புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவின் கதை Poll_c10கருவின் கதை Poll_m10கருவின் கதை Poll_c10 
20 Posts - 65%
heezulia
கருவின் கதை Poll_c10கருவின் கதை Poll_m10கருவின் கதை Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவின் கதை Poll_c10கருவின் கதை Poll_m10கருவின் கதை Poll_c10 
62 Posts - 63%
heezulia
கருவின் கதை Poll_c10கருவின் கதை Poll_m10கருவின் கதை Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
கருவின் கதை Poll_c10கருவின் கதை Poll_m10கருவின் கதை Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கருவின் கதை Poll_c10கருவின் கதை Poll_m10கருவின் கதை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவின் கதை


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:03 pm

பெண்களே! நீங்கள் புதிதாக கர்ப்பம் தரித்தவரா? அல்லது கர்ப்பம் தரிக்க முயற்சி செய்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் இருக்கும். கர்ப்பம் தரித்த முதல் வாரம் தொடங்கி 9 மாதம் வரை குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும்? அதற்கேற்ப உடலில் நிகழும் மாற்றங்கள் எவை? என்பது போன்ற கேள்வி களுக்கு திருப்தியான விடை கிடைக்காமல் தவிக்கலாம். இதுபோன்ற உங்களின் சந்தேகங்களுக்கு தெள்ளத் தெளிவான பதில்களையும், விளக்கங்களையும், ஒவ்வொரு வாரத்திலும் கடைப்பிடிக்க வேண்டிய மருத்துவ முறைகள் பற்றியும் இந்தப் பகுதியில் காணலாம்.


1 முதல் 4 வாரம் வரை


சினையுற்ற கருமுட்டைகள் வளரத் தொடங்குகின்றன. அதனை சுற்றி தண்ணீரால் சூழப்பட்ட ஒரு இறுக்கமான உறை இருக்கும். அந்த உறை முழுவதும் நீர்மத்தால் நிரம்பத் தொடங்கும். இந்த உறைக்கு அம்னியோடிக் சேக் என்று பெயர். வளருகின்ற கருவுக்கு இந்த உறை குஷன் போல அமைகிறது

நச்சுக்கொடி வளருகிறது. இதனை பிளசன்டா என்று சொல்கிறோம். இந்த நச்சுக் கொடிதான் தாய்க்கும், சேய்க்கும் இடையே பாலமாக செயல்படுகிறது. அதாவது குழந்தைக்கு தேவையான சத்துப் பொருட்களை தாயிடமிருந்து சேய்க்கு கடத்துகிறது. அதுபோல சேயிடமிருந்து வேண்டாத கழிவுகளை தாய்க்கு கடத்தி வெளியே அனுப்பும் வேலையை செய்கிறது. பிளசன்டா உருண்டையான குழாய் போல காணப்படும்.
.

முகம் தோன்றுவதற்கான அறிகுறிகள் தென்படும். முதல் கட்டமாக கண்களுக்காக இரண்டு பெரிய கருப்பு வளையங்கள் உருவாகும். வாய், கீழ்த்தாடை, தொண்டை வளரத் தொடங்கும். ரத்த செல்கள் குறிப்பிட்ட வடிவத்தை அடைய தொடங்கி, ரத்த ஓட்டம் தொடங்கும்.

முதல் மாதத்தின் முடிவில் உங்கள் குழந்தை வெறும் 1_4 இஞ்ச் நீளம் மட்டுமே இருக்கும். அதாவது ஒரு நெல்லின் அளவை விட சிறியதாக இருக்கும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:24 pm

1-வது வாரம் மற்றும் 2-வது வாரம்

இந்த வாரத்தில் உங்கள் குழந்தை இன்னும் கனவாகவே இருக்கும். அதாவது கருவுற்று இருக்கிறீர்களா? இல்லையா? என்பதை உறுதியாக சொல்ல முடியாது. டாக்டரிடம் போனால், கடந்த மாத விலக்கு முடிந்த நாட்களில் இருந்து தற்போது எத்தனை நாட்கள் தள்ளிப் போய் இருக்கிறது? என்று கணக்கிடுவார். ஆனாலும் கருத்தரித்து இருக்கிறீர்களா? அல்லது வேறு பிரச்சினைகளால் மாத விலக்கு தள்ளிப் போகிறதா? என்பதை மருத்துவரால் உறுதியாக கணிக்க முடியாது.


தொடக்கத்தில் புது உயிராக உருவாகும் 20 பெண் கரு உயி- ரணுக்கள் முதிர்ச்சி அடைய தொடங்குவதோடு ஏற்கனவே சொன்ன அம்னியோடிக் சேக் என்ற நீர்ம பைகளில் சென்று சேரத் தொடங்கும். இப்போது இந்த நீர்ம பைகளை பாலிக்லெஸ் (follicles) என்று அழைக்கிறோம். இந்த பாலிக்லெஸ்களில் ஒன்று முதிர்ச்சி அடைந்து ஒரு கரு முட்டையை வெளியிடும். அந்த கருமுட்டை பாலோபியன் குழாய் வழியாக கீழ் நோக்கி சென்று கருவுறுதலுக்காக காத்திருக்கும். இவை அனைத்தும் அடுத்த மாத விலக்கு தொடங்குவதற்கு 14 நாட்களுக்கு முன்பே நடந்து முடிந்துவிடும். இதுதான் கருவுறுதலுக்கு ஏற்ற காலம். முதிர்ச்சி அடைந்த கரு உயிரணு விடுவிக்கப்பட்ட நிலையில் ஒரு கருமுட்டை கருவுறுதலுக்கு 12 முதல் 24 மணி நேரம் வரை மட்டும் போதும். இப்போது கருவுறவில்லையென்றால் கவலைப்பட வேண்டாம். ஒவ்வொரு மாதத்திலும் கருவுறுவதற்கு 20 சதவீத வாய்ப்பு மட்டுமே உள்ளது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:25 pm

இந்த வாரத்துக்கான டிப்ஸ்

இந்த நேரத்தில் நீங்கள் ஒரு நல்ல மகப்பேறு மருத்துவரை போய் பார்க்க வேண்டியது அவசியம். இதனை கருவுறுதலுக்கு முந்தைய விசிட் என்று சொல்லலாம். இந்த விசிட்டின் போது மரபியல் வியாதிகள், சுற்றுச் சூழல் மாசுபாடுகள், வாழ்க்கை முறையில் மாற்றம் போன்றவற்றால் ஏற்படும் ஆபத்துக்களை முன்கூட்டியே கண்டுபிடித்து விட முடியுமாதலால் ஆரோக்கியமான கருவுறுதல் மற்றும் குழந்தையை உறுதி செய்ய முடியும். முக்கியமாக தினந்தோறும் 0.4 மில்லிகிராம் முதல் 400 மில்லி கிராம் வரை பாலிக் அமிலம் உட்கொள்ள வேண்டும். கருத்தரிப்பதற்கு முன்பே பாலிக் அமிலம் எடுத்துக் கொள்வதால் குழந்தைக்கு ஏற்படும் ஸ்பின பைபிடா போன்ற நரம்புக் குழாய் குறைபாடுகள் வருவதை தவிர்க்க முடியும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:25 pm

3-வது வாரம்

உங்களுடைய கருமுட்டையும், உங்கள் பார்ட்னரின் விந்தணுவும் வெற்றிகரமாக ஒன்று சேரும் பட்சத்தில் முதிர்வுறாத கருவுயிர் உருவாக தொடங்கும். இந்த கருவுயிர் ஒரு குண்டூசி முனையின் அளவுதான் இருக்கும். இதனை கரு அல்லது குழந்தையின் தோற்றத்துடன் ஒப்பிட முடியாது. 100 செல்கள் கொண்ட ஒரு தொகுதியாக தான் காணப்படும். இந்த செல்கள் அதிவேகமாக பல்கி பெருகும். இந்த செல்களின் வெளிப்புற அடுக்குதான் பிற்காலத்தில் நஞ்சுக்கொடியாக மாறும். உட்புற அடுக்கு கருமுளை ஆகும்

,இந்த காலக் கட்டத்தில் உடலின் வெளிப்புறத்தில் எந்தவிதமான மாற்றமும் தென்படாது. அப்படி மாற்றம் தென்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது அதிகபட்சம் ஆகும். ஏனெனில் நீங்கள் மாத விலக்கு வரும் வாய்ப்பு இன்னும் தவறி விட வில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்;.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:25 pm

டிப்ஸ்

வீட்டில் இருந்தபடியே கர்ப்பம் தரித்திருக்கிறோமா, இல்லையா? என்பதை சிறுநீர் பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். அல்லது மருத்துவமனைக்கு சென்று ரத்தப் பரிசோதனை எடுக்க வேண்டும். வீட்டிலேயே சோதனை செய்வதானாலும் சரி, ஆய்வகத்தில் சோதனை செய்வதானாலும் சரி, அனைத்து வழிகாட்டு முறைகளையும் ஒழுங்காக பின்பற்ற வேண்டும். பயன்படுத்துகின்ற அனைத்து கருவிகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்;.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:26 pm

4-வது வாரம்

உங்களுடைய குழந்தை இப்போதும் மிகச்சிறியதாகவே இருக்கும். அளவில் சொல்ல வேண்டுமானால் 0.014 இஞ்ச் முதல் 0.04 இஞ்ச் நீளம் இருக்கும். கருவின் ஆதி உரு (embryo) இரண்டாவது வாரத்தில் இருந்த நிலையை விட்டு வெகு வேகமாக வளர்ச்சி அடையத் தொடங்கும். அதாவது 150 செல்களை வரை பெருகும். சிறுநீர்க் குழாய் வழியாக குழந்தை தேவையான சத்துக்களை பெற்று வேகமாக வளரத் தொடங்கும். குழந்தையின் உடலில் இருந்து வேண்டாத பொருட்கள் அனைத்தும் அதே வழியாக வெளியே கொண்டு செல்லப்படும். ஆதி உருவின் அடுக்குகள் உறுப்புகளுக்கு தகுந்தாற் போல சிறப்பு மாற்றங்களை பெற ஆரம்பிக்கும். இதில் வெளிப்புற அடுக்கு தான் நரம்பு மண்டலமாகவும், தோல், முடியாக மாறும். உட்புற அடுக்கில் ஜீரண உறுப்புகளும், சுவாச உறுப்புகளும் தோன்றும். நடுவில்; உள்ள அடுக்கில் இருந்துதான் பெரும்பாலான முக்கிய உறுப்புகள் தோன்றும். மண்டை ஓடு, எலும்புகள், தசைகள், குருத்தெலும்புகள், ரத்த ஓட்ட அமைப்புகள், சிறுநீரகங்கள், செக்ஸ் உறுப்புகள் போன்றவை அவற்றில் அடங்கும்;.

இந்த வாரத்தில் கூட உங்களுக்கு மாத விலக்கு வர வாய்ப்பு இருக்கிறது. அப்படி வரவில்லையென்றால் நீங்கள் கர்ப்பம் அடைந்திருக்கிறீர்கள் என்பதற்கான முதல் அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். உங்களுடைய கருப்பையில் ஆதி உரு மிகச் சிறிய புள்ளி போல தென்படுவதை பார்க்கலாம். ஆனாலும் கருத்தரித்த தற்கான எந்தவித அறிகுறியும் உங்களிடம் காண முடியாது. ஆனால் கருவையும் அதைச் சுற்றி திரவத்தையும் கொண்ட பை, திரவம் மற்றும் பிளசன்டா ஆகியவற்றால் நிரம்பத் தொடங்கும். இந்த நீர்மங்கள் மூலம் சிசுவுக்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் சத்துப் பொருட்கள் கொண்டு வரப்படும்;.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:26 pm

டிப்ஸ்

ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட முயற்சி செய்யுங்கள். பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருக்கும் சத்துணவுகளை அவசியம் சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு 6 முதல் 8 அவுன்ஸ் கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். அதற்காக நீங்கள் 2 பேருக்கும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இப்போதைக்கு கிடையாது. நீங்கள் சாதாரணமாக 300 கலோரி சத்துள்ள உணவை மட்டும் சாப்பிட்டால் போதுமானது. ஆரம்பத்தில் ஏற்படும் தலைசுற்றல், வாந்தி காரணமாக கொஞ்சமாகதான் சாப்பிட முடியும். இதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. நீங்கள் முன்பே சரியான முறையில் சாப்பிட்டு வந்திருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு குழந்தைக்கு என்ன தேவையோ அது தாரளமாக கிடைக்கும்;

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:27 pm

5-வது வாரம்

உங்களுடைய ஆதி உரு இப்போதும் பெரிதாக வளர்ந்திருக்காது. வெறும் 0.05 இஞ்ச் நீளம் மட்டுமே கொண்டிருக்கும். மற்றபடி இதயம், மூளை, தண்டுவடம், தசைகள், எலும்புகள் வளர்ச்சி அடைய ஆரம்பிக்கும். உங்கள் குழந்தை வளருவதற்கு தேவையான பொருட்களை கொண்டு வரும் பிளசன்டா, வெதுவெதுப்பான பாதுகாப்பான சூழலில் குழந்தை அங்குமிங்கும் அசைவதற்கு வசதி செய்து கொடுக்கும் அம்னியோடிக் சேக் என்ற நீர்மப்பை ஆகியவை இன்னும் உருவாகிக் கொண்டே இருக்கும்;.

உங்களுடைய உடலில் எந்தவிதமான குறிப்பிடத்தக்க மாற்றங்களும் தென்படவில்லை என்றாலும் நீங்கள் கர்ப்பம் அடைந்திருக்கிறீர்கள் என்று சந்தேகப்பட வாய்ப்பு இருக்கிறது. கர்ப்பம் அடையும் போது ஏற்படும் ஆரம்ப அறிகுறிகளான தலைசுற்றல், வாந்தி, உடம்பில் சோர்வு, மார்பகங்களில் வெடிப்பு தோன்றுதல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வுகள் தென்படும்;.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:27 pm

டிப்ஸ்

வருமுன் காப்பது சிறந்தது என்பதன் அடிப்படையில் ஆரோக்கிய மான கர்ப்பத்துக்கும், ஆரோக்கியமான குழந்தை உருவாகுவதற்கும் முன்னெச்சரிக்கை சிகிச்சைகள், சோதனைகள் மேற்கொள்வது மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய வாரம் இது. கர்ப்பம் தரித்திருக்கிறோமா, இல்லையா? என்று வலுவான சந்தேகம் இருக்கும் என்பதால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக ஒரு நல்ல மகப்பேறு மருத்துவ நிபுணரை சென்று பார்க்க வேண்டும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:28 pm

6-வது வாரம்

இந்த வாரத்தில் ஆதி உருவானது தவளைக்குஞ்சு தலைப்பிரட்டை போல காட்சி அளிக்கும். தலையில் இருந்து பின்பாகம் வரை 0.08 இஞ்ச் முதல் 0.16 இஞ்ச் வரை நீளம் இருக்கும். கருவின் நீளத்தை கணக்கிடும் போது தலை முதல் பின்பாகம் வரைதான் அடிக்கடி கணக்கிடப்படுகிறது. தலை முதல் கால்வரை பார்க்கப்படுவதில்லை. ஏனெனில் குழந்தைகள் கால்களை மடக்கி வைத்துக் கொண்டு இருப்பதால் கால் வரை நீளத்தை கணக்கிடுவது சாத்தியப்படாது என்பதால் இப்படி செய்கிறார்கள். கண்கள், மூட்டுக்கள் சிறிய மொட்டுக்கள் போல உருவாக தொடங்கும். இந்த வாரம் குழந்தை யின் வளர்ச்சியை பொறுத்தவரை மிகவும் முக்கியமான வாரம் ஆகும். ஏனெனில் இந்த நாட்களில் (17 முதல் 56 நாட்கள்வரை) கருவில் வளரும் குழந்தை பல்வேறு காரணிகளால் எளிதாக பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் மிகவும் ஜாக்கிரதையாக கண் காணிக்க வேண்டி இருக்கும். இந்நாட்களில் அல்ட்ரா சவுன்ட் மூலம் கருவியின் கருவின் இதயத்துடிப்பை கூட கண்டுபிடிக்க முடியும்.

உங்களுடைய உடல் எடை கொஞ்சம் அதிகரிக்கும். ஆனால் வாந்தி- மசக்கை போன்ற அறிகுறிகள் இருக்குமானால் உடல் எடை குறையும். இது சாதாரணமானது தான். அனாவசியமாக பயப்பட வேண்டிய தில்லை. இந்த வாரங்களில் உங்களுடைய உடம்பில் சில மாற்றங்கள் ஏற்படுவதை அனுபவ பூர்வமாக உணரலாம். மார்புப் பகுதியில் ஜாக்கெட் சற்று டைட் ஆகும். கால்கள், மார்பகங்களில் எடை அதிகரிக்கும். கருப்பை அளவில் மாற்றம் ஏற்படுவதன் எதிரொலியாக இடுப்பெலும்புக் கட்டில் மாற்றம் உண்டாகும். இதனை கைதேர்ந்த மருத்துவர்களும், ஏற்கனவே பிரசவ அனுபவம் உள்ள பெண்களும் எளிதாக கண்டுபிடித்து விட இயலும்.

டிப்ஸ்

நல்ல உணவு முறை, தூய்மையை பாதுகாக்கும் பழக்க வழக்கங்கள் ஆகியவைகளை உறுதி செய்ய வேண்டிய வாரம் இது. முதிர்வுறாத கருவில் இருக்கும் குழந்தை நல்ல முறையில் வளர்ச்சி அடைவதற்கு தேவையான சரியான உணவுகளையும், சத்துக்களை வழங்கும் வைட்டமின் மாத்திரைகளையும் தேவையான அளவுக்கு சாப்பிட வேண்டும். மத்திய நரம்பு மண்டலமாக பின்னாளில் மாறும் நரம்புக் குழாய் இந்த நாட்களில்தான் வேகமாக வளர்ச்சி அடையும் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். spina bifida போன்ற பயங்கர மான பிரச்சினை ஏற்படுவதை தடுப்பதற்கு தேவையான அளவு பாலிக் அமிலம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். ஒருவேளை புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கங்கள் இருந்தால் அவற்றை கட்டாயமாக உடனடியாக நிறுத்தி விட வேண்டும்;.

Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக