புதிய பதிவுகள்
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!' Poll_c10தவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!' Poll_m10தவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!' Poll_c10 
18 Posts - 62%
heezulia
தவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!' Poll_c10தவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!' Poll_m10தவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!' Poll_c10 
11 Posts - 38%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!' Poll_c10தவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!' Poll_m10தவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!' Poll_c10 
60 Posts - 63%
heezulia
தவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!' Poll_c10தவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!' Poll_m10தவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!' Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
தவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!' Poll_c10தவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!' Poll_m10தவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!' Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!' Poll_c10தவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!' Poll_m10தவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!' Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!'

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 6:13 pm

தவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!' P26

இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்க ஊடகங்களிலும் இன்று பரபரப்பாகப் பேசப்படும் செய்தி, அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயானி விவகாரம்தான். கடந்த பத்தாண்டுகளாகக் கிட்டத்தட்ட அமெரிக்காவின் எடுபிடிபோலச் செயல்பட்ட இந்திய அரசு, இந்தப் பிரச்னையில் சரமாரியாக எதிர் நடவடிக்கை எடுத்திருப்பது எல்லோரையும் வியக்க வைத்துள்ளது. உலக நாடுகள் பலவற்றையும் அமெரிக்கா உளவு பார்த்த கதை சில மாதங்களுக்கு முன் ஸ்னோடென் மூலம் வெளியானபோதுகூட, இந்திய அரசு அடக்கியே வாசித்தது. ஐரோப்பிய யூனியன் நாடுகள் எல்லாம் அமெரிக்காவைக் கண்டித்தபோதும் இந்தியா, 'உளவு எல்லாம் இல்லை. சும்மா கம்ப்யூட்டர் ஆய்வுதான்’ என்று சொன்னபோது உலகமே நகைத்தது. இத்தனைக்கும் உளவுத் தகவல்கள் அதிகம் சேகரிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

ஆனால், இன்று இந்தியா எங்கும் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் அடையாள அட்டைகள் பறிக்கப்பட்டுள்ளன. விமான நிலைய அனுமதிச் சீட்டுகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. மது வகைகள் உட்பட தேவையான சில பொருட்களை இறக்குமதி செய்துகொள்ளும் சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கத் தூதரகங்களில் பணிபுரியும் இந்திய ஊழியர்களின் ஊதிய விவரங்களும் கோரப்பட்டுள்ளன. டில்லியில் உள்ள தூதரகத்தின் முன் போடப்பட்டிருந்த பாதுகாப்புத் தடுப்புகளும்கூட அகற்றப்பட்டுள்ளன. ஏதோ போர் சூழல்போல இருக்கிறது காட்சிகள்.

'உலகளாவிய பங்காளிகள்’(global partners) எனக் கூறிக்கொ ண்டு அமெரிக்காவுடன் கைகோத்துத் திரிந்த மன்மோகன் அரசுக்கு இப்போது திடீரென ஏனிந்த ஆவேசம்? அமெரிக்க போர்க் கப்பலான நிமிட்சின் வருகை, இந்திய அரசின் இறையாண்மையையும்கூட விட்டுக்கொடுத்து இயற்றப்பட்ட 123 ஒப்பந்தம், நேரு காலத்திய அணிசேராக் கொள்கையில் இருந்து விலகி அயலுறவுக் கொள்கையில் அமெரிக்கச் சார்பு எடுத்தது... ஆகியவற்றுக்கு எழுந்த எதிர்ப்புகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் அமெரிக்காவை ஆதரித்து வந்தது காங்கிரஸ் அரசு. அப்படிப்பட்ட அரசு, திடீரென அமெரிக்காவை மிரட்டுவதைப்போல எடுக்கும் நடவடிக்கைகள் எல்லோருக்கும் வியப்புத்தான். தேர்தல் நெருங்குவது ஒரு காரணமாக இருக்கலாம். பி.ஜே.பி-யும் இந்தப் பிரச்னையில் முழுமையாக அரசை ஆதரிக்கிறது.

துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேக்கு நேர்ந்த அவமானம் எல்லோரையும் எரிச்சல்பட வைத்துள்ளது உண்மை. இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட வேலைக்காரப் பெண்ணுக்கு உரிய ஊதியம் வழங்காமல் அதிகம் வேலை வாங்கியதாக அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையிலும், அந்தப் பெண்ணுக்கு விசா பெறுவதற்காகப் பொய் ஆவணங்கள் சமர்ப்பித்ததற்காகவும் தேவயானி பொது இடத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டது, விலங்கிட்டு அழைத்து வரப்பட்டது, ஆடைகளைக் களைந்து சோதனையிடப்பட்டது ஆகியன அனைவருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளன.

'தூதரக உறவுகளுக்கான வியன்னா உடன்பாடு (1961)’ தூதரக அதிகாரிகளுக்கு சட்ட நடவடிக்கைகளில் இருந்து சில காப்புரிமைகளை (diplomatic immunity) வழங்கியுள்ளது. எனினும், இந்தக் காப்புரிமைக்கு எல்லைகள் உண்டு. காப்புரிமை உள்ளது என்பதற்காக ஒரு தூதரக அதிகாரி உள்நாட்டுச் சட்டங்களை மீற இயலாது. மேலும், தூதரகப் பணிகள் தொடர்பான சட்ட மீறல்களுக்கு மட்டுமே இந்தக் காப்புரிமை உண்டு. இவற்றைச் சொல்லித்தான் இன்று அமெரிக்கா தன் செயலை நியாயப்படுத்துகிறது.

ஆனால், மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளை வலுவான நாடுகள் அப்படியே ஏற்றுக்கொள்வது இல்லை. தூதரக அதிகாரிகளுக்கு முழுமையான காப்புரிமைகள் உள்ளதாகவே அவை எடுத்துக்கொள்கின்றன. கடுங்குற்றச்சாட்டுகளில்கூட அவை தம் ஊழியர்களின் காப்புரிமையை விட்டுக்கொடுப்பது இல்லை.

2004 டிசம்பரில் ருமேனிய நாட்டின் புசாரெஸ்ட் நகரில் அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரிந்த வான் கோதம் என்கிற கடற்படை ஊழியர் குடித்துவிட்டு காரோட்டிச் சென்றதோடு, சாலை விதிகளை மீறிச் சென்று மோதியதில் அந்த நாட்டு இசைக் கலைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். மூச்சுப் பரிசோதனையில் சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் ரத்தப் பரிசோதனைக்கு உடன்படாததோடு, ஜெர்மனிக்கு ஓடவும் செய்தார் வான் கோதம். அமெரிக்கா, தூதரகக் காப்புரிமையை விட்டுக்கொடுக்க மறுத்தது. அவரை ருமேனியாவுக்கு அனுப்பாமல், தானே ராணுவ விசாரணை ஒன்றை நடத்தி தண்டனை அளித்தது.

ஆனால், சிறிய நாடுகள் இப்படியான நிகழ்வுகளில் தம் அதிகாரிகளின் காப்புரிமையை விட்டுக்கொடுத்தன.

1997 ஜனவரியில் ஒரு சம்பவம். அமெரிக்காவுக்கான ஜார்ஜிய நாட்டுத் துணைத் தூதர் குயோர்கொ மகாரட்சே குடித்துவிட்டு காரோட்டி மோதியதில் நால்வர் காயமடைந்து ஒரு பெண் கொல்லப்பட்டார். ஜார்ஜியா தன் துணைத் தூதரின் காப்புரிமையை விட்டுக்கொடுத்தது. அமெரிக்க அரசு தன் நாட்டுச் சட்டப்படி அவரை விசாரித்துத் தண்டனை வழங்கியது.

தான் உலக மேலாண்மை வகிப்பதாகவே அமெரிக்கா இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறது. அமெரிக்கத் தூதர்கள் ஏதோ தங்கள் காலனிகளைக் கண்காணிக்க வந்த அதிகாரிகள் போலவே அந்தந்த நாடுகளில் நடந்துகொள்கின்றனர். பிப்ரவரி 2007-ல் அப்போதைய அயலுறவு அமைச்சரான பிரணாப் முகர்ஜி ஈரானுக்குச் சென்றார். அமெரிக்காவுடன் இந்தியா 123 ஒப்பந்தம் செய்திருந்த நேரம் அது. அப்போதைய அமெரிக்கத் தூதர் டேவிட் மல்ஃபோர்ட் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி, 'ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது, புதிய சட்டங்களின்பால் இந்திய அரசு கவனம் கொள்ள வேண்டும்’ என்றார். அந்தச் சந்திப்பின்போது அவர் 'ரொம்பத் திமிராக’ நடந்து கொண்டார் என நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதியது.

சில மாதங்களுக்குப் பின் இங்கு வந்த அமெரிக்க ஆற்றல் துறைச் செயலர் ஈரானுடனான உறவு குறித்து இந்தியாவை எச்சரித்தார். 'எல்லாவிதமான அயலுறவு மரபுகளையும் அவர் மீறியதோடு, ஏதோ இந்தியாவுடன் சண்டைக்கு வந்ததுபோல’ அவர் பேசியதாக நாளிதழ்கள் எழுதின.

இன்று காலம் வேகமாக மாறி வருகிறது. அமெரிக்காவின் உலக மேலாண்மை இன்று பலவீனமாகி உள்ளது. இந்தியா போன்ற நாடுகளின் பேர ஆற்றல் அதிகரித்து வருகிறது. ஐ.நா. அவையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகிற கனவுடன் அது செயல்பட்டு வருகிறது. தனது பாரம்பரியமான அணி சேராக் கொள்கையில் இருந்து விலகி மேட்டிமைக் குழுக்களில் (elite clubs) இடம்பெயர்வதில் வெற்றி அடைந்துள்ளது.

இந்த நிலையின் ஒரு வெளிப்பாடாகவே இன்றைய மோதலை நாம் காண வேண்டியுள்ளது. ஆனால், இந்த மோதல் எந்தப் பெரிய உறவு விரிசலுக்கும் இட்டுச் செல்லப்போவது இல்லை. ஏனென்றால் அது நல்லதல்ல என இருவருக்குமே தெரியும். இந்தியாவின் கண்டனத்தைக் கவனத்தில் கொண்டு கைது நிகழ்வை ஆராய்வதாக அமெரிக்கத் தரப்பில் இறங்கிவந்துள்ளனர்.

ஒன்றைச் சொல்லியாக வேண்டும். இந்தப் பிரச்னையில் இந்தியா, அமெரிக்கா என்ற இரு தரப்பையும் தாண்டி மூன்றாவது தரப்பும் உள்ளது. அது, அந்த வேலைக்காரப் பெண். தேவயானி மட்டுமல்ல; அவரும் ஒரு இந்தியக் குடிமகள்தான். தூதரக அதிகாரிகளுக்கு ஏகப்பட்ட சலுகைகள், ஊதியம் மற்றும் வசதிகள் அளிக்கப்படுகின்றன. ஒரு ஏழை வேலைக்காரப் பெண்ணை, குறைந்தபட்ச ஊதியமும் கொடுக்காமல் கொடுமையாக வேலை வாங்கியது உண்மையானால், அது அவ்வளவு எளிதாக விட்டுவிடக் கூடியதல்ல. அமெரிக்கா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது மட்டுமல்ல... தேவயானி உரிய முறையில் சட்டத்தின் முன் நிறுத்தப்படவும் வேண்டும்!

விகடன்

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Mon Dec 23, 2013 6:42 pm

தலைப்பு “தவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!'”

இதில் தேவையானியின் தவறு சுட்டிக்காட்டப்படவில்லையே ?

ஒரு வேளை எனக்குத் தான் தெரியவில்லையா ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 6:43 pm

அந்த வேலைக்காரப் பெண். தேவயானி மட்டுமல்ல; அவரும் ஒரு இந்தியக் குடிமகள்தான். தூதரக அதிகாரிகளுக்கு ஏகப்பட்ட சலுகைகள், ஊதியம் மற்றும் வசதிகள் அளிக்கப்படுகின்றன. ஒரு ஏழை வேலைக்காரப் பெண்ணை, குறைந்தபட்ச ஊதியமும் கொடுக்காமல் கொடுமையாக வேலை வாங்கியது உண்மையானால், அது அவ்வளவு எளிதாக விட்டுவிடக் கூடியதல்ல. அமெரிக்கா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது மட்டுமல்ல... தேவயானி உரிய முறையில் சட்டத்தின் முன் நிறுத்தப்படவும் வேண்டும்!

இது தான் இவங்க செய்த பெரிய தப்பு !  அய்யோ, நான் இல்லை 

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Mon Dec 23, 2013 6:58 pm

சிவா wrote:
அந்த வேலைக்காரப் பெண். தேவயானி மட்டுமல்ல; அவரும் ஒரு இந்தியக் குடிமகள்தான். தூதரக அதிகாரிகளுக்கு ஏகப்பட்ட சலுகைகள், ஊதியம் மற்றும் வசதிகள் அளிக்கப்படுகின்றன. ஒரு ஏழை வேலைக்காரப் பெண்ணை, குறைந்தபட்ச ஊதியமும் கொடுக்காமல் கொடுமையாக வேலை வாங்கியது உண்மையானால், அது அவ்வளவு எளிதாக விட்டுவிடக் கூடியதல்ல. அமெரிக்கா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது மட்டுமல்ல... தேவயானி உரிய முறையில் சட்டத்தின் முன் நிறுத்தப்படவும் வேண்டும்!

இது தான் இவங்க செய்த பெரிய தப்பு !  அய்யோ, நான் இல்லை 
மேற்கோள் செய்த பதிவு: 1040478

வழக்கம் போல மீடியாக்கள் செய்யும் தந்திரம். கவர்ச்சிகரமான தலைப்பு !

ரொம்ப நன்றிங்கண்ணோவ்வ்  சூப்பருங்க 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 23, 2013 8:59 pm

ஈகரையன் wrote:
சிவா wrote:
அந்த வேலைக்காரப் பெண். தேவயானி மட்டுமல்ல; அவரும் ஒரு இந்தியக் குடிமகள்தான். தூதரக அதிகாரிகளுக்கு ஏகப்பட்ட சலுகைகள், ஊதியம் மற்றும் வசதிகள் அளிக்கப்படுகின்றன. ஒரு ஏழை வேலைக்காரப் பெண்ணை, குறைந்தபட்ச ஊதியமும் கொடுக்காமல் கொடுமையாக வேலை வாங்கியது உண்மையானால், அது அவ்வளவு எளிதாக விட்டுவிடக் கூடியதல்ல. அமெரிக்கா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது மட்டுமல்ல... தேவயானி உரிய முறையில் சட்டத்தின் முன் நிறுத்தப்படவும் வேண்டும்!

இது தான் இவங்க செய்த பெரிய தப்பு !  அய்யோ, நான் இல்லை 
மேற்கோள் செய்த பதிவு: 1040478

வழக்கம் போல மீடியாக்கள் செய்யும் தந்திரம். கவர்ச்சிகரமான தலைப்பு !

ரொம்ப நன்றிங்கண்ணோவ்வ்  சூப்பருங்க 
மேற்கோள் செய்த பதிவு: 1040481

 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 23, 2013 11:29 pm

சிவா wrote:
அந்த வேலைக்காரப் பெண். தேவயானி மட்டுமல்ல; அவரும் ஒரு இந்தியக் குடிமகள்தான். தூதரக அதிகாரிகளுக்கு ஏகப்பட்ட சலுகைகள், ஊதியம் மற்றும் வசதிகள் அளிக்கப்படுகின்றன. ஒரு ஏழை வேலைக்காரப் பெண்ணை, குறைந்தபட்ச ஊதியமும் கொடுக்காமல் கொடுமையாக வேலை வாங்கியது உண்மையானால், அது அவ்வளவு எளிதாக விட்டுவிடக் கூடியதல்ல. அமெரிக்கா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது மட்டுமல்ல... தேவயானி உரிய முறையில் சட்டத்தின் முன் நிறுத்தப்படவும் வேண்டும்!

இது தான் இவங்க செய்த பெரிய தப்பு !  அய்யோ, நான் இல்லை 
மேற்கோள் செய்த பதிவு: 1040478

கண்டிப்பாக தவறு செய்து இருந்தால் தேவயானிக்கும் தண்டனை கொடுக்க வேண்டும்

தவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!' Mதவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!' Uதவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!' Tதவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!' Hதவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!' Uதவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!' Mதவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!' Oதவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!' Hதவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!' Aதவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!' Mதவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!' Eதவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!' D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 24, 2013 12:12 pm

சிவா wrote:தவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!' P26
இப்படி கூட புடவை கட்டுவாங்களா ?! புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 24, 2013 12:29 pm

ராஜா wrote:
சிவா wrote:தவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!' P26
இப்படி கூட புடவை கட்டுவாங்களா ?! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1040707
ஆராய்ச்சி சூப்பர் தான் ராஜா தவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!' 3838410834 மகிழ்ச்சி 

அவுங்க ஒழுங்கா தான் கட்டி இருக்காங்க. சால்வை மேலே போடும்போது லேசாக ஒதுங்கும் அதை சரி செய்து போடாமல் விட்டுட்டாங்க. போட்டோ எடுக்குறவனும் இதான் சான்ஸுனு எடுத்துட்டான்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 24, 2013 3:59 pm

ரெண்டே ரெண்டுதான் சந்தேகம்
1. ஒரு தமிழ்நாட்டவர் அந்த வேலையில் இருந்திருந்தால் , இந்திய அரசு இந்த முடிவு எடுத்து இருக்குமா?
2. பெண்கள் ,இம்மாதிரி சூழ்நிலைகளில் கூட ,சிரித்துக்கொண்டே அலங்கோலத்துடன் போஸ் கொடுப்பார்களா?
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Dec 24, 2013 4:03 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
சிவா wrote:தவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!' P26
இப்படி கூட புடவை கட்டுவாங்களா ?! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1040707
ஆராய்ச்சி சூப்பர் தான் ராஜா தவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!' 3838410834 மகிழ்ச்சி 

அவுங்க ஒழுங்கா தான் கட்டி இருக்காங்க. சால்வை மேலே போடும்போது லேசாக ஒதுங்கும் அதை சரி செய்து போடாமல் விட்டுட்டாங்க. போட்டோ எடுக்குறவனும் இதான் சான்ஸுனு எடுத்துட்டான்.
மேற்கோள் செய்த பதிவு: 1040709

கரெட் மாமி  சூப்பருங்க , உங்களுக்கு இன்னா அறிவு ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக