புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார்  யார்  என்ன சாப்பிடலாம்? Poll_c10யார்  யார்  என்ன சாப்பிடலாம்? Poll_m10யார்  யார்  என்ன சாப்பிடலாம்? Poll_c10 
62 Posts - 57%
heezulia
யார்  யார்  என்ன சாப்பிடலாம்? Poll_c10யார்  யார்  என்ன சாப்பிடலாம்? Poll_m10யார்  யார்  என்ன சாப்பிடலாம்? Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
யார்  யார்  என்ன சாப்பிடலாம்? Poll_c10யார்  யார்  என்ன சாப்பிடலாம்? Poll_m10யார்  யார்  என்ன சாப்பிடலாம்? Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
யார்  யார்  என்ன சாப்பிடலாம்? Poll_c10யார்  யார்  என்ன சாப்பிடலாம்? Poll_m10யார்  யார்  என்ன சாப்பிடலாம்? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார்  யார்  என்ன சாப்பிடலாம்? Poll_c10யார்  யார்  என்ன சாப்பிடலாம்? Poll_m10யார்  யார்  என்ன சாப்பிடலாம்? Poll_c10 
104 Posts - 59%
heezulia
யார்  யார்  என்ன சாப்பிடலாம்? Poll_c10யார்  யார்  என்ன சாப்பிடலாம்? Poll_m10யார்  யார்  என்ன சாப்பிடலாம்? Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
யார்  யார்  என்ன சாப்பிடலாம்? Poll_c10யார்  யார்  என்ன சாப்பிடலாம்? Poll_m10யார்  யார்  என்ன சாப்பிடலாம்? Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
யார்  யார்  என்ன சாப்பிடலாம்? Poll_c10யார்  யார்  என்ன சாப்பிடலாம்? Poll_m10யார்  யார்  என்ன சாப்பிடலாம்? Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் யார் என்ன சாப்பிடலாம்?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 04, 2009 4:29 pm

உடல் ஆரோக்கியத்தில் உணவு, உடற்பயிற்சி, ஓய்வு மற்றும் அமையார்  யார்  என்ன சாப்பிடலாம்? PHOTj0047தியான வாழ்க்கை முறை ஆகியவை முக்கியப் பங்காற்றுகின்றன. இருப்பினும் இதில் உணவுக்குச் சிறப்பிடம் உண்டு. சத்தான உணவை முறையாகச் சாப்பிட்டால் பல நோய்களைத் தவிர்க்கலாம். ரசாயன உரங்கள் இட்டு அதிக மகசூல் பெற்று வியாபார நோக்கத்தில் உருவாக்கப்படும் உணவுகள்,சுற்றுச் சூழல் மாசு. மன அழுத்தம், ஓய்வின்மை போன்றவற்றால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. நாமெல்லாம் நாக்கு ருசிக்கு அடிமையாகி உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதில்லை. வயிறும் நிரம்பிவிடும். ஆனால் உடலுக்குத் தேவையான எல்லாச் சத்துக்களும் கிடைக்கிறதா என்று நாம் யோசிப்பதே இல்லை

சமச்சீர் உணவு:
உடலும், மனமும் ஆராக்கியமாக இருக்க சத்தான - சமச்சீரான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். உடலின் தேவையின் அடிப்படையில் ஊட்டச் சத்துகள் இரு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை பெரிய ஊட்டச்சத்துகள் (Macro nutrients),. சிறிய ஊட்டச்சத்துகள் (Micro Nutrients).
கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து), புரதம், கொழுப்பு ஆகியவை பெரிய ஊட்டச்சத்துகளாகும். பெரிய ஊட்டச் சத்துகள் உடலுக்கு அதிக அளவில் தேவைப்படுகிறது. உடல் இயக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் எரிசக்தியாக இவை செயல்படுகின்றன.
வைட்டமின் மற்றும் தாதுப்பொருள்கள் சிறிய ஊட்டச்சத்துகள் ஆகும். இவை உடலுக்குச் சிறிதளவே தேவை என்றாலும் உடல் இயக்கத்துக்கும் அதனை பாதுகாக்கவும் மிக மிகஅவசியமானது.
நமது உணவில் ஊட்டச்சத்துகள் அல்லாத பிற பொருள்களை வாசனை, ருசி, செரிமானத்துக்காகச் சேர்க்கிறோம். பூண்டு, சீரகம், வெந்தயம் போன்ற பொருள்கள் ஊட்டச்சத்துகள் ஆகாது. ஆனால் இப் பொருள்களில் வாசனை மட்டுமின்றி சில மருத்துவக் குணங்களும் உள்ளன.

புரத சத்து (Protein):
ஊட்டச்சத்துகளில் முதலாவது விளங்குவது புரத சத்து.இது உடல் வளர்ச்சிக்குத் தேவையானது. இதுஉடலில் நோய்த் தொற்றை எதிர்க்க உதவும். எதிர் உயிரிகளை உருவாக்கப் பயன்படும். ரத்தம், தசை நார்கள், திசுக்களை வலுப்படுத்தும்
பால், பாலாடைக் கட்டி,பருப்பு,பயறு வகைகள், வேர்கடலை, இறைச்சி, மீன், பேரீத்தம் பழம்,அத்திப்பழம்,திராட்சைப் பழம்,மாதுளம் பழம்,நேத்திரம் பழம் ,
வாதம் பருப்பு , எண்ணெய் வித்துக்கள், உணவுத் தானியங்கள், சோயாபீன்ஸ், முட்டை, கீரை வகைகளில் அதிகம் கிடைக்கிறது.முதல் தர புரத சத்து பாலில் தான் கிடைக்கிறது.
மாவுச்சத்து (Carbohydrate) மற்றும் கொழுப்புச் சத்து (Fat)உள்ள உணவுகள் உடலுக்கு சக்தி அளிக்கின்றன
மாவுச்சத்து (Carbohydrate)
அரிசி, கோதுமை, மக்காச் சோளம், கேப்பை, கம்பு, தினை உள்ளிட்ட தானிய வகைகள், சர்க்கரை, தேன், வெல்லம்,உருளைக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றில் மாவுச்சத்து அதிகமாக உள்ளது.இது உடலுக்கு ஆற்றலை அளிக்கும்
கொழுப்புச் சத்து (Fat)
வெண்ணெய், நெய், முட்டையின் மஞ்சள் கரு, எண்ணெய் வித்துக்கள், மீன், ஈரல் போன்றவற்றில் கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது. இது ஆற்றலை அளிக்கும். உயிர்ச் சத்துகள் கரைய உதவும்
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்:(Vitamins and Minerals):
வைட்டமின்கள், தாதுப் பொருள் அடங்கிய உணவுகள் உடலைப் பாதுகாத்து பராமரிக்கின்றன.
வைட்டமின் ஏ
பால், தயிர், வெண்ணெய், நெய், கேரட், பப்பாளி, கீரைகள், மஞ்சள் நிறக் காய்கள், மாம்பழம், மீன் எண்ணெய், ஈரல். ஆகியவற்றில் உள்ளது
மாலைக் கண் வராமல் தடுக்கும்.கண்களுக்கு நல்லது. உடல் செல்களைப் புதுப்பிக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும். தோல் காக்கும். நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும்.
வைட்டமின் ஏ1 (தயமின்):
பருப்புகள், பயறு வகைகள், முளை கட்டிய தானியங்கள், புழுங்கல் அரிசி, முட்டை, ஈரல் ஆகியவற்றில் உள்ளது. ஜீரணத்துக்கு உதவும். நன்கு பசி எடுக்கும். நரம்பு மண்டலம் வலுப்படும்.
வைட்டமின் ஏ2 ரிபோஃப்ளேவின்:
பால், வெண்ணெய் எடுக்கப்பட்ட பால், பாலாடைக் கட்டி, முழுத் தானிய வகைகள், பருப்பு வகைகள், கீரைகள், முட்டை ஆகியவற்றில் உள்ளது. வாய்ப் புண் வராது. தோலில் வெடிப்பு வராமல் தடுக்கும். பார்வை தெளிவாக இருக்கும்.
வைட்டமின் பி:
நரம்பு தொடர்பான நோய்கள், ரத்தக் குழாய் தொடர்பான நோய்கள், நாள்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. உடல் நலிவு, எரிச்சல் அடையும் தன்மை, தூக்கமின்மை ஆகியவற்றைப் போக்க வல்லது.
வைட்டமின் சி:
கொய்யாப் பழம், நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு,திராட்சை, மாம்பழம், தக்காளி, முளை கட்டிய பயறுகள், வெங்காயம், கீரை வகைகள் உருளைக் கிழங்கு ஆகியவற்றில் உள்ளது
காயம் விரைவில் ஆற உதவும். எலும்பு முறிவுகள் விரைவில் குணமாகும். இயல்புக்கு மாறான எலும்பு வளர்ச்சியைத் தடுக்கிறது. நோய்த் தொற்றைத் தடுக்கும். ரத்த நாளங்களை வலுப்படுத்தும்.ரத்த அழுத்த அளவைக் குறைக்கும். இச் சத்து குறைந்தால் ஈறுகள் வீக்கம் அடைந்து ரத்தம் கசியும்.
வைட்டமின் டி :
சூரிய ஒளி, பால், முட்டையின் மஞ்சள் கரு, வெண்ணெய், நெய், பாலாடைக் கட்டி, மீன் எண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.
உடலில் சுண்ணாம்புச் சத்தை கிரகிக்கும். எலும்பு, பற்கள் வலுப்பட உதவும். குழந்தை பிறந்த பிறகு தினமும் சிறிது நேரம் வெயிலில் காண்பிப்பது எலும்புகள் வலுப்பட உதவும்.
வைட்டமின் இ :
கோதுமை, முளைதானிய வகைகள், எண்ணெய், பருத்திக் கொட்டைகள் ஆகியவற்றில் உள்ளது.
ரத்த சிவப்பு அணுக்களின் ஆயுளை அதிகரிக்கிறது. இனப் பெருக்கத்துக்கு உதவும்
வைட்டமின் கே :
முட்டைக் கோஸ், காலி ஃபிளவர், கீரை, கோதுமை, தவிடு, சோயாபீன்ஸ், முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றில் உள்ளது.
ரத்தம் உறைதலுக்கு இது அவசியம் தேவை. இச்சத்து இல்லேயேல் ரத்தப் போக்கு ஏற்படும்
வைட்டமின் நியாசின்:
மீன்.பருப்புகள், பயறுகள், முழு உணவுத் தானியங்கள், இறைச்சி, ஈரல் ஆகியவற்றில் உள்ளது.
வயிறு, குடல், தோல், நரம்பு மண்டலம் ஆகியவற்றின் ஆரோக்கியம் காக்கும்
கால்ஷியம் (சுண்ணாம்புச் சத்து):
பால், பால் பொருள்கள், கீரைகள், பீன்ஸ், முட்டை, பட்டாணி, பச்சைக் காய்கறிகள், மீன்,கேழ்வரகு ஆகியவற்றில் உள்ளது.
எலும்பு, பற்கள் வலுப்பட உதவும். நரம்புகள், வைட்டமின் டி-யை கிரகித்து தசைகள் இயல்பாகச் சுருங்கி விரிய உதவுவது கால்ஷியம் சத்து கொண்ட உணவுப் பொருள்களே. கர்ப்பிணிகள், முதியோருக்கு இச் சத்து மிகவும் அவசியம். ரத்த அழுத்தத்தைக் குறைத்தல், நரம்புகளின் செயல்பாட்டுக்கும் கால்ஷியம் உதவுகிறது.
இரும்புச் சத்து :
தேன்,சுண்டைக்காய், கீரைகள், முழுத் தானியங்கள், பேரீச்சை உள்ளிட்ட பழங்கள், வெல்லச் சர்க்கரை, புளி, முட்டை, ஈரல் ஆகியவற்றில் உள்ளது
புரதத்துடன் சேர்ந்து உயிர் அணுக்களுக்கு ஆக்சிஜன் கொடுக்கும். ரத்த சோகை ஏற்படாமல் தடுப்பதில் இரும்புச் சத்து பெரும் பங்கு வகிக்கிறது. ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து உறுதுணையாக இருந்து, ரத்தம் மூலம் ஆக்ஸிஜன் செல்வதற்கு உதவி செய்கிறது.
பாஸ்பரஸ்:
உடலில் கால்ஷியம் பாஸ்பேட்டாக கால்ஷியம் சேமிக்கப்படுகிறது. எலும்பு, பற்களில் இவ்வாறு அது சேமிக்கப்படுகிறது.
பொட்டாஷியம்:
உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கவும் பொட்டாஷியம் உதவுகிறது. சீரான இதயத் துடிப்பு, சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுத்தல் ஆகியவற்றுக்கும் பொட்டாஷியச் சத்து உதவுகிறது.
அயோடின் :
அயோடின் கலந்த உப்பை தினமும் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். காய்கறிகளிலும் இச் சத்து உள்ளது.
குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு உதவும். இதன் குறைபாட்டால் முன் கழுத்துக் கழலை நோய் வரும். தைராய்டு சுரப்பிகள் சரிவர இயங்க இது தேவை
பிற சத்துக்கள்:
பீட்டா கேரடீன்-கீரைகள்.
இஸாபிளேவோன்ஸ்-சோயா
லைக்கோபீன்-தக்காளி
கர்க்குமின்-மஞ்சள் தூள்.
நார்ச்சத்து:
தானிய வகைகளில் காணப்படுகிறது.இது இரைப்பை-குடலின் இயல்பான செயல்தன்மைக்கு வழி வகுத்து மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்கிறது. மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. ரத்த சர்க்கரை அளவைக் குறைத்து சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது.
காய்கறிகளை இரும்புச் சத்து - நார்ச்சத்தைக் கொடுக்கக்கூடிய கீரை வகைகள், மாவுச் சத்தை அளிக்கக்கூடிய உருளை - சர்க்கரைவள்ளி உள்ளிட்ட கிழங்கு வகைகள், நார்ச் சத்தை அளிக்கக்கூடிய பீன்ஸ், முட்டைக்கோஸ் எனப் பிரித்துக் கொள்ளலாம். எனவே எந்தக் காயையும் உணவில் ஒதுக்கக்கூடாது.
வெண்ணெய், நெய், டால்டா, தாவர எண்ணெய்களிலிருந்து கொழுப்புச் சத்து மட்டுமின்றி ஃபோலிக் அமிலம், வைட்டமின் இ சத்தும் கிடைக்கிறது.
ஆன்ட்டி ஆக்சிடென்ட்:
நம் உடலில் சத்துகள் உறிஞ்சப்பட்டு உயிர் வேதியியல் மாற்றங்கள் நடக்கும் போது ‘‘free radicals’’ என்பவை உடலில் சேருகின்றன. இதை Oxidative Stress என்கிறோம். இந்த ப்ரீ ரேடிகல்ஸ் சர்க்கரை நோய், இதய நோய், கண் புரை, புற்று நோய் போன்ற நிலைகளில் அதிகம் காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவு வகைகளைச் சாப்பிடுவது அவசியம். பச்சைக் காய்கறிகள், பழங்களில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் அதிகமாக உள்ளது.
நீர் சத்து:
நீர்ச் சத்தை அளிக்கக்கூடிய குடிநீர், இளநீர், மோர் ஆகியவற்றையும் மறந்து விடாதீர்கள். நன்கு காய்ச்சி வடிகட்டப்பட்ட குடிநீரும் உடலுக்குத் தேவை. அதாவது நாள் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் 3 லிட்டர் (8 முதல் 10 டம்ளர்) தண்ணீர் தேவை.

யாருக்கு என்ன சாப்பிடலாம்?
பொதுவாக இந்தியர்களுக்குக் கூடுதலாகத் தேவைப்படும் சத்துகள்:
1. வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்
2. ஆன்டிஆக்ஸிடெண்ட் வைட்டமின்கள் - வைட்டமின் சி, இ, மற்றும் பீட்டாகரோட்டின்.
3. ஆன்டிஆக்ஸிடெண்ட் தாதுக்கள் - துத்தநாகம், செலினியம்.
4. இரும்பு, கால்ஷியம்.
5. இபிடி, டிஎச்ஏ, ஜிஎல்ஏ போன்ற முக்கிய ஃபேட்டி அமிலங்கள்.
6. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் சத்துகள்.
அசைவ உணவில் தாவரங்களில் இருந்து கிடைக்கும் கரோட்டின் சத்துகள் முழுமையாகக் கிடைப்பதில்லை.சைவ உணவிலும் முழுமையாகச் சத்துக்கள் கி்டைப்பதில்லை. முக்கியமான ஃபேட்டி அமிலங்கள் மீனிலிருந்துதான் கிடைக்கின்றன. எனவே இரு வகை உணவையும் கலந்து உண்பது தான் எல்லா சத்துக்களையும் பெறும் வழி.
முதல் தர புரதத்துடன் அனைத்து விதமான ஊட்டசத்தும் பாலில் உள்ளதால், குழந்தைகள்,இளம் பருவத்தினர் யாவரும் பால் சாப்பிடுவது மிக முக்கியம். குறிப்பாக இரவு தூங்கச் செல்லும் முன் ஒரு கோப்பை பால் அருந்துவது நல்லது. குழந்தை பிறந்து ஓர் ஆண்டு வரை பால் கொடுப்பது நல்லது.அதிலும் குழந்தை பிறந்த உடன் சீம்பால் கொடுக்கத் தவறக் கூடாது. மிகுந்த அளவு நோயெதிர்ப்பு சக்தி சீம்பாலில் உள்ளது. உடல் பருமன், சர்கரை நோயுள்ளவர்கள் சர்க்கரை இல்லாமல் ஆடை நீக்கிய பாலை அருந்தலாம். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி பால் சாப்பிடலாம்.
தினமும் ஏதாவது ஒரு வேளை அந்தந்த சீசனுக்கு ஏற்ற பழத்தைச் சிறிது அளவாவது சாப்பிடுங்கள். நோய் பிரச்னை ஏதும் இல்லாதவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிடலாம். ஏனெனில் நார்ச்சத்து, தாதுச் சத்து, வைட்டமின்கள் என நோய் எதிர்ப்புச் சக்தியை உள்ளடக்கிய இயற்கை "டானிக்' பழங்கள்தான். வாழைப்பழம், பப்பாளி, ஆரஞ்சு, மாம்பழம், திராட்சை ஆகியவை நல்லது. பச்சைக் காய்கறிகளில்,பழங்களில் தாதுச் சத்துகளும் வைட்டமின்களும் உள்ளன.
வெள்ளைப் பூண்டு இதய நோய் வராமல் தடுக்கவும், வாழைத்தண்டு சிறுநீரக நோய் வராமல் தடுக்கவும், முருங்கைக் கீரை உயர் ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்தவும், வெந்தயம், ஓட்ஸ் போன்றவை ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவுகின்றன.

தினசரி உணவு
உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் தேவையான விகிதத்தில் கிடைக்கும் வகையில் நமதுஅன்றாட சாப்பாடு அமைய வேண்டும்.
காலை உணவு:
காலை எழுந்தவுடன் பால் குடிப்பது மிகவும் நல்லது. பொதுவாக தென்னிந்தியர்களின் பழக்கத்துக்கு ஏற்ப காலையில் இட்லி, தோசை, உப்புமா, கிச்சடி இப்படி ஏதாவது ஒன்றைச் சாப்பிடுகிறோம். உடல் வளர்ச்சிக்குப் புரதச்சத்து மிக அவசியம். எனவே காலை உணவில் புரதச் சத்து அதிகம் உள்ள பருப்பு வகைகளைச் சேர்த்துக்கொள்ளவேண்டும். இட்லிக்கு, சட்னியுடன் சாம்பாரும் சேர்க்கப் படவேண்டும், ஏதாவது ஒன்று மட்டும் போதாது. சாம்பாரில் புரதச் சத்து கிடைக்கும். சட்னியைப் பொருத்தவரை புதினா, கொத்துமல்லி, கருவேப்பிலை, தக்காளி சட்னிகளில் வைட்டமின் சத்து கிடைக்கும்.சாம்பாரில் பருப்பு இருப்பதோடு காய்கறிகளும் சேர்க்கப்பட்டால் இன்னும் நல்லது. இட்லி, பொங்கல், தோசை போன்வற்றில் ஏற்கெனவே பருப்பு சேர்க்கப்பட்டாலும் சம்பாரும் அவசியம். சப்பாத்திக்கு "டால்' சேர்த்துக் கொள்ளலாம். ரொட்டி என்றால் வெறும் ரொட்டி மட்டும் சாப்பிடாமல் காய்களைத் துண்டுகளாக ("சான்ட்விச்' ) வெட்டிச் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.

காலை 11 மணி: மோர் அல்லது இளநீர் சாப்பிடலாம். காய்கள் கலந்து சூப் அல்லது பழச் சாறு இதில் ஏதாவது ஒன்று குடிக்கலாம். ஆனால் கண்டிப்பாக காபி, டீ சாப்பிடக் கூடாது.

மதிய உணவு: மதிய உணவும் ஊட்டச் சத்து நிறைந்ததாக இருப்பது நல்லது. சாதம், காய்கறிகள் கலந்த சாம்பார், பொரியல், தயிர் ஆகியவையே சரிசமவிகித ஊட்டச் சத்தைக் கொடுக்கும். வற்றல் குழம்பு என்றால் பருப்பு சேர்க்கப்பட்ட கூட்டு அவசியம். ஏனெனில் சாம்பாருக்குப் பதிலாக கூட்டில் பருப்பு, காய்கறிகள் சேர்க்கப்படுவதால் வற்றல் குழம்புக்குக் கூட்டு அவசியம். தயிர் கண்டிப்பாக இருக்கவேண்டும்.
சிப்ஸ், வடாம், அப்பளம் வேண்டாம்: இதனால்உடலுக்கு எந்த நன்மையும் இல்லை. மதிய உணவில் மேற்சொன்ன காய் பொரியலுடன் வேண்டுமானால் அப்பளம் தொட்டுக் கொள்ளலாம். ஆனால் காய்களுக்குப் பதிலாக அப்பளம், வடாம், சிப்ஸ் போன்றவற்றை மட்டுமே தொட்டுக் கொண்டு சாப்பிடுவது எவ்விதப் பலனையும் தராது. ரசத்தில் போதிய ஊட்டச்சத்துகள் கிடையாது. எனவே பருப்பு துவையல் வைத்துக்கொள்ளலாம். அதோடு காய்கறிகளை (கேரட், வெள்ளிக்காய், வெங்காயம்) பச்சையாக நறுக்கிச் சாப்பிடலாம்.

தேநீர் நேரம்: தேநீர் நேரத்தில் (மாலை 4 மணி முதல் 5-க்குள்) தேநீருடன் ஏதாவது சுண்டல், வேர்க்கடலை, முளைகட்டிய பயறு சாப்பிடலாம். முடிந்தால் அந்தந்த சீசனில் மலிவாகக் கிடைக்கும் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவதும் நல்லது. எண்ணெய்யில் தயாரிக்கப்பட்ட பஜ்ஜி, போண்டா போன்றவற்றை முடிந்தளவு தவிர்ப்பது நல்லது.

இரவு உணவு: இரவு உணவு மதியச் சாப்பாடு போல இருக்கலாம் அல்லது டிபன் சாப்பிடலாம். இரவு சாப்பாத்தி சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள பருப்பு கலந்த கூட்டு அவசியம். எல்லாச் சத்துகளும் அடங்கிய உணவை என்றோ ஒரு நாள் மட்டும் சாப்பிட்டால் போதாது. தினமும் சமவிகித ஊட்டச் சத்து அடங்கிய உணவில் அக்கறை செலுத்தவேண்டும். அவரவர் வசதிக்கு ஏற்ப கிடைக்கும் உணவு வகையைச் சாப்பிடலாம்.

ரத்த சோகை உள்ளவர்கள் என்ன சாப்பிடலாம்?:
இன்று சிறு குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களிடம் ரத்த சோகை 60 முதல் 78 சதவீதம் வரை காணப்படுகிறது. கர்ப்ப காலத்தில் ரத்த சோகை ஏற்பட்டால் கருக் கலைந்து விடுதல், போதிய வளர்ச்சி இல்லாத சிறு குழந்தை, குறைப் பிரசவம், நஞ்சுக்கொடி இடம் மாறியிருத்தல், பிரசவத்தின் போது தாய் இறத்தல், குறிப்பிட்ட நாளுக்கு முன்பே பொய்யாக பிரசவ வலி ஆகிய விளைவுகள் ஏற்படும்.மேலும் கருவில் வளரும் குழந்தையின் முதுகு எலும்பு வளர்ச்சிக்கும் நச்சுக் கொடி உருவாவதற்கும் ஃபோலிக் அமிலச் சத்து (இரும்புச் சத்து) அவசியம்.
ரத்த சோகை ஏற்படாமல் தடுத்துக் கொள்ள இரும்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை சாப்பிட வேண்டும். அவல், அருகம்புல் சாறு, வெல்லம், பேரீச்சம் பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.கர்ப்பம் தரித்த உடனேயே காபி, டீ குடிப்பதை கர்ப்பிணிகள் நிறுத்திவிட வேண்டும். ஏனெனில் உணவில் இருக்கும் இரும்புச் சத்தை கிரகிக்க முடியாமல் காபி - டீ-யும் தடுத்து விடுகின்றன. பால் குடியுங்கள்.

மிக முக்கியமான உறுப்பான மூளைக்கும் ரத்த ஓட்டம் இருந்தால்தான் செயலாற்ற முடியும். மூளை இருப்பது முக்கியமல்ல, அதை உபயோகிப்பதுதான் முக்கியம் என்பது தெரிந்தாலும், சரியான முறையில் சிந்தனையைச் செலுத்துவதும் ஆரோக்கியத்துக்கு உறுதுணையாக இருக்கும். நல்லதையே நினைத்து, நம்பிக்கையை வளர்த்துக் கொள்பவன் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பான் என்பதில் சந்தேகமில்லை.

படபடப்பு, எரிச்சல், சோர்வு, ஏமாற்றம் - இவையெல்லாம் வாழ்க்கையின் தத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளாததால் நிகழும் கேடு. ஆசையை தவிர்த்தால் நாமே கேட்டு வாங்கும் பல துன்பங்கள் வராது.தூக்கமின்மை, ரத்த அழுத்தம், இதயக் கோளாறு, மூட்டு வலி, தோல் நோய் சில வகையான புற்று நோய், சிறுநீரகக் கோளாறு, ஆஸ்துமா, பால்வினை நோய்களுக்கு ஆசைதான் வித்து என்பதை மறந்து விடாதீர்கள்.


நன்றி - சாதிக் அலி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 04, 2009 4:30 pm

எப்படி சாப்பிட வேண்டும்?


  • ஒவ்வொரு முறையும் பசி ஏற்பட்ட பின்னர், பசி எடுத்தவுடன் சாப்பிடவேண்டும். அப்போது தான் உண்ட உணவு செரித்து விட்டதாகக் கருத முடியும். இல்லையேல் அஜீரணக் கோளாறுகள் ஏற்படும். உடலில் நச்சுப் பொருள்கள் தேங்கி பல்வேறு நோய்களுக்கு வழிவகுத்துவிடும்.



  • சரியான நேரத்தில் சாப்பிடவும்.
  • உணவில் எதை நீக்கலாம் என்பதைவிட, எதைச் சேர்க்கலாம் என யோசியுங்கள். பருப்பு, முட்டை (40 வயதுக்கு மேல் மஞ்சள் கரு வேண்டாம்). உள்பட புரதச் சத்து நிறைந்த உணவைச் சாப்பிடுங்கள்.


  • உணவை வாயில் வைத்து சுவைத்து கூழ்போல் ஆகும் வரை நன்றாக மென்று பின்னர் விழுங்க வேண்டும். இதுஉணவு எளிதில்ஜீரணமாக உதவுகிறது. எல்லா சத்துக்களும் கிடைக்கவும் உதவுகிறது.


  • சாப்பிடும் போது மிகவும் தளர்வாக, அமைதியாக இருக்கவேண்டும். மனக் கவலை, பயம், கோபம், வருத்தம் போன்ற உணர்வுகளோடு சாப்பிடுவது ஜீரணக் கோளாறுகள் ஏற்பட வழி வகுக்கும்.


  • சாப்பிடும் போது அதிகமாகத் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிடுவதற்கு 30 நிமிஷங்ளுக்கு முன்பாக 2 டம்பளர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதுபோல் சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதால் உணவு சரியாக ஜீரணமாவதற்கு முன்பாகவே வயிற்றில் இருந்து குடலுக்கு தள்ளப்பட்டு விடும். சாப்பிடும் போது காரமாக இருந்து, கண்டிப்பாகத் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் சிறிதளவு தண்ணீர் குடிக்கலாம்.


  • சாப்பிட்ட உடன் தூங்கக் கூடாது. உணவு வகைகள் ஜீரணமாகவதற்குச் சீரான ரத்த ஓட்டம் இருக்க வேண்டும். தூங்கும்போது ஜீரணத் துக்குத் தேவையான ரத்தம் கிடைக்காது. இதனால்ஜீரணக் கோளாறுகள் ஏற்படும். எனவே சாப்பிட்டு மூன்று மணி நேரத்துக்குப் பின்னர்தான் தூங்கவேண்டும்.


  • சாப்பிட்ட பின்னர் உடற்பயிற்சி செய்யக் கூடாது. உடற்பயிற்சி செய்யும்போது தசைகளுக்கு அதிக ரத்தம் செல்லும். இதனால் ஜீரண உறுப்புகள் முறையாகச் செயல்பட போதிய ரத்தம் கிடைக்காது. சாப்பிட்டு மூன்று 3 அல்லது 4 மணி நேரத்துக்குப் பின்னர் உடற்பயிற்சியில் ஈடுபடலாம். பொதுவாக வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது நல்லது.


  • சாப்பிடவுடன் பெல்டை தளர்த்துவதால் சிறுங்குடல் அடைபடவோ அல்லது முறுக்கிக் கொள்ளவோ சந்தர்ப்பம் உள்ளது.
  • காலை உணவைத் தவிர்க்ககூடாது
  • சாப்பிட்டவுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டால் ஜீரண உறுப்புக்களால் செரிமானம் செய்யப்பட்ட உணவுகளை கிரகித்துக் கொள்ள முடியாது.


  • சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது. சாப்பிட்டவுடன் குளிப்பதால் கை, கால், உடல் பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் சென்றுவிடுவதால் ஜீரண உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் இருக்காது. நாளைடைவில் ஜீரண உறுப்புக்கள் வலுவிழந்து விடும்.


  • உருளைக் கிழங்கு சிப்ஸ், அப்பளம், ஊறுகாய் ஆகியவற்றை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். எப்போதும் அதிக குடிநீர், கலோரி இல்லாத பானங்களைக் குடிக்கவும்.
  • டிவி பார்த்துக் கொண்டோ, பேசிக் கொண்டே சாப்பிடாதீர்கள், உணவு மூச்சுக்குழாய்க்குள் போய் அடைத்துக்கொள்ளும்.
  • குறைவான வெளிச்சத்தில் சாப்பிடாதீர்கள்.
  • நமது சாப்பாடு காலையில் அதிகமாகவும், இரவில் குறைவாகவும் இருக்க வேண்டும்.
  • சாப்பாட்டுக்கு முன் பச்சைக் காய்கறிகளைச் (salad) சாப்பிட வேண்டும்.


  • சாப்பிட்ட உடனே பழங்களைச்சாப்பிடாதீர்கள் - பழங்களை உடனே சாப்பிடுவதால் வயிறு காற்று அடைத்து வீங்கிவிடும். சாப்பிட்டு 1-2 மணி நேரம் கழித்து பழங்கள் சாப்பிடவேண்டும் அல்லது சாப்பிடுவதற்கு 1 மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.


  • சாப்பிடவுடன் டீ குடிக்காதீர்கள். டீயில் உள்ள அமிலத்தன்மை நாம் உண்ண உணவில் உள்ள புரத பொருளை கடின பொருளாக மாற்றிவிடும், அதனால் ஜீரணம் செய்வது கடினம்.மேலும் உணவிலிருந்து பெறப்படும் இரும்பு சத்தின் அளவையும் டீ குறைத்து விடுகிறது.


  • வயிற்றைப் பட்டினி போடுவது தவறு. அதிகமாக சாப்பிடுவதும் தவறு.
  • சமைப்பதற்கு முன் இறைச்சியில் உள்ள கொழுப்பையும், கோழிக்கறியில் உள்ள தோலையும் நீக்கி சாப்பிட வேண்டும்.
  • கோதுமை, கம்பு போன்ற தானியங்களை மாவாக்கி பின்னர் சல்லடையால் சலிக்கக் கூடாது. அப்படிச் செய்வதால் ஊட்டச் சத்துக்களும் நார்சத்தும் குறைந்துவிடும்.
  • உப்பு அதிகம் சேர்க்கக் கூடாது.


  • வெப்பம், அதிக ஒளி, காற்று ஆகியவை ஆன்டி-ஆக்டெசிடென்ட் வைட்டமினுக்கு எதிரானவை, எனவே காய்கறிகளை நறுக்கி நீண்ட நேரம் திறந்து வைப்பதில் பலன் இல்லை. குக்கரில் காய்கறிகளை அவிப்பதால் சத்துக்கள் வெளியேறாது.


  • "ஃபாஸ்ட் புட்" சாப்பாடு, டின்களில் அடைக்கப்பட்ட உணவு ஆகிய இரண்டுமே உங்கள் பாக்கெட்டுக்கும் (பணம்) உங்கள் இதயத்துக்கும் நல்லதல்ல.
  • பொரித்த உணவை விட அவித்த உணவு மிகவும் நல்லது.
  • உயரத்திற்கு ஏற்ற எடை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.


அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Wed Nov 04, 2009 4:35 pm

நான் முயற்சி செய்கிறேன் தாமு

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Nov 04, 2009 4:35 pm

நல்ல பதிவு தாமு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 04, 2009 4:44 pm

நன்றி அபி, செரின். யார்  யார்  என்ன சாப்பிடலாம்? 678642

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Wed Nov 04, 2009 6:06 pm

யார்  யார்  என்ன சாப்பிடலாம்? 678642

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Wed Nov 04, 2009 6:12 pm

முயற்சி செய்கிறேன்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Nov 04, 2009 7:30 pm

சிறப்பான பதிவு, அனைவரும் அறிந்திருக்க வேண்டிய தகவல்கள், பதிவிற்கு நன்றி தாமு!



யார்  யார்  என்ன சாப்பிடலாம்? Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 04, 2009 8:55 pm

அருமையான தகவல்கள் தாமு..சாப்பிட்ட பின்னர் என்ன என்ன செய்ய படாது என்ற விளக்கம் அருமை..
காரணம் சாப்பிட்ட பின்னர் குளிப்பது உடப் பயிற்சி செய்வது எல்லாம் இதுவரை நான் பண்ணிட்டு இருந்தேன்.. இதை படித்து ..விளக்கம் பெற்றேன்..நன்றிகள் தாமு



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 05, 2009 5:22 am

நன்றி மீனு, ரமேஷ், கிருபை, யமுனா... யார்  யார்  என்ன சாப்பிடலாம்? 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக