புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_c10 
1 Post - 1%
Kavithas
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_c10 
1 Post - 1%
bala_t
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_c10 
1 Post - 1%
prajai
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_c10 
290 Posts - 42%
heezulia
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_c10 
6 Posts - 1%
prajai
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_c10 
4 Posts - 1%
manikavi
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்


   
   

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 3:50 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 1

ஜோதிடம் என்றால் என்ன ? ஜோதிடம் என்பது வானமண்டலத்திலுள்ள நட்சத்திரங்கள் கூறும் செய்திகள் என்று பொருள். அவைகள் வருங்காலத்தைப் பற்றிக் கூறுகின்றன. நமக்குத் தேவையான செய்திகளையெல்லாம் கூறுகின்றன. அவைகள் கூறும் செய்திகளை தெரிந்துகொள்ள நமக்கு நட்சத்திரங்களின் மொழி தெரிய வேண்டும். அந்த நட்சத்திர மொழி தான் ஜோதிடம்.

சரி ! நட்சத்திரங்கள் எப்படிக் கூறுகின்றன, அவை 9 கிரகங்கள் மூலமாகக் கூறுகின்றன. அந்த 9 கிரகங்கள்.

    1. சூரியன்
    2. சந்திரன்
    3. செவ்வாய்
    4. புதன்
    5. குரு
    6. சுக்கிரன்
    7. சனி
    8. ராகு
    9. கேது

இந்த 9 கிரகங்களையும் பார்க்கமுடியுமா ? முடியாது. ஏழு கிரகங்களைத்தான் பார்க்க முடியும். ராகு கேதுக்களைப் பார்க்க முடியாது. அவைகள் நிழல் கிரகங்கள் என்று பெயர். முதல் எழு கிரகங்களில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளை நாம் நமது கண்களால் 'டெலஸ்கோப்' உதவியுடன்தான் பார்க்க இயலும்.

அடுத்த கேள்வி, இந்த கிரகங்களுக்கும், மனித உயிர்களுக்கும் என்ன தொடர்பு ? தொடர்பு நிறைய இருக்கிறது. சூரிய ஒளி இல்லை என்றால் மனித உயிர்கள், தாவரங்கள் எதுவும் வாழ முடியாது. சூரிய நமஸ்காரம் ஏன் செய்கிறோம் ? சூரிய ஒளி நம் கண்களில் பட்டால் அது நமது கண்களுக்கு நல்லது என்பதால் தானே ! ஆக சூரிய ஒளி மனித வாழ்க்கைக்கு மிகவும் தேவை என்பது விளங்குகின்றது அல்லவா ? அதே போன்று மனநிலை சரியில்லாதவர்களைப் பாருங்கள்! அமாவாசை, பௌர்ணமி காலங்களில் அவர்கள் மனநிலை மிகுந்த பாதிப்புக்குள்ளாவதைப் பார்க்கலாம், அவர்களின் ஆர்ப்பாட்டங்களும் அதிகமாகின்றன. இதே போன்று மற்ற கிரகங்களும் மனித வாழ்க்கையோடு உறவு கொண்டு பல மாற்றங்களைத் தோற்றுவிக்கின்றன. இப்போது நவகிரகங்கள் என அழைக்கப்படும் 9 கிரகங்களும் மனித வாழ்க்கையோடு தொடர்பு கொண்டுள்ளன எனத் தெரிந்துகொண்டீர்கள் அல்லவா?

சரி ! மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள்? ஆகாயத்திலே சூரியனைச் சுற்றி பல லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன். சூரியனை மையமாக வைத்து நீளவட்ட வடிவமான பாதையில் பல லட்சக்கணக்கான் நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நீளவட்டமான பாதைதான் ராசி மண்டலம் என அழைக்கப்படுகிறது. இந்த நட்சத்திரக் கூட்டங்களை நம் முன்னோர் 27 பாகங்காளகப் பிரித்து உள்ளனர். இந்த 27 பாகங்களுக்கும் பெயர்கள் உண்டு. அந்தப் பெயரால்தான் அந்த நட்சத்திரக் கூட்டம் அழைக்கப்படுகின்றது.

    1. அஸ்வினி
    2. பரணி
    3. கார்த்திகை
    4. ரோகினி
    5. மிருகசீரிஷம்
    6. திருவாதரை
    7. புனர்ப்பூசம்
    8. பூசம்
    9. ஆயில்யம்
    10. மகம்
    11. பூரம்
    12. உத்திரம்
    13. ஹஸ்தம்
    14. சித்திரை
    15. ஸ்வாதி
    16. விசாகம்
    17. அனுஷம்
    18. கேட்டை
    19. மூலம்
    20. பூராடம்
    21. உத்திராடம்
    22. திருவோணம்
    23. அவிட்டம்
    24. சதயம்
    25. பூரட்டாதி
    26. உத்திரட்டாதி
    27. ரேவதி

நாம் என்ன தெரிந்து கொண்டோம் ? ஆகாயமண்டலத்தில் நீள வட்ட வடிவமான பாதையில் 27 நட்சத்திரக்கூட்டங்கள் இருக்கின்றன. நாம் இனிமேல் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன எனக் கூறுவோம். இந்த 27 நட்சத்திரங்களின் மேல் இந்த 9 கிரகங்களும் வலம் வருகின்றன. அவைகள் எல்லாம் ஒரே வேகத்தில் வருவதில்லை. ஒவ்வொரு கிரகமும் வேகத்தில் மாறுவிடுகின்றன, சந்திரனுக்கு இந்த ஆகாய மண்டலத்தைச்சுற்றி வர ஒரு மாதம் ஆகிறது. சூரியனுக்கு ஒரு வருடம், செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டுகள், ராகு கேதுவிற்கு 18 ஆண்டுகள், சனிக்கு 30 ஆண்டுகள் ஆகின்றன.

இந்த ஒன்பது கிரகங்களில் சந்திரன்தான் மிக வேகமாகச் சுற்றுகிறார். சனி மெதுவாகத்தான் சுற்றுகிறார். அதனால்தான் அவர் பெயர் "மந்தன்" எனக்கூறப்படுவதுண்டு. சனிக்கு ஒருகால் கிடையாது. அவர் நொண்டி ஆகவேதான் அவர் மெதுவாக வலம் வருகிறார். சனி நொண்டியானதற்கு ஒரு கதை உண்டு. இராவணன் தன்மகன் இந்திரஜித் பிறக்கும் முன்பு அவன் சாகாவரம் பெற வேண்டும் என விருப்பினான். அவன் தான் நவக்கிரங்களையும் வென்று தன் இஷ்டப்படி செயல்பட வைத்தவனாயிற்றே. ஆகவே எல்லா கிரகங்களையும் தன் மகன் பிறக்கும் சமயத்தில் அவன் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அடைத்து வைத்துவிடுகிறான். ஒருவர் ஜாதகத்தில் 11ம் வீடு என்பது வெற்றியைக் குறிக்கும். அதில் எல்லா கிரகங்களும் இருக்குமேயாகில் அவருக்குத் தோல்வியே கிடையாது. இதை மனதில் கொண்டு இராவணன் இந்திரஜித்தின் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அத்தனை கிரகங்களும் இருக்குமாறு செய்து விட்டான்.

தேவர்கள் இதைக் கண்டு மனம் பதைத்தனர். ஒரு அசுரன் இவ்வாறு பிறந்தால் அவனை மரணமே நெருங்காதே! அப்புறம் உலகத்தில் அநீதிதான் இருக்கும், என்ன செய்வது என்றறியாது கலங்கினர். அப்போது நாரதர் சனிபகவானிடம் சென்று, "உன்னால்தான் ஒருவருக்கு நாசத்தைக் கொடுக்க முடியும், ஆகவே மற்றவர்களை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டும் கொண்டார்.

சனி பகவானும் அவர் வேண்டுகோளுக்குகிணங்கி, இந்திரஜித் பிறக்கும் சமயத்தில் தன் இடது காலை 12ம் வீட்டில் வைத்துவிட்டார். ஒருவர் ஜாதகத்தில் 12ம் வீடு என்பது நாசத்தைக் கொடுக்கு இடமாகும். இந்தக் கட்டத்தில் இடது காலை சனி பகவான் வைத்து விட்டதால், இந்திரஜித் ஜாதகத்தில் சனி பகவான் 12ம் இடத்தில் காணப்பட்டார், மற்ற கிரகங்கள் எல்லம் 11ம் இடத்தில் இருந்தன. இராவணன் குழந்தை பிறந்ததும் ஜாதகத்தைக் கணித்துப்பார்த்தான், சனி 12ம் இடத்தில் காணப்பட்டார். தன் எண்ணம் நிறைவேறாத காரணத்தால் கடும் சினம் கொண்டான். உடனே 12ம் இடத்தில் காலை வைத்த சனி பகவானின் இடது காலை வெட்டுமாறு கட்டளையிட்டான். இது தான் சனிபகவான் முடமான கதை. ஆகவேதான் அவர் நொண்டி நொண்டி மெதுவாக 30 ஆண்டுகளில் வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வருகிறார்.

இதுவரை நீங்கள் 27 நட்சத்திரங்கள் யாவை, நவக்கிரகங்கள் யாவை, அவை வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வரும் காலம் பற்றி தெரிந்துகொண்டீர்கள். நாம் முதலில் ஜாதகத்தை எப்படிக் கணிப்பது என சொல்லிக் கொடுக்க இருக்கிறோம். அதற்குப்பின் எப்படி பலன் சொல்வது என்பது விளக்குவோம். ஜாதகக் கணிதம் செய்ய ஓரளவிற்குக் கணிதம் தெரிய வேண்டும். கணிதம் என்றால் எதோ கல்லூரியிலே பயிலுகிற கணிதமோ என அஞ்ச வேண்டாம். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்ற அடிப்படைக் கணிதம் தெரிந்தால் போதும்.

நாம் முன்பு கூறியது போல் மிகக் குறைந்த கல்வியறிவு உள்ளவர்களுக்கும் புரிய வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு மிக எளிய முறையில் எழுதி இருக்கிறோம். அத்தோடு நமது புராணங்களில் வருகின்ற உபகதைகளையும் சேர்த்துக் கொண்டால் புரிந்து கொள்வது மிக எளிதாக இருக்கும்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 3:52 am

நாம் தற்போது காலத்தை எப்படிக் கணக்கிடுகின்றோம் ? இன்று 1/23/2002, நாம் ஜனவரி மாதம் 23ம் நாள், 2002 ஆண்டு எனக் கூறுகின்றோம். இது நமக்கு ஆங்கிலேயர் கற்றுக் கொடுத்த முறை. நமது பண்டைய முறை அப்படி அல்ல. நாம் கணிதம் செய்ய வேண்டியது எல்லாம் நமது பண்டைய முறைபடித்தான். நமது கலாச்சாரப்படி மொத்தம் 4 யுகங்கள் உண்டு.

1. கிருதயுகம்.
2. திரேதாயுகம்
3. துவாபரயுகம்
4. கலியுகம்.

இந்த நான்கு யுகங்களைக் கொண்டது ஒரு சதுர்யுகம். ஒரு சதுர்யுகம் என்பது 43, 20, 000 ஆண்டுகள் கொண்டதாகும். நாம் இப்பொது 3 யுகங்கள் முடிந்து கலியுகத்தில் இருக்கின்றோம். கலியுகத்தில் தற்போது 5094 ஆண்டுகள் முடிந்துவிட்டன.

ஒரு ஆண்டு என்பது 365 1/4 நாட்கள் கொண்டவை என்பது எல்லோருக்கும் தெரியும். அதாவது சூரியன் இந்த வான மண்டலத்தை ஒருமுறை சுற்றி வரும் காலம் ஆகும். சூரியன் ஒருமுறை வானமண்டலத்தைச் சுற்றிவிட்டால் ஒர் ஆண்டு முடிந்து விடுகிறது. இந்த வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது எனக் கூறுகின்றோம். அதாவது சூரிய பகவான் வானமண்டலத்தை சுற்றி முடித்து அடுத்த சுற்று அன்று ஆரம்பம் செய்கின்றார். வானவெளி மண்டலத்தின் ஆரம்ப இடம் எது ? இது இருந்தால்தானே அங்கிருந்து ஆரம்பம் செய்ய முடியும். அது தெரிந்து கொள்ள நாம் வானமண்டலத்தின் படத்தைப் போடுவோம். வானமண்டலம் நீள வட்ட வடிவமான பாதையாக் இருக்கிறது என மேலே கூறியுள்ளோம். நாம் நீளவட்டம்மாகப் போடாமல் சதுரமாகவே போடுவோம். அதுதான் எளிது. வானமண்டலத்தைச் சதுரமாகப் போட்டு அதை 12 பகுதிகளாக அதுவும் சம பகுதியாக போடுவோம். அது கீழே காட்டியுள்ளபடி இருக்கும்.

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் MQDWQ9LxSIyPTMp8Aouu+pic1

நாம் மேலே வானமண்டலத்தின் படத்தைப் போட்டு 12 பகுதியாகப் போட்டு இருக்கிறோம். இந்த வானமண்டலத்தின் ஆரம்ப இடம் ஒன்று என்று இலக்கம்மிட்ட கட்டம்தான். அதன் ஆரம்பப் பகுதியை 2 கோடுகள் போட்டுக் காட்டியுள்ளோம். இந்த இடத்திலிருந்துதான் சூரியன் சுற்ற ஆரம்பிக்கின்றது. இந்த ஏப்ர 14ம் தேதி ஆரம்பித்தால் அடுத்த ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி முடிய சுற்றும். இந்தம்காலம் தான் ஒராண்டாகும். இந்த ஆண்டுக்கும் பெயர் வைத்து இருக்கிறோம். வருகின்ற ஆண்டின் பெயர் "விஷ¤" ஆண்டாகும். இது தமிழ் ஆண்டு. இதே போன்று ஒவ்வொரு ஆண்டிற்கும் பெயர் உண்டு. 60 ஆண்டுகள் முடிந்த பின்பு திரும்ப முதலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

1. பிரபவ
2. விபவ
3. சுக்கில
4. பிரமோதூத
5. பிரஜோத்பத்தி
6. ஆங்கீரஸ
7. ஸ்ரீமுக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதான்ய
13. பிரமாதி
14. விக்கிரம
15. விஷ¤
16. சித்ரபானு
17.சுபாணு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வகித்து
22.சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. ஜய
29. மன்மத்
30. துர்முகி
31. ஹேவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி
35. பிலவ
36. சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாசு
40. பராபவ
41. பிலவங்க
42. கீலக
43. சௌமிய
44. சாதரண
45. விரோதிகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராஷஸ
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தாத்திரி
54. ரௌத்திரி.
55. துன்பதி
56. துந்துபி
57. ருத்ரோகாரி
58. ரக்தாஷி
59. குரோதன
60. அக்ஷய

இப்பொது தமிழ் ஆண்டு என்றால் என்ன என்று தெரிந்துகொண்டீர்கள். சூரியன் வானமண்டலத்தைச் சுற்ற எடுத்துக் கொள்ளும் காலமே ஒர் ஆண்டாகும். வானமண்டலத்தின் ஆரம்ப இடம் எது எனவும் தெரிந்து கோண்டீர்கள். இனி அடுத்து மாதம் என்றால் என்ன, நட்சத்திரம் என்றால் என்ன ? திதி என்றால் என்ன என்பவைகளை வரும் இதழ்களில் பார்ப்போம்.





நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 3:53 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 2

என்னுடைய ஜன்ம நட்சத்திரம் மூலம். ஒருவருக்கு ரேவதியாக இருக்கலாம், இன்னும் ஒருவருக்கு கார்த்திகையாக இருக்கலாம். இப்படியாக ஒவ்வொரு நட்சத்திரம் 27 நட்சத்திரங்களில் ஒன்று ஜன்ம நட்சத்திரமாக இருக்கும். நம் ஜன்ம நட்சத்திரத்தை எவ்வாறு தெரிந்து கொள்வது? பஞ்சாங்கத்தைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

பஞ்சாங்கம் என்றால் என்ன ?

பஞ்சாங்கம் என்றால் ஐந்து அங்கங்களைக் கொண்டது.

அவையாவன :

1.திதி
2.வாரம்
3.நட்சத்திரம்
4.யோகம்
5.கரணம்.

இந்த ஐந்தையும் நாம் பஞ்சாங்கதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். முதலில் நட்சத்திரத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோம். அதற்குப் பிறகு நாம் திதி, வாரம், யோகம், கரணம் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்வோம். நாம் எல்லா கிரகங்களும் வான மண்டலத்தைச் சுற்றி வருகின்றன என்று கூறி இருந்தோம். வான மண்டலத்தில் 27 நட்சத்திரங்களும் பரவி இருக்கின்றன. அவைகளின் மேல் தான் 9 கிரகங்களும் வலம் வருகின்றன. சென்ற பாடத்தில் வான மண்டலத்தை 12 பகுதியாகப் போட்டு காட்டி இருந்தோம். அந்தப் 12 பகுதியையும் நாம் ராசி என்றோ அல்லது வீடு என்றோ இனிக் கூறுவோம்.

ராசியில் 1ம் எண் போடப்பட்ட வீடு அல்லது ராசியின் பெயர் மேஷம்.

1 - மேஷம்
2 - ரிஷபம்
3 - மிதுனம்
4 - கடகம்
5 - சிம்மம்
6 - கன்னி
7 - துலாம்
8 - விருச்சிகம்
9 - தனுசு
10 - மகரம்
11 - கும்பம்
12 - மீனம்.

இப்போது 12 ராசிகளின் பெயர்களைத் தெரிந்து கொண்டீர்கள். இப்போது 12 ராசியிலும் நாம்
27 நட்சத்திரத்தையும் அடைக்கப்போகிறோம்.

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் QhwGaYiLQSaUTIU0mkp4+pic1

ஒரு நட்சத்திரத்தை 4 பங்காக ஆக்குங்கள். ஒவ்வொரு பங்கிற்கும் பாதம் என்று பெயர். ஆக 4 பாதங்கள் கொண்டது ஒரு நட்சத்திரம். இப்போது ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதங்கள் என்று தெரிந்து கொண்டீர்கள். அப்படியானால் 27 ம் நட்சத்திரத்திற்கு 27 x 4 = 108 பாதங்கள். நாம் இப்போது மேலே கூறிய 12 ராசிகளில் வரிசைக் கிரமமாக அடைக்கப் போகிறோம். ஒரு ராசிக்கு 9 வீதம் 12 ராசிக்கும் 108 பாதங்களை அடைக்கப் போகிறோம். முதல் ராசி அல்லது வீடான மேக்ஷத்திற்கு அஸ்வினி 4 பாதங்கள், பரணி 4 பாதங்கள், கார்த்திகை 1ம் பாதம். ஆக மொத்தம் 9 பாதங்கள். அதைப் போல் ஒவ்வொரு ராசிக்கு எந்தெந்த நட்சத்திரங்கள் அடங்கி இருக்கின்றன எனப் பார்ப்போம்.



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 3:54 am

ராசியின் பெயர்நட்சத்திரங்கள்
மேக்ஷம்அஸ்வனி 4 பாதங்கள், பரணி 4 பாதங்கள், கார்த்திகை 1ம் பாதம்.
ரிஷபம்கார்த்திகை 2, 3, 4, பாதங்கள், ரோகிணி 4 பாதங்கள் மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள்.
மிதுனம்மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்.
கடகம்புனர்ப்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
சிம்மம்மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்
கன்னிஉத்திரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள்
துலாம்சித்திரை 2, 3 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3, பாதங்கள்
விருச்சிகம்விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை
தனுசுமூலம், பூராடம், உத்திராட்டம் 1-ம் பாதம்
மகரம்உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்
கும்பம்அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டதி 1, 2, 3 பாதங்கள்
மீனம்பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி


ஆக ஒவ்வொரு ராசிக்கும் 9 பாதங்கள் வீதம் 27 நட்சத்திரங்களையும் 12 ராசியில் அடக்கி விட்டோம். எந்தெந்த நட்சத்திரங்கள் எந்தெந்த ராசியில் வருகின்றன என்பதை நீங்கள் மனப்பாடமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இது மிக அவசியம். அடிப்படையும் கூட.

இந்த 12 ராசிகளிலும் 9 கிரகங்களும் வலம் வருகிறது. இப்போது வைகாசி மாதம். சூரியன் ரிஷபத்தில் வலம் வருவார். ரிஷபத்தில் இருக்கும் போது கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி அல்லது மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள் இவற்றில் ஏதாவது ஒரு நட்சத்திரத்தின் மேல் வலம் வருவார். நாம் சூரியன் ஒரு ராசியில் 30 நாட்களில் கடப்பார் என்று கூறி இருந்தோம். அப்படியானால் ஒரு நட்சத்திர பாதத்தை கடக்க 3 1/3 நாட்கள் ஆகும். இதை இன்னும் விளக்கமாக எழுதுகிறோம். வைகாசி 1-ம் தேதி கார்த்திகை 2-ம் பாதத்தில் (ரிஷபத்தில் ) சூரியன் இருக்கிறார். 2-ம் பாதத்தைக் கடக்க அவருக்கு 3 1/3 நாட்கள் ஆகும். அதற்குப்பின் கார்த்திகை 3-ம் பாதத்தைக் கடக்க இன்னும் ஒரு 3 1/3 நாட்கள் ஆகும். ஆக கார்த்திகை 3 பாதங்களையும் கடக்க அவருக்குத் தேவையானது 10 நாட்கள் ஆகும்.

11-ம் நாள் அவர் ரோகிணி முதல் பாதத்தில் சஞ்சாரம் செய்வார். இவ்வாறாக அவர் ஒவ்வொரு நட்சத்திரத்தின் மேலும் சஞ்சாரம் செய்து 30 நாட்களில் ஒரு ராசியைக் கடக்கிறார். எந்தெந்தத் தேதியில் எந்தெந்த நட்சத்திரத்தில் எந்தெந்த ராசியில் சஞ்சாரம் செய்கிறார் என்ற விபரம் எல்லாம் பஞ்சாங்கத்தில் கொடுக்கப் பட்டு இருக்கிறது. சூரியனைப் போன்றே எல்லாக்கிரகங்களும் ஏதாவது ஒரு ராசியில், அந்த ராசியில் உள்ள நட்சத்திரத்தின் மேல் சஞ்சாரம் செய்யும். இப்போது எல்லா கிரகங்களும் ஏதாவது ஒரு ராசியில், ஒரு நட்சத்திரத்தின் மேல் சஞ்சாரம் செய்யும் எனத் தெரிந்து கொண்டீர்கள்.

இந்த 9 கிரஹங்களில் சந்திரனுக்கு அதிக முக்கியத்துவம் ஜோதிட உலகம் அளிக்கிறது. ஒரு குறிப்பிட்ட தினத்தன்று எந்த நட்சத்திரத்தின் மேல் சந்திரன் சஞ்சாரம் செய்கிறாரோ அதுவே அன்றைய நட்சத்திரம் ஆகும். உதாரணமாக வைகாசி மாதம் 1-ம் தேதியை எடுத்துக் கொள்வோம்.அன்றைக்கு அவிட்டம் நட்சத்திரத்தின் மேல் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். அதுவே அன்றைய நட்சத்திரம் ஆகும். அன்றைக்கு ஒரு குழந்தை பிறந்தால் அக்குழந்தையின் ஜென்ம நட்சத்திரம் அவிட்டம் ஆகும். என் நட்சத்திரம் மூலம் என்று எழுதி இருந்தேன். அதாவது நான் ஜெனித்த அன்று மூல நட்சத்திரத்தின் மேல் சந்திரன் சஞ்சாரம் செய்து கொண்டு இருந்தார். ஆகவே என் ஜென்ம நட்சத்திரம் மூலம் ஆகும். மூலம் எந்த ராசியில் இருக்கிற்து ?. தனுர் ராசியில் இருக்கிறது. ஆகவே என் ஜென்ம ராசி தனுர் ராசி ஆகும்.

இதே போன்று ஒவ்வொரு நாளும் எந்த நட்சத்திரத்தின் மேல் சந்திரன் செல்கிறாரோ அதுவே அன்றைய நட்சத்திரம் ஆகும். அந்த நட்சத்திரம் எந்த ராசியில் இருக்கிறதோ அதுவே ஜென்ம ராசி ஆகும். இப்போது ஒரு சிக்கல் வருகிறது. மே 1-ம் தேதி அவிட்டம் நட்சத்திரம் என்று கூறி இருந்தோம். அவிட்ட நட்சத்திரம் மகரத்திலும், கும்பத்திலும் இருக்கிறது. அப்படியானால் என்ன ராசி ? மகரமா அல்லது கும்பமா ? பதில் மிக எளிது.

அவிட்டம் முதல் பாதம், அல்லது இரண்டாம் பாதத்தில் சஞ்சாரம் செய்தால் மகர ராசி ஆகும். 3-ம் பாதம் அல்லது 4-ம் பாதத்தில் சஞ்சாரம் செய்தால் கும்ப ராசி ஆகும். சந்திரன் எந்தப் பாதத்தில் சஞ்சாரம் செய்கிறார் என்பதைக் கண்டு பிடிக்கும் முறையை நாம் பின்னால் எழுதுகிறோம். இப்போதைக்கு இவ்வளவு தெரிந்து கொள்ளுங்கள். போதும். ஒவ்வொரு நாளும் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் எந்த ராசியில் சஞ்சாரம் எவ்வளவு செய்வார் என்ற விபரம் எல்லாம் பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும். அதைப்பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். சந்திரன் மட்டும் அல்ல; எல்லாக்கிரஹங்களும் எந்த ராசியில் எந்த நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கின்றன என்ற விபரம் எல்லாம் பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும். பஞ்சாங்கத்தை எப்படிப் பார்ப்பது என்று விளக்கும்போது உங்களுக்கு அதைச் சொல்லித் தருகிறோம்.

சரி! எந்தப் பஞ்சாங்கத்தைப் பார்ப்பது? கடையிலே சென்றால் பலவிதமான பஞ்சாங்கங்கள் காணப்படுகின்றன. எதை வாங்குவது ? இது முக்கியமான கேள்வி. இதற்கு மிக விளக்கமாக பதில் எழுத வேண்டும்.



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 3:55 am

திருகணிதமா அல்லது வாக்கியமா ?

கி.மு. 1200 முதல் கி.மு.400 முடிய காலத்திற்குச் செல்வோம். அக்காலம் தான் "சித்தாந்த ஜோதிஷ காலம்" என அழைக்க்ப்படுகிறது. அக்காலத்தில் 18 விதமான சித்தாந்தங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த 18 வகையான சித்தாந்தங்களை ஒட்டி பஞ்சாங்கங்கள் கணிக்கப் பட்டன. கிரகங்களின் வேகம், ராசிகளில் தங்கும் காலம் இவற்றை எல்லாம் கணிப்பதற்கு ஒரு முறையைக் கண்டு பிடித்தனர். இது "வாக்கிய முறை" எனப்பட்டது. இதுதான் முதன் முதலாக வந்த பஞ்சாங்கக் கணித முறை. இன்றும் இந்த முறையில் பஞ்சாங்கங்கள் வெளி வருகின்றன. இந்தப் பஞ்சாங்கங்கள் "வாக்கியப் பஞ்சங்கம்" எனப்பட்டது.

வாக்கியப் பஞ்சாங்கங்கக் கணித முறையில் சில பிழைகளைக் கண்டனர் அதற்குப் பிறகு வந்த பெரியவர்கள். அவைகளை திருத்திப் புதிய முறையைக் கண்டனர். அதற்குப் பெயர் "திருகணித முறை" எனப்படும். இந்த திருகணித முறையை ஒட்டிப் பஞ்சாங்கங்கள் கணிக்கப் படுகின்றன. இந்தப் பஞ்சாங்கங்களுக்குப் பெயர் "திருகணிதம்" பஞ்சாங்கம் எனப் படும். அப்படியானால் நாம் எந்தப் பஞ்சாங்கத்தைப் பயன் படுத்த வேண்டும்? இரண்டு வகையான பஞ்சாங்கங்கள் நம்மிடம் இருக்கின்றதே! இந்த 20-ம் நூற்றாண்டில் கிரகங்களைப் பார்ப்பதற்கு "டெலஸ் கோப்புகள்" வந்து விட்டன. கிரகங்களின் வேகம், பாதையைக் கண்டறியும் அளவிற்குக் கணிதம் வளர்ந்து விட்டது. தற்போதுள்ள கணித முறையும், திருகணித முறையும் எந்த வித மாறுதல் இல்லாமல் ஒரே மாதிரியாக இருக்கிறது. ஆக திருகணித முறை தான் சரியான முறை என முடிவுக்கு வந்துள்ளனர் இக்காலத்தில். ஆகவே திருகணித முறை தான் சிறந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ. ஆனாலும் சிலர் வாக்கிய முறைதான் பழமை வாய்ந்தது என்று பழமையைக் கொண்டாடுகிறார்கள். நாம் அவர்களை அவர்கள் போக்கிலேயே விட்டு விடுவோம்.

காளிதாஸனுடைய "உத்திர காலாம்ருதமும்" திருகணித முறைதான் சரியான முறை எனக் கூறுகிறது. மந்த்ரேஸ்வருடைய "பல தீபிகையும்" இதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறது. (உத்திர காலம்ருதம், பலதீபிகை எல்லாம் ஜோதிட நூல்கள்.)

சரி! திரு கணிதப் பஞ்சாங்கங்கள் எவை?

1.ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியாள் மடத்துப் பஞ்சாங்கம். 2.ஸ்ரீ காஞ்சி ஆச்சாரியாள் பாரத் கணிதப் பஞ்சாங்கம் 3.ஆனந்த போதினி திருகணிதப் பஞ்சாங்கம்

இவைகள் எல்லாம் திருகணிதப் பஞ்சாங்கம். இவைகள் மூலம் ஜாதகம் கணித்தால் ஜாதகம் சரியாக வரும். தவறு வர வாய்ப்பில்லை. ஆகவே நீங்களும் திருகணிதம் தான் உபயோகிக்க வேண்டும் என்று கூறுவோம்.

இப்போது கடிகாரங்கள் இருக்கின்றன. அவை என்ன மணி, எத்தனை நிமிஷங்கள் எத்தனை வினாடிகள் என்று காட்டுகின்றன. இது நமக்கு வெள்ளைக்காரர்கள் சொல்லிக் கொடுத்தமுறை. ஆனால் நமது பண்டைய முறை அப்படி அல்ல. அவர்கள் கணக்கு எல்லாம் நாழிகை, வினாழிகையில் வரும். அந்தக் கணக்கை நாம் கீழே கொடுத்துள்ளோம்.

60 வினாழிகை1 நாழிகை
60 நாழிகை1 நாள்
2 1/2 நாழிகை1 மணி
2 1/2 வினாழிகை1 நிமிஷம்


இந்தக் கணக்கு மனப்பாடமாகத் தெரிந்து இருக்க வேண்டும். இது இல்லாமல் நாம் எந்தக் கணக்கும் போட முடியாது.

அடுத்தது நாள் என்றால் என்ன? இதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இரவு 12.01க்கு மறுநாள் பிறந்து விடுகிறது. இது நமக்கு ஆங்கிலேயர் சொல்லிக்கொடுத்த முறை. இரவு 12.01மணியில் இருந்து மறுநாள் இரவு 12.00 மணி முடிய ஒரு நாள். நமது பண்டைய முறை அப்படி அல்ல. இன்று சூரியோதயம் முதல் மறு நாள் சூரியோதயம் முடிய ஒரு நாள். உதாரணமாக இன்றைக்கு காலை 6.40க்கு சூரியோதயம் எனக் கொள்ளுங்கள். நாளைக் காலை 6.39க்கு சூரியோதயம் எனவும் கொள்ளுங்கள். இந்த இடைப்பட்ட காலம் தான் ஒரு நாள் என்ப்படும். அதாவது ஒரு சூரிய உதயம் முதல் மறுசூரிய உதயம் உள்ள காலமே ஒரு நாள் எனப்படும்.

சூரிய உதயம் எத்தனை மணிக்கு ஆகிறது என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது? யாரைக் கேட்டால் தெரியும்? யாரையும் கேட்க்க வேண்டாம். பஞ்சாங்கத்தைப் பார்த்தால் தெரியும். சூரியன் எத்தனை மணிக்கு உதயம் ஆகிறது? எத்தனை மணிக்கு அஸ்தமனம் ஆகிறது ? என்பது போன்ற விஷயங்கள் எல்லாம் பஞ்சாங்கத்தில் கொடுத்து இருக்கிறார்கள். வரும் இதழ்களில் பஞ்சாங்கம் எப்படிப் பார்ப்பது? என்று சொல்லிக்கொடுக்கிறோம். நாம் திருகணிதப் பஞ்சாங்கத்தைத்தான் உபயோகித்துப் பாடம் சொல்லிக் கொடுக்கப் போகின்றோம். இருப்பினும் நாம் வாசகர்களின் உபயோகத்திற்காக வாக்கியப் பஞ்சாங்கத்தையும் உபயோகிக்கிறோம். எல்லோரும் பஞ்சாங்கத்தைத் தேடி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு சந்திப்போம்.



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 3:56 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 3


பஞ்ச அங்கங்களைக் கொண்டது பங்சாங்கம் என்று முன்பே எழுதி இருந்தோம்.

அந்த ஐந்து அங்கங்கள்:

1. திதி
2.வாரம்
3.நட்சத்திரம்
4.யோகம்
5.கரணம்.


முதலில் திதிஐப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

திதி என்றால் என்ன ?

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரம் தான். அம்மாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருப்பார்கள். அதற்குப்பின் சந்திரன் தினமும் சூரியனில் இருந்து விலகிச் சென்று கொண்டிருப்பார். தினமும் சுமார் 12டிகிரி வரைநகர்ந்து செல்வார். பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து 180 டிகிரி தூரத்தில் இருப்பார். அதாவது சூரியனில் இருந்து 7-வது ராசியில் இருப்பார். சூரியன் இருந்த வீட்டையும் சேர்த்து எண்ணினால் சந்திரன் நின்ற வீடு 7-வது வீடாக இருக்கும். அம்மாவாசையில் இருந்து பௌர்ணமி முடிய 15 நாட்கள். அதேபோல் பௌர்ணமியில் இருந்து அம்மாவாசைக்கு 15 நாட்கள். மொத்தம் 30-நாட்கள். சந்திரன் ஒரு சுற்றுச் சுற்றி விட்டு 30 நாட்களில் திரும்பவும் சூரியனுடன் சேர்ந்து கொள்வார். அம்மாவாசைக்கு மறுநாள் அன்று சந்திரன் 12 டிகிரி விலகி இருப்பார் என்று சொன்னோம் அல்லவா. அன்றைக்குப் பெயர் பிரதமை. மறு நாள் இன்னும் ஒரு 12டிகிரி விலகியிருப்பார் அல்லவா ? அன்றைக்குப் பெயர் துதியை. மூன்றாம் நாள் திருதியை. 4-ம் நாள் சதுர்த்தி. 5-ம் நாள் பஞ்சமி. 6-ம் நாள் சஷ்டி. 7-ம் நாள் சப்தமி. 8-ம் நாள் அஷ்டமி. 9-ம் நாள் நவமி. 10-ம் நாள்தசமி. 11-ம் நாள் ஏகாதசி. 12-ம் நாள் துவாதசி. 13-ம் நாள்திரயோதசி. 14-ம் நாள் சதுர்தசி. 15-ம் நாள் பௌர்ணமி. சந்திரன் அம்மாவாசையில் இருந்து சிறிது, சிறிதாக வளர்வதால் இவைகள் எல்லாம் வளர் பிறைத் திதிகள் ஆகும். இந்தப் 15 நாட்களை சுக்கில பக்ஷ்க்ஷம் என்பார்கள்.

அதே போல் பௌர்ணமியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாகத் தேய்கிறார் அல்லவா? முதல் நாள் பெயர் பிரதமை. 2-ம் நாள் துதியை, 3-ம் நாள் திருதியை, பின்பு சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, .........அம்மாவாசை முடிய வரும். இந்தக் காலத்தில் சந்திரன் தேய்வதால் இதை கிருஷ்ணபக்ஷ்க்ஷம் என்பார்கள். தமிழில்கூறினால் தேய்பிறைத் திதிகள் எனக் கூறுவார்கள். இவைகள் எல்லாம் நாள் பார்க்க உதவும். பொதுவாக அஷ்டமி, நவமித்திதிகளில் நல்ல காரியங்கள் எதுவும் செய்வது இல்லை. நாம் இப்போது ஒரு சிறிய கதை கூறப் போகிறோம்.

அஷ்டமித்திதியும், நவமித்திதியும் நம் நாட்களில் எல்லோரும் நல்ல காரியங்கள் செய்வதில்லையே என்று வருத்தப் பட்டனவாம். அவைகள் மஹாவிஷ்ணுவிடம் சென்று வருத்தப்பட்டன. உடனே பகவான் அவைகளிடம் "நீங்கள் வருத்தப்படாதீர்கள். நான் உங்கள் திதிகளில் அவதாரம் செய்கின்றேன்" எனக் கூறினார். ராமாவதாரத்திலும், கிருஷ்ணாவதாரத்திலும் அவர் முறையே நவமியிலும், அஷ்டமியிலும் அவதாரம் செய்தார். நாமும் ஸ்ரீராமநவமி என்றும், கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடுகிறோம். இப்போது திதிகளைத் தெரிந்து கொண்டீர்கள். அடுத்தது வாரம். வாரத்தைப் பற்றி நாம் அதிகம் கூற வேண்டியது இல்லை. திங்கள், செவ்வாய், புதன் என்கிற கிழமைகள்தான் வாரம் என்பது. இன்றைக்கு என்ன கிழமை என்கிற விபரமும் பஞ்சாங்கத்தில் கொடுத்து இருப்பார்கள். பஞ்சாங்கத்தைப் பார்க்காமலேயே எல்லோருக்கும் என்ன கிழமை என்று தெரியும்.

நட்சத்திரம்

நட்சத்திரட்த்தைப் பற்றி நாம் ஏற்கனவே எழுதி இருக்கிறோம். 27நட்சத்திரங்களும் இப்போது மனப்பாடமாக எல்லோருக்கும் தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறோம். இதை மனப்பாடம் செய்வது மிக முக்கியம். இது மனப்பாடமாகத் தெரியாமல் ஜோதிடம் யாரும் பார்க்க முடியாது. ஆக 27-நட்சத்திரத்தையும் அவைகள் இருக்கும் ராசிகளையும் எப்போதும் மனதில் வைத்திருத்தல் அவசியம். அடுத்தது கரணம் ஆகும்.

கரணம்

கரணம் என்பது திதியில் பாதியாகம். அதாவது 6-டிகிரி கொண்டது ஒரு கரணம் ஆகும். கரணங்கள் மொத்தம் 11-ஆகும். அவையாவன,

1.பவ
2.பாலவ
3.கௌலவ
4.தைதூலை
5.கரசை
6.வணிசை
7.பத்தரை
8.சகுனி
9.சதுஷ்பாதம்
10. நாகவம்
11.கிம்ஸ்துக்னம்.


இன்றைக்கு என்ன திதி என்று பஞ்சாங்கத்தில் கொடுத்து இருப்பார்கள். அதை எப்படிக் கணக்கிடுவது, அதன் உபயோகம் என்ன என்பது பற்றியும் நாம் சமயம் வரும் போது எழுதுகிறோம். அடுத்தது யோகம்.



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 3:56 am

யோகம்

இதில் இரண்டு வகைப்படும். முதலாவது சூரியனும், சந்திரனும் சம்மந்தப்பட்டது. அதாவது வானமண்டலதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள மொத்த தூரம் ஆகும். இன்னும் சற்று விளக்கமாகக் கூறப்போனால் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரியனின் தூரத்தையும், சந்திரனின் தூரத்தையும் கூட்டினால் வருவதே இந்த யோகம் ஆகும். இந்த யோகங்கள் மொத்தம் 27-ஆகும். இதனை நாம யோகம் என்பார்கள்.

அவையாவன:

1.விஷ்கம்பம்
2.ப்ரீதி
3.ஆயுஷ்மான்
4.சௌபாக்யம்
5.சோபனம்
6.அதிகண்டம்
7.சுகர்மம்
8.திருதி
9.சூலம்
10.கண்டம்
11.விருதி
12.துருவம்
13.வியாகாதம்
14.ஹர்ஷணம்
15.வஜ்ரம்
16.சித்தி
17.வியதிபாதம்
18.வரீயான்
19.பரீகம்
20.சிவம்
21.சித்தம்
22.சாத்தீயம்
23.சுபம்
24.சுப்ரம்
25.பிராம்யம்
26.ஐந்திரம்
27.வைதிருதி.


மற்றொறு யோகம் தினமும், சந்திரனும் சம்மந்தப்பட்டது நட்சத்திராத்தையும், யோகத்தையும் வைத்தே யோகம் கண்க்கிடப்படுகிறது. இன்னன்னகிழமைகளில் இன்னென்ன நட்சத்திரம் வந்தால் இன்ன யோகம் என வகுத்து அதன்படி கணக்கிடப்படுகிறது. உதாரணமாக திங்கள் கிழமை அன்று அஸ்வனி, பரணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம் பூரம், உத்திரம், ஹஸ்தம், அனுஷம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 15 நட்சத்திரங்கள் வருமேயாகில் அன்று சித்தயோகம் வரும். ரோகிணி மிருகசீரிஷம், புனர்பூசம், ஸ்வாதி, திருவோணம் ஆகிய 5 நட்சத்திரங்கள் வந்தால் அமிர்த யோகம் வரும். மீதியுள்ள நட்சத்திரங்களான கார்த்திகை, சித்திரை, மகம், விசாகம், பூராடம், உத்திராடம், பூரட்டாட்தி ஆகிய 7 நட்சத்திரகள் வந்தால் மரணயோகம் ஆகும். சித்தயோகத்திலும், அமிர்தயோகத்திலும் நல்ல காரியங்கள் எல்லாம் செய்யலாம். மரண யோகத்தில் எல்லா நற்காரியங்களும் விலக்கப்படவேண்டும்.

பஞ்ச அங்கங்களான திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவைகளைத் தெரிந்து கொண்டீர்கள். இனிமேல் பஞ்சாங்கம் எப்படிப் பார்ப்பது என்று பார்ப்போம். நாம் முதலில் திருகணிதப் பஞ்சாங்கத்தை எடுத்துக் கொள்வோம். ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சார்யாள் மடத்துப் பஞ்சாங்கத்தை எடுத்துக் கொள்வோம். பிறகு வாக்கியப் பஞ்சாங்கத்தையும் பார்ப்போம். முதலில் மடத்துப் பஞ்சாங்கத்தைப் பார்ப்போம். இந்த ஆண்டு ஆடி1-ம் தேதிக்கு (16-07-2002) பஞ்சாங்கத்தைப் பார்ப்போம். முதல் கட்டத்தில் அமிர்தாதி யோகம் எனப் போட்டு அதில் "சி" எனப் போட்டு இருக்கிறாகள். "சி"- ஏன்றால் சித்தயோகம் எனப் பொருள். அடுத்த கட்டத்தில் நேத்ரம்-1, ஜீவன் -1/2 எனப் போட்டு இருக்கிறார்கள். அவைகளைத் தற்போது விட்டு விடுங்கள். இங்கிலீஷ் என்ற கட்டத்தின் கீழ் '16' எனப் போட்டு இருக்கிறார்கள். தமிழ் என்ற கட்டத்தின் கீழ் போட்டிருப்பது 1-ம் தேதி. அதாவது அன்றைக்குத் தமிழ்த் தேதி 1-ம் தேதி. அடுத்து திதி என்ற தலைப்பின் கீழ் "தச-17.23" எனப் போட்டு இருக்கிறார்கள். அதாவது தசமித்திதி சூரிய உதயத்தில் இருந்து 17 நாழிகை 23 வினாழிகை வரை இருக்கிறது எனப் பொருள். அன்றைக்கு எத்தனை மணிக்கு சூரிய உதயம்? பஞ்சாங்கத்தின் அடுத்த பக்கத்திற்கு வாருங்கள். அதாவது பக்கம்-17. அன்றைய தேதிக்கு நேராக "சூரிய உதயம் காலை" என்ற கட்டத்திற்கு நேராக 5.56 எனப் போட்டு இருக்கிறார்கள். அதாவது அன்றைய சூரிய உதயம் காலை 5 மணி 56 நிமிஷங்கள். இந்த 5.56ல் இருந்து 17 நாழிகை 23 வினாழிகை வரை தசமித்திதி இருக்கிறது. பக்கத்தில் ஆங்கில மணியையும் 12-54 எனக் கொடுத்து இருக்கிறார்கள். அதாவது பகல் 12 மணி 54 நிமிஷம் முடிய தசமி திதி இருக்கிறது. 12 மணி 54 நிமிஷத்திற்குப் பிறகு என்னதிதி ?

ஏகாதசித் திதி.

அடுத்த கட்டதில் "நக்ஷ" எனக் குறிப்பிட்டு "பர-02.30" எனக்குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதாவது பரணி நட்சத்திரம் சூரிய உதயத்திலிருந்து 2 நாழிகை 30 விநாழிகை வரை இருக்கிறது எனப்பொருள். அடுத்த கட்டத்தில் 6 மணி 56 நிமிஷங்கள்வரை இருப்பதாகப் போட்டு இருக்கிறார்கள் மணிக்கணக்கில். சரி!7.00 மணிக்கு என்ன நட்சத்திரம் ? சொல்லுங்கள் பார்ப்போம். அடுத்த நட்சத்திரம் தான். அதாவது கார்த்திகை.

திரும்பப் பஞ்சாங்கத்திற்கு வாருங்கள். பக்கம் 12-ஐப் பாருங்கள். சூல-17-44 எனப்போட்டு இருக்கிறார்கள். அதாவது 17 நாழிகை 44 வினாழிகை எனப் போட்டு இருக்கிறார்கள். அது முடிய சூலம் யோகம் ஆகும்.



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 3:58 am

இப்போது பஞ்சாங்கத்தின் ஐந்து அங்கங்களான திதி, வார, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவைகளைத் தெரிந்து கொண்டீர்கள். கடக ரவி 19-59(IST) 1-56 P.M. எனப்போட்டு இருக்கிறார்கள். அதாவது பகல் 1-மணி 56-க்கு சூரியன் கடக ராசிக்குப் பிரவேசம் செய்கிறார் எனப் பொருள். இது வரை திருகணிதப் பஞ்சாங்கத்தைப் பார்த்தோம். இனி வாக்கியப் பஞ்சாங்கத்தைப் பார்ப்போம். இதில் ஆடி மாதம் பிறப்பதே செவ்வாய்க்கிழமை ஜூலை 17-ம் தேதி தான். திதி ஏகாதசி திதி ஆகும். இது சூரிய உதயத்திலிருந்து 6-நாழிகை 44-விநாழிகை வரை இருக்கிறது. அதற்குப்பின் வரும் திதி துவாதசி திதியாகும். நட்சத்திரம் ரோகிணி. அது 54 நாழிகை 42 வினாழிகை வரை இருக்கும். யோகம் கண்டம் 8.00 நாழிகை வரை இருக்கும். சூரியன் திங்கள் இரவு 34 வினாழிகைக்குத்தான் கடகத்தில் பிரவேசம் செய்கிறார். ஆனால் திருகணிதப்படி பகல் 1-மணி 56 நிமிஷத்திற்கே பிரவேசம் செய்து விட்டார். இப்போது பஞ்சாங்கம்

பார்க்கத்தெரிந்து கொண்டு விட்டீர்கள்.

ஒவ்வொரு வீட்டிற்கும் அதிபதி உண்டு. அதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? அதைக் கீழே பட்டியல் போட்டுக்காட்டி இருக்கிறோம். தெரிந்து கொள்ளுங்கள்.

ராசிகள்அதிபதி
மேஷம்செவ்வாய்.
ரிஷபம்சுக்கிரன்.
மிதுனம்புதன்
கடகம்சந்திரன்
சிம்மம்சூரியன்
கன்னிபுதன்
துலாம்சுக்கிரன்
விருச்சிகம்செவ்வாய்
தனுசுகுரு
மகரம்சனி
கும்பம்சனி
மீனம்குரு
இதை நாம் கீழே நாம் கட்டம் போட்டுக் காட்டியுள்ளோம். பார்த்துக் கொள்ளவும்.

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் WkSU1TmRXuCENZCiExIU+pic2

மேலே உள்ள அட்டவணையைப் பார்த்தீர்களேயானால் சூரியன், சந்திரன் தவிர மற்ற கிரகஹங்களுக்கு இரண்டு, இரண்டு வீடுகள் சொந்தமாக இருக்கும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் மட்டும் ஒவ்வொரு வீடுகள் இருக்கும். இதற்கு நாம் ஒரு கதை சொல்லப் போகிறோம்.

கும்பத்திலிருந்து கடகம் வரையிலான 6-வீடுகள் சந்திரனுக்குச் சொந்தமாக இருந்ததாம். அதேபோன்று சிம்மத்தில் இருந்து மகரம் வரை சூரியனுக்குச் சொந்தமாக இருந்ததாம். மற்ற கிரஹங்களுக்கு வீடுகளே இல்லையாம். புதன் சந்திரனிடம் போய் "நீதான் 6 வீடுகள் வைத்து இருக்கிறாயே. எனக்கு ஒரு வீடு கொடேன்" என்று கேட்டாராம். சந்திரனும் போனால் போகிறது என்று கடகத்திற்குப் பக்கத்தில் உள்ள வீடான மிதுனத்தைக் கொடுத்தாராம். புதன் சும்மா இருக்கவில்லை. உடனே சூரியனிடம் சென்று "எனக்கு ஒரு வீடு கொடேன்" என்று கேட்டார். சூரியனும் "சரி சிம்மத்திற்குப் பக்கத்தில் இருக்கும் வீடான கன்னியை எடுத்துக் கொள்" என்று கூறினார். புதனுக்கு இரண்டு வீடுகள் இவ்விதமாகக் கிடைத்தன. சுக்கிரன் இதைப் பார்த்துச் சும்மா இருப்பாரா? தானும் சந்திரனிடம் சென்றார். தனக்கு ஒரு வீடு தருமாறு கேட்டார். சந்திரனும் போனால் போகிறது என்று மிதுனத்திற்குப் பக்கத்தில் உள்ள ரிஷபத்தைக் கொடுத்தார். சுக்கிரன் ரிஷபம் வீட்டை வாங்கிக் கொண்டு நேராக சூரியனிடம் சென்றார். புதனுக்குக் கொடுத்தது போல் தனக்கும் ஒரு வீடு தருமாறு கேட்டார். சூரியனும் போனால் போகிறது என கன்னிக்குப் பக்கத்தில் இருக்கும் துலாம் வீட்டைக் கொடுத்தார். இப்போது சுக்கிரனுக்கு ரிஷபமும், துலாமும் இரண்டு வீடுகள் சொந்தமாயின. இதையெல்லாம் செவ்வாய் பார்த்துக் கொண்டே இருந்தார். தானும் சந்திரனிடம் இருந்து ரிஷபத்திற்குப் பக்கத்து வீடான மேஷத்தை சந்திரனிடமிருந்து பெற்றுக் கொண்டார். அதே போன்று சூரியனிடமிருந்து துலாத்திற்குப் பக்கத்து வீடான விருச்சிகத்தைப் பெற்றுக் கொண்டார்.

குரு மட்டும் என்ன இளிச்சவாயறா? தனக்கும் ஒரு வீடு தருமாறு சந்திரனிடம் கேட்டார். சந்திரன் மேஷத்திற்குப் பக்கத்து வீடான மீனத்தை எடுத்துக் கொள்ளுமாறு கூறினார். சூரியனிடமிருந்து இவ்வாறே விருச்சிகத்திற்குப் பக்கத்து வேடான தனுசைப் பெற்றுக் கொண்டார். சனி என்ன எல்லாருக்கும் இளைத்தவறா என்ன? தானும் சந்திரனிடமிருந்து மீனத்திற்குப் பக்கத்து வீடான கும்பத்தைப் இரந்து பெற்றுக் கொண்டார். சூரியிடமிருந்து தனுசுவிற்குப் பக்கத்து வீடான மகரத்தையும் மற்றவர்களைப் போல் பெற்றுக் கொண்டார். இப்போது சந்திரனிடமும், சூரியனிடமும் முறையே கடகத்தையும், சிம்மத்தையும் தவிர வேறு வீடுகளே இல்லையாம்.

ராகு, கேதுக்கள் எல்லா வீடுகளும் போன பின்பு கடைசியாகச் சந்திரனிடமும், சூரிய நிடமும் போய் வீடுகள் கேட்டன. அதற்கு சூரியனும், சந்திரனும் "எங்களுக்கே ஆளுக்கு ஒரு வீடுதான் இருக்கிறது. சிம்மத்தையும், கடகத்தையும் தவிர எங்களுக்கே வேறு வீடுகள் கிடையாது. ஆகவே நாங்கள் உங்களுக்கு வீடு கொடுக்க இயலாமல் இருக்கிறோம். இருப்பினும் நீங்கள் எந்த வீட்டில் இருக்கிறீர்களோ அதுவே உங்களுக்குச் சொந்த வீடாகும்" என வாக்களித்தனர். அதன்படி ராகு, கேதுக்கள் எந்த வீட்டில் இருக்கிறார்களோ அந்த வீட்டின் அதிபதி கொடுக்கக் கூடிய பலன்களை இவர்கள் கொடுப்பார்கள்.

இதுதான் கிரஹங்களுக்கு வீடுகள் கிடைத்த கதை. பாடம் சுவாரஸ்யமாக இருப்பதற்காக இந்தக் கதையைக் கூறினோம். ஒவ்வொரு வீட்டுக்கும் யார் அதிபதி என்பது மனப்பாடமாகத் தெரிய வேண்டும். மறுபடியும் அடுத்த பாடத்தில் சந்திப்போம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:02 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 4

சென்ற பாடத்தில் கிரகங்களின் சொந்த வீடுகளைத் தெரிந்து கொண்டீர்கள். சரி! கிரகங்களுக்குச் சொந்த வீடு இருந்து என்ன பயன் ? அது ஜோதிடத்திற்கு எந்த விதத்தில் உதவுகிறது ? இப்போது அதைத் தெரிந்து கொள்வோம். ஒரு கிரகம் சொந்த வீட்டில் இருந்தால் அது அதிக பலம் உள்ளதாகக் கருதப் படுகிறது. அதிக பலம் உள்ள கிரகம் தன் சொந்த தசா, புக்திக் காலங்களில் நல்லதையே செய்யும். உதாரணத்திற்குக் கீழே உள்ள ராசிக் கட்டத்தைப் பாருங்கள்.

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் D8q4B5hzQv6ucNnqw91U+pic3
இதில் சந்திரன் கடகத்தில் இருக்கிறார். கடகம் அவருக்கு சொந்த வீடு. சொந்த வீட்டில் இருப்பதால் அவருக்கு பலம் அதிகரிக்கிறது. ஆகவே அவர் தன் தசா, புக்திக் காலங்களில் நல்லதையே செய்வார். சந்திர தசையோ, அல்லது சந்திர புக்தியோ அவருக்கு நல்லதையே செய்யும். அதே போன்று மூலத்திரிகோண வீட்டில் இருந்தாலும் அவர் நல்லதையே செய்வார். கிரகங்களின், உச்ச, மூலத் திரிகோண, மற்றும் நீச்ச வீடுகளைப் பற்றி நாம் கீழே எழுதி இருக்கிறோம். சொந்த, உச்ச, மூலத் திரிகோண வீடுகளில் இருக்கும் கிரகங்கள் நல்லதையே

செய்யும் என்பது ஜோதிட விதி. நீச்ச வீடுகளில் இருக்கும் கிரகங்கள் நல்லதைச் செய்யாது என்பதுவும் ஜோதிட விதி. இதைத் தவிர சந்திரன் மனது, தாயார்- ஆகியவைகளுக்கு காரகம் வகிப்பவர். சந்திரனை வைத்துத்தான் நாம் ஒருவரின் மனநிலையையோ, அல்லது தாயாரையோ கூற வேண்டும். மேற் கண்ட உதாரண ஜாதகத்தில் சந்திரன் சொந்த வீட்டில் இருப்பதால் நல்ல மனநிலையுடன் இருப்பார் எனக்கொள்ளலாம். தாயாரும் நல்ல விதமாக இருப்பார் எனக்கொள்ளலாம். சந்திரனுடன் ராகு இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். அந்த ஜாதகர்மிகுந்த சுயநல வாதியாக இருப்பார். சனி இருந்தால் அவர் எதையும் மறைக்கக் கூடியவறாக இருப்பார். வெளிப் படையாக எதையும் கூற மாட்டார். (HE WILL BE A SECRETIVE PERSON). கீழே உச்ச, நீச்ச, மூலத்திரிகோண வீட்டைப் பற்றிப் பார்ப்போம்.
.
கிரகங்கள்உச்ச வீடுமூலத்திரிகோண வீடுநீச்ச வீடு
சூரியன்மேஷம்சிம்மம்துலாம்
சந்திரன்ரிஷபம்ரிஷபம்விருச்சிகம்
செவ்வாய்மகரம்மேஷம்கடகம்
புதன்கன்னிகன்னிமீனம்
குருகடகம்தனுசுமகரம்
சுக்கிரன்மீனம்துலாம்கன்னி
சனிதுலாம்கும்பம்மேஷம்






நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:03 am

ஒரு கிரகம் எந்த வீட்டில் உச்சம் பெறுகிறதோ அதற்கு 7-ம் வீட்டில் அவர் நீச்சம் பெ றுகிறார். உதாரணமாக சூரியன் மேஷத்தில் உச்சம் பெறுகிறார். மேஷத்தில் இருந்து 7-ம் வீடான (மேஷத்தையும் சேர்த்து எண்ண வேண்டும்), துலாத்தில் அவர் நீச்சம் பெறுகிறார்.

சந்திரன் ரிஷபத்தில் உச்சம் பெறுகிறார். ரிஷபத்தில் கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோ கிணி 4- பாதங்கள், மிருகசீரிஷம் 1, 2, பாதங்கள் இருக்கின்றன. சந்திரன் ரோகிணியில் இருக்கும்போது மிகுந்த பலத்துடன் இருப்பதாகக் கூறப் படுகிறது. இதற்கு ஒரு சிறிய கதை உண்டு.

அஸ்வனி முதல் ரேவதி முடிய உள்ள 27 நட்சத்திரங்களும் தட்ச பிரஜாபதிக்கும் அக்னிக்கும் பிறந்த பெண்களாம். தட்சன் இந்தப் பெண்களையெல்லாம் சந்திரனுக்கு மணம் முடித்துக் கொடுத்தான்.சந்திரன் இந்த 27 மனைவியரில் ரோகிணியிடம் மட்டுமே அதிக அன்பு செலுத்தி வந்தான். மற்ற 26 பேரையும் அவன் நினைக்கவே இல்லை. இதனால் விரக்தியுற்ற 26 பேரும் தந்தையிடம் சென்று முறையிட்டனர். தட்சன் மிக வருந்தி மருமகன் சந்திரனிடம் "எல்லோரிடமும் சமமாக அன்பாய் இருக்குமாறு" கூறினான். ஆனால் சந்திரனோ அவர் பேச்சைக் கேட்க்காமல் பழையபடி ரோகிணியிடம் மட்டும் அன்பு காட்டினான். இதனால் கோபமுற்ற தட்சன் சந்திரனின் கலைகள் நாளா வண்ணமும் குன்றட்டும் என சாபமிட்டார். சந்திரனின் ஒளி ஒவ்வொரு நாளும் குறையத் தொடங்கியது. இதனால் வருத்தமுற்ற சந்திரன் சிவபெறுமானை நோக்கித் தவம் புரிந்தான். தனக்கு மீண்டும் பழைய ஒளி கிடைக்க வேண்டும் என வேண்டிக்கொண்டான். சிவனும் மனமிறங்கி "குன்றத்தொடங்கிய ஒளி மீண்டும் சிறிது சிறிதாக வளர" வரம் கொடுத்தார். அதனால் தான் சந்திரன் 15 நாட்கள் தேய்ந்து பின் 15 நாட்களில் வளர்கிறார். இது தான் தேய் பிறை, வளர் பிறை தோன்றிய புராணக்கதை. சரி! நாம் இனி விஞ்ஞானத்திற்கு வருவோம்.

சந்திரன் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு பூமியையும் சுற்றுகிறது என்று எல்லோருக்கும் தெரியும். பௌர்ணமியன்று சூரியனின் ஒளி சந்திரன் மேல் பட்டு பிரகாசமாய்க் காட்சி அளிக்கிறார். முழு நிலவாய்க் காட்சி அளிக்கிறார். சந்திரன் தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக் கொள்ள 27 பூமியின் நாட்கள் ஆகின்றன. அதாவது சந்திரன் ஒரு முறை சுற்றிக் கொள்வதற்குள் பூமி 27 முறை சுற்றி விடுகிறது. சந்திரன் மெதுவாகச் சுற்றுவதால் தினமும் சிறிதுசிறிதாய்க் குறைகிறார். நமது கண்களுக்கு சிறிது, சிறிதாகக் குறைந்து காணப் படுகிறார். இதுதான் பிறைகள் தோன்றக் காரணம். அம்மாவாசையன்று சந்திரன் பாதிச் சுற்றுத்தான் சுற்றி இருப்பார். அப்போது அவர் கண்ணுக்குத் தெரிவது இல்லை. மீதிச் சுற்றைச் சுற்ற ஆரம்பிக்கும் போது சிறிது, சிறிதாக வளர ஆரம்பிக்கிறார். அதைத் தான் நாம் வளர் பிறை என்கிறோம். ஒரு சுற்று முடிந்தவுடன் அவர் முழுநிலவாய்க் காட்சி அளிக்கிறார். அதைத்தான் நாம் பௌர்ணமி என்கிறோம். நாம் எப்போதும் நிலவின் ஒரு பக்கத்தையே பார்க்கிறோம். மறு பக்கத்தைப் பார்க்கவே முடியாதா? முடியும்.

அம்மாவாசையன்று அது மறு பக்கத்தைக் காட்டுகிறது. நமக்குத்தான் அது இருட்டாக இருப்பதால் மறுபக்கம் தெரிவதில்லை. நாம் எப்போதும் ஒரு பக்கத்தையே பார்க்கிறோம். சரி! இனிமேல் நாம் பாடத்திற்கு வருவோம்.

பஞ்சாங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.முதலில் ஆச்சாரியாள் மடத்துப்பஞ்சாங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஆடி மாதம் 1-ம் தேதிக்குப் பஞ்சாங்கம் எப்படிப் பார்ப்பது எனக் கற்றுக் கொடுத்தோம். ஆடி 30-ம் தேதிக்கு எப்படி ஜாதகம் கணிப்பது எனப் பார்ப்போம். பஞ்சாங்கத்தில் ஆடி மாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலே ஜாதகக்கட்டம் போட்டிருக்கிறார்கள். பாருங்கள். அது ஆடி 1-ம் தேதியின் கிரகநிலை. அன்று ஒரு குழந்தை பிறந்தால் அது தான் அன்றைய கிரக நிலை. அதாவது கீழே காட்டியுள்ள படி அன்றைய கிரக நிலை இருக்கிறது.

ரிஷபத்தில்சனி, சுக்கிரன்
மிதுனத்தில்ராகு, குரு, புதன்
கடகத்தில்சூரியன்
விருச்சிகத்தில்செவ்வாய்
தனுசில்கேது


ஆனால் நாம் எடுத்துக் கொண்டது ஆடி-30-ம் தேதி. இந்த 30-நாட்களில் கிரகங்கள் இடம் பெயர்ந்து இருக்கும் அல்லவா? நாம் அதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? கட்டத்தின் நடுவில் 'பெயர்ச்சி' எனப் போட்டு இருக்கிறார்கள் பாருங்கள்.

12 - மிதுனம் சுக்கிரன்
13 - கடகம் புதன்
28 - சிம்மம் புதன்




நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக