புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_c10இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_m10இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_c10 
65 Posts - 49%
ayyasamy ram
இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_c10இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_m10இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_c10இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_m10இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_c10இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_m10இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_c10 
3 Posts - 2%
prajai
இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_c10இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_m10இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_c10இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_m10இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_c10 
1 Post - 1%
Kavithas
இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_c10இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_m10இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_c10 
1 Post - 1%
bala_t
இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_c10இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_m10இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_c10இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_m10இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_c10 
286 Posts - 42%
heezulia
இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_c10இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_m10இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_c10 
281 Posts - 41%
Dr.S.Soundarapandian
இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_c10இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_m10இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_c10இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_m10இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_c10 
26 Posts - 4%
sugumaran
இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_c10இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_m10இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_c10இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_m10இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_c10 
6 Posts - 1%
prajai
இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_c10இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_m10இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_c10இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_m10இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_c10இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_m10இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_c10 
4 Posts - 1%
manikavi
இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_c10இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_m10இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!    Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Dec 26, 2013 6:47 am

இயேசுவை ஆப்ராகாமிய பின்னணியில் புரிந்துகொள்ளாமல் இந்திய பின்னணியில் புரிந்து கொள்ளவேண்டும்

அவர் ஒளிதேகம் உள்ளவர் ஒளிதேகம் உள்ள தேவர்கள் அவ்வப்போது பூமியில் வரும்போது சரீரம் உள்ளவர்கள்போல காட்டிக்கொள்ள இயலும்

நம்மைபோன்ற ஸ்துல சரீரம் உள்ளவர்கள் மரணமில்லா பெரு வாழ்வு பெறும்போது ஒளிதேகம் - அல்லது சூக்கும சரீரத்தில் மாறும் நிலை பெறுவோம் - வள்ளலாரைப்போல

அப்படி ஒரு தேகத்துடன்தான் அவர் பிறந்தார் ! மனிதனாக வரவேண்டும் என்பதற்காக ஆண்பெண் சேர்க்கையில்லாமல் ஒரு கர்ப்பத்தை தேர்ந்து கொண்டார்

அவர் நாராயணனின் அவதாரம் என்பதால் இது முடியும் !

(உம்) ராமர் வேள்வியில் வெளிப்பட்ட அமிழ்தை உண்டதால் கர்ப்பமானவர்

கிரிச்னர் சிறையில் கணவனும் மனைவியும் தனித்தனியே தடுத்து வைக்கப்பட்ட நிலையில் இயேசுவைப்போலவே கர்ப்பத்தை தேர்ந்து கொண்டவர்

பூமியில் மனிதனாக வருவதற்கு ஒரு பெண்ணின் கருவறையை பயன்படுத்திக்கொள்வார்களே தவிர ஆணின் வித்தாக அவதாரம் வராது ஏனென்றால் ஆணின் விதத்தில் அவனின் முன்னோர்களின் மனித பரம்பரை இருக்கும் அவ்வாறில்லாமல் நாராயணின் முழு தன்மை மனித சரீரத்திற்காக பெண்ணின் கருவறையை மட்டும் தேர்ந்து கொள்ளும்

உலகிற்கு அவர் மனித சரீரமாக இருந்தாலும் அந்த சரீரத்தால் ஒளிசரீரமாக மாற முடியும்

கும்பகர்ணனின் மாயா அம்பால் அனைவரும் மயக்கமாகி இறப்புக்கு ஆளான போது ராமரும் அனுமானும் மட்டுமே பாதிப்பிலாமல் இருந்தனர் காரணம் ஒளிதேகம் அனுமனின் பிறப்பும் அப்படியே

இயேசு தனது சீடர்கள் முன்னிலையில் மறு ரூபமாகி இந்த ஒளி சரீரத்தை சிலுவைக்கு முன்பே வெளிப்படுத்தினார் !

அல்லாமலும் மத குருமார்களுக்கும் யூதர்களின் தற்பெருமைக்கும் விரோதமாக அவர் பல முறை கோவிலில் உபதேசிக்கும்போது யூதர்கள் பல முறை அவரை பிடித்து கொல்ல பலமுறை முயற்சித்தார்கள் அப்போதெல்லாம் அவர் ஒளிதேகமாகி பிடிபடாமல் தப்பிசென்று விடுவார்
எனவேதான் அவரை பிடித்துகொடுக்கும்படியாக யூதாஸ் என்ற ஒரு சீடருக்கு பணம் கொடுத்தனர்
அவர் ஒவ்வொரு நாளும் யூதர்களின் கோவிலுக்கு வந்து பல அற்புதங்களும் அதிசயங்களும் செய்துகொண்டே யூத மத சம்பிராதயங்களுக்கு விரோதமாக உபதேசித்துக்கொண்டிருந்தபோது அவரை பிடிப்பதற்கு எதற்காக கூலி கொடுக்கவேண்டும் ?

அவரை பிடிக்க முயற்சிக்கும்போதேல்லாம் அவர் மறைந்து போய் விடுகிறார் என்பதற்காகவே ! அவரை ஒரு மந்திரவாதியாகவே யூத மத குருமார்கள் சித்தரித்துக்கொண்டிருன்தனர் !

ஆகவே அவர் ஏற்றுக்கொண்ட சிலுவை மரணம் என்பது உலகிற்காக நிகழ்த்தப்பட்ட ஒரு நிகழ்வு !

அதில் அவர் மாமிச சரீரத்தில் மரித்தார் – ஸ்துல சரீரத்தில் மரித்து சூக்கும சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் ! அது ஒரு நாடகம் !


குரான் அந்த நிகழ்வை நாடகம் என்றுதான் கூறுகிறது அது ஒரு மாயத்தோற்றம் போல காண்பிக்கப்பட்டது

குரான் 4:157. இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இதில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.

4:158. ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.

4:159. வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது நம்ம்பிக்கை கொள்ளாமல் இருப்பதில்லை; ஆனால் மறுமை நாளில் அவர் யூதர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்.

ஆனால் இந்த வசனங்களிலும் அரபியர்கள் தங்களின் அறியாமை காரணமாக கொஞ்சம் கை வைத்திருப்பார்கள் என்று நம்புகிறேன்

ஒளிசரீரம் என்பது பற்றியோ சூக்கும சரீரம் என்பது பற்றியோ அரபியர்களுக்கு ஒன்றும் தெரியாது என்பதால் இயேசுவை கடவுள் பரலோகத்திற்கு எடுத்துக்கொண்டார் அவரைப்போல ஒருவரை ஆள் மாறாட்டம் செய்து யூதர்களுக்கு ஒப்புக்கொடுத்தவரை அவர்கள் கொன்றார்கள் என்பது போல இவ்வசனங்களை கொஞ்சம் திருத்தி எழுதிக்கொண்டார்கள் !

ஆனால் உண்மை யாதெனில் இயேசுவே இந்நிகழ்வை அனுபவித்தார் என்பதாகும் ! அவர் ஸ்துல சரீரத்தில் இப்பாடுகள் அனைத்தையும் அனுபவித்தார் மரணத்திற்காக ஆவியையும் கடவுளிடம் ஒப்புவித்தார் ஆனால் அவர் ஏற்கனவே மரணமில்லா பெருவாழ்வு உள்ளவர் – ஒளிதேகம் உள்ளவராதலால் அச்சரீரமாக தன்னை மாற்றிக்கொண்டு உயிர்த்தெழுந்தார் !

அதாவது பைபிள் சொல்லுவதும் உண்மை குரான் சொல்லுவதும் உண்மை ஆனால் அதை புரிந்துகொள்ளும் தெளிவு ஆப்ரகாமிய வேதங்களுக்கு கிடையாது இந்திய வேதங்களின் பின்னணியில் மட்டுமே புரிந்துகொள்ளமுடியும் உலகின் மூத்த வேதமும் தாய் வேதமுமான இந்து தர்மத்திலே ஆப்ரகாமிய வேதங்கள் ஐக்கியமாகும்போது மட்டுமே முழு உண்மையாகிய – சமரச வேதம் வெளிப்படும் !


கடவுள் ஞானத்தை – சமரச வேதத்தை வெளியாக்கும் நாள் நெருங்கிக்கொண்டுள்ளது !

இயேசுவின் சிலுவைப்பாடுகள் முழு மனித சமுதாயத்திற்கும் மாபெரும் பலனை கொடுத்திருக்கிறது ! கிறிஸ்தவர்களுக்கு மட்டும் அல்ல ! கிறிஸ்தவர்கள் அல்லாத முழு மனித சமுதாயத்திலும் ஞானஸ்நானம் பெறாதவர்களுக்கும் அவரின் சிலுவைப்பாடுகள் பலனை கொடுத்துவிட்டன !


ஆப்ராகாமிய வேதங்களில் இயேசு ஆதாமைப்போன்றவர் என்ற குறிப்பு உண்டு ! அவர் கடவுளால் படைக்கப்பட்ட முதல் மனிதனான ஆதாமுக்கு (சிவனுக்கு) அடையாளமானவர் ! பிந்தைய ஆதாம் அதாவது ஆதி சிவனைப்போன்ற கலியுக சிவன் !

சிவன் மூலமான உண்டான மனித குலத்தில் நாராயணனே அவதரித்து வந்தாலும் சரீரத்தில் வருவதால் அவர்கள் சிவபாலர்களே !

அவதாரங்கள் வருவதையே ஆதி மனிதர்களான தமிழர்கள் சேயோன் – முருகன் என அடையாளப்படுத்தினார்கள் !

இந்த முருகன் தேவர்களுக்கு மருமகன் ! – திருமாலுக்கு மருமகன் !

உலகிற்கு சிவனுக்கு மகன் ! ஆத்மாவிலே அவன் தேவன் ! சரீரத்திலே அவன் சிவபாலன் ! சிவக்குமார் ! - இயேசுவும் தன்னை மனுஷகுமாரன் அதாவது சிவக்குமார் என்றுதான் சொல்லிக்கொண்டார் !

மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞான தெய்வத்தை -- கந்தரலங்காரம் 90 !

தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே
சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா -- திருப்புகழ் 13 !

கலியுக முருகனான இயேசு பூமியில் அவதரித்தது முழு மனுக்குலத்தின் பாவங்களுக்கு பரிகாரம் செய்வது !

முழு மனுக்குலத்திற்கும் அது யாரிடமிருந்து பல்கிப்பெருகியதோ அந்த முதல் மனிதனால் மட்டுமே பாவப்பரிகாரம் செய்யமுடியும் !

முதல் மனிதனான ஆதாமைப்போன்ற சிவபாலனான இயேசுவாக சகல படைப்புகளையும் தன்னுள்ளே தாங்குகின்ற பரமாத்வான நாராயணனே அவதரித்து சிவத்திற்கு அடையாளமான ஸ்துல சரீரத்தில் சிலுவை பாடுகளை அனுபவித்து மரணத்தையும் அனுபவித்தார் !

ஆனாலும் அவர் நாராயணன் என்பதால் சூக்கும சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் !

மனித குலத்தின் பாவத்திற்கு செத்து நாராயணனின் அன்பு கிருபையை வெளிப்படுத்தி மனுக்குலத்தை கடவுளோடு மீண்டும் ஒரு முறை ஒப்புரவாக்கினார் !

கிறிஸ்தவ மதம் கிறிஸ்த்துவின் நேரடி சீடர்களால் உருவாக்கப்பட்டதல்ல ! அதனால் சகல மனுக்குலத்திற்கும் பாவப்பரிகாரத்தை இயேசு செய்ததை மறைத்து தங்களிடம் ஞான ஸ்நானம் பெற்று ஐரோப்பிய அடிமைகளாக மாறினால் மட்டுமே இயேசு உங்களை விடுவிப்பார் என்று பிதற்றித்திரிகிறார்கள் !

இயேசுவின் பெயரையே கூட கேள்விப்படாதவர்களுக்கும் பாவப்பரிகாரம் – பலன் ஏற்கனவே கிடைத்து விட்டது இயேசு என்ற பெயரை கேட்டாலே வாந்தி எடுக்கும் தீவிரவாதிகளுக்கும் அவரால் உண்டான பலன் கிடைத்துவிட்டது !

தொழில் புரட்சி மற்றும் சோசலிஷ புரட்சியின் மூலமாக மக்களாட்சியும் இரண்டாம் உலகப்போருக்கு பின்பு ஏற்ப்பட்ட உலக சமாதானத்திற்கான ஐ நா உடன்படிக்கையும் இப்போது போரை வெகுவாக குறைத்து விட்டது மனித உரிமைகளை பேணுவது அன்பியல் சமத்துவம் வாயளவிலாவது பேசப்படாவிட்டால் காட்டுமிராண்டிகள் என கேவலமாக நினைக்கும் மன நிலை உலகில் வந்து விட்டது

இலங்கை போன்ற இன வெறிகளும் மத வெறிகளும் கொஞ்சம் ஆங்காங்கே இருந்தாலும் பரவலாக ஒரு நிம்மதி எல்லா நாடுகளிலும் உள்ளது

இவை முன்பு ஒரு இனத்திற்குள்ளேயே இல்லாமல்தான் இருந்தது மன்னர்கள் மன்னர்களை வெல்ல உண்டாகும் சண்டைகளால் ஒருவரை ஒருவர் திடீர் திடீரென கொன்று கொண்டு அதை வீரம் என புகழ்ந்து கொண்டிருந்தார்கள்

தமிழகத்திலேயே எத்தனை அரசுகள் சண்டைகள் ! ஆரம்ப கால புறநானுறு இலக்கியம் தமிழர்கள் தமிழர்களை வெற்றிவேல் வீரவேல் என கத்திக்கொண்டு ஒருவரை ஒருவர் கொன்றதைத்தான் பாடுகிறது

இன்னும் ஓரு ஊர்க்காரர்கள் மற்றொரு ஊரின் மேல் விழுந்து ஆண்களை கொன்றுவிட்டு ஆடு மாடுகளையும் பெண்டு பிள்ளைகளை அடிமைகளாக பிடித்துக்கொண்டு போவார்கள் இதில் கற்பை காக்க அடிமைத்தனத்தை வல்லுறவிளிருந்து தப்ப பெண்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் ! இலங்கையில் நடக்கும் இந்த அவலங்களை கண்டு நோகும் நாம் உலகம் முழுவதிலும் மக்களாட்சிக்கு முன்பு இப்படித்தான் நடந்து கொண்டிருந்தது என்பதை நிதாநித்தொமானால் அது இயேசுவின் சிலுவைப்பாடுகளால் உண்டான அன்பியல் புரட்சியில் ஒன்று !

வெறிகளையும் காட்டுமிராண்டித்தனத்தையும் தூண்டும் அசுர ஆவிகளை சிலுவையிலே அவர் ஜெயித்தார் !

மனிதர்கள் செய்யும் எல்லா தவறுகளுக்கும் மனிதன் மட்டும் காரணமில்லை ; அவன் பின்னணியில் அவனை துண்டி விடும் அசுர ஆவிகளும் காரணம் என்பதால் ஒட்டு மொத்த படைப்புகளுக்கும் அதன் காரணிகளான ஆத்மா (நாராயணன்) சரீரமான சிவன் இணைப்பாக சங்கரநாராயணனாக இப்பரிகாரம் செய்யப்பட்டது ! அது கடவுளின் சித்தப்படியாக முன் ஏற்பாட்டின் படியாகவும் நடந்தது ! தற்செயல் நிகழ்வு அல்ல !


இயேசுவுக்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு தீர்க்கர்கரிசியின் ஆவணத்திலிருந்து முன்னறிவிப்பு :

ஏசாயா 44 அதிகாரம்

22. உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்.

23. வானங்களே, களித்துப் பாடுங்கள்; கடவுள் இதைச் செய்தார்; பூதலத்தின் தாழ்விடங்களே, ஆர்ப்பரியுங்கள்; பர்வதங்களே, காடுகளே, காட்டிலுள்ள சகல மரங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்;
24. உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கடவுள் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கடவுள் ; நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்.

3. தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.

ஏசாயா 53 அதிகாரம்

3. அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.

4. மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.

5. நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

6. நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கடவுளோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.

7. அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.

10. ; கடவுளோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், ; கடவுளுக்கு சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.

11. அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.

12. அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்

யூதர்களின் வேதங்களிலுள்ள இம்முன்னறிவிப்பின்படி இயேசுவின் மரணமும் உயிர்த்தெழுதலும் நடந்தது ! மனுக்குலம் முழுமைக்கும் கடவுளின் ஆசிர்வாதம் உண்டானது

இதற்குப்பிறகு வந்த கிறிஸ்தவர்கள் தங்களை பூசாரிகளாக ஆக்கிக்கொண்டு அந்த ஆசிர்வாதத்தை பெற பூசாரிகளான தங்கள் மூலமாகத்தான் முடியும் என பிதற்றித்திரிகிறார்கள் . அவர்கள் குத்தகைதாரிகளல்ல !

ராம நாமமே பாவத்தை போக்கும் ! எத்தனை தவறுகள் செய்தாலும் எனது சீடன் நேர்வழி பெறுவான் என கிரிஷ்ணரின் வாக்குதத்தமும் அவர்களின் அடுத்த அவதாரமான இயேசுவின் தியாகத்தில் பூர்த்தி ஆனது !

ராமரும் கிரிஷ்ணரும் இயேசுவும் ஒருவரே என்பதை புரிந்து கொண்டால் மட்டுமே போதுமானது !

நாராயணனின் நாமத்தினாலே கடவுளை வழிபட்டாலே போதுமானது !

இவர்களின் உபதேசங்களை கேட்பதும் அதை இந்து தர்மத்திலேயே கடைபிடிப்பதும் போதுமானது !




ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக