புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am

» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm

» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm

» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm

» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am

» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am

» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am

» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am

» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm

» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm

» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm

» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm

» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm

» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடல் விழுங்கிய தனுஷ்கோடி! Poll_c10கடல் விழுங்கிய தனுஷ்கோடி! Poll_m10கடல் விழுங்கிய தனுஷ்கோடி! Poll_c10 
92 Posts - 74%
heezulia
கடல் விழுங்கிய தனுஷ்கோடி! Poll_c10கடல் விழுங்கிய தனுஷ்கோடி! Poll_m10கடல் விழுங்கிய தனுஷ்கோடி! Poll_c10 
15 Posts - 12%
mohamed nizamudeen
கடல் விழுங்கிய தனுஷ்கோடி! Poll_c10கடல் விழுங்கிய தனுஷ்கோடி! Poll_m10கடல் விழுங்கிய தனுஷ்கோடி! Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கடல் விழுங்கிய தனுஷ்கோடி! Poll_c10கடல் விழுங்கிய தனுஷ்கோடி! Poll_m10கடல் விழுங்கிய தனுஷ்கோடி! Poll_c10 
3 Posts - 2%
prajai
கடல் விழுங்கிய தனுஷ்கோடி! Poll_c10கடல் விழுங்கிய தனுஷ்கோடி! Poll_m10கடல் விழுங்கிய தனுஷ்கோடி! Poll_c10 
3 Posts - 2%
gayathrichokkalingam
கடல் விழுங்கிய தனுஷ்கோடி! Poll_c10கடல் விழுங்கிய தனுஷ்கோடி! Poll_m10கடல் விழுங்கிய தனுஷ்கோடி! Poll_c10 
2 Posts - 2%
கண்ணன்
கடல் விழுங்கிய தனுஷ்கோடி! Poll_c10கடல் விழுங்கிய தனுஷ்கோடி! Poll_m10கடல் விழுங்கிய தனுஷ்கோடி! Poll_c10 
2 Posts - 2%
Anthony raj
கடல் விழுங்கிய தனுஷ்கோடி! Poll_c10கடல் விழுங்கிய தனுஷ்கோடி! Poll_m10கடல் விழுங்கிய தனுஷ்கோடி! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கடல் விழுங்கிய தனுஷ்கோடி! Poll_c10கடல் விழுங்கிய தனுஷ்கோடி! Poll_m10கடல் விழுங்கிய தனுஷ்கோடி! Poll_c10 
1 Post - 1%
mruthun
கடல் விழுங்கிய தனுஷ்கோடி! Poll_c10கடல் விழுங்கிய தனுஷ்கோடி! Poll_m10கடல் விழுங்கிய தனுஷ்கோடி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடல் விழுங்கிய தனுஷ்கோடி!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Nov 23, 2013 2:23 pm

22  டிசம்பர் 1964 கடல் விழுங்கிய தனுஷ்கோடி

தமிழகத்தை உலுக்கிய சம்பவங்கள் பற்றிய தொடர், சம்பவங்களில் தொடர்புடைய நேரடி சாட்சியங்களுடன்

தனுஷ்கோடி மக்களின் பசி தீர்த்ததும் அதே கடல்தான். தனுஷ்கோடியையும் அங்குள்ள மக்களையும் மொத்தமாக விழுங்கி ருசி பார்த்ததும் அதே கடல்தான்.

ராமேஸ்வரத்திலிருந்து 14 கி.மீ. தூரத்தில், வங்கக் கடலும் இந்தியப் பெருங்கடலும் வகிடு எடுத்து வாரிவிட்டது போலிருக்க, நடுவில் இருந்த துறைமுக நகரம் தனுஷ்கோடி.

ஒரு துறைமுகம், ஒரு ரயில்வே ஸ்டேஷன், தபால் தந்தி அலுவலகம், சுங்க அலுவலகம், பள்ளிக்கூடம், இவற்றைச் சூழ்ந்து வாழ்ந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ மக்கள், தினமும் நூற்றுக்கணக்கில் வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகள், துறவிகள் என, ‘ஓர் ஓவியக் காட்சி உயிர் பெற்றதைப் போல’ இயங்கி வந்தது தனுஷ்கோடி. மீன், கருவாடு, உப்பு போன்றவை இங்கிருந்து ஏற்றுமதியாகின.

இர்வின், போஷன் என்ற இரண்டு நீராவிக் கப்பல்கள்  தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை சென்று வந்தன.  தவிர, சென்னை எழும்பூரிலிருந்து இயங்கிவந்த இந்தோ - சிலோன் போட் மெயில் என்ற ரயில் சேவை குறிப்பிடத்தக்கது. இந்தியாவையும் இலங்கையையும் வெறும் 80 ரூபாய்  கட்டணத்தில் இணைத்தது இந்த ரயில். தனுஷ்கோடியில் இறங்கி தயாராக நிற்கும் கப்பலில் ஏறினால் தலைமன்னாரில் இறங்கலாம்.

வாழ்க்கை... சுதி பிசகாமல் இருக்க ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடலா என்ன? விதிதான் அதை விரும்புமா? கதிகலங்க வைத்தது அந்த நாளை. 22 டிசம்பர்  1964. பேய்க்காற்றோடு பெருமழை பெய்ய, பேரலைகளும் விளாச...  அன்று காலையிலிருந்தே தனுஷ்கோடி அலறிக் கொண்டிருந்தது.

3 நாட்கள் முன்னதாக வங்கக் கடலில் உருவான சின்னப் புயல்,  வலுவான புயல் சின்னமாக வடிவெடுத்தது. வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர் மக்கள். நேரம் ஆக ஆகப் பொழுதும், பீதியால் மக்களுக்கு கண்களும் இருட்டிக் கொண்டு வந்தன. கொந்தளித்த கடலில் ஆவேசமாக எழும்பிய ராட்சத அலைகளின், ‘கிலி மொழி’யைக் கண்டு குலை நடுங்கினர் மக்கள்.

ஓயாத புயல் மழை புரட்டி எடுக்க, எங்கும் அடர் இருட்டு அப்பியிருந்த நள்ளிரவு. அடுத்து நடக்கப் போகிற அந்தப் பயங்கரத்தின் முதல் பலி தான்தான் என்று தெரியாமலேயே, தனுஷ்கோடியை நெருங்கியது பாம்பன்- தனுஷ்கோடி பாசஞ்சர் ரயில். அப்போது மணிக்கு சுமார் 250 கி.மீ. வேகத்தில் சுழன்றடித்த புயல் தனுஷ்கோடியை மூர்க்கமாகத் தாக்கத் தொடங்கிய நேரம். சிக்னல் சிதைந்து போயிருந்ததால், அந்த அந்தகார இருட்டில் நடுங்கி நகர்ந்த ரயிலை, ஆழிப்பேரலை ஊழித் தாண்டவமாடி  அப்படியே கடலுக்குள் சுருட்டிச் சென்றது - என்ஜினை மட்டும் விட்டுவிட்டு. 7 பெட்டிகளில் இருந்த 100-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரோடு ஜலசமாதி ஆனார்கள்.

அதேநேரத்தில் கொடும் புயல், கடும் மழை, ராட்சத அலை என மூன்றும் கைகோர்த்து தனுஷ்கோடியை தகர்த்தன. குடிசைகள் கரைந்தன. வீடுகள் இடிந்தன. கூரைகள் பறந்தன. மின் மற்றும் தந்திக் கம்பங்கள் சரிந்தன. சீறிப்பாய்ந்த அலைகள், ஊரையே கபளீகரம் செய்து கடலுக்குள் தள்ளியது. அலையோடு போனவர்கள் எக்கச்சக்கம். வீட்டோடு மூழ்கியவர்கள் ஏராளம். குழந்தைகளைத் தலையின்மேல் தூக்கிக்கொண்டும், முதியோர்களை தோளில் சுமந்துகொண்டும் இடுப்பளவு வெள்ளத்தில்,   மிச்சமிருந்த மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள  தட்டுத்தடுமாறி ஓடினர்.  உயரமான மணல் மேடுகளில் ஏறி நின்றுகொண்டதால் சொற்ப உயிர்கள் தப்பித்தன.

பொழுது விடிந்து பார்த்தால் தனுஷ்கோடியே மூழ்கிக் கிடந்தது. கடல் எது, ஊர் எது எனத் தெரியா வண்ணம் எங்கும் வெள்ளம், அதில் மிதக்கும் சடலங்கள் என பிணக் காடாக மாறியிருந்தது தனுஷ்கோடி.  தப்பித்தவர்கள் எல்லோரும் ஓடிப்போய் தங்களின் சொந்த பந்தங்களை பிணமாக தேடித் தேடி எடுத்தது பதைபதைக்க வைத்த காட்சி.

கடல் நீர் சூழ்ந்த கண்ணீர்த் தீவாக தனுஷ்கோடி மாறிய தகவலை அறிந்து தமிழகமே அதிர்ந்தது. அன்றைய முதல்வர் பக்தவச்சலம் தனுஷ்கோடிக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இறங்கியது இந்திய ராணுவம். இச்சம்பவத்தை மத்திய அரசு, ‘தேசியப் பேரிழப்பு’ என்றும், ஐ.நா. சபை, ‘ஆசியாவின் 20-ஆம் நூற்றாண்டின் பேரிழப்பு’ எனவும் அறிவித்து, தனுஷ்கோடியில் நிகழ்ந்த  பயங்கரத்தை உலகிற்கு உணர்த்தியது.

‘2,000 பேர் உயிரிழப்பு’ என்று சொல்லப் பட்டாலும் காணாமல் போனவர்களையும், கடல் கொண்ட உயிர்களையும் துல்லியமாக கணக்கிட முடியவில்லை. 3 கிராமங்கள் முற்றிலுமாக கடலுக்குள் மூழ்கிவிட்டன என்பது உறைய வைக்கும் உண்மை. இந்தப் பயங்கரத்தின்போது, அப்போதைய நட்சத்திரத் தம்பதியான ஜெமினி கணேசன் - சாவித்திரி இருவரும்  தனுஷ்கோடி கடலில் புனித நீராடிவிட்டு அன்று மாலையே ராமேஸ்வரம் திரும்பியதால்  அதிர்ஷ்டவசமாக தப்பினர். இவர்களை வேடிக்கை பார்ப்பதற்காக ராமேஸ்வரம் சென்றதால் தப்பித்த தனுஷ்கோடிவாசிகள் கணிசமான பேர்.

ஒரே இரவில் உருக்குலைந்த தனுஷ்கோடியை, ‘வாழத் தகுதியற்ற நகரம்’ என அறிவித்தது அரசு. மயான பூமி ஆகிவிட்ட சொந்த மண்ணை விட்டு ராமேஸ்வரம் உள்பட பல பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர் தப்பித்த மக்கள். இன்றோடு 49 வருடங்கள் ஆகியும் அந்தப் பயங்கரத்தின் பரிதாப சாட்சிகளாகப் பாழடைந்த ரயில்வே ஸ்டேஷனும், சிதைந்துபோன சர்ச்சும், எலும்புக் கூடுகளாக சில வீடுகளும்தான் எஞ்சி நிற்கின்றன. வேடிக்கை பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சலிக்காமல் தாங்கள் அழிந்த கதையை சொல்லிக்கொண்டு, அங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றன பல குடும்பங்கள்.

வர்த்தக நகரமாக விளங்கிய தனுஷ்கோடியை, இன்று வாழத் தகுதியற்ற நகரம் என்ற அவலத்திற்கு ஆளாக்கியதை நினைத்தோ என்னவோ, அதை  வாரிச் சுருட்டி விழுங்கிய வங்கக் கடல் இன்னமும் ஓலமிட்டு அழுதுகொண்டேதான் இருக்கிறது.
(அதிரும்)


நேரடி சாட்சியம் – 1
கடலும் வானமும் ஒண்ணா இருந்துச்சு!"


அன்றைய பயங்கரத்திலிருந்து உயிர் தப்பிய சைலாவதி (82 வயது) கூறுகிறார்:

அன்னைக்கு கடலும் வானமும் ஒண்ணா இருந்துச்சு. அலைகள் பனைமர உசரத்துக்கு வந்துச்சு.பொழச்சாலும் செத்தாலும் ஒண்ணாவே இருப்போம்னு நானும், என் மனைவியும் ஒரு சேலையை எடுத்து, எங்க ரெண்டு பேரையும் ஒண்ணா இறுக்கிக் கட்டிக்கிட்டோம். திடீர்னு கூரையைப் பிச்சிக்கிட்டு உள்ளே வந்த தண்ணி எங்களையெல்லாம்  அப்படியே சுருட்டி கடலுக்குள்ள உருட்டிக்கிட்டுப் போச்சு. வாய், கண்ணெல்லாம் உப்புத் தண்ணியும் சேறுமாக அப்பிக் கிடந்துச்சு. நல்லவேளையா அப்போ ஓங்கி அடிச்ச பெருங்காத்து, எங்களை கடல்ல இருந்து வெளியே தூக்கிப் போட்டுச்சு. உசுரு தப்புனது கடவுள் புண்ணியம்னு நினைச்சுக்கிட்,டு உசரமா இருந்த ஒரு இடிஞ்ச சுவத்துல ஏறி, உசுரை கையில பிடிச்சிக்கிட்டே விடிய விடிய உட்கார்ந்திருந்தோம். விடிஞ்சதும் சுத்திமுத்தி பிணங்களா மிதந்துகிட்டுப் போகுது. அப்புறம் அதுல தப்பிப் பிழைச்சவங்க எல்லாம் ஒருத்தரை ஒருத்தர் கட்டிக்கிட்டு அழுததுல கண்ணீரே தீர்ந்து போச்சு."


நேரடி சாட்சியம் – 2
ஊய்  ஊய்’னு சத்தம் உசுரையே உலுக்கிருச்சு!"


இப்போது 65 வயதாகும் புருஷோத்தமனுக்கு அப்போது 14 வயது.

நாங்கள் குடியிருந்தது  ரயில்வே குவார்ட்டர்ஸில். அன்னிக்கு ராத்திரிதான் கப்பல் இர்வின்  வந்து நின்னுச்சு. மெட்ராசுக்குப் போறவங்களுக்கு ரயில்  டிக்கெட் எடுத்துக் கொடுத்துட்டு, வீட்டுக்குப் போறப்பவே புயலும் மழையுமா ஒரே தண்ணிக்காடா இருக்கு. நானும் எங்க அம்மா, அப்பாவும் உசிரக் காப்பாத்திக்க மாடியில போய் நின்னுக்கிட்டோம். இந்த அலை சத்தத்தைக் கேட்டுக்கிட்டே தான் தினமும் சந்தோஷமா  தூங்குவோம். ஆனா அன்னைக்கு அதே அலை சத்தத்தைக் கேட்டு குலை நடுங்கிப்போய் முழிச்சிக் கிடந்தோம். அப்போ ‘ஊ ஊ’னு உசுரையே உலுக்கற மாதிரி கேட்ட கூச்சல் புயல்காத்தோடதா, இல்ல அந்த எமனோடதான்னே தெரியலைங்க.  விடிஞ்சு பார்த்தா, எங்க வீடுகள் எல்லாமே சேத்துலயும் தண்ணியிலயும் முக்கால்வாசி மூழ்கிக் கிடந்ததையும், கால் வைக்கிற இடமெல்லாம் பிணமாகக் கிடந்ததையும் இன்னைக்கு  நினைச்சாலும் உடம்பே ஆடிப்போகும்."
- எம்.பி.உதயசூரியன் - புதியதலைமுறை

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Nov 23, 2013 5:47 pm

வேதனையான செய்தி.. அன்றும் இன்றும் தனுக்ஷ்கோடி படங்கள் இருந்தால் பதிவிடுங்களேன்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 23, 2013 10:14 pm

சாமி அவர்கள் கண்ணில் நீர்த்துளியை வரவழைத்துவிட்டார் ! அந்தத் தனுஷ்கோடியை நானும் சென்று பார்த்தேன் ! அந்த இடமே வாயைப் பொத்திக்கொண்டு அழுவதுபோலத்தான் இன்னமும் காணப்படுகிறது! நம் கண் முன்னே நடந்த தமிழர் இழப்பு ! வரலாற்று இழப்பு !  ‘இந்த இடத்தில்தான் அஞ்சலகம் இருந்தது’ என்று காட்டினார்கள் ; என்னைப் பொறுத்தவரை , அங்கிருந்து இன்னும் தமிழர்களுக்குச் செய்தி வந்துகொண்டுதான் இருக்கிறது !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 24, 2013 8:22 am

அரசாங்கம் மனது வைத்தால் இதை ஒரு சுற்றுலா தலமாக மாற்றமுடியாதா? நிலத்தை அளந்து 99வருட லீசுக்கு , பெயருக்கு ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு , விருப்பப்பட்டோருக்கு கொடுத்து ,புதியதோர் நகரம் உண்டாக்கமுடியாதா?  
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக