புதிய பதிவுகள்
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஞ்சான் - விமர்சனம் Poll_c10அஞ்சான் - விமர்சனம் Poll_m10அஞ்சான் - விமர்சனம் Poll_c10 
57 Posts - 55%
heezulia
அஞ்சான் - விமர்சனம் Poll_c10அஞ்சான் - விமர்சனம் Poll_m10அஞ்சான் - விமர்சனம் Poll_c10 
41 Posts - 40%
mohamed nizamudeen
அஞ்சான் - விமர்சனம் Poll_c10அஞ்சான் - விமர்சனம் Poll_m10அஞ்சான் - விமர்சனம் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
அஞ்சான் - விமர்சனம் Poll_c10அஞ்சான் - விமர்சனம் Poll_m10அஞ்சான் - விமர்சனம் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஞ்சான் - விமர்சனம் Poll_c10அஞ்சான் - விமர்சனம் Poll_m10அஞ்சான் - விமர்சனம் Poll_c10 
99 Posts - 58%
heezulia
அஞ்சான் - விமர்சனம் Poll_c10அஞ்சான் - விமர்சனம் Poll_m10அஞ்சான் - விமர்சனம் Poll_c10 
62 Posts - 36%
mohamed nizamudeen
அஞ்சான் - விமர்சனம் Poll_c10அஞ்சான் - விமர்சனம் Poll_m10அஞ்சான் - விமர்சனம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அஞ்சான் - விமர்சனம் Poll_c10அஞ்சான் - விமர்சனம் Poll_m10அஞ்சான் - விமர்சனம் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஞ்சான் - விமர்சனம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 15, 2014 5:25 pm


இயக்குநர் லிங்குசாமியின் எழுத்து, இயக்கத்தில் 'சிங்கம்' சூர்யா நடித்து, எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்திருக்கும் படம் தான் ''அஞ்சான்''. இது யாருக்கும் அஞ்சாத சிங்கமா.? சூர்யாவின் வெற்றி பட வரிசையில் சொக்கத் தங்கமா.? என்பதை இனி இங்கு உரசிப்பார்ப்போம்...!

கதைப்படி, மும்பையில் தாதாவாக திகழ்ந்து, தகவலே இல்லாமல் போன தன் அண்ணன் சூர்யாவை தேடி கன்னியாகுமரியில் இருந்து மும்பைக்கு இரயிலேறுகிறார் மாற்று திறனாளி தம்பி சூர்யா. மும்பை இரயில்வே ஸ்டேஷன் போய் இறங்கியதும், அந்தேரி ஏரியாவுக்கு அண்ணன் சூர்யாவைத் தேடி டாக்ஸி பிடிக்கும் தம்பி சூர்யாவை, வாங்க அந்தேரி என வரவேற்கும் டாக்ஸி டிரைவர் காமெடி சூரியை கூடவே கூட்டிக் கொண்டு வழக்கமான தமிழ் சினிமா பாணியில் அண்ணனைத் தேடாமல், தனி ஆளாக அண்ணன் சூர்யாவை தேடுகிறார் தம்பி சூர்யா.

ஒரு கட்டத்தில் அண்ணன், தம்பி இருவர் அல்ல... இருவரும் ஒருவர்தான், ஒரே சூர்யா தான் எனும் உண்மை உலகுக்கும் (மும்பை நிழல் உலகுக்கும்...) உங்களுக்கும் (ரசிகர்களுக்கும்...) தெரிய வரும்போது 'அஞ்சான்' பதினாறடி பாஞ்சானாக விறுவிறுப்பு பிடிக்கிறது. அப்புறம், தம்பி சூர்யா, அண்ணன் சூர்யாவை தேடி வரவில்லை, தம்பி சூர்யா என்று ஒருவரே இல்லை... தன் நண்பன் சந்துரு-வித்யூத் ஜம்வாலை நயவஞ்சமாக சுட்டுக் கொன்றவர்களையும், தன்னை சுட்டு ஆற்றுக்குள் தள்ளிய விரோதிகளையும், அவர்களுக்கு உதவிய துரோகிகளையும் தேடித்தான் அண்ணன் ராஜூ பாய் சூர்யாவே, தம்பி கிருஷ்ணன் சூர்யாவாக அவதாரமெடுத்திருக்கிறார்... எனும் கதையையும், அது பயணிக்கும் தடத்தையும் முன்கூட்டியே யூகிக்க முடியாதவர்களுக்கு, படம் பயங்கர பரபரப்பாக, பரபரப்பு பயங்கரமாக, விறுவிறுப்பாக இருக்கிறது. அதை யூகிக்க முடிந்த இந்த காலத்து கில்லாடி ரசிகர்களுக்கு சற்றே 'சப்'பென்று இருக்கிறது.

அதிலும் 'சூப்பர் ஸ்டார்' ரஜினியின் 'பாட்ஷா', 'தளபதி' படங்களை பலமுறை பார்த்தவர்களுக்கு இயக்குநர் லிங்குசாமி 'அஞ்சான்' கதை பண்ணிய கதையும், 'சிங்கம் ஸ்டார்' சூர்யாவை,,'சூப்பர் ஸ்டாராக காட்ட முயலும் கலையும் சற்று கூடுதலாகவும் யூகிக்க முடிகிறது, தெரிகிறது. ஆனால் அதை போரடிக்காமல் சின்ன, சின்ன நகாசு வேலைகளை செய்து நகர்த்தியிருப்பதால் 'அஞ்சான்', நோஞ்சானாக தெரியாமல் பாஞ்சானாக பளிச்சிடுகி்றான்.

சூர்யா வழக்கம் போலவே அண்ணன் ராஜூபாயாகவும், தம்பி கிருஷ்ணாவாகவும் இருவேறு 'கெட்-அப்'புகளில்(கவனிக்கவும், அண்ணன் டபுள்-ஆக்டில் டூயட் ரோலில் அல்ல...) பிச்சி பெடலெடுத்திருக்கிறார். ''நான் சாகணும்னாலும் நான் தான் முடிவு பண்ணனும்... நீ சாகணும்னாலும் அதையும் நான்தாண்டா முடிவு பண்ணனும்'' என சூர்யா துரோகிகளையும், விரோதிகளையும் சுட்டு தள்ளும் இடங்களாகட்டும், ''சுடணும்னா சுடணும் அதை விட்டு விட்டு சும்மா பேசிட்டு இருக்கக்கூடாது...' என எதிராளிகளை போட்டு தள்ளும் இடங்களிலாகட்டும், இன்னும் க்ளைமாக்ஸில் மெயின் வில்லன் இம்ரானை தீர்த்துகட்ட தனக்கு உதவிடும் வில்லனின் கூட்டாளிகள் மூவரை சுட்டுத்தள்ளிவிட்டு ''எதிரியிடம் கூட துரோகிகள் இருக்கக்கூடாது...' என 'பன்ச்' டயலாக் அடிப்பதிலாகட்டும் சூர்யா, சூரியனாக ஜொலிக்கிறார்!

ஆனால் அப்புறம் விஜய்யை 'இமிடேட்' செய்ய வேண்டும் எனும் எண்ணமும், ''சின்னதா வேட்டு சத்தம் கேட்டதும் பயந்து பறக்குறதுக்கு நான் என்ன புறாவா.? நின்னு நிதானமா இரையை தூக்கிட்டு போற கழுகுடா...'' என பேசும் வசனத்தில் புறாவா? சுறாவா? என புரியாமல் சூர்யா ரசிகர்கள், தியேட்டரில் விஜய்க்கு 'பன்ச்' வைத்ததாக நினைத்து விசில் பறக்க விடுவதும், வில்லன் இம்ரானை மற்றொரு நடிகர் விக்ரம் சாயலில் பிடித்து போட்டு படங்கள் மூலம் ஏதேதோ மெஸேஜ் சொல்ல களம் இறங்கிவிட்டது புரிகிறது. போகட்டும்! படம் பேசட்டும்!

நாயகி சமந்தா போலீஸ் கமிஷனர் மகளாக 'கிக்' என்ட்ரி கொடுத்து, ரசிகர்களின் இதயங்களை 'பக் பக்' என அடிக்க விடுகிறார். வழக்கம் போலவே ஆக்ஷ்ன் படங்களில் கதாநாயகிக்கான உரிய முக்கியத்துவம் அம்மணிக்கும் தரப்பட்டிருந்தாலும், அம்மணி சமந்தாவை காட்டிலும் சக்கை போடு போட்டிருக்கின்றனர் பார்ட்டிகளில் ஆடும் பஞ்சுமிட்டாய் பெண்கள். பலே, பலே!

காமெடி சூரி, தெலுங்கு பிரம்மானந்தம், சூர்யாவுக்கு உதவும் டிராவல்ஸ் இஸ்லாமியர் ஜோமல்லூரி மற்றும் சூர்யாவின் நண்பர், தாதாவாக வரும் சந்துரு-வித்யூத் ஜம்வால், வில்லன்கள், விரோதிகள், துரோகிகள் எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

யுவனின் இசையில், 'ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி...' எனத் தொடங்கித் தொடரும் பாடல் மட்டும் மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் ர(ரா)கம்! சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு அஞ்சானின் கூடுதல் பலம்! பிருந்தாசாரதியின் வசன வரிகள் பெரும்பலம்!

ராஜூபாய் சூர்யாதான் என்னை பார்க்க கூடாது, நான் அவரை பார்ப்பதில் என்ன தவறு என சூர்யாவுக்கு உதவும் ஜோமல்லூரி பாய் வீட்டில், சமந்தா பர்தாக்குள் பவனி வருவது டைரக்டர் லிங்குசாமியின் புத்திசாலித்தனத்திற்கு உதாரணம். அதேநேரம், சமந்தா, தாதா சூர்யாவை காதலிப்பதை கமிஷனர் அப்பா கண்டு கொள்ளாததும்., சமந்தா, காதலர் சூர்யாவின் பெயரை ராஜூ என கையில் பச்சைக் குத்திக்கொள்ளாமல் எல்லோரும் சூர்யாவை பயபக்தியுடனும், பாசத்துடனும் அழைப்பது போல் ராஜூ பாய் என்றே பச்சை குத்தியிருப்பதும் அபத்தம்! அதிலும் அந்த பச்சை ஸ்கெட்ச் பேனாவால் குத்தப்பட்ட பச்சை என்பது அப்பட்டமாக தெரிவது கூடுதல் அபத்தம்!

இதுமாதிரி ஒரு சில அபத்தங்களை ஒதுக்கிவிட்டால் இரண்டு மணிநேரம் 51 நிமிட படமும் சற்றே சுருங்கும். ஒருசில இடங்களில் போரடித்து கொஞ்சமே கொஞ்சம் நோஞ்சானாக தெரியும் அஞ்சானும் முழுக்க முழுக்க 64 அடி பாஞ்சானாக பளிச்சிடுவான்.

மொத்தத்தில், ''அஞ்சான்'' - 'சற்றே சாஞ்சான்' - 'ஆனாலும் பாய்ந்தான் - பாய்ந்துள்ளான்!!'

தினமலர் விமர்சனம்




அஞ்சான் - விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 15, 2014 5:27 pm

அஞ்சான் - மாலைமலர் விமர்சனம்

கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்கிறார் கிருஷ்ணா. அங்கு தன் அண்ணனான ராஜூவை தேடி அலைகிறார். அப்போது சந்துரு, ராஜூ இருவரும் தன் அடியாட்களுடன் அந்தேரியில் கடத்தல் தொழில் செய்து வந்தாக ராஜூவின் கூட்டாளியான கரீம்பாய் கூறுகிறார். கரீம் பாய் மூலம் மற்ற விவரங்களை கேட்டு அறிகிறார் கிருஷ்ணா.

அப்போது அந்தேரிக்கு புதிய கமிஷனராக வரும் அசோக் குமார், சந்துரு, ராஜூவின் ஆட்களை கைது செய்து விடுகிறார். இதனால் கோபமடையும் ராஜூ கமிஷனரின் மகளான நாயகி ஜீவாவை திருமணத்தின்போது கடத்தி விடுகிறார்.

கமிஷனரிடம் தன் கூட்டாளிகளை விடுவிக்கும்படி பேரம் பேசுகிறார் ராஜூ. அதன்படி கூட்டளிகளை கமிஷனர் விடுவிக்க, ராஜூவும் ஜீவாவை விடுவிக்கிறார். இதைத்தொடர்ந்து நடக்கும் சில சந்திப்புகளில் ராஜூ, ஜீவா இருவருக்கும் காதல் ஏற்படுகிறது.

இதற்கிடையில் மும்பையில் மிகப்பெரிய தாதாவான இம்ரான் பாய் சந்துருவையும் ராஜூவையும் விருந்துக்கு அழைக்கிறார். அங்கு இருவரையும் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார் இம்ரான் பாய். இதனால் கோபம் அடையும் சந்துரு புலம்பியபடி இருக்க, ராஜூ இம்ரான் பாயை கடத்தி வந்து நண்பன் சந்துருவிடம் காண்பிக்கிறார். இருவரும் சேர்ந்து இம்ரான் பாயை மிரட்டி அனுப்புகின்றனர். இதனால் சந்தோஷம் அடையும் சந்துரு, ராஜூவுக்கு புதியதாக கார் ஒன்றை வாங்கி கொடுத்து ஜீவாவுடன் ஜாலியாக சுற்றிவிட்டு வர அனுப்புகிறார்.

இருவரும் மும்பையை சுற்றி வரும்போது திடீர் என்று துப்பாக்கி சத்தம் கேட்கிறது. ராஜூவை நோக்கி துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து வருகிறது. அதிலிருந்து ராஜூ தப்பிக்கிறார். அப்போது ராஜூவுக்கு ஒரு இடத்திற்கு வரும்படி போன் வருகிறது. அங்கு சென்று பார்க்கும் போது சந்துரு வெட்டுக் காயங்களுடன் இறந்துகிடக்கிறார். இதைக்கண்டு கொதிக்கும் ராஜூ, இம்ரான்பாய் தான் சந்துருவை கொன்று இருப்பான் என்று கூறிக்கொண்டு இம்ரானை தீர்த்துக்கட்ட கூட்டாளி அமர் உடன் காரில் செல்கிறார்.

கார் பாலத்தில் சென்று கொண்டிருக்கும்போது ராஜூவின் கூட்டாளியான அமர் காரை நிறுத்தி விட்டு, ராஜூவையும் துப்பாக்கியால் சுட்டுவிடுகிறார். குண்டு பாய்ந்த ராஜூ பாலத்தில் இருந்து நீரில் விழுந்து விடுகிறார். இந்தக் கதையை கரீம் பாய் சொல்ல கிருஷ்ணா கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது ராஜூவை சுட்டுக்கொன்ற அமர் தனது கூட்டாளிகளுடன், கரீம் பாயை சந்திக்க வருகிறான்.

அங்கு கிருஷ்ணாவை சந்திக்கிறான். நான்தான் ராஜூவை கொன்றேன் என கிருஷ்ணாவிடம் கூறுகிறான். இதைக் கேட்டு கோபமடையும் கிருஷ்ணாவையும் சுட்டுக் கொல்லுமாறு தன் கூட்டாளியிடம் துப்பாக்கியை தருகிறான் அமர். இங்கேதான் படத்தில் திரும்புமுனை ஏற்படுகிறது. மீதிக்கதையை திரையில் காண்க....

படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் கலக்கலாக அமைந்திருக்கிறது. சண்டைக்காட்சிகளில் அதகளபடுத்தியிருக்கிறார். படத்தில் பேசும் பஞ்ச் வசனங்கள் சூர்யாவின் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருக்கிறது. ஜீவாவாக நடித்திருக்கும் சமந்தா சில காட்சிகளே வந்தாலும் நன்றாக நடித்திருக்கிறார், கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறார். சந்துருவாக வரும் வித்யூத் ஜமால் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக இருவரையும் சுற்றுலா அனுப்பும் காட்சிகளில் தன்னுடைய நடிப்பு திறனை காட்டியிருக்கிறார். சூரி கொஞ்ச நேரமே வந்தாலும் நகைச்சுவையில் ரசிகர்களை கலகலப்பூட்டுகிறார். வில்லனாக வரும் இம்ரான் பாய் கோட் சூட்டில் ஜென்டில்மேன் போன்று காட்சியளித்தாலும் வில்லத்தனத்தில் கொடுரம் காட்டியிருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் விதமாக உள்ளது. யுவன் பாடிய ‘காதல் ஆசை...’ பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வகையில் உள்ளது. சூர்யா பாடிய ‘ஏக் தோ தீன் சார்...’ பாடல் சூர்யா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. பாடல்களில் வரும் நடனக் காட்சிகளில் நடன இயக்குனர் ராஜூ சுந்தரத்தின் தனித்துவம் தெரிகிறது.

மும்பை நகரத்தின் இரவு காட்சியை சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு மிக அழகாக காட்டியிருக்கிறது. சண்டைக்காட்சிகளையே மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் சூர்யா ரசிகர்களுக்கு குறை ஏதும் வைக்கவில்லை இயக்குனர் லிங்குசாமி. சூர்யாவை மையமாக வைத்து கதையில் லிங்குசாமி வைத்திருக்கும் திருப்புமுனை அவரின் சாமார்த்தியத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. நாயகியின் பெயரில் கூட திருப்புமுனை வைத்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘அஞ்சான்’ அதகளபடுத்தியிருக்கிறான்.




அஞ்சான் - விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Aug 15, 2014 8:55 pm

அப்படியே .... வரும் செய்திகள் இப்படி இல்லையே



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 15, 2014 9:51 pm

அஞ்சான் - விமர்சனம் 1571444738 அஞ்சான் - விமர்சனம் 1571444738 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 15, 2014 11:10 pm

அலற வைக்கும் அஞ்சான் விமர்சனம்!

படம் பார்க்கக் கிளம்பும்போதே ஒரு தம்பி அன்பாக ‘ஏன்ணே சுதந்திர தினம் அன்னிக்கு ஜெயிலுக்குப் போறீங்க?’ன்னு கேட்டார். அப்பவே சகுனம் சரியில்லையேன்னு உஷார் ஆகியிருக்கணும்..ஆனேனா? இல்லியே...இல்லியே!

மன்னிச்சிருங்க மக்களே..இன்னிக்கு விமர்சனம் எழுதறதா இல்லை. படத்துக்கு விமர்சனம் எழுதலாம். ஆனால் காவியத்துக்கு?

எதை எழுதன்னு எனக்கு நிஜமாவே புரியலை. கதைன்னு ஏதாவது இருந்தால், அதை விளக்கலாம். திரைக்கதைன்னு ஏதாவது இருந்தால், உரிக்கலாம். ஆனால்....என்னத்தைச் சொல்ல?

வசனங்கள் பிரமாதம். உதாரணத்துக்கு...

டேய்..

ஏண்டா இப்படி...

ஹா..ஹா..சூப்பரு..சூப்பரு.(இது செண்டிமெண்ட் சீன்ல!)

யம்மா..

அய்யய்யோ.

கொல்றாங்களே.

ஓடிடலாமா? (இண்டர்வெல் டயலாக்)

உஸ்ஸ். (இது தான் அதிகத் தடவை)

தெரியாம வந்துட்டோம்டி!

- இதெல்லாம் படத்துல வந்த வசனம் இல்லை மக்கா...படம் பார்க்கும்போது தியேட்டர்ல வந்த வசனம். ஸ்க்ரீனைப் பார்த்து, அப்படித் திட்டுறாங்க..பச்சை பச்சையா திட்டறாங்க...அதை இங்கே எழுத முடியாது..கட்டுப்பாடான குவைத் தியேட்டர்லயே இப்படின்னா, ஊர்ல என்ன ஆகப் போகுதோ?

ராஜூ பாயைத் தேடி அவர் தம்பி கிருஷ்ணா பாய் வர்றார்.

பாய் வீட்ல பர்தா போட்டு ஒரு பொண்ணு, ராஜு பாயை உத்து, உத்துப் பார்க்குது.

- இந்த ரெண்டுலயும் பயங்கர ட்விஸ்ட் ஒளிஞ்சிருக்குதாம்...எவனாலயும் கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைப்பு. கிருஷ்ணா வந்த கொஞ்ச நேரத்துலயே, அவர் யாருன்னு தியேட்டர்ல கத்திச் சொல்லிட்டாங்க. பர்தா பொண்ணையும் ‘அவ தானே நீ..சஸ்பென்ஸாம்!”-ன்னு நக்கல் விடறாங்க.

மும்பைல சில பேரை ராஜூ பாய் கொல்றாரு.

வில்லன் ராஜூ பாயோட ஃப்ரெண்டை கொல்றாரு.

ராஜூ பாய், துரோகி-1-ஐக் கொல்றாரு.

ராஜூ பாய், துரோகி-2-ஐக் கொல்றாரு.

ராஜூ பாய், துரோகி-3-ஐக் கொல்றாரு.

ராஜூ பாய் வில்லனோட (மினிமம் 100) அடியாட்களைக் கொல்றாரு.

ராஜூ பாய் வில்லனைக் கொல்றாரு.

மறுபடியும் ராஜூ பாய் துரோகிகளைக் கொல்றாரு.

கொல்றாருய்யா...கொல்றாரு...மிச்சம் இருக்கிற நம்மையும் கொல்றாரு...உஸ்ஸ்..ராஜ்ஜூ ப்பாய்...ராஜ்ஜூ ப்பாய்..அய்யோ, இப்படித் தனியா புலம்ப விட்டுட்டாங்களே!

பிள்ளையார் கோயில்ல சுண்டல் வாங்க ஓடற மாதிரியே, புதுப்படம் வந்தால் பார்க்கிறதுக்கு ஓடறது....ஏதோ விமர்சனமாம்...எழுதியே ஆகணுமாம்..இப்போ, அய்யோ-அம்மா வலிக்குதேன்னா...வலிக்கத் தான் செய்யும்..பின்னே, சினிமா விமர்சகர்ன்னா சும்மாவா?

ஒரு சீனைக் கூட எவனும் ரசிச்சிடக்கூடாதுன்னு கங்கணம் கட்டி வேலை பார்த்திருப்பாங்க போல..நல்லா இருங்கய்யா..எத்தனை பேரு உழைப்பு..எத்தனை கோடி காசு...இதை எடுக்கவா இம்புட்டு அலப்பறை?

ஏற்கனவே பீமா படத்துலேயே லிங்குசாமி அண்ணனுக்கு டான் கதை வரலியே..அப்புறம் வராத கழுதையை வா, வான்னா எப்படி வரும்?

தியேட்டருக்கு பாட்டு சீனுக்கு எந்திரிச்சுப் போறதைப் பார்த்திருக்கேன்..பாதிப் படம் ஓடும்போதே, வெளியே பத்து நிமிசம் காலாற நடந்துட்டு வர்றதை இன்னுக்குத் தான்யா பார்க்கிறேன். திரும்பி வந்து பக்கத்து சீட் ஆள்கிட்ட ‘என்ன மாப்ளை...ராஜூ பாய் என்ன சொல்றாரு?’ன்னு நக்கலா கேள்வி வேற கேட்குறாங்க..எவ்ளோ அவமானம் இது.

ஃபேஸ்புக்ல இதுவரை வடிவேலுவின் ‘போறியா..இல்லை வாய்க்குள்ள கத்தியை விட்டு ஆட்டவா?’ ஸ்டில்லு தான் ஃபேமஸ். இனிமே ‘போறியா..ராஜ்ஜூ பாய்கிட்ட பிடிச்சுக்கொடுக்கவா?’ன்னு ஒரு ஸ்டில் தான் ஃபேமஸ் ஆகப்போது!

நான் விமர்சனம் எழுதலியேன்னு வருத்தப்படாதீங்கய்யா...வருவான்...எவனாவது ஒருத்தன் வருவான். வந்து, ‘இது ஒரு ஒழக சினிமா...இந்தப் படத்தை இப்படிப் பார்க்கக்கூடாது..சீட்ல ரைட் சைடு சாய்ஞ்சுக்கிட்டு, லெஃப்ட் டிக்கியை தூக்கிட்டுப் பார்க்கணும்..இங்க யாருக்கும் அறிவில்லை’-ன்னு சொல்ல ஒருத்தன் வருவான்..அப்படிப்பட்ட புண்ணியவானுக்காகத் தான் நான் வெயிட்டிங்...நீங்களும் வெயிட் பண்ணுங்க.

ராஜ்ஜூ ப்பாய்...ராஜ்ஜூ ப்பாய்!

செங்கோவியின் விமர்சனம்


உஷாரய்யா உஷாரு, தியேட்டருக்கு போறவங்கள்லாம் உஷாரு!



அஞ்சான் - விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 19, 2014 3:28 pm

‘அஞ்சான்’ படத்தை பார்க்காதவர்கள் கூட படம் சரியில்லையினு பரப்புகிறார்கள் – சூர்யா

அஞ்சான் - விமர்சனம் Anjaan1’அஞ்சான்’ படத்தை பார்த்துவிட்டு கருத்து சொல்லுங்கள். படம் பார்க்காமல் சரியில்லை எனக் கருத்து கூறுவது வேதனை தருகிறது என்று சூர்யா கூறியுள்ளார்.

‘அஞ்சான்’ படம் பற்றி இணையத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்மறை விமர்சனங்கள் திடீரென்று முளைத்ததன் காரணம் என்னவென்றுதான் தெரியவில்லை. ஆனால் திரையரங்குகளில் இந்தப் படத்துக்கு இன்னும் 2 நாட்களுக்கு அனுமதிச் சீட்டுகள் கிடைக்காது என்பதுதான் உண்மை நிலை.

சில நேரங்களில் தவறான கருத்துக்கள்கூட படத்தின் விளம்பரமாக உதவும் என்பார்கள். அது இந்தப் படத்துக்கும் பொருந்திவிட்டது எனலாம். எப்போதும் வியாழன், வெள்ளியன்றே பெரிய படங்களுக்கு சிறப்புக் காட்சி போடுவார்கள்.

அஞ்சான் - விமர்சனம் Anjaan-posters

ஆனால் இந்தப் படத்துக்கு இந்தியாவில் ஞாயிறு மாலை நடந்தது. இயக்குநர் லிங்குசாமியுடன் நடிகர் சூர்யாவும் நேரில் வந்து பத்திரிகையாளர்களிடத்தில் படத்தைப் பற்றி பேசினார்.

சூர்யா பேசும்போது, “என்னோட எந்தப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு இந்த ‘அஞ்சான்’ படம் 1500 தியேட்டர்களில் வெளியாகியிருக்கு. எந்த ரசிகரும் அனுமதிச் சீட்டு கிடைக்க வில்லையினு வீட்டுக்கு திரும்பி போகக் கூடாதுங்கிற ஒரே காரணத்துக்காக இத்தனை திரையரங்குகளில் வெளியிட்டோம்.

வெளியான எல்லா இடங்களில் இருந்தும், நல்ல படம் எனவும் நல்ல கருத்துக்களும் வந்தன. இந்தப் படத்தை ரசிகர்கள் குடும்பத்தோட வந்து பார்க்கிறார்கள்.

‘அஞ்சான்’ படம் ஐந்து பேருக்கு மட்டும் பண்ற விருந்து கிடையாது. எல்லாருக்கும் பண்ற பெரிய விருந்து. எல்லாருக்கும் என்ன பிடிக்கணும்னு மட்டும்தான் பார்த்து கொடுக்க முடியும்.

அஞ்சான் - விமர்சனம் Surya1

ஒரு சிலருக்கு மட்டும் பிடிச்ச மாதிரியெல்லாம் கொடுக்க முடியாது. இப்போ எனக்கென்ன வருத்தம்ன்னா… படத்தைப் பற்றி நிறைய வதந்திகள் கிளம்பி இருக்கு. தேவையில்லாத விமர்சனங்களும் செய்துள்ளனர்.

இதில், சிலர் வேண்டுமென்றே படம் சரியில்லையினு பரப்பி வருவதுதான். இதில் படம் பார்க்காதவர்கள்கூட சேர்ந்து கொண்டதுதான் ரொம்ப வேதனை.

இப்படி தேவையில்லாமல் தவறான கருத்துக்களை வெளியிட்டு ஒருவரின் எதிர்காலத்திற்கு தீங்கு விளைவிப்பது நல்ல விஷயம் இல்லை” என வருத்தப்பட்டார் சூர்யா. விமர்சனம் செய்வதை தவறென்று கூறவில்லை. தனி நபர் விமர்சனம் வேண்டாம் என்று கூறியுள்ளார் சூர்யா.



அஞ்சான் - விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Aug 19, 2014 3:48 pm

அது சரி, பாஞ்சான், பாஞ்சான்னு பல இடங்களில் எழுதி இருக்கீங்களே, அதன் பொருள் என்னவென்று இந்த நோஞ்சான் பயனுக்கு கொஞ்சம் சொல்லுங்கோ. நானும் அந்தப் படத்தை நொட்ல பார்த்தேன், என்ன இருந்தாலும், அந்த காலம் அதாவது எங்க காலத்து படம் மாதிரி வருமா. எம்.ஜி.யார் சும்மா சுத்தி சுத்தி அடிப்பாரே அது போல இப்ப எங்க படம் வருது. ஒரே அவுட்டா படமாவுள்ள இருக்கு.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82408
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 19, 2014 5:30 pm

அஞ்சான் - விமர்சனம் KEkxlTT9QGO8KRHytx6h+18-brahmanandam-2-600
--
‘அஞ்சான்’ படம் 3 நாளில் ரூ.30 கோடி வசூலித்து
சாதனை நிகழ்த்தி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
-
>டைரக்டர் லிங்குசாமி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Aug 19, 2014 8:03 pm

இந்த அளவு கேவலமாக விமர்சிக்கும் அளவு படம் மோசம் இல்லை...



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 19, 2014 8:14 pm

எத்தனையோ மும்பை தாதா படம் பார்த்ததால் இதில் அத்தனை விறுவிறுப்பு இல்லை - சுமார் தான்.




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக