைக் கிணற்றுக்குள் விழுந்துவிடுவதும், ‘ஐ! ஏதோ கம்பி கிடக்கிறதே' என்று மின்னோட்டமுள்ள கம்பியைத் தவறுதலாகத் தொட்டுவிடுவதும் என்று எல்லாமே விளையாட்டுதான்; எல்லாமே விளையாட்டுப் பொருட்கள்தான். அந்த அளவுக்கு இந்த உலகத்தை அவர்கள் நம்புகிறார்கள். அதன் காரணமாகவே, அல்லது அதற்குத் தண்டனையாகவே உயிரிழக்கிறார்கள்.

எளிய இலக்குகள்

இந்த அளவுக்கா உலகம் குழி தோண்டி வைத் திருக்கும், குழந்தைகளைக் காவுகொள்ள? அதுவும் நாம் கற்பனையே செய்துபார்க்க முடியாத விதங் களிலெல்லாம் குழந்தைகளை இந்த உலகம் காவு கொள்கிறது. நவீன காலத்துக்கு ஏற்ப, குழந்தைகளைக் காவுகொள்வதில் உலகம் தன்னை மிகவும் நுட்பத்துடன் ‘அப்டேட்' செய்துகொள்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பு, ஆழ்துளைக் கிணறு மரணங்களோ, காருக்குள் சிக்கிக்கொண்டு ஏற்படும் மரணங்களோ, அணுகுண்டு மரணங்களோ, விஷவாயுக் கசிவு மரணங்களோ, கொத்துக்குண்டு மரணங்களோ, ஏவுகணை மரணங்களோ, விமானங்களைச் சுட்டுவீழ்த்துவதால் ஏற்படும் மரணங்களோ எதுவும் கிடையாது. முட்டாள்தனமான பெரியவர்களின் பொறுப்பற்ற செயல்களாலும், அலட்சியத்தாலும் இவற்றுக்கெல்லாம் சிறிதும் தொடர்பற்றவர்களான குழந்தைகள் பலியாவதுதான் பெரும் துயரம். எல்லா முட்டாள்தனங்களுக்கும் கொடூரங்களுக்கும் எளிய இலக்குகளாகக் குழந்தைகள்தான் இருக்கிறார்கள். உலகம் தன்னைப் பல்லாயிரக் கணக்கான மடங்கு ‘அப்டேட்' செய்துகொண்டிருப்பதன் விளைவுதான் இது.

விதிவிலக்கில்லை

அப்பா கொல்கிறார், அம்மா கொல்கிறார், அரசு கொல்கிறது, மதம் கொல்கிறது, இயற்கை கொல் கிறது. குழந்தைகளைக் கொல்வதில் யாருக்கும் எதற்கும் விதிவிலக்கில்லை. அப்பா தோண்டும் ஆழ்துளைக் கிணற்றிலேயே குழந்தை தவறி விழுந்து இறந்துவிடுகிறது. கடன் பிரச்சினையில் பிள்ளைக்கும் விஷம் கொடுத்துவிட்டு அம்மா சாகிறார். சமீபத்தில் தனது பெண்ணையே கர்ப்பமாக்கிய தந்தை ஒருவர், அந்தக் கர்ப்பத்தை மறைக்கும் முயற்சியில் அவளைக் கொலை செய்த சம்பவம் நினைத்தே பார்க்க முடியாத கொடூரம். குழந்தை பிறந்தபோது அதை ஆசையாகத் தூக்கிக் கொஞ்சிய தந்தைதான் பிறகு இப்படிச் செய்கிறார் என்பதை நம்பக்கூட முடியவில்லை.

காரில் சிக்கிக்கொண்ட குழந்தைகள் இறந்துபோன சம்பவத்தையே எடுத்துக்கொள்ளுங்கள்! எத்தனை அலட்சியங்கள் ஒன்றுசேர்ந்து அந்தக் குழந்தைகளைக் கொன்றிருக்கின்றன. கைப்பற்றிய காரை நான்கு ஆண்டுகளாக அங்கேயே, அதே நிலையில் விட்டு வைத்திருந்த வங்கியின் அலட்சியம், இப்படி ஒரு கார் இவ்வளவு நாட்களாக இங்கே நிற்கிறதே என்று எட்டிப்பார்க்காத காவல் துறையினர், உள்ளாட்சித் துறையினர், ஊர்ப் பெரியவர்கள் ஆகியோரின் அலட்சியம், காருக்குள் மாட்டிக்கொண்ட குழந்தைகள் கதவைத் தட்டும் சத்தம் யாருக்கும் கேட்காதபடி பக்திப் பாடல்களை உலகுக்கே ஒலிபெருக்கியின் மூலம் ஒலிக்கச் செய்தவர்களின் அலட்சியம் (எல்லா வழிபாட்டுத் தலங்களிலும் இதே கலாச்சாரம்தான். சுற்றுவட்டாரத்தில் இருதய நோயாளிகள் இருக்கலாம், மாணவர்கள் பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருக்கலாம், சில வீடுகளில் மரணம் நிகழ்ந்திருக்கலாம், உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காகக்கூடச் சிலர் அபயக் குரல் எழுப்பிக்கொண்டிருக்கலாம்…) இப்படியாக, எல்லா அலட்சியங்களும் கூடிவந்த ஒரு தருணம்தான் அந்தக் குழந்தைகளின் உயிரைப் பறித்திருக்கிறது.

இனி குழந்தைகளிடம் நாம் சொல்லலாம், வெளியில் போய் விளையாடாதே! வாய்க்கால் வரப்பு களுக்குப் போகாதே! அப்பாவிடம் போகாதே! மாமாவிடம் போகாதே! இந்த உலகத்தை நம்பாதே! இப்படி படிப்படியாக அவர்களுக்கு உருவேற்றலாம். இந்த உலகத்தை நம்பாத ஒரு தலைமுறையை உருவாக்குவதுதான் நமது அக்கறைகள், மதங்கள், கோட்பாடுகள் எல்லாவற்றுக்கும் அடிப்படை நோக்கமா?

பூங்கொத்துகள்

நிச்சயமாக, எந்த மரணத்துக்கும் ஆறுதல் சொல்லி விட முடியாதுதான். என்றாலும் குழந்தைகளின் மரணத்தை நம்மால் சற்றும் நினைத்துப் பார்க்கவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாது. பூங்கொத்துபோல் ஏந்திக்கொள்ள வேண்டியவை குழந்தைகள். ஆனால், ஏவுகணைத் தாக்குதலால் உருச்சிதைந்து, தலை குடையப்பட்ட பிணமாகத் தன் குழந்தையை ஒரு தந்தை ஏந்திக்கொண்டு அழும் புகைப்படங்களைச் சமூக ஊடகங்களில் எல்லோரும் பார்த்து மனம் வெம்பினோம். அதேபோல், ஈழப் போரின் இறுதித் தருணத்தில் கயிற்றில் தொங்கவிடப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களும்… போர்களின் உக்கிரத்தை குழந்தைகளின் புகைப்படங்களைக் கொண்டு நாம் தெரிந்துகொள்ள வேண்டிய நிலை!

வாழ்க்கையும் உலகமும் வாழ்வதற்கு உகந்தவை என்பதைச் சுட்டிக்காட்டும் சுட்டிகள்தான் குழந்தைகள். ஆழ்துளைக் கிணற்றுக்குள் அகப்பட்டும், தலை சிதறியும் இறப்பதுதான் அந்தச் சுட்டிகளின் தலையெழுத்து என்றால், இந்த உலகின் மீது எதை வைத்து நம்பிக்கை கொள்ள?

- ஆசை @ தி இந்து



குழந்தைகளை விட்டுவிடுங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 19, 2014 12:03 pm

குழந்தைகளை விட்டுவிடுங்கள்! 103459460 குழந்தைகளை விட்டுவிடுங்கள்! 1571444738 சோகம் சோகம் 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Tue Aug 19, 2014 12:39 pm

குழந்தைகளை விட்டுவிடுங்கள்! 3838410834 குழந்தைகளை விட்டுவிடுங்கள்! 1571444738 

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 19, 2014 1:57 pm

இந்த மாதிரி ஈவு இரக்கமற்ற மனிதர்களிடையே
இனி வரும் காலத்தை எப்படி கடக்க போகிறோம் என்று தெரியவில்லை. ஒன்னும் புரியல 

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Aug 19, 2014 2:00 pm

இனி குழந்தைகளிடம் நாம் சொல்லலாம், வெளியில் போய் விளையாடாதே! வாய்க்கால் வரப்பு களுக்குப் போகாதே! அப்பாவிடம் போகாதே! மாமாவிடம் போகாதே! இந்த உலகத்தை நம்பாதே! இப்படி படிப்படியாக அவர்களுக்கு உருவேற்றலாம். இந்த உலகத்தை நம்பாத ஒரு தலைமுறையை உருவாக்குவதுதான் நமது அக்கறைகள், மதங்கள், கோட்பாடுகள் எல்லாவற்றுக்கும் அடிப்படை நோக்கமா?
 பயம் பயம் பயம் பயம்



குழந்தைகளை விட்டுவிடுங்கள்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுழந்தைகளை விட்டுவிடுங்கள்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குழந்தைகளை விட்டுவிடுங்கள்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Aug 19, 2014 2:04 pm

பார்த்தேன், அந்தப் படத்தை பார்த்தேன், அடக்க முடியாமல் அழுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியும். இப்படியும் மனித உருவில் சாத்தான்கள் உளவுதான் விசித்திரமாக இருக்கிறது. கடவுள் உண்மையில் இருந்தால் இந்த ஈனப்பிறவிகளை அழிக்க வேண்டும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக