புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும்! - பா.ஜ.க Poll_c10தமிழை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும்! - பா.ஜ.க Poll_m10தமிழை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும்! - பா.ஜ.க Poll_c10 
42 Posts - 63%
heezulia
தமிழை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும்! - பா.ஜ.க Poll_c10தமிழை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும்! - பா.ஜ.க Poll_m10தமிழை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும்! - பா.ஜ.க Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
தமிழை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும்! - பா.ஜ.க Poll_c10தமிழை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும்! - பா.ஜ.க Poll_m10தமிழை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும்! - பா.ஜ.க Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தமிழை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும்! - பா.ஜ.க Poll_c10தமிழை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும்! - பா.ஜ.க Poll_m10தமிழை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும்! - பா.ஜ.க Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும்! - பா.ஜ.க


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Sep 08, 2013 9:38 am

தமிழை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் மாநில நலன் சார்ந்த பிரச்சினைகளுக்காக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மாநில வாரியாக பிரிந்து குரல் கொடுக்கும் காட்சிகள் மட்டும் தான் அரங்கேறியிருக்கின்றன. ஆனால், முதன்முறையாக பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் தமிழை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என குரல் கொடுத்திருப்பதுடன், அம்மொழியை நாடெங்கும் பரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மாநிலங்களவையில் கடந்த 5ஆம் தேதி  உத்தர்காண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாரதீய ஜனதா கட்சி உறுப்பினரும், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அரசியல் சீடருமான தருண் விஜய் முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்திருக்கிறார். தமிழ் மொழியின் சிறப்புகளையெல்லாம் பட்டியலிட்ட அவர், தமிழை இந்தியாவின் தேசிய அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று குரல் கொடுத்திருக்கிறார். அத்துடன் நிற்காமல் அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும் தமிழுக்கு தேசிய இருக்கைகளை ஏற்படுத்த வேண்டும்; வட இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் தமிழின் சிறப்பை பரப்ப வேண்டும்; தமிழ் மொழியை பயிலும் வட இந்தியர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் வழங்கப்பட வேண்டும்; ஏழு கடல், ஏழு மலை தாண்டி சிறந்து விளங்கும் செம்மொழியான தமிழின் சிறப்பை வட இந்தியரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தருண் விஜய் வலியுறுத்தியிருக்கிறார். தமிழுக்காக தமிழ்நாட்டு உறுப்பினர்கள் குரல் கொடுத்தாலே அதை அனுமதிக்க வட இந்திய உறுப்பினர்கள் மறுத்து வந்த நிலையில் தமிழுக்காக வட இந்திய உறுப்பினர் ஒருவரே குரல் கொடுத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி  அளிக்கிறது. இதற்காக பா.ச.க. உறுப்பினர் தருண் விஜய்க்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

உலகின் மூத்த மொழியான தமிழின் சிறப்புகளை அழிக்க திட்டமிட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டும் தமிழ்நாட்டில்   தமிழ் மொழி குறித்த ஆராய்ச்சிகள் ஊக்குவிக்கப்படவில்லை ; செம்மொழி தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு தமிழே தெரியாத ஒருவரை இயக்குனராக நியமித்ததன் மூலம் அதன் பணிகள் முடக்கப்பட்டிருக்கின்றன; சென்னைக் கோட்டையில் செயல்பட்டு வந்த பாவேந்தர் செம்மொழி நூலகம் மூடப்பட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் குப்பைகளைப் போல குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

இதற்கெல்லாம் மேலாக, தமிழ்நாட்டில் தமிழை கட்டாயப் பாடமாகவும், பயிற்று மொழியாகவும் அறிவிக்க வேண்டிய தமிழக அரசு, அரசுக்கு சொந்தமான பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி முறையை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறது. தமிழை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசே தமிழை அழிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில், எங்கோ பிறந்த, இந்தி பேசும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தமிழுக்காக வாதாடியிருப்பது உண்மையிலேயே பெருமிதம் அளிக்கிறது. தமிழ் உலகமெல்லாம் போற்றப் படவேண்டும் என்ற தமிழர்களின் கனவு நனவாகி விட்டதாகவே தோன்றுகிறது.

இந்த மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும், இன்னொரு புறம் மத்திய அரசு தமிழுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சியால் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு  7 ஆண்டுகள் ஆன பிறகும் அந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கெல்லாம் காரணம் தமிழ் தேசிய மொழியாக அறிவிக்கப்படாதது தான். எனவே தமிழின் சிறப்பையும், தமிழர்களின்  உணர்வுகளையும் மதித்து தமிழை தேசிய மொழியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று  வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தமிழின் சிறப்புகளைக் குறிப்பிட்டு பேசிய பாஜக உறுப்பினர் தருண் விஜய்க்குத் திமுக தலைவர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும், மத்திய பல்கலைக் கழகங்களில் தமிழக்கு இருக்கைகள் ஏற்படுத்த வேண்டும் உள்பட தமிழின் சிறப்புகளைக் குறிப்பிட்டு மாநிலங்களவையில் தருண் விஜய் பேசினார்.உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினரான தருண் விஜய் பேசியது, தமிழக தலைவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மக்களவை மற்றும் மாநிலங்களவை நிகழ்வுகளைத் தொலைக்காட்சி வாயிலாக கருணாநிதி பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தமிழின் சிறப்புகள் தொடர்பாக தருண் விஜய் பேசியதையும் கருணாநிதி பார்த்துள்ளார்.உடனே மாநிலங்களவை திமுக உறுப்பினர் கே.பி.ராமலிங்கத்தைத் தொடர்பு கொண்டு கருணாநிதி பேசியுள்ளார்.வட இந்தியர் ஒருவர் செம்மொழி தகுதி பெற்ற தமிழின் சிறப்புகளைப் பாராட்டிப் பேசியதால் தான் (கருணாநிதி) மகிழ்ந்து போனதாகவும், தனது பாராட்டுகளை அவருக்குத் தெரிவிக்கும்படியும் கே.பி.ராமலிங்கத்திடம் கூறியுள்ளார்.

தருண் விஜயைச் சந்தித்து கே.பி.ராமலிங்கமும் கருணாநிதியின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தருணும் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Sep 08, 2013 10:14 am

தமிழர்களே பார்த்துக்கொள்ளுங்கள் வடநாட்டுக்காரருக்கு கூட நம்மொழியின் அருமை பெருமை தெரிந்து தமிழை தேசிய மொழியாக்கினால் இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் சிறப்பு என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும் போது இங்கே அரசியல், மேல்மட்டம் ,கீழ்மட்டம் என பிரிந்து கிடக்கும் நாம் முளை விட்ட இவர் குரலை முன்னிலை படுத்தி முளைக்க செய்வோமா அல்லது முளையை கிள்ளி தூரப்போட்டுவிட்டு வழக்கம்போல சினிமாவில் இன்று என்ன செய்தி பார்க்க போய்விடுவோமா?

நன்றி தருன் விஜய். வாழ்த்துகிறேன்

(விஜய் என்றதும் எம்மவர்கள நடிகர் விஜய் பத்தி தான் நினைப்பார்கள்)

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun Sep 08, 2013 10:20 am

அப்போ நான் "தேசிய மொழியான் பாண்டியன்" ஆகப்போகிறேன் ?



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Sep 08, 2013 10:23 am

செம்மொழியான் பாண்டியன் wrote:அப்போ நான் "தேசிய மொழியான் பாண்டியன்" ஆகப்போகிறேன் ?
உங்க பெயர் முதல்மொழி பாண்டியன் மறத்து விடாதீர்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 08, 2013 10:46 am

தமிழை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும்! - பா.ஜ.க 3838410834 
ஒட்டுமொத்த தமிழர்களின் சார்பில் எங்களின் நன்றியினையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம் தருண்விஜய் அவர்களே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 08, 2013 11:21 am

நன்றிகள் பல.

பாராளுமன்ற தேர்தலில் வாக்கு அள்ளும் பேச்சாக இல்லாமல் இருந்தால் மிக்க மகிழ்ச்சி.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 08, 2013 12:49 pm

யினியவன் wrote:நன்றிகள் பல.பாராளுமன்ற தேர்தலில் வாக்கு அள்ளும் பேச்சாக இல்லாமல் இருந்தால் மிக்க மகிழ்ச்சி.
அப்படியே இருந்தாலும் பரவாயில்லை அண்ணா ... இங்கிருக்குற காங்ரெஸ் அரசியல் வியாதிகள் கூட தமிழை என்னமோ பிடிக்காத பாவக்காய் போல நினைக்கும்போது எங்கேயோ ஒரு மூலையில் இருந்து ஒரு குரல் தமிழுக்காக ஒலிப்பதை கண்டிப்பாக வரவேற்க வேண்டும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக