ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜ்யசபா சீட்டைப் பெற தே.மு.தி.க!!!

Go down

ராஜ்யசபா சீட்டைப் பெற தே.மு.தி.க!!! Empty ராஜ்யசபா சீட்டைப் பெற தே.மு.தி.க!!!

Post by அருண் Thu Jun 06, 2013 12:24 pm


தமிழகத்தில் நடைபெற இருக்கும் ராஜ்யசபா தேர்தலில், ஆறாவது சீட்டைப் பெற, விஜயகாந்தின், தே.மு.தி.க., கட்சி புது வியூகம் வகுத்து வருகிறது. தி.மு.க.,வை ஓரங்கட்டி விட்டு, மா.கம்யூ., ஆதரவுடன், வெற்றி பெற முடிவு செய்துள்ளது. இதற்காக, அந்த கட்சியுடன் ரகசிய பேச்சு வார்த்தையில், தே.மு.தி.க., தலைமை இறங்கி உள்ளது.

தமிழகத்தில், அடுத்த மாதம் காலியாக உள்ள, ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கான தேர்தல், இம்மாதம், 27ம் தேதி நடக்கிறது. ஐந்து எம்.பி., பதவிகளை, அ.தி.மு.க., கூட்டணி கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. மீதியுள்ள ஒரு எம்.பி., பதவியை யார் கைப்பற்றுவது என்பதில், தி.மு.க., - தே.மு.தி.க., இடையே போட்டி நிலவுகிறது.கனிமொழிக்கு மீண்டும் எம்.பி., பதவியை அளிக்க, தி.மு.க.,வும்; விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷûக்கு அப்பதவியை அளிக்க, தே.மு.தி.க.,வும் காய் நகர்த்தி வருகின்றன. சட்டசபையில், தி.மு.க.,விற்கு, 23 எம்.எல்.ஏ.,க்கள் பலம் உள்ளது. ஆறு அ.தி.மு.க., ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை கழித்தால், தே.மு.தி.க.,விற்கும், 23 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். வெற்றி பெற, ஒரு வேட்பாளருக்கு, 34 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை.ஐந்து ஓட்டுகளை வைத்துள்ள, காங்., ஆதரவை பெற்றுள்ள தி.மு.க.,வினர், மூன்று பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை பெற எடுத்த முயற்சிக்கு, அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்து விட்டார். இதனால், தே.மு.தி.க., ஆதரவு கிடைத்தால் மட்டுமே, தி.மு.க.,விற்கு ராஜ்யசபா எம்.பி., பதவி கிடைக்கும்.

லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டுமானால், தற்போது, தி.மு.க.,வே முன் வந்து ராஜ்யசபா எம்.பி., பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும் என, தே.மு.தி.க., தலைமை விரும்புகிறது. இதற்காக, ரகசியமாக, அக்கட்சி
காய்களை நகர்த்தி வருகிறது. அதே நேரத்தில், தி.மு.க.,வை ஒதுக்கி விட்டு, மற்ற கட்சிகளின் ஆதரவுடன் எம்.பி., பதவியை கைப்பற்றும் முயற்சியிலும், தே.மு.தி.க., இறங்கியுள்ளது. முதல் முயற்சியாக, மா.கம்யூ., ஆதரவை பெற, தே.மு.தி.க., தலைமை ரகசிய பேச்சு வார்த்தையை துவக்கி உள்ளது.மா.கம்யூ., கட்சிக்கு, 10 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். மா.கம்யூ.,வின் தமிழக நிர்வாகிகள் பலர், அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக உள்ளனர்.அதனால், டில்லியில் உள்ள அக்கட்சி நிர்வாகிகளிடம் பேசி, மாநில நிர்வாகிகளை சரி கட்டும் நடவடிக்கையை தே.மு.தி.க., துவக்கி உள்ளது. உள்ளாட்சி தேர்தலில், இவ்விரு கட்சிகளுக்கும் இடையே இருந்த பழைய நட்பை பயன்படுத்தி, இம்முயற்சி நடக்கிறது.

தே.மு.தி.க., ஆதரவு மா.கம்யூ., நிர்வாகிகள் சிலர், இதற்காக, அக்கட்சிக்கு வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். தே.மு.தி.க.,வின் இந்த முயற்சிக்கு பலன் கிடைக்குமா என்பது ஓரிரு நாளில் தெரிய வரும். மேலும், தே.மு.தி.க.,வின் இந்த முயற்சி வெற்றி பெற்றால், ஐந்தாவது எம்.பி.,யை கைப்பற்றும் நிலையில் உள்ள அ.தி.மு.க., கூட்டணிக்கும் சிக்கல் ஏற்படும்.

இந்திய கம்யூ., திணறல்:

ராஜ்யசபா தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு, ஆதரவு கேட்டு, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் குழு, முதல்வர் ஜெயலலிதாவை நாளை சந்திக்கும் என, தெரிகிறது. இதற்காக, முதல்வரிடம், இந்திய கம்யூனிஸ்ட் குழு, நேரம் கேட்டுள்ளது. ராஜ்யசபா எம்.பி., பதவிக் காலம் முடியும், இந்திய கம்யூ., தேசிய செயலர் ராஜாவை மீண்டும் தேர்வு செய்ய வேண்டும் என, இந்திய கம்யூ., கட்சி கோருகிறது. ராஜ்யசபா எம்.பி.,யைத் தேர்வு செய்யத் தேவையான, 34 எம்.எல்.ஏ.,க்களில், அக்கட்சியிடம், எட்டு எம்.எல்.ஏ.,க்களே உள்ளனர்.

மேலும், 26 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. மார்க்சிஸ்ட் கட்சியின், 10 எம்.எல்.ஏ.,க்களும், அ.தி.மு.க.,வின், 16 எம்.எல்.ஏ.,க்களும் ஆதரவளித்தால் தான், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெற்றி பெற முடியும்.

பிற கட்சிகளின் ஆதரவை கேட்பதற்காக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர், பரதன், துணை பொதுச் செயலர், சுதாகர் ரெட்டி, தமிழக செயலர், தா.பாண்டியன், தேசிய குழு உறுப்பினர், ஆர்.நல்லகண்ணு ஆகியோர் கொண்ட குழு, முதல்வர் ஜெயலலிதா மற்றும் மார்க்சிஸ்ட் தலைவர்களை வெள்ளிக்கிழமை சந்திக்க உள்ளது என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவு முடிவு தெரிந்த பின், இந்திய கம்யூ.,வின் ராஜ்யசபா வேட்பாளர் அறிவிக்கப்படுவார்' என, அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார்.

தினமலர்!

அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum