ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேயிலைகளில் அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகள்

Go down

தேயிலைகளில் அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகள் Empty தேயிலைகளில் அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகள்

Post by சிவா Wed Aug 13, 2014 12:12 am


புதுடெல்லி: இந்தியாவின் முன்னணி பிராண்ட் தேயிலைகளில் அதிகமான பூச்சிக்கொல்லி மருந்து நச்சுகள் இருப்பதாக சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக இயங்கும் அரசு சாரா நிறுவனமான 'கிரீன்பீஸ் இந்தியா' எச்சரித்துள்ள நிலையில், இந்திய தேயிலை வாரியம் இது தொடர்பான ஆய்வறிக்கையை ஏற்க மறுத்துள்ளது.

இது தொடர்பாக கிரீன்பீஸ் இந்தியா ( Greenpeace India ) அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization - WHO) அனுமதித்துள்ள அளவைக் காட்டிலும் அபாயகரமான அளவில், இந்தியாவில் விற்கப்படும் முன்னணி பிராண்ட் தேயிலைகளில் பூச்சிக்கொல்லி மருந்து உள்ளதாக கூறியுள்ளது. மேலும் தேயிலை செடிகளில் அடிக்க அனுமதிக்கப்படாத பூச்சிக்கொல்லி மருந்துகளும் இதில் காணப்படுவதாகவும் அது தெரிவித்துள்ளது.

கடந்த 2013 ஜுன் மாதம் முதல் 2014 மே மாதம் வரை இந்திய சந்தையில் அதிகமான விற்கப்படும் 49 பிராண்டுகளின் தேயிலை மாதிரிகளும், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் இந்தியாவின் 11 முன்னணி நிறுவனங்களின் ( இந்த நிறுவனங்கள் ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேடு மற்றும் ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் தங்கள் தயாரிப்பு தேயிலைகளை ஏற்றுமதி செய்கின்றன) தேயிலை மாதிரிகளும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட Hindustan Unilever, Tata Global Beverages, Wagh Bakri, Goodricke Tea, Twinings, Golden Tips, Kho-Cha and Girnar உள்ளிட்ட பல்வேறு பிரபலமான நிறுவனங்களின் தேயிலை மாதிரிகளில் மிக அதிக அபாயகரமான மற்றும் மிதமான அளவுகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சு காணப்பட்டது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தேயிலை மாதிரிகளில் ஒருகுறிப்பிட்ட பூச்சிக்கொல்லி மருந்தின் நச்சு மட்டும் அல்லாது பலதரப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்தின் நச்சுகள் காணப்பட்டுள்ளன. மேலும் கடந்த 1989 ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் பயிர்களுக்கு அடிக்க தடை செய்யப்பட்ட DDT என்ற பூச்சிக்கொல்லி மருந்து, ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மாதிரிகளில் 67 சதவீத மாதிரிகளில் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது என கிரீன்பீஸ் இந்தியா தெரிவித்துள்ளது.

இது தவிர மனிதர்கள் மற்றும் பறவைகளுக்கு தீங்கு விளைவிப்பதாக அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட 'Monocrotophos' என்ற பூச்சிக்கொல்லி மருந்துகளும் இத்தேயிலை மாதிரிகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

பீகாரில் கடந்த ஆண்டு, பள்ளியில் மதிய உணவு உட்கொண்ட 23 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை அந்த அறிக்கையில் நினைவூட்டியுள்ள கிரீன்பீஸ் இந்தியா, அந்த குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவில் மேற்கூறிய 'Monocrotophos' பூச்சிமருந்து கலந்ததாலேயே அவர்கள் உயிரிழந்ததாகவும், இதனைத் தொடர்ந்து வளரும் நாடுகள் இந்த 'Monocrotophos' பூச்சிமருந்தை பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ( Food and Agriculture Organization of the United Nations) வேண்டுகோள் விடுத்திருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் தேயிலை உற்பத்தி துறை பூச்சிக்கொல்லி மருந்து பொறியில் சிக்கிக்கொண்டுள்ளதாகவும், அதிலிருந்து விடுபட்டு இயற்கை மற்றும் சுற்றுச் சூழலுக்கு தீங்கு ஏற்படாத வகையிலான விவசாய முறையை கடைபிடிக்க வேண்டும் என்றும், தேயிலை நிறுவனங்கள் இந்த மாற்றத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ள கிரீன்பீஸ், ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள முன்னணி தேயிலை நிறுவனங்களுடன் தங்களது அறிக்கையின் நகலை பகிர்ந்ந்துகொண்டதாகவும், இது தொடர்பாக அவர்களுடன் பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

'இந்திய தேயிலை வாரியம்' மறுப்பு

இதனிடையே கிரீன்பீஸ் இந்தியாவின் இந்த ஆய்வறிக்கையை ஏற்க, மத்திய வர்த்தக துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 'இந்திய தேயிலை வாரியம்' மறுத்துள்ளது.

கிரீன்பீஸ் இந்தியா அமைப்பு மேற்கொண்ட தேயிலை மாதிரி சோதனைகள், நுகர்வோர்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட இந்திய சட்ட மற்றும் ஒழுங்குமுறை விதிகளின் அடிப்படையில் செய்யப்பட்டவை என்றும், இந்திய தேயிலைகள் கடுமையான தரங்களுக்கு உட்படுத்தப்பட்டவை என்றும், முற்றிலும் பாதுகாப்பானது என்றும், உலகம் முழுவதும் இந்திய தேயிலை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்றும், எனவே இந்திய தேயிலைகள் குறித்து தவறான புரிதல் கூடாது என்றும் அது கூறியுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum