புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலம்! Poll_c10பாலம்! Poll_m10பாலம்! Poll_c10 
30 Posts - 55%
heezulia
பாலம்! Poll_c10பாலம்! Poll_m10பாலம்! Poll_c10 
21 Posts - 38%
Manimegala
பாலம்! Poll_c10பாலம்! Poll_m10பாலம்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பாலம்! Poll_c10பாலம்! Poll_m10பாலம்! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
பாலம்! Poll_c10பாலம்! Poll_m10பாலம்! Poll_c10 
1 Post - 2%
jairam
பாலம்! Poll_c10பாலம்! Poll_m10பாலம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாலம்! Poll_c10பாலம்! Poll_m10பாலம்! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
பாலம்! Poll_c10பாலம்! Poll_m10பாலம்! Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
பாலம்! Poll_c10பாலம்! Poll_m10பாலம்! Poll_c10 
12 Posts - 4%
prajai
பாலம்! Poll_c10பாலம்! Poll_m10பாலம்! Poll_c10 
9 Posts - 3%
Jenila
பாலம்! Poll_c10பாலம்! Poll_m10பாலம்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
பாலம்! Poll_c10பாலம்! Poll_m10பாலம்! Poll_c10 
3 Posts - 1%
jairam
பாலம்! Poll_c10பாலம்! Poll_m10பாலம்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பாலம்! Poll_c10பாலம்! Poll_m10பாலம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பாலம்! Poll_c10பாலம்! Poll_m10பாலம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பாலம்! Poll_c10பாலம்! Poll_m10பாலம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 23, 2013 10:37 am

"ஒன் டூ, பக்கிள் மை ஷூ'
"டிங் டாங் பெல்'

"ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்...' என்று, வரிசையாக நர்சரி, "ரைம்'களை சொல்லி முடித்த பின், "த்ரீ லிட்டில் பிக்ஸ்' முதல், சில குட்டிக் கதைகளைச் சொல்ல வேண்டும். இவையெல்லாம் ராகவனுக்கு, கிட்டத்தட்ட மனப்பாடமே ஆகிவிட்டது. இதெல்லாம் அத்துப்படி ஆனதற்கு காரணம், அவரது பேரப் பிள்ளைகள் தான். சில ஆண்டுகள் வரை சஞ்சய், அட்சயா; இப்போது சுஜி குட்டி. ராகவனுக்கு, 62 வயது தாண்டி விட்டது. அவரது காலத்தில், ப்ரீ ஸ்கூல், எல்.கே.ஜி., யு.கே.ஜி., எல்லாம் கிடையாது. ஐந்து வயது முடிந்தவுடன், அரசு துவக்கப் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ப்பர்.

ஆனால், இப்போது, காலம் மாறிவிட்டது. ஐந்து வயதிலேயே, வாய்ப்பாடு சொல்லுகின்றனர் குழந்தைகள்.
ராகவன், அரசு வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர். ராகவன் - விஜயா தம்பதிக்கு, இரண்டு மகள்கள். பெரியவள் அனுஸ்ரீ, சிறியவள் அபிநயா. பெரியவளின் மகன் ஏழு வயது சஞ்சய். மகள் அட்சயா, மூன்று வயது. சுஜி சிறியவள் அபிநயாவின் பெண். படு சுட்டி, அழகான புன்னகை தவழும் குண்டு முகம்; சுருட்டையான தலைமுடி.

பிறந்ததிலிருந்தே ராகவன், விஜயா தம்பதியினரிடம் ஒட்டிக் கொண்டு விட்டனர் பேரக்குழந்தைகள். "குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்திலே...' என்பர். எங்கு பாசமும், அன்பும் இருக்கிறதோ, அங்கு மனம் இழுக்கப்படுவது இயற்கை தானே. குழந்தைகள் என்றாலே அலர்ஜி என்கிற நிலையிலிருந்த சம்பந்திகளிடம், பேரக்குழந்தைகள், கொஞ்சம் கூட ஒட்டுவதில்லை. சஞ்சையும், அட்சயாவும் வருடத்தில் முக்கால்வாசி நாட்கள், அம்மா வழித் தாத்தா, பாட்டியோடு இருந்து வந்தனர். ஓயும் நேரத்தில் அபிநயாவுக்கு, சுஜி பிறந்தாள். அவளும் பிறந்தது முதலே, ராகவனிடமும், விஜயாவிடமும் வளர்ந்து வந்ததால், இவர்களிடமே அதிகப் பாசத்துடன் இருந்தாள்.

ராகவன் முதலில்,"ஒன் டூ பக்கிள் மை ஷூ' அடுத்தது, "டிங் டாங் பெல்' சொல்ல வேண்டும். அதை விட்டு விட்டு, அடுத்த, "ரைம்ஸ்'க்கு அவர் தாவி விட முடியாது. அப்படிப் போனால், "டிங் டாங் பெல்' என்னவாயிற்று என்று, ஒரு கேள்வியைப் போடுவாள்.
அப்புறம், "ஒரு பெரிய காடு இருந்தது... அதில் சிங்கம் இருந்தது...' என்று, கதை சொல்ல வேண்டும்.

அபிநயாவின் கணவன் ராகுல், எதையும் கண்டு கொள்வதில்லை. காலையில் ஆபீஸ் போனால், இரவு, வீடு திரும்ப, பத்தோ பத்தரையோ ஆகிவிடும். வீட்டில் இரவில் கூட, லேப்-டாப், மொபைல் சகிதம் உட்கார்ந்து விடுவான். அபிநயாவும், காலை 9:00 மணிக்கு, ஆபீஸ் புறப்பட்டால், வீடு திரும்ப இரவு, 8:00 மணி ஆகிவிடும். அவளாலும் சுஜியுடன் சிறிது நேரமே செலவிட முடியும்.
அபிநயாவின் மாமனார் கோபால், அரசு வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர். மாமியார் ஜெயா, இல்லத்தரசி.

கோபாலுக்கு, செய்தித்தாள்களை, ஒரு வரி விடாமல் படிப்பதிலும், எதிர் பிளாட்டில் இருப்பவர்களோடு, ஊர் வம்பு பேசுவதிலும் சமர்த்தர். ஜெயாவுக்கோ வீட்டில் பூஜைகள் செய்வது, "டிவி'யில், சீரியல் பார்ப்பது பிடித்தமானவை. சீரியல்கள் நேரத்திற்கு தகுந்த மாதிரி, தன் வேலைகளை, "ஷெட்யூல்' செய்து கொள்வாள். ஏனோ பேரக் குழந்தையைப் பார்த்துக் கொள்ள மட்டும், நேரம் ஒதுக்க, அவர்கள் இருவராலும் முடியவில்லை.

அபிநயா, "உண்டாகியிருக்கிறாள்' என்ற செய்தி தெரிந்த அன்று, தன் மாமியாரும்- மாமனாரும் அக்கறையோடு அழைத்துப் பேச உட்கார்ந்ததும், அபிநயாவிற்கு, மிகவும் ஆச்சரியமாக இருந்தது.இருவரும் ஆபீஸ் மீட்டிங் மாதிரி, மருமகள் அபிநயாவைக் கூப்பிட்டு, அருகில் உட்கார வைத்து, கறாராகச் சொல்ல ஆரம்பித்தனர்."அபிநயா, நீ ஆச்சு, உன் புருஷனாச்சு. நீங்க தான் உங்க குழந்தையை பார்த்துக்கணும். ஓய்ஞ்சு போன வயசிலே, நாங்க நிம்மதியா இருக்கணும்...'

ஏதோ சினிமா வசனம் போல் பேசி முடித்து, அபிநயாவைப் பார்த்தனர்.
அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பின், பேச ஆரம்பித்தாள்.
"என்ன அத்தே... நீங்களே இப்படிச் சொன்னால், நாங்கள் என்ன செய்வது?'

"உங்க அக்கா பிள்ளைகளை, உங்க அப்பா - அம்மா தானே பார்த்துக்கிறாங்க... உன் குழந்தையையும் அவங்களே பாத்துக்கட்டும். அவங்களுக்கு பொறுமை அதிகம். அதைத் தவிர, அவங்களுக்குத் தான் குழந்தையைப் பார்த்துகிறதைத் தவிர, வேற எதுலயும் விருப்பம் கிடையாதே... அதனாலே, இப்பவே, உன்னோட அப்பா, அம்மாகிட்ட சொல்லிடு. அவங்கதான் இந்த குழந்தையையும் பார்த்துக்கணும்ன்னு...'பேரக் குழந்தைகளுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும், தாத்தா, பாட்டிகளுக்கு மத்தியில், இப்படி பேசும் தன், மாமனார், மாமியாரைப் பார்க்க, அபிநயாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய ராகுல், இவர்கள் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும், " என்ன அம்மா டிஸ்கஷன்? அபிநயாவுக்குக் குழந்தை பொறந்திடுச்சின்னா, அதுக்குத் தகுந்த மாதிரி, நீயும், அப்பாவும், "அட்ஜெஸ்ட்மென்ட்'கள் செய்ய வேண்டியிருக்குமே...'"என்ன, அட்ஜெஸ்ட்மென்ட்?'"டிவி' சீரியல் பாக்கறது, ஊர் சுத்தறது இதையெல்லாம் கொஞ்சம் குறைச்சு, குழந்தையைப் பார்த்துக்கிற வேலையைத் தான் சொல்றேன்...'

"என்னது... குழந்தையைப் பார்த்துக்கிற வேலையா... நீங்க ரெண்டு பேரும் எதுக்கு இருக்கீங்க... வயசான காலத்துலே, சின்னக் குழந்தையை கட்டி மேய்க்க எங்களால முடியாதுப்பா... அதுக்குப் பொறுமையும் இல்லை...'
தன் பெற்றோரின் பொறுப்பற்ற பேச்சு, ராகுலுக்கு எரிச்சலை மூட்டியது. ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், லேப்-டாப்பில் மூழ்கி விட்டான். அபிநயாவும், எதுவும் பேசவில்லை.

சுஜி பிறந்தது முதல், வாரம் தோறும், ராகுல் தன் மனைவி அபிநயா மற்றும் குழந்தை சுஜியோடு, மாமனார் வீட்டிற்குச் சென்று விடுவது வழக்கம். அப்படிச் செல்லும் போது, குழந்தை சுஜியை, அவர்கள், சிறு முகச் சுளிப்பு கூட இல்லாமல், கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வதை பார்த்து, ராகுலுக்கு ஆச்சரியம். இது குறித்து, ஒரு முறை கேட்டுவிட்டான் ராகுல்.
"மாமா, உங்களைப் பார்க்கும்போது, எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. சுஜி குட்டியை... பார்த்துக்கிறதுல உங்களுக்கு ஒரு சின்ன சலிப்பு கூட ஏற்பட்டதில்லையே...'

""மாப்ளே... சுஜிக்குட்டி என் பேத்தி. அவளை கவனிச்சுக்கிறதை விட எங்களுக்கு வேறு என்ன வேலை. அப்படியே வேலை இருந்தாலும், குழந்தைக்கு அப்புறம் தான் எல்லாம்...'

thodarum..............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 23, 2013 10:46 am

தினமலரில் படித்தேன் பகிர்வுக்கு நன்றி அம்மா ஆனால் இது 
 தொடர்கதையா ?



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 23, 2013 10:48 am

இப்படியே, சுஜிக்கு இரண்டு வயதும் முடிந்து விட்டது. அவளுக்கு, ராகவன் தாத்தா, ஜெயா பாட்டியிடம் அலாதி அன்பு. ஒவ்வொரு முறையும் ராகுலும், அபிநயாவும் தங்கள் வீட்டிற்கு புறப்படும்போது, "ராகவன் தாத்தாவையும் - ஜெயா பாட்டியையும், நம்மளோட கூட்டிக்கிட்டுப் போகணும்' என்று, அடம் பிடிப்பாள் சுஜிக்குட்டி.

ராகுவின் அம்மா - அப்பாவை, சுஜி திரும்பிக்கூட பார்க்க மாட்டாள். அதைப் பற்றி அவர்களும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. ராகுலுக்கு தன் அப்பா, அம்மாவை நினைத்து, எரிச்சலாக இருக்கும். சில நேரங்களில், ராகுலின் அம்மா, குழந்தையைக் கொஞ்ச நினைத்தால், கையில் சிக்காமல் ஓடி விடுவாள் சுஜி. இனிமேல், இவர்களிடம் ஒட்டுவாளா என்பது சந்தேகம். எதிர் பிளாட்டில், கோபாலின் நண்பர் வேணுவிற்கும், அவரது மகனுக்குமிடையே, ஏதோ பலத்த வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம், அவரின் மகனும், மருமகளும் ஆபீஸ் சென்று விட்டனர்.

கோபால் விஷயத்தை தெரிந்து கொள்ளும் ஆவலில், வாசலில் நின்றிருந்த, நண்பர் வேணுவிடம், ""என்ன சார்... உங்களுக்கும், உங்க மகனுக்கிடையே ஏதோ வாக்குவாதம் நடந்த மாதிரி இருந்தது? நான், உங்க சொந்த விவகாரத்துலே தலையிடறேன்னு நினைக்காதீங்க. சொன்னீங்கன்னா... என்னால் உங்களுக்கு உதவ முடியுமான்னு பாக்கறேன்,'' என்று விசாரித்தார்.
""உங்ககிட்ட சொல்றதுனால, என்ன ஆயிடப் போவது... பரவாயில்லை சொல்றேன். பையனுக்குக் கல்யாணம் ஆகி, அஞ்சு வருஷம் ஆயிடுச்சு சார். குழந்தை இல்லை. போகாத கோவில், குளம் இல்லை. ஆனா, ஒண்ணும் நடக்கல்ல. இதைப் பத்தி, அவங்க ரெண்டு பேர்கிட்டேயும் பேசறதையே, அவங்க தொந்தரவா நினைக்கிறாங்க.''

கோபால், ஆலோசனை கூறும் வகையில், ""மெதுவா பொறக்கட்டும் சார். இப்ப என்ன அவசரம். அது மட்டுமில்லாம குழந்தை பொறந்தா... உங்கத் தலையிலே தான் கட்டப் போறாங்க. அதனால, உங்களுக்குத் தான் வேலையும் அதிகமாகும். பேசாம, "டிவி' பாக்கறது, பேப்பர் படிக்கிறதுன்னு காலத்தை ஓட்டுங்க. இப்ப காலம் போற போக்கே சரியில்லை. குழந்தை பெத்துக்கறதெல்லாம், அவங்களோட பர்சனல் மேட்டர். அவங்க இஷ்டத்துக்கு விட்டுடுங்க,'' என்று விளக்கினார்.

""ஏன் சார் காலத்து மேல, பழியைப் போடுறீங்க... இப்போ, கணவன் - மனைவி ரெண்டு பேரும் வேலைக்குப் போறாங்க. நம்ம காலத்துலே, அப்படியா இருந்தது? நாமதான், குழந்தையைப் பாத்துகிட்டு, அவங்களுக்கு ஒத்தாசையா இருக்கணும். குழந்தையை பாக்கிறத விட, நமக்கு வேற என்ன வேலை? ஆமா...நானும் உங்களைக் கவனிச்சுக்கிட்டுதான் இருக்கேன். உங்க பேத்தி, உங்ககிட்ட அவ்வளவா ஒட்டமாட்டேங்குறாளே... உங்க சம்பந்திகிட்ட மட்டும் எப்படி பாசமா இருக்கா? அப்படின்னா... உங்ககிட்டதான் தப்பு இருக்கு. பேரக் குழந்தைங்க, நமக்கும், நம்ம மகன், மருமகளுக்கும் இடையே பாலம் மாதிரி.

அந்தக் குழந்தை செய்ற குறும்புகள், விளையாட்டுக்கள் பத்தித் தெரிஞ்சுக்கறதுலே, அவங்க ஆர்வமா இருப்பாங்க. அந்தப் பேரக் குழந்தைகிட்ட, நாம பாசமா இருந்தாத்தான், அவங்க மூலமா, நம்ம பையனும், மருமகளும், நம்ம மேலே பாசமா இருப்பாங்க. இப்பவே... உங்க மகன், மருமகள் இருவரும், உங்களிடம் அதிகம் பேசறதில்லை, பழகறதில்லை. இப்படியே நிலைமை நீடிச்சா, கொஞ்ச நாள்ல, அவங்க உங்களை விட்டு விலகிப் போறதுக்கும் வாய்ப்பிருக்கு. அதை யோசியுங்க.'' "அப்படின்னா?''

"ஆமாம் சார். பிரச்னை இப்போ எங்களுக்கில்லே, உங்களுக்குத்தான். அதை முதல்ல சரி செய்ற வழியைப் பாருங்க. எங்க வீட்டிலே இன்னும் குழந்தையே பிறக்கல்லே. ஆனா, குழந்தை இருந்தும், உங்களுக்குப் பிரயோஜனம் இல்லாம இருக்கு. அதைப் பத்தி யோசியுங்க.''பேச்சை முடித்து, உள்ளே போய் விட்டார் வேணு.கோபால் வீட்டிற்குள் வந்து, தன் மனைவி ஜெயாவிடம், வேணு சொன்னதைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

""ஜெயா... நாம பெரிய தப்பு செய்துகிட்டுயிருக்கோம். குழந்தைப் பாசத்தின் அருமையை தெரிஞ்சுக்காம இருக்கோம். வயசாயிட்டா, நாம ஜாலியா பொழுதுபோக்கணும்கிறது இல்ல. இனிமே குழந்தைய பாத்துக்கிறது தான் முதல் வேலை. மத்ததெல்லாம், அப்புறம் தான். நம்ம பேத்தி, சுஜியைப் பார்த்துக்கறதுலே, இனியும் அக்கறை இல்லாம இருந்தா... இந்த குடும்ப வாழ்க்கையில், நம்ம பங்கு என்னங்கிறது தெரியாமப் போயிரும். நாம பொறுப்பா இல்லைன்னா, நம்ம ரெண்டு பேர் மேலேயும் நம்ம மகனும், மருமகளும் அக்கறை காட்டுவாங்கன்னு எப்படி எதிர்பார்க்க முடியும்? இனி மேலும் முழிச்சிக்கில்லேன்னா நாம தான் முட்டாளாயிடுவோம் போலிருக்கு,'' என்றார்.

இவருக்கு என்ன ஆயிற்று என்று, வியப்பாக பார்த்தாள் ஜெயா. அப்போது தான், ஆபீசிலிருந்து வந்து, வீட்டுக்குள் நுழைந்தான் ராகுல்.""ராகுல்...''""என்னப்பா?"நம்ம சம்பந்தி வீடு வரைக்கும் போயிட்டு வர்றேன். போன வாரம் சுஜியை, உன் மாமனார் வீட்டில் விட்டுட்டு வந்தே இல்லையா?'' ""ஆமாம். அதுக்கு இப்ப என்ன?''

""அங்க போய் சுஜியை, நம்ம வீட்டுக்குக் கூட்டிகிட்டு வரலாம்ன்னு பார்க்கறேன். அவ, இனிமேல் இருக்க வேண்டிய வீடு இது தான். அவளைச் சரியானபடி பார்த்துக்கறது தான், எங்களோட முதல் வேலை.''
அப்பாவின், இந்த திடீர் மன மாற்றத்திற்கு, என்ன காரணம் என்று, அவனுக்குத் தெரியவில்லை. எதுவாயிருந்தாலும், நல்லது நடந்தால் சரி என்று, நினைத்துக் கொண்டான்.


nandri : vaaramalar -எஸ். ராமசாமி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 23, 2013 10:49 am

ரேவதி wrote:தினமலரில் படித்தேன் பகிர்வுக்கு நன்றி அம்மா ஆனால் இது 
 தொடர்கதையா ?
ஆமாம் ரேவதி, ஆனால் இது தொடர்கதை இல்லை, ரொம்ப பெரியதாக இருந்ததால் பிரித்துப்போட்டேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 23, 2013 10:50 am

krishnaamma wrote:
ரேவதி wrote:தினமலரில் படித்தேன் பகிர்வுக்கு நன்றி அம்மா ஆனால் இது 
 தொடர்கதையா ?
 தொப்பி தொப்பி சிப்பு வருது சிப்பு வருது
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 23, 2013 10:58 am

ரேவதி wrote:
krishnaamma wrote:
ரேவதி wrote:தினமலரில் படித்தேன் பகிர்வுக்கு நன்றி அம்மா ஆனால் இது 
 தொடர்கதையா ?
 தொப்பி தொப்பி சிப்பு வருது சிப்பு வருது
நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 23, 2013 11:32 am

krishnaamma wrote:
ரேவதி wrote:தினமலரில் படித்தேன் பகிர்வுக்கு நன்றி அம்மா ஆனால் இது 
 தொடர்கதையா ?
ஆமாம் ரேவதி, ஆனால் இது தொடர்கதை இல்லை, ரொம்ப பெரியதாக இருந்ததால் பிரித்துப்போட்டேன் புன்னகை
சரி அம்மா அன்பு மலர் 



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 23, 2013 1:46 pm

அருமையான கதை பகிர்வுக்கு நன்றிமாபுன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 26, 2013 9:24 pm


பாலம்! N4qo8LkKQOS5HxZKIkGw+E_1382085001
-
பாலம்! 103459460 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக