புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 "போலியோ' இல்லாத இந்தியா எப்போது?   Poll_c10 "போலியோ' இல்லாத இந்தியா எப்போது?   Poll_m10 "போலியோ' இல்லாத இந்தியா எப்போது?   Poll_c10 
30 Posts - 50%
heezulia
 "போலியோ' இல்லாத இந்தியா எப்போது?   Poll_c10 "போலியோ' இல்லாத இந்தியா எப்போது?   Poll_m10 "போலியோ' இல்லாத இந்தியா எப்போது?   Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
 "போலியோ' இல்லாத இந்தியா எப்போது?   Poll_c10 "போலியோ' இல்லாத இந்தியா எப்போது?   Poll_m10 "போலியோ' இல்லாத இந்தியா எப்போது?   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 "போலியோ' இல்லாத இந்தியா எப்போது?   Poll_c10 "போலியோ' இல்லாத இந்தியா எப்போது?   Poll_m10 "போலியோ' இல்லாத இந்தியா எப்போது?   Poll_c10 
72 Posts - 57%
heezulia
 "போலியோ' இல்லாத இந்தியா எப்போது?   Poll_c10 "போலியோ' இல்லாத இந்தியா எப்போது?   Poll_m10 "போலியோ' இல்லாத இந்தியா எப்போது?   Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
 "போலியோ' இல்லாத இந்தியா எப்போது?   Poll_c10 "போலியோ' இல்லாத இந்தியா எப்போது?   Poll_m10 "போலியோ' இல்லாத இந்தியா எப்போது?   Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
 "போலியோ' இல்லாத இந்தியா எப்போது?   Poll_c10 "போலியோ' இல்லாத இந்தியா எப்போது?   Poll_m10 "போலியோ' இல்லாத இந்தியா எப்போது?   Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"போலியோ' இல்லாத இந்தியா எப்போது?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Jul 13, 2013 10:11 pm



மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள "பீட்' மாவட்டத்தில் பத்து மாதக் குழந்தை ஒன்று இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டு, கை-கால்கள் செயலிழந்து, லத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஜூன் மாதம் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவில், இளம்பிள்ளைவாதம் 2011-ஆம் ஆண்டில் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று இந்திய அரசாங்கம் அறிவித்துவிட்டது. என்றாலும், அடுத்த 3 ஆண்டுகளில், இந்தியாவில், இளம்பிள்ளைவாத நோயால் பாதிக்கப்பட்டவர் ஒருவர்கூட இல்லாத நிலைமை நீடிக்கும் நிலையில், உலகச் சுகாதார நிறுவனம், இந்தியா ஓர் இளம்பிள்ளைவாத நோய் இல்லாத நாடு என்னும் சான்றிதழை 2014-ஆம் ஆண்டில் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைக்கு, உலகில் இளம்பிள்ளைவாத நோய் பாதிப்புள்ள நாடுகள் பட்டியலில் இருந்து 2012-ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்தியா விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையில், இளம்பிள்ளைவாத நோய் மீண்டும் தலைதூக்கியுள்ளது என்னும் தகவல் அதிர்ச்சி தந்துள்ளது. காரணம், இந்தியாவில், இளம்பிள்ளைவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று அறிவித்த பிறகு, இதுவரை மொத்தம் 3 பேருக்கு இளம்பிள்ளைவாத நோய் தாக்கியுள்ளது. அதிலும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தடுப்புச் சொட்டுமருந்தினால் இந்நோய் வந்துள்ளது என்பதுதான் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்!

இளம்பிள்ளைவாதம் என்பது "போலியோ வைரஸ்' என்னும் கிருமிகளால் ஏற்படுகின்ற ஒரு வகைத் தொற்றுநோய். இது பெரும்பாலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கை, கால், தசை வளர்ச்சியைப் பாதித்து, அவற்றின் இயங்கும் சக்தியை இழக்கச் செய்கின்ற ஒரு வகை வாதநோய்.

இந்நோயை உண்டாக்கும் கிருமிகள், அசுத்தமான உணவு மற்றும் குடிநீர் மூலம் குடலுக்குள் செல்கின்றன. அங்கிருந்து ரத்தத்தின் வழியாக மூளைக்குச் சென்று, நரம்பு மண்டலத்தைப் பாதிக்கின்றன. முக்கியமாக, கால் தசைகளை இயக்குகின்ற நரம்புகளைப் பாதிப்பதால், இந்நோயாளிகளுக்குக் கால்கள் செயலிழந்து முடமாகின்றன. இந்நோய்க் கிருமிகள் நோயாளியின் மலத்தின் வழியாக வெளியேறி, மற்றவர்களுக்குப் பரவுகின்றன. பொதுவாக, இளம்பிள்ளைவாதம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. ஆனால், சில நேரங்களில் மட்டும் மரணத்தைக்கூட ஏற்படுத்துகிறது. அதாவது, சுவாசத்துக்கு உதவும் தசைகளை இது தாக்கும்போது, பாதிக்கப்பட்ட நபர் சுவாசிக்க முடியாமல் இறந்து விடுவார்.

சென்ற நூற்றாண்டில் உலக அளவில் லட்சக்கணக்கான பேர் இளம்பிள்ளைவாத நோயால் பாதிக்கப்பட்டு முடமாயினர். இந்த நிலைமை ஆண்டுதோறும் அதிகரித்து வந்தது. ஆகவே, இந்நோய்க்குக் கடிவாளம் போட வேண்டியது அவசியமாயிற்று. 1955-இல் இந்நோய்க்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு இந்நோயின் தாக்குதல் உலக அளவில் குறையத் தொடங்கிவிட்டது.

1957-இல் இதே நோய்க்குத் "தடுப்புச் சொட்டு மருந்தும்' கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, குழந்தைகளுக்கு முறையான வயதில், முறைப்படி தடுப்புச் சொட்டுமருந்து கொடுத்து வந்தால், இளம்பிள்ளைவாத நோயைத் தடுக்கலாம் எனும் விழிப்புணர்வை மக்கள் மத்தியில், இந்திய அரசாங்கம் உட்பட உலக நாடுகள் அனைத்தும் ஏற்படுத்தின.

இந்தியாவில் இப்போது இளம்பிள்ளைவாத நோயைத் தடுக்க இரண்டு வகைத் தடுப்பு மருந்துகள் உள்ளன. ஒன்று, இளம்பிள்ளைவாதத் தடுப்பூசி. மற்றொன்று, இளம்பிள்ளைவாதத் தடுப்புச் சொட்டுமருந்து. இன்றைய நடைமுறைப்படி, குழந்தை பிறந்ததும் இளம்பிள்ளைவாதத் தடுப்புச் சொட்டுமருந்து கொடுக்கப்பட வேண்டும். அதன்பிறகு, ஒன்றரை மாதம், இரண்டரை மாதம், மூன்றரை மாதம் முடிந்ததும் இளம்பிள்ளைவாதத் தடுப்பூசி போடப்பட வேண்டும். பிறகு, 6 மாதம், 9 மாதம் முடிந்ததும் இளம்பிள்ளைவாதத் தடுப்புச் சொட்டுமருந்து தரப்பட வேண்டும். அடுத்து, ஒன்றரை வயது முடிந்ததும் மீண்டும் இளம்பிள்ளைவாதத் தடுப்பூசி போடப்பட வேண்டும். கடைசியாக, 5 வயது முடிந்ததும் இளம்பிள்ளைவாதத் தடுப்புச் சொட்டுமருந்து தரப்பட வேண்டும்.

இது தவிர, இந்திய அரசாங்கம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் இளம்பிள்ளைவாதத் தடுப்புச் சொட்டுமருந்து சிறப்பு முகாம்களிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் தடுப்புச் சொட்டுமருந்து கொடுக்கப்பட வேண்டியது அவசியம்.

இவ்வாறு, இளம்பிள்ளைவாத நோயைத் தடுக்க தடுப்பூசி, தடுப்புச் சொட்டுமருந்து இரண்டுமே பயன்படுகின்றன என்றாலும், வாய்வழியாகத் தரப்படும் தடுப்புச் சொட்டுமருந்தினால், 25 லட்சம் பேரில் ஒருவருக்கு இளம்பிள்ளைவாதம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும், அதேநேரத்தில், இளம்பிள்ளைவாதத் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு இந்நோய் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இளம்பிள்ளைவாதத் தடுப்புச் சொட்டு மருந்தின் விலை குறைவு என்பதாலும், இதைக் குழந்தைகளுக்கு வாய்வழியாக எளிதில் தந்துவிடலாம் என்பதாலும், நம் அரசாங்கம் இளம்பிள்ளைவாதத் தடுப்புச் சொட்டு மருந்து கொடுப்பதையே விடாப்பிடியாகப் பின்பற்றச் சொல்கிறது. இதனால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றிக் கவலைப்படவில்லை.

ஆனால், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ச்சியடைந்த மேல்நாடுகளில் குழந்தைகளுக்கு இளம்பிள்ளைவாதத் தடுப்புச் சொட்டுமருந்து கொடுக்கப்படுவதில்லை. அங்கு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இளம்பிள்ளைவாதத் தடுப்பு ஊசிதான் போடுகிறார்கள். காரணம், இளம்பிள்ளைவாதத் தடுப்பு ஊசியில் "உயிரற்ற' போலியோ வைரஸ் கிருமிகள் உள்ளன. இவை குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை மட்டும் ஏற்படுத்துகின்றன. நோயை ஏற்படுத்துவதில்லை. ஆனால், இளம்பிள்ளைவாதத் தடுப்புச் சொட்டு மருந்தில் "உயிருள்ள', ஆனால் செயல்குறைந்த போலியோ வைரஸ் கிருமிகள் உள்ளன. இவை பலருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தருகின்றன. அதேநேரத்தில் ஒரு சிலருக்கு மட்டும் இளம்பிள்ளைவாத நோயை உண்டாக்குகின்றன. இதை நிரூபிக்கும் விதமாக உள்ளது, மகாராஷ்டிர மாநில நிகழ்வு. அங்கு பத்து மாதக் குழந்தைக்குக் கொடுக்கப்பட்ட இளம்பிள்ளைவாதத் தடுப்புச் சொட்டு மருந்துதான் அந்தக் குழந்தைக்கு இளம்பிள்ளைவாத நோயை ஏற்படுத்தியுள்ளது என்பது அக்குழந்தையின் மலத்தைப் பரிசோதித்தபோது உறுதியாகியுள்ளது.

அப்படியானால் - நோயைத் தடுக்க வேண்டிய மருந்தே நோயை உண்டாக்குகிறதென்றால் - அதற்கு என்ன காரணம்?

முறைப்படி தடுப்பூசிகள் போடப்படாத குழந்தைகளுக்கும், ஊட்டச்சத்து குறைந்துள்ள குழந்தைகளுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும். சில குழந்தைகளுக்குப் பிறவியிலேயே நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்திருக்கும். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு இளம்பிள்ளைவாதத் தடுப்புச் சொட்டுமருந்து கொடுக்கும்போது, அதில் உள்ள உயிருள்ள கிருமிகள் மரபணுமாற்றம் அடைந்து, வீரியம்பெற்று, இளம்பிள்ளைவாத நோயை உண்டாக்குகின்றன. அடுத்தபடியாக, தடுப்புமருந்துகளைப் பாதுகாப்பதில் சரியான வழிமுறைகளைக் கடைப்பிடிக்காவிட்டால், இருக்கின்ற தடுப்புமருந்துகளில் மிக எளிதில் கெட்டுப்போவது இளம்பிள்ளைவாதத் தடுப்புச் சொட்டுமருந்துதான். இப்படிக் கெட்டுப்போன சொட்டுமருந்தைக் குழந்தைக்குக் கொடுத்தாலும் அக்குழந்தைக்கு இளம்பிள்ளைவாதம் வரலாம்.

இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பாதிப்பேருக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளதாக கர்நாடகத்தில் உள்ள ஒரு தனியார் தன்னார்வ அமைப்பு அண்மையில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளது. இந்தியக் கிராமப்புறங்களில் இன்னும் தடுப்பூசிகள் பற்றிய விழிப்புணர்வு முழுமையாக இல்லை என்பதுதான் எதார்த்தம்.

இந்த அவலநிலை தமிழ்நாட்டில் இல்லை என்பது ஆறுதல் என்றாலும், வட இந்திய மாநிலங்களில் தடுப்பூசிகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் வாழும் ஆண்களும் பெண்களும் மிக அதிகம். தற்போது தமிழ்நாட்டில் வேலை செய்வதற்காக வட மாநிலங்களிலிருந்து ஆணும் பெண்ணும் குடும்பத்தோடு வருவது அதிகரித்து வருகிறது. இவர்கள் மூலமாக தமிழ்நாட்டில் வாழும் குழந்தைகளுக்கு இளம்பிள்ளைவாதம் வருவதற்கு வாய்ப்புண்டு.

சென்ற ஆண்டுவரை உலகச் சுகாதார நிறுவனத்திடமிருந்து "இந்தியா ஓர் இளம்பிள்ளைவாத நோய் இல்லாத நாடு' என்னும் சான்றிதழைப் பெறுவதற்கு, இம்மாதிரி தடுப்புச் சொட்டுமருந்தால் இளம்பிள்ளைவாதம் ஏற்படுவது தடையாக இருந்ததில்லை. ஆனால், இந்த ஆண்டிலிருந்து ஒரு நாட்டில் போலியோ வைரஸ் கிருமிகளாலும் சரி, தடுப்புச் சொட்டுமருந்தாலும் சரி குறைந்தது 3 ஆண்டுகளுக்கு இளம்பிள்ளைவாத நோய் ஒருவருக்குக்கூட ஏற்பட்டிருக்கக்கூடாது என்றும், அப்படியான நிலைமை இருந்தால் மட்டுமே அந்த நாடு உண்மையிலேயே இளம்பிள்ளைவாத நோயை முற்றிலும் ஒழித்துவிட்டது என்று ஒப்புக்கொள்ள முடியும் என்றும் உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆகவே, இந்தியக் குழந்தைகள் நல மருத்துவக்கழகம் ஆலோசனை சொல்வதுபோல், இந்தியக் குழந்தைகளுக்குத் தடுப்புச் சொட்டுமருந்து கொடுப்பதைப் படிப்படியாக நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக இளம்பிள்ளைவாதத் தடுப்பூசி மட்டுமே போடப்பட வேண்டும் என்பதைக் கொள்கை அளவில் இந்திய அரசாங்கம் உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தற்போது, உலக அளவில் இரண்டு மருந்து நிறுவனங்கள் மட்டுமே இளம்பிள்ளைவாத தடுப்பூசியைத் தயாரிக்கின்றன. மரபுசார் பொறியியல் எனும் நவீன தொழில்நுட்பத்தில் இத்தடுப்பூசி தயாரிக்கப்படுவதன் காரணமாக இத்தடுப்பூசியின் விலை அதிகமாக உள்ளது. இந்திய அரசாங்கம் இளம்பிள்ளைவாத தடுப்பூசியைத் தேசிய தடுப்பூசித் திட்டத்தில் இணைத்துவிட்டது என்றால், பல மருந்து நிறுவனங்கள் இத்தடுப்பூசியைத் தயாரித்துத் தருவதற்கு முன்வரும்.

தவிரவும், இளம்பிள்ளைவாதம் தடுப்பூசிகளைத் தயாரித்துப் பெறுவதற்கு வெளிநாட்டு மருந்து நிறுவனங்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதைவிட, கிண்டி, ஊட்டி போன்ற ஊர்களில் உள்ள மத்திய அரசின் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களை மேம்படுத்தி இத்தடுப்பூசி தயாரிக்கும் பொறுப்பை ஒப்படைக்கலாம். மேலும், இந்தியாவில் உள்ள தனியார் மருந்து நிறுவனங்களுக்கு வரிவிலக்கு தருவது மற்றும் அரசு மானியம் தருவது உள்ளிட்ட சலுகைகளை அளித்து, அதிக அளவில் இத்தடுப்பூசியைத் தயாரிக்க ஏற்பாடு செய்யலாம். வெளிநாட்டுத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் அறக்கட்டளைகளிடமிருந்தும் நிதி உதவி பெறலாம். இளம்பிள்ளை வாத நோயை, இளம்பிள்ளைவாத தடுப்பூசி மூலம் தடுக்கும் பணியை இந்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையும், இந்திய மருத்துவத்துறையும் இணைந்து கையாளுமேயானால், "போலியோ' இல்லாத இந்தியாவை விரைவிலேயே நம்மால் உருவாக்க முடியும், உருவாக்க வேண்டும்.
.
Dinamani



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 13, 2013 11:53 pm

போலி மருந்து தயாரிப்பாளர்களும் போலி அரசியல்வாதிகளும் இல்லாதபோது போலியோ ஒழிந்துவிடும் பவன்ராஜ்.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக