புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_m10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_m10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10 
31 Posts - 36%
prajai
மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_m10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_m10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10 
3 Posts - 3%
Jenila
மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_m10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10 
2 Posts - 2%
jairam
மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_m10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_m10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_m10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_m10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_m10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_m10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_m10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10 
7 Posts - 5%
prajai
மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_m10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10 
6 Posts - 4%
Jenila
மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_m10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10 
4 Posts - 3%
Rutu
மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_m10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_m10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_m10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10 
2 Posts - 1%
viyasan
மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_m10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_m10மரணத்தை வென்ற இல்லறத்தான்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணத்தை வென்ற இல்லறத்தான்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 21, 2013 1:20 am



துரியோதனன் தர்மவான்; அன்பாளன்; இன்சொல் பேசுபவன்; பொறாமை இல்லாதவன்; இரக்க குணம் உள்ளவன்; புலன்களை வென்றவன்; தற்பெருமை பேசாதவன்; எவரையும் அவமதிக்காதவன்; விதிப்படி யாகங்களைச் செய்பவன்; புத்திமான்; வேதங்களை அறிந்தவன்; அந்தணர்களை மதிப்பவன்; வாக்கு தவறாதவன்; எல்லாவற்றுக்கும் மேலாக பராக்கிரமசாலி. இவனது ஆட்சியில் மழைக்கு பஞ்சமே இல்லை. ரத்தினங்கள், பசுக்கள், உணவு தானியங்கள், செல்வம் என எல்லாமே நிறைந்திருந்தன. கருமி, ஏழை, நோயாளி, உடல் இளைத்தவர் என்று ஒருவர் கூட இவனது தேசத்தில் இல்லை...

என்ன, ஆச்சரியமாக இருக்கிறதா? பொறுங்கள்... இவன் வேறு துரியோதனன்!

குருசேத்திர போர்க்களத்தில் அம்புப் படுக்கையில் வீழ்ந்திருந்த பீஷ்மரிடம் பல கேள்விகளைக் கேட்டு உரிய விளக்கங்கள் பெற்றார் தருமர். அவரது கேள்வி களில், ''தர்மத்தின்படி நடந்து மரணத்தை வென்ற இல்லறத்தான் யார்?'' என்பதும் ஒன்று.

இதற்கு பதிலளித்த பீஷ்மர், புகழ்பெற்ற ஒரு பரம் பரையையே மேற்கோள் காட்டி விவரித்தார்...

மனுவின் பிள்ளை இக்ஷ்வாகு. இவரின் பத்தாவது பிள்ளையான தசாச்வன், 'மாஹிஷ்மதி' நாட்டின் மன்னனாக இருந்தான். இவன் மகன் மதிராச்வன் சத்தியம், தானம், தவம் ஆகியவற்றில் விருப்பமும் வில் வித்தை, வேதம் ஆகியவற்றில் இடைவிடாத பயிற்சி யும் கொண்டிருந்தான். மதிராச்வனின் மகனான த்யுதி மான் பராக்கிரமமும் உடல் பலமும் நிறைந்தவன்.

த்யுதிமானின் மகன் ஸூவீரன், உலகம் முழுதும் புகழ் பெற்ற தர்மவான். எப்போதும் நிரம்பி வழியும் கஜானாவைப் பெற்றிருந்தான். இவன் மகன் துர்ஜயன், எவராலும் வெல்ல முடியாத பலசாலி. இந்த துர்ஜயனின் பிள்ளை துரியோதனன், ஒளிமிக்க உடல் கொண்டவன், மகாராஜா மற்றும் ராஜரிஷிகளில் தலைசிறந்தவன் (இவனது பெருமைகளையே கட்டுரையின் துவக்கத்தில் விவரிக்கிறார் பீஷ்மர். இவன் வேறு; கௌரவர்களில் மூத்தவனான அந்த துரியோதனன் வேறு).

இத்தனை புகழுக்குரிய துரியோதனனை, நர்மதா நதியின் அதிதேவதை, மானிடப் பெண்ணாக வந்து மணம் புரிந்தாள். இவர்களுக்குப் பிறந்தவளே சுதர்சனை; பேரழகி.

ஒரு நாள், தன் தந்தை துரியோதனனின் ஆணைக்கு இணங்க அக்னி ஹோத்திர சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தாள். அப்போது, அங்கே மானுட வடிவில் வந்த அக்னி பகவான், 'நான் உன்னை மணக்க விரும்புகிறேன்' என்றார் சுதர்சனையிடம்.

சுதர்சனை பதறிப் போனாள். பின்னர் வெட்கத்துடன், ''பெண்களை மணம் செய்து கொடுப்பதற்கு பெற்றோருக்கும் சுற்றத்தாருக்கும் மட்டுமே அதிகாரம் உண்டு. எனவே, என் தந்தையைக் கேளுங்கள்!'' என்றாள்.

நாட்கள் ஓடின. ஒரு நாள், யாகம் செய்யும் பணியில் துரியோதன மன்னன் ஈடுபட்டிருந்தபோது, அங்கே அந்தண வடிவில் வந்த அக்னி பகவான், ''மன்னா! தங்கள் மகளை எனக்கு மணம் செய்து கொடுங்கள்!'' என்று கேட்டார். ஆனால் துரியோதனன் மறுத்து விட்டார். பின்னர் யாகத்துக்கு உண்டான தீட்சையை மன்னர் எடுத்துக் கொண்டார். அப்போது ஹோமத்துக்கான யாக குண்டத்தில் இருந்த அக்னி திடீரென மறைந்தது!

அதிர்ச்சியான மன்னர் அருகில் இருந்த வேத வல்லுநர்களிடம், ''ஏன் திடீரென அக்னி மறைந்தது?'' என்று குழப்பத்துடன் கேட்டார்.

உடனே, வேத வல்லுநர்கள் மந்திரங்களை உரக்க உச்சரித்தனர். அந்தப் பகுதியே வேத ஒலியால் நிறைந்தது. மறுகணம், ஜொலிக்கும் உருவத்துடன் அங்கு வந்த அக்னி பகவான், ''உங்கள் மன்னன் துரியோதனனின் மகளை நான் மணக்க விரும்புகிறேன்!'' என்று வேத வல்லுநர்களிடம் தெரிவித்தார். தகவல் அறிந்து பெரிதும் மகிழ்ந்த துரியோதனன், ''எனக்குப் பெரிதும் மகிழ்ச்சி. ஆனால், ஒரு வேண்டுகோள்... அக்னி பகவான் இங்கேயே எப்போதும் இருக்க வேண்டும்!'' என்றார்.

அன்று முதல் இன்று வரை அக்னி பகவானின் சாந்நித்தியம் மாஹிஷ்மதி நகரத்தில் விளங்கி வருகிறது. (இதை, திக்விஜய யாத்திரையின்போது சகாதேவன் கண்டான்). அடுத்து அக்னி பகவான்- சுதர்சனை ஆகியோரது திருமணம் இனிதே நடந்தது. இந்த தம்பதிக்கு சுதர்சனன் என்ற பிள்ளை பிறந்தான். சிறுவன் சுதர்சனன் வேதங்கள் முழுவதையும் கற்றறிந்தான். பின்னர் இவனுக்கும் ஓகவான் என்ற மன்னனின் மகளான ஓகவதிக்கும் திருமணம் நடந்தது.

இந்த சுதர்சனனே, தர்மத்தின்படி நடந்து மரணத்தை வென்ற இல்லறத்தான்!

சரி... சுதர்சனத்தைப் பற்றி சொல்ல வந்த பீஷ்மர், இவரது முன்னோர்களின் வரலாற்றை ஏன் விளக்க வேண்டும்? சுதர்சனத்தின் தகவலை மட்டும் சொல்லி இருக்கலாமே என்று தோன்றலாம். சுதர்சனன் உயர்ந்த நிலையை அடைந்ததற்கு, அவரின் முன்னோர்களது உயர்ந்த நற்குணங்களும் காரணம் என்பதை தர்மர் உள்ளிட்டோர் புரிந்து கொள்வதற்காகவே, பீஷ்மர் இவ்வாறு விளக்கியுள்ளார்.

சுதர்சனனும் ஓகவதியும் குருசேத் திரத்தில் இல்லறத்தைத் தொடங்கினர். 'நான் இல்லறத்தில் இருந்தபடியே எமனை வெல்வேன்' என்று சபதம் செய்தார் சுதர்சனன். மேலும் தன் மனைவியிடம், ''ஓகவதி! நமது வீட்டில், உணவு என்று கேட்டு வந்தவருக்கு எந்தக் குறையும் இல்லாமல் உணவளிக்க வேண்டும். எந்த வகையில் விருந்தாளி திருப்தி அடைவானோ, அதன்படி அவனை உபசரிக்க வேண்டும். வீட்டில் நான் இருந்தாலும் இல்லையென்றாலும் எதன் பொருட்டும் விருந்தாளியை அவமதிக்கக் கூடாது!'' என்றார். ஓகவதியும் இதை ஏற்றுக் கொண்டாள். ஆனால், 'இந்த நியமத்தில் சுதர்சனன் எப்படியும் தவறு செய்வான். அப்போது நாம் அவனைப் பிடித்துவிட வேண்டும்!' என்ற எண்ணத்தில் அவன் பின்னாலேயே சுற்றி வந்தான் எமன்.

ஒரு நாள், சமித்துகள் சேகரிப்பதற்காக வெளியே சென்றிருந்தான் சுதர்சனன். அப்போது அழகிய வேதியன் ஒருவன், சுதர்சனனின் இல்லத்துக்கு வந்தான்.

அவனை வரவேற்று உபசரித்த ஓகவதி, 'என்ன வேண்டும், சொல்லுங்கள்!' என்றாள்.

வேதியன், 'எனக்கு நீதான் வேண்டும்!' என்றான்.

அதிர்ந்தாள் ஓகவதி. இதற்கு பதிலாக, விலை உயர்ந்த பொருட்களைத் தருவதாகச் சொன்னாள். ஆனால், வேதியன் மறுத்து விட்டான். செய்வ தறியாது தவித்தாள் ஓகவதி. அப்போது, கணவன் சொன்ன அறிவுரைகள் நினைவுக்கு வந்தன. பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவளாக, 'அப்படியே ஆகட்டும்!' என்றபடி, வேதியனுக்கு அருகில் அமர்ந்தாள்.

இந்த நிலையில், ஆசிரமத்துக்குத் திரும்பினான் சுதர்சனன். வழக்கம் போல் எமனும் பின்னாலேயே வந்தான். வாசலில் நின்றபடி, ''ஓகவதி!'' என்று உரக்க குரல் கொடுத்தான் சுதர்சனன். பதில் இல்லை. மறுபடியும் குரல் கொடுத்தான். அப்போது, ஆசிரமத்தின் உள்ளே இருந்த வேதியன் பதில் சொன்னான் ''சுதர்சனா! விருந்தாளியாக வந்த எனக்கு, உன் மனைவி அனைத்து வித அதிதி பூஜைகளையும் செய்வதாகச் சொன்னாள். ஆனால் நானோ, அவளையே விரும்பினேன். எனவே, என்னுடன்தான் இருக்கிறாள்!''

'இதோ... இதுவே தருணம்! இவன் தன் நியமத்தில் இருந்து பிறழப் போகிறான்' என்று எமன் தன் கையில் இருந்த தடியைத் தயாராக வைத்து நின்றான்.

ஆனால், சுதர்சனத்தின் சொல், செயல், பார்வை மற்றும் நடவடிக்கை என்று எதிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சலனமே இன்றி பேசினான் ''வேதியனே! அதிதிகளது மனம் மகிழும்படி பணிபுரியும் இல்லறத்தானுக்கு, இதை விட பெரிய தர்மம் வேறென்ன இருக்கிறது? என் உயிர், மனைவி, உடைமைகள் அனைத்தும் அதிதிகளுக்கு கொடுக்கத் தகுந்தவையே. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், புத்தி, ஆத்மா, மனம், காலம், திசை ஆகிய பத்தும் நம் உடலில் இருந்தபடியே, நாம் செய்யும் நல்வினை மற்றும் தீவினைகளைக் கவனித்து வருகின்றன. எனவே, எனது சபதத்தில் இருந்து விலக மாட்டேன். இதனால் தேவர்கள் என்னை எதுவும் செய்யட்டும்!'' என்றான் சுதர்சனன். அப்போது நாலா திசைகளில் இருந்தும் 'இது உண்மை! இது உண்மை!' என்று ஒலித்தது.

அப்போது அந்த வேதியன், வாயு பகவானைப் போல ஆகாயம்- பூமி எங்கும் பரவி, பிரமாண்ட வடிவத்துடன் வெளிப்பட்டான். பிறகு சுதர்சனனிடம், ''குற்றமற்றவனே, நான் தர்மதேவதை. உன்னை சோதிக்கவே வந்தேன். உனது சபதத்தில் நீ வென்று விட்டாய். பதிவிரதையான உன் மனைவி ஓகவதியை எவராலும் வெல்ல முடியாது. இவள் சொல்வது பலிக்கும். உலக பாவங்களைப் போக்கும் விதமாக ஒரு பாதி உடலால் ஓகவதி என்னும் நதியாகவும், மறு பாதி உடலால் உன் மனைவியாகவும் இருப்பாள். உன் தவத்தால் கிடைக்கப் பெற்ற உலகங்களுக்கு இவளுடன் செல்வாய்! இந்த உடலுடன் அழிவில்லாத உலகங்களை அடைவாய். எமன் உன்னிடம் தோற்றான்; இல்லற ஒழுக்கத்தால் காமக் குரோதங்களை வென்றாய்'' என்றது தர்மதேவதை. அப்போது ஆயிரம் வெள்ளை குதிரைகள் பூட்டிய ரதத்தில் அங்கு வந்தான் தேவேந்திரன்!

இங்கே கதையை முடித்த பீஷ்மர், இதன் தொடர்பாக சில தகவல்களையும் சொன்னார் ''தேவேந்திரனே தேடி வரும் அளவுக்கு ஓர் உயர்ந்த நிலை, சுதர்சனனுக்குக் கிடைத்தது எப்படி? தகுதி வாய்ந்த அதிதி, மனப்பூர்வமாக ஆசிர்வாதம் செய்வதால் உண்டாகும் பலன், நூறு யாகங்கள் செய்தாலும் கிடைக்காது.

நல்ல விருந்தாளி ஒருவரை உபசரிக்காமல் போனால், நாம் செய்த தான- தர்மங்கள், நற்செயல்களுக்கான புண்ணிய பலன்கள் நம்மை விட்டு நீங்குவதுடன், பாவத்தையும் சேர்த்து விடும். தவிர, நமது புண்ணிய பலன்கள் நம்மால் அவமானப்படுத்தப்பட்ட விருந்தாளிக்குப் போய்விடும்.

சுதர்சனனின் கதையை தினமும் படிப்பவரும் கேட்ப வரும் புண்ணிய உலகங்களை அடைவர்'' என்றார் பீஷ்மர்.

பி.என்.பரசுராமன்

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Nov 21, 2013 12:52 pm

மரணத்தை வென்ற இல்லறத்தான்! 103459460



அன்புடன் அமிர்தா

மரணத்தை வென்ற இல்லறத்தான்! Aமரணத்தை வென்ற இல்லறத்தான்! Mமரணத்தை வென்ற இல்லறத்தான்! Iமரணத்தை வென்ற இல்லறத்தான்! Rமரணத்தை வென்ற இல்லறத்தான்! Tமரணத்தை வென்ற இல்லறத்தான்! Hமரணத்தை வென்ற இல்லறத்தான்! A
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82018
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 21, 2013 4:28 pm

அன்றைய விலைவாசி அப்படி...!
-
மரணத்தை வென்ற இல்லறத்தான்! 103459460 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக