புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_c10ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_m10ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_c10 
68 Posts - 53%
heezulia
ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_c10ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_m10ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_c10ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_m10ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_c10ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_m10ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_c10ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_m10ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_c10ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_m10ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_c10ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_m10ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_c10ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_m10ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_c10ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_m10ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_c10ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_m10ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_c10ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_m10ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_c10ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_m10ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_c10 
15 Posts - 3%
prajai
ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_c10ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_m10ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_c10ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_m10ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_c10 
9 Posts - 2%
jairam
ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_c10ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_m10ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_c10ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_m10ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_c10ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_m10ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_c10ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_m10ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜனநாயகத்தின் வேரை அரிக்கும் ஊழல்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Apr 21, 2014 7:55 pm

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 16ஆவது நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் உற்சாகமாக வரிசையில் நின்று வாக்களிக்கும் காட்சி மகிழ்ச்சியளிக்கிறது. அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்து நடைபெற்ற விடுதலைப்போராட்டத்தின் ஒரு பகுதியாக ஜனநாயகத்திற்கான விழிப்புணர்வும் நம்முடைய நாட்டில் ஏற்பட்டது.

இன்றைய சூழலில் அரசியல் என்பது முதல் போட்டு கொள்ளை லாபம் பார்க்கும் ஒரு வியாபாரம் போலவே மாற்றப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கக் கூடியதாகும். மகாத்மாகாந்தி, பெரியார் போன்றவர்கள் சமூகப் பணியை ஒரு அறத்தொண்டாகவே கருதினர். தமிழகத்தில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், காமராஜர் அவரது அமைச்சரவையில் பணியாற்றிய கக்கன் போன்றவர்கள் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகாமல் தூய்மையான அரசியல் நடத்தியவர்கள். இதே போன்று மேற்குவங்கத்தில் பி.சி.ராய் போன்று பல்வேறு தலைவர்களைச் சுட்டிக்காட்ட முடியும்.

இன்றைக்கு லஞ்சமும் ஊழலும் இந்திய ஜனநாயகத்தின் வேர்களை அரித்துக்கொண்டிருக்கிறது. லஞ்சம் கொடுக்காமல் அரசு அலுவலகங்களில் எந்த வேலையும் நடக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், அரசு அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் லஞ்சம் என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒரு விஷயமாகவே மாறிவிட்டது. சாதிச்சான்றிதழ் பெறுவது முதல் பிறப்பு, இறப்பு, வாரிசு சான்றிதழ் பெறுவது வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப்பது போல் லஞ்சத் தொகையும் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. லஞ்சப்பணம் வாங்குபவர்களுக்கு எத்தகைய குற்ற உணர்ச்சியும் ஏற்படுவதில்லை.

இந்தத் தேர்தலில் விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலையின்மை, வறுமை, வறட்சி, சுகாதாரம், கல்வி, மத்திய அரசுபின்பற்றும் அயல்துறை கொள்கை என பல்வேறு விவாதங்கள் முன்னுக்கு வந்துள்ளன. குறிப்பாக உயர்மட்ட ஊழல் குறித்து முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விவாதிக்கப்படுகிறது.

ஊழலுக்கு எதிராக மக்களிடம் குறிப்பாக இளைய தலைமுறையிடம் ஒரு விழிப்புணர்வும், எதிர்ப்புணர்வும் ஏற்பட்டுள்ளது. லோக்பால் மசோதாவை முன்னிறுத்தி அண்ணா ஹசாரே நடத்திய இயக்கத்திற்கு இளைஞர்களிடம் பெரும் ஆதுரவு காணப்பட்டது. அந்த இயக்கத்தின் விளைச்சலாகவே அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியை துவக்கினார். தில்லி சட்டமன்றத் தேர்தலில் அந்தக்கட்சி காங்கிரûஸ பின்னுக்குத்தள்ளி கணிசமான இடங்களில் வெற்றிபெற ஊழலுக்கு எதிராக மக்களிடம் ஏற்பட்ட கோபமும் ஒரு காரணமாக அமைந்தது.

அண்ணாஹாசரே, அரவிந்த் கேஜரிவால் போன்றவர்கள் ஊழலை ஒரு நடைமுறை பிரச்சனையாக மட்டுமே அணுகுகிறார்கள். அவர்களுடைய போராட்ட வடிவமும் அதற்கேற்பவே அமைகிறது. ஆனால் இந்திய அரசியலில் இடதுசாரிக்கட்சிகள் மட்டுமே, "நோய் நாடி நோய் முதல்நாடி' - என்ற குறளுக்கேற்ப ஊழலை மட்டுமின்றி அதற்குக் காரணமாக கொள்கைகளையும் எதிர்த்துப் போராடி வருகிறார்கள்.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை துவக்கி வளர்த்த முதல் தலைமுறை தலைவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் மகாத்மா காந்தி நடத்திய போராட்டத்தால் ஈர்க்கப்பட்டவர்கள். காங்கிரஸ் கட்சி வெகுகாலத்திற்கு முன்பே காந்திய நெறிகளை கைவிட்டுவிட்ட நிலையில் காந்திய எளிமையின் கடைசி நம்பிக்கையாக இருப்பவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமே.

இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரவைக்கு தலைமையேற்றவர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட். காங்கிரஸ் தொண்டராக பொதுவாழ்க்கையைத் துவக்கி விடுதலைப்போராட்டத்தில் பங்கேற்ற அவர் ஒரு கம்யூனிஸ்ட்டாக பரிணமித்தார். தன்னுடைய பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை கட்சிக்குக் கொடுத்துவிட்டு கட்சி கொடுத்த குறைந்தபட்ச ஊதியத்தில் கடைசிவரை வாழ்க்கை நடத்தியவர் அவர்.

கேரளத்தில் முதல்வர்களாக இருந்த இடதுசாரிகளான அச்சுதமேனன், வாசுதேவன் நாயர், இ.கே.நாயனார், வி.எஸ்.அச்சுதானந்தன் போன்றவர்கள் மீது எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை. அவர்களது ஆட்சிக்காலம் குறித்து விசாரணை கமிஷன் எதுவும் அமைக்கப்படவில்லை. ஊழல் வழக்குகளில் அவர்கள் சிக்கவும் இல்லை.

மேற்குவங்கத்தில் மீண்டும் மீண்டும் மக்களால் தேர்வுசெய்யப்பட்ட இடதுமுன்னணி அரசுக்கு தலைமை தாங்கியவர் ஜோதிபாசு. 23 ஆண்டுகாலம் முதல்வராக இருந்த அவர் மீது எதிரிகள் கூட சுட்டுவிரல் நீட்டி ஊழல் குற்றம்சாட்ட முடியாது. மக்கள் நலன்சார்ந்த அரசை மட்டுமல்ல, தூய்மையான நிர்வாகத்தையும் அவரது தலைமையிலான இடதுமுன்னணி அரசு தந்தது. அவரைத் தொடர்ந்து முதல்வராக இருந்த புத்ததேவ் பட்டாச்சார்யா மீது மம்தா பானர்ஜியால் கூட ஊழல் குற்றச்சாட்டு எதையும் சுமத்த முடியவில்லை.

திரிபுராவில் இடது முன்னணி அரசில் பத்தாண்டு காலம் முதல்வராக இருந்தவர் நிரூபன் சக்கரவர்த்தி. அவர் தனது பதவிக்காலம் முடிந்து முதல்வர் இல்லத்தை காலிசெய்த போது கையில் இரண்டு பெட்டிகள் மட்டுமே இருந்தன. ஒன்றில் அவர் உடுத்திய எளிய ஆடைகளும், மற்றொன்றில் அவர் படித்த புத்தகங்கள் மட்டுமே இருந்தன.

திரிபுராவில் முதல்வராக இருந்த தசரத்தேவ், தற்போது முதல்வராக உள்ள மாணிக் சர்க்கார் போன்றவர்களும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானதில்லை. இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் முதல்வர்களிலேயே பரம ஏழை மாணிக்சர்க்கார் மட்டுமே. அவருக்குச் சொந்தமாக வீடும் இல்லை. காரும் இல்லை.

சொந்த வாழ்க்கையில் மட்டுமல்ல அரசு நிர்வாகத்திலும் லஞ்ச ஊழலுக்கு இடம் தராதவர்கள் கம்யூனிஸ்டுகள். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு வேட்பாளர்களாக நிறுத்தப்படுபவர்களிடம் பல கட்சிகள் பணம் வாங்குவதாகச் செய்திகள் வெளியாகின்றன.

கம்யூனிஸ்ட் இயக்கங்களைப் பொறுத்தவரை வேட்பாளர்கள் தங்கள் கைக் காசை செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. மக்களிடம் வசூலித்து கட்சிதான் தேர்தல் செலவுகளைக் கவனித்துக்கொள்ளும். வெற்றி பெறுபவர்கள் பெறும் ஊதியத்தையும் அவர்களாக எடுத்துக்கொள்ள முடியாது. அந்தப் பணத்தை கட்சியிடம் கொடுத்துவிட்டு மற்ற ஊழியர்களுக்கு கட்சிதரும் குறைந்தபட்ச ஊதியத்தையே பெற்று வாழ்க்கையை நடத்துவது நடைமுறையாக உள்ளது. மாநில முதல்வராக இருந்தாலும், கட்சி கிளைச் செயலாளராக இருந்தாலும் ஒரே மாதிரியான விதிமுறைதான்.

தமிழகத்திலும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதல்தலைமுறை தலைவர்களான பி.சீனிவாசராவ், ஜீவா, பி.ராமமூர்த்தி, மணலி கந்தசாமி, எம்.ஆர்.வெங்கட்ராமன், ஏ.பாலசுப்பிரமணியம், எம்.கல்யாணசுந்தரம், கே.டி.கே.தங்கமணி, கே.பி.ஜானகியம்மாள், கே.ரமணி, பார்வதி கிருஷ்ணன் போன்றவர்கள் தூய்மையான பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்களாக இருந்தார்கள்.

இன்றைக்கும் வாழும் வரலாறாக இருக்கிற ஆர்.உமாநாத், என்.சங்கரய்யா, ஆர்.நல்லகண்ணு போன்ற தலைவர்கள் இளைய தலைமுறைக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார்கள். நாடாளுமன்ற, சட்டமன்ற பொறுப்புகளையும் மக்கள் பணி மற்றும் கட்சிப் பணியையும் ஒரு பகுதியாக இவர்கள் கருதினார்களேயன்றி அதை ஒரு பதவியாக கருதியவர்கள் அல்லர்.

பிரிட்டிஷார் காலத்திலிருந்து ஊழல் என்பது, புதிதல்ல. ராபர்ட் கிளைவ் ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகி தண்டிக்கப்பட்டவர். கிழக்கிந்திய கம்பெனியும், அதன்பின் பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சியும் இந்தியாவைச் சுரண்டிக் கொழுத்தனர். ஆனால், இன்றைக்கு சுரண்டலின் வடிவம் மட்டுமல்ல ஊழலின் வடிவமும் மாறியுள்ளது. பன்னாட்டு மூலதனம் எந்தவிதமான தங்குதடையுமின்றி இந்தியாவில் நுழைகிறது. ஊழல் மற்றும் லஞ்சத்தை அது ஊக்குவிக்கிறது. மூலதனத்தை பெருக்கிக் கொள்ள, எத்தகைய வழிமுறையையும் பின்பற்றலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் அடுத்தடுத்து வெளியான அலைவரிசைக் கற்றை ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீட்டு ஊழல், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் போன்றவை மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் பெருமுதலாளிகளின் கூட்டு, இந்த ஊழல்களுக்கு முக்கியக் காரணமாக உள்ளது.

ஊழலை வெளிப்படுத்திய மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறையின் அதிகாரத்தைப் பறிக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முயன்றது. லோக்பால் சட்டம், கடுமையான இழுபறிக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டு இருந்தாலும், அது முழுமையாக இல்லை. தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் மாறி மாறி, ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. ஆனால், ஊழலை விசாரிக்கும் லோக் அயுக்தா அமைப்பை தமிழகத்தில் கொண்டுவரக் கூடாது என்று என்பதில் இந்த இருகட்சிகளுக்கும் அபூர்வமான ஒற்றுமை உள்ளது.

இன்றைக்கு ஊழலுக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது தாராளமய பொருளாதாரக் கொள்கையாகும். முதலாளிகளும் அரசியல்வாதிகளும் உயரதிகாரிகளும் சேர்ந்து பொதுமக்கள் பணத்தை சூறையாடும் சலுகைசார் முதலாளித்துவத்தை எதிர்த்துப்போராடாமல் ஊழலை ஒழிக்க முடியாது. சாக்கடையை அகற்றாமல் கொசுவை விரட்ட கொசுவர்த்தி சுருள் பொருத்தி வைப்பதுபோலத்தான் பலரது ஊழல் எதிர்ப்பு கோஷம் உள்ளது. ஆனால் ஊழலுக்கு காரணமான கொள்கைகளையும் எதிர்த்து போராடுபவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமே.

இடதுசாரி ஜனநாயக சக்திகளை கணிசமாக நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதன் மூலமே ஊழலுக்கு எதிரான போராட்டம் வெற்றி பெறும். ஊழல் ஒழிக்கப்படுவதன் மூலமே ஜனநாயகத்தை பாதுகாக்க முடியும்.
( டி.கே. ரங்கராஜன் - தினமணி)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக