புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வால்மீகி! Poll_c10வால்மீகி! Poll_m10வால்மீகி! Poll_c10 
62 Posts - 57%
heezulia
வால்மீகி! Poll_c10வால்மீகி! Poll_m10வால்மீகி! Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
வால்மீகி! Poll_c10வால்மீகி! Poll_m10வால்மீகி! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
வால்மீகி! Poll_c10வால்மீகி! Poll_m10வால்மீகி! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வால்மீகி! Poll_c10வால்மீகி! Poll_m10வால்மீகி! Poll_c10 
104 Posts - 59%
heezulia
வால்மீகி! Poll_c10வால்மீகி! Poll_m10வால்மீகி! Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
வால்மீகி! Poll_c10வால்மீகி! Poll_m10வால்மீகி! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
வால்மீகி! Poll_c10வால்மீகி! Poll_m10வால்மீகி! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வால்மீகி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 16, 2014 4:31 am


நீண்டுயர்ந்த பெருமரங்கள் சூழ்ந்திருந்த காடு அது. விலங்கினங்கள் மிகுந்த பாதுகாப்போடு வாழ்ந்து வரும் சூழ்நிலை அக்காட்டில் நிலவிக் கொண்டிருந்தது. மிருகங்களை வேட்டையாடி ஜீவனம் நடத்தி வரும் வேடர்கள் பலரும் அந்தக் காட்டில் மிருகங்களைத் தேடி அங்கிங்கெனாதபடி அலைந்து திரிந்து கொண்டிருந்தனர்.

அவ்வேடர் கூட்டத்தில் ஒருவனாக அலைந்து கொண்டிருந்தான் கவுசிகன் என்னும் பெயர் கொண்ட வேடன் ஒருவன். மிருகங்களை வேட்டையாடுவதோடு மட்டும் நின்று விடுவான். வேட்டையில் தனக்குத் தேவைப்பட்ட மிருகம் கிடைத்து விட்டால் போதும், அத்துடன் திருப்தி அடைந்து வீட்டுக்குச் சென்றுவிடுவான்.

நாட்கள் சில சென்றன. வழக்கம்போல் வேட்டைக்குச் சென்ற கவுசிகனுக்கு அன்றைய தினம் வேட்டையில் எதுவும் கிட்டவில்லை. "வெறுங்கையோடு வீடு திரும்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடும்போல் தோன்றுகிறதே...' என்று மனக் கவலை கொண்டான் கவுசிகன்.

ஏமாற்றம் அடைந்தவனாய், ஒரு மரத்தின் மீது ஏறி உட்கார்ந்தான். கண் பார்வையால் காட்டைச் சுற்றி நோட்டமிட்டான். பச்சைப் பசேல் என்று விளங்கிய மரங்களைத் தவிர அவன் கண்களுக்கு எதுவும் தென்பட வில்லை!

சிறிது நேரம், அவ்வாறே அமர்ந்து தனது பார்வையைச் சுழல விட்டான்.

அப்போது...!

சற்று தொலைவில் மூன்று பேர் தலையில் மூட்டையைச் சுமந்த வண்ணம், அந்த வழியாக வந்த கொண்டிருப்பது அவனது கண்ணில் பட்டது. உடனே மரத்தை விட்டுக் கீழே இறங்கி, சற்றுத் தள்ளியிருந்த ஒரு புதரில் ஒளிந்துக் கொண்டான்.

"டேய்! கவுசிகா! இன்று நீ வெறுங்கையோடுதான் திரும்பப் போகிறாய்! வந்து கொண்டிருக்கும் நபர்களின் தலையில் உள்ள மூட்டைகளைக் கைப்பற்றிக்கொள்' என்று அவன் மனம் உறுத்தியது.

கவுசிகன் யோசிக்க ஆரம்பித்தான். "வேட்டைத் தொழிலோடு, இந்தப் புதிய தொழிலையும் அதாவது வழிப்பறிக் கொள்ளையையும் மேற்கொண்டால் என்ன?' என்ற கேள்வி அவன் மனதில் எழுந்தது.

அவ்வளவுதான்...!

புதரை விட்டு வெளியே வந்து மரத்தின் பின்புறம் ஒளிந்துக் கொண்டான். வழிப் போக்கர்களின் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான்.

மூட்டையைச் சுமந்துவந்த வழிப் போக்கர்கள் அந்த மரத்தை நெருங்கினர்!

""நல்ல வேளை! ஆபத்தான இடத்தைத் தாண்டிவிட்டோம். இனிப் பயம் ஏதுமில்லை!'' என்று வழிப் போக்கர்களில் ஒருவன் கூறினான்.

அப்போது, ""எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள்?'' என்று ஒரு சத்தம் கேட்க, வழிப் போக்கர்கள் சத்தம் வந்த திசையை நோக்கித் திரும்பிப் பார்த்தனர்!

வேட்டைக்காரக் கவுசிகன் கொலை வெறியோடு அவர்கள் முன்னே நின்று கொண்டிருந்தான்!

அவனது கையில் வில்லும், அம்பும் மற்றும் கொலைக் கருவிகளும் இருந்தன. அவனது கருவிகளும் அவனது பார்வையும் வழிப்போக்கர்களை பயத்துக்கும், பீதிக்கும் ஆளாக்கின. அவர்களிடம் இருந்த மன உறுதி குலையத் தொடங்கியது. என்ன செய்வது என்ன வழி தெரியாமல் விழிபிதுங்கி நின்றனர்.

ஆயுதபாணியான கவுசிகனை நிராயுத பாணிகளான வழிப்போக்கர்கள் எதிர் கொண்டு வெற்றி பெற முடியுமா என்ன?

கவுசிகன், வழிப் போக்கர்களை மிரட்டி பயமுறுத்தி, அவர்களிடம் இருந்த மூட்டைகளை மிக எளிதில் கைப்பற்றிக் கொண்டான்.

பிறகு என்ன?

மூட்டைகளுடன் வந்த வழிப்போக்கர்கள் வெறுங்கையோடு சென்று கொண்டிருந்தனர். கவுசிகனோ, வெறுங்கையோடு போக வேண்டியவன். கை நிறைய பொருள்களைச் சுமந்து சென்று கொண்டிருந்தான்.

இந்தச் சம்பவத்திலிருந்து, கவுசிகனுக்கு வேட்டையாடுவதில் மனம் செல்லவில்லை. மனிதர்களை மிரட்டி கொள்ளை அடிக்க ஆரம்பித்தான். அதற்காகக் கொலைகளையும் செய்யத் தொடங்கினான்.

இப்படியாக, கவுசிகனுடைய வாழ்க்கை காட்டில் தொடங்கி, வேட்டையாடுவதில் தொடர்ந்தது. பின்னர் வழிப்பறியும், கொள்ளை, கொலைகளும் அவனுக்குப் புதிய வாழ்க்கையாக மாறிவிட்டன.

மனிதப் பண்புகளுக்கு அப்பாற்பட்ட முறையில் கவுசிகன் இப்படி வாழ்க்கை நடத்திக்கொண்டு வந்த வேளையில்...!

ஒருநாள் நாரதர் காட்டில் அவனைச் சந்தித்தார்.

நாரதர் கவுசிகனைப் பார்த்து, ""மானிடப் பிறவியே! நீ ஆரம்பத்தில் மிருகங்களைக் கொன்று தீர்த்தாய்! இப்போது மனிதர்களின் பொருள்களைக் கொள்ளையடிப்பதோடு, அவர்களது உயிர்களையும் பறிக்கிற கொலைத் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறாய்! இப்படியே பாவ மூட்டைகளை அதிகரித்துக் கொண்டே போகிறாயே? ஏன் இவ்வாறு செய்கிறாய்? நீ செய்வதெல்லாம் தவறு என்று உன் மனதுக்குப்பட வில்லையோ?'' என்று கேட்டார்.

""என் மனைவி மக்களைக் காப்பாற்ற வேண்டாமா? அதற்காகத்தான் இப்படிச் செய்கிறேன்,'' என்று கவுசிகன் கூறினான்.

""அப்படியா? இறைவன் உன்னை இரு கரங்களுடன் படைத்துள்ளானே! அவற்றைக் கொண்டு நேர் வழியில் உழைக்க முடியாதா உன்னால்? வலுவான உன் கரங்களைக் கொண்டு மரம், மட்டை வெட்டி, அவற்றை விற்றுப் பிழைப்பு நடத்த முடியாதா உன்னால்? அதை விட்டு விட்டு உன் கரங்களால் மனிதர்களின் தலையை வெட்டியா, உன் தலையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்?'' இவ்வாறு கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார் நாரதர்.

ஆனால், கவுசிகனோ, ""என் குடும்பத்தைக் காப்பாற்றவே நான் இவ்வாறு செய்கிறேன்,'' என்று தனது பழைய பதிலையே திரும்பத் திரும்பச் சொன்னான்.

நாரதரும் கவுசிகனை விடுவதாக இல்லை. மீண்டும் நாரதர் அவனைப் பார்த்து, ""அப்படியா! நீ சொல்வது சரியென்றே வைத்துக் கொள்வோம். ஆனால், ஒன்று நீ செய்கிற இந்த பாவத்தில் உன் குடும்பத்தினரும் பங்கு பெறுகிறார்களா? என்று அவர்களிடம் கேட்டுப்பார்,'' என்று கூறினார்.

நாரதரிடம் விடைபெற்றுச் சென்றான் கவுசிகன்!

தன் கணவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பது பற்றி கவுசிகனின் மனைவி கேட்டதுமில்லை; அவன் சொன்னதுமில்லை.

ஆனால், நாரதரிடம் விடை பெற்றுச் சென்ற கவுசிகன் தன் மனைவியிடம் ஆசையோடு, ""நான் செய்யும் தொழிலில் உனக்குப் பங்கு உண்டல்லவா?'' என்று கேட்டான்.

""என்ன தொழில் என்று தெரிந்தால் அல்லவா, நான் உங்கள் கேள்விகளுக்குப் பதில் கூற முடியும்?'' என்று எதிர் கேள்வி கேட்டாள் கவுசிகனின் மனைவி.

தான் செய்து கொண்டிருக்கும் தொழிலைப் பற்றி மிகவும் வெளிப்படையாக ஒளிவு மறைவின்றித் தன் மனைவியிடம் எடுத்துக் கூறினான் கவுசிகன்.

அவன் கூறி முடிப்பதற்குள், அவள் எரிமலை போல வெடித்தாள். கணவனை எரித்துவிடுவது போலச் சீறினாள்!

""எனக்கென்ன தலை எழுத்தா? உன் பாவம் உன்னோடு தான். உன்னுடைய லாபத்திலும் எனக்குப் பங்கு வேண்டாம்; உன்னுடைய பாவத்திலும் எனக்குப் பங்கு வேண்டாம்! நீ பாவம் செய் அல்லது எது வேண்டுமானாலும் செய். அது பற்றி எனக்கு கவலை இல்லை. நீ என்னைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய். அதனால், என்னைக் காப்பாற்ற வேண்டியது உன்னுடைய பொறுப்பு! பாவ மூட்டைகளைப் பங்கு போடும் எண்ணம் எனக்கு வேண்டாம். அந்தச் சுமையை நீயே தாங்கிக்கொள்; அதன் விளைவுகளையும் நீயே ஏற்றுக்கொள்,'' என்று ஆவேசமாகக் கூறினாள்.

தன் மனைவியின் ஆவேசக் குரலில் பொதிந்திருந்த கருத்துரைகள் கவுசிகனின் உள் மனதைத் தட்டி எழுப்பியது.

அவனவன் சுமைகளை அவனவன் தான் சுமக்க வேண்டுமே தவிர, மற்ற எவரும் சுமக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்தான் கவுசிகன்.

அந்த ஒரு நொடியில், ஏதோ ஒரு புள்ளியில் மனமாற்றம் அடைகிறான். அந்த நொடியில் அவனது வாழ்க்கை மாற்றத்துக்கு உள்ளாகிவிடுகிறது. கவுசிகன் வால்மீகி முனிவராகிறார். பின்னர் அவரால் ராமாயணம் படைக்கப்பட்டது.

***
சிறுவர் மலர்



வால்மீகி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 16, 2014 5:09 am

இன்னும் சிறிது கூடுதல் செய்தி .
நாரத முனிவர் , அவருக்கு ( வழிப்பறி கொள்ளையன் )"மரா , மரா " என்று மந்திர ஜபத்தை உச்சரிக்க கூறுகிறார் . மரா மரா என்று உச்சரித்தல் "ராம ராம "திரிபடையும் , இந்த மந்திரத்தை நான் வரும் வரை சபித்துக்கொண்டே இரு " என்று போய் விடுகிறார் . மறந்தும் விடுகிறார் . நினைவு வந்து , அவர் பார்க்கும் போது , அவர் விட்டு சென்ற இடத்தில் , ஒரு எறும்புகள் ஏற்படுத்திய பெரிதான புற்று. அதன் உள்ளிருந்து ராம ராம என்ற நாமம் ஒலித்துக்கொண்டு இருந்தது . அதை உடைத்து பார்த்தால் கொள்ளைக்காரன் ஜபித்துக்கொண்டு இருக்கும் ராம ஜபம் .
சந்தோஷப்பட்டு , நாரதர் அவருக்கு வால்மீகி என்ற பட்டம் தருகிறார் .
[color:a117= rgb(0, 153, 0)]வால்மீகம் என்றால் புற்று என்று அர்த்தம் . வால்மீகத்தில் இருந்து வந்ததால் வால்மீகி ஆனார்

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக