ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!!

5 posters

Go down

ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Empty ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!!

Post by sundaram77 Sun May 26, 2013 7:57 am



நண்பர்களே,
சங்க இலக்கியம் பெரும்பாலும் சாதாரணமக்களையும் அவர்களின் வாழ்க்கையையும் சித்தரிக்கும்
ஒப்பற்ற இலக்கியம் ஆகும் . சங்ககாலத்தின் துவக்க நிலையிலையே இயற்கையின் உன்னதம்
அறியப்பட்டு பெரிதும் போற்றப்பட்டது ; வணங்கப்பட்டது !

மேலும் நற்சிந்தனைகளும் உயர்வான நெறிமுறைகளும் அச்சமூகத்தில்
பொங்கும் ஊற்றென வெளிப்படலாயின ;
இவற்றின் காப்பாளார்களாக சான்றாண்மை மிக்க பெரும்புலவர்கள் அமைந்தனர் . அவர்கள் அள்ளித்தந்தக்கருத்துச் செல்வம் இன்றைய வாழ்க்கைக்கும் ஏற்றவையாய் இருப்பது வியப்புதான் !
இப்படியானப் பாடல்களில் சிலவற்றையேனும் சொல்லவேண்டும் எனும் என் அவாவே இவ்விடுகைக்குக் காரணம் !

இந்தப்பாடல் நமக்காகவே பாடப்பட்டுள்ளது போல் தெரிகிறது...!
நாம் எப்போதும் சொன்னதைச் 'செய்வதும்' , ' செய்வதை'ச் சொல்லும் சத்தியப்புத்திரர்கள் அல்லவா !
போகட்டும்...

இன்றைய நிலை என்ன ? எந்த அலுவலும் ஒரு சிபாரிசை நாடியே நடத்திட இயலும் எனும் அவலம் !
' திருமிகு சென்னைப்' பட்டணத்திற்கு அந்தக் காலத்தில் ஆம்னி பஸ்கள் எல்லாம் இல்லை. ஆனால் இப்போதோ
ஒரு நாளைக்கு சென்னை செல்லும் பயணிகளில் பாதிப்பேர் ஒருவரின்
பரிந்துரை ( சிபாரிசுதான் - வேறென்ன ? )க்கு
பயணிப்பவர்களே...! இவர்களில் பெரும்பாலோர்க்கு வெட்டியான அலைச்சலும் ,
பணச்செலவும் , துயரமும் தான் மிஞ்சும்!?
இவை யாவுக்கும் காரணம் இதுவெனப் பலர் அறியார் ! ஆனாலும் ஒரு தமிழ்ப் பெரும் புலவனுக்கு இது தெற்றென விளங்கியிருக்கிறது...
அவன் சொல்கிறான் : முடியாததை அல்லது முடிக்க மனம் இல்லாத ஒரு செய்கையினை முடிப்பேன் எனக் கூறிக்
கொள்ளலும் , முடியக்கூடியதை ஒருவன் வேண்டும்போது , அதை முடிக்க இயலாது என இறுக்கஞ் செய்வதும்
இரப்போரை - நம் காலத்தில் ஒரு சிபாரிசு எனக் கொள்வோமே - அலைக்கழிக்கச் செய்தலே பெருங் காரணம் ;
இச்செயல் அவர்களின் புகழைக் குறைக்கவே செய்யும் என்றும் மேலும் கூறுகின்றான் .

ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்
ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும்,
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது
இல்லென மறுத்தலும், இரண்டும், வல்லே;
இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர்
புகழ்குறை படூஉம்



அப்புலவன் இப்பாடலைத் துவங்கும்போதே நடைமுறைக்குப் பெரிதும் ஒவ்வும் ஞானபோதனையுடன் ஆரம்பிக்கிறான்.
' ஒருவரால் இயலக்கூடிய செயலை இகலும் எனப்பகர்தலும் ...அதேபோன்று , ஒருவர்க்கு இயலாத ஒரு
வினையை 'இயலாது இச்செயல்' என உண்மை நிலை உரைத்தலும் மேலாண்மைப் பண்புகளே ஆகும் என்கிறான் .

இப்பாடலை யாத்தவன் ஆவூர் மூலங்கிழார் என்பான் . இவ்வறவுரையை யாருக்குச் சொல்கிறான் தெரியுமா , நண்பர்களே - நன்மாறன் எனும் பாண்டிய மன்னனுக்கு...
அறவுரை இருக்கட்டும் ...
சான்றாண்மையும் பெருந்தன்மையும் மிக்க இவனின் இன்னொரு பக்கத்தைப் பார்ப்போமா !
அப்பாடலில் அவன் மேலும் சொல்கிறான் :
' என் போன்றோர்க்கு எக்காலத்திலும் உன் முன்னோர்கள் செய்ய நினைக்கா இவ்வலைக்கழிப்பை
நீ எனக்குச் செய்தலால் உனக்கு நேர்கின்ற பழி உன் மக்கள் மீது விழாது இருக்கட்டும் ; அவர்கள் நோயின்றி வாழட்டும் ' என நெஞ்சார வாழ்த்துகிறான் ;

அதனால்,
நோயிலர் ஆகநின் புதல்வர்


அம்மட்டோ ?!
தனக்கு ஈனாத நன்மாறனின்
எதிர்வரும் நாட்களும் சிறப்பாக இருக்க வேண்டுகிறான் !

சிறக்க, நின் நாளே!


எவ்வளவு உயரிய நெஞ்சம் ! எவ்வளவு உயரிய வாழ்க்கை நெறிமுறை அப்பெரும் புலவனுக்கு கைவரப்பெற்றிருக்கிறது !!
தன் தாழ் நிலையை முற்றிலும் மறந்து அடுத்தவன் - அதுவும் தனக்கான கௌரவத்தை மறுக்கும் ஒருவனது - உயர்நிலையை விரும்பும் அவனை எங்கே இருத்துவது !

தன் இல்லத்தைப் பற்றியும் இல்லக்கிழத்தியைப் பற்றியும் அவன் கூறுவது கல்லையும் உருக்கும் ;
ஆனால் ,அப்பாண்டிய மன்னனை இவ்வவலம் உருக்கவில்லையே...!?

யானும்,
வெயிலென முனியேன், பனியென மடியேன்,
கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை,
நாணலது இல்லாக் கற்பின் வாணுதல்
மெல்லியல் குறுமகள் உள்ளிச்
செல்வல்


வெளியே மழை கொட்டும்போது அம்மழை வீட்டிலுள்ளும் கொட்டுமாம் ; வெயிலையோ , பனியையோ அது தடுக்காதாம் ;
காற்றை மட்டிலும் இலேசாக அடைக்குமாம் ; கல்லில் ஆன அவ்வீட்டில் கல்லைப்போல் இறுக்கமாய் இருப்பது வறுமை மட்டும்தானாம் !!!

ஆயினும் அவன் இல்லக்கிழத்தி இறுகியவள் அல்லள் - மெல்லிய சாயல் உள்ளவளாக்கும் ; அவளின்
நெற்றியில் காணும் ஒளி அவளின் அறிவொளியாக்கும் ; மிக்க கற்புடையவள் ! அவளது ஒரேயொரு
அணிகலன் அவளது நாணம் மட்டுமே ; பெரும் பரிசிலோடு வருவேன் என நினைத்துக்கொண்டிருப்பாள் ;
அவளை உள்ளிச் செல்கிறேன் !
என முடிக்கிறான் தன் கவிதையை...!!

கொடிது , கொடிது வறுமை கொடிதென்றாள் , அவ்வை பிராட்டி ; ஏனெனில் , மனித மாண்புகளை முற்றாகத் தகர்க்க வல்லது அது !
ஆயினும் இத்தமிழ்ப் புலவனிடம் அவ்வறுமைகூட தோற்றோடுகிறதே...!
வறுமையின் வாட்டத்திலும் அவனின் மனப்பக்குவமும் மாண்பும் எண்ணி எண்ணி வியப்புறக்கூடியதல்லவா...

முழுப்பாடல் :

ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்
ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும்,
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது
இல்லென மறுத்தலும், இரண்டும், வல்லே;
இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர்
புகழ்குறை படூஉம் வாயில் அத்தை
அனைத்தா கியர், இனி; இதுவே எனைத்தும்
சேய்த்துக் காணாது கண்டனம் ; அதனால்,
நோயிலர் ஆகநின் புதல்வர்; யானும்,
வெயிலென முனியேன், பனியென மடியேன்,
கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை,
நாணலது இல்லாக் கற்பின் வாணுதல்
மெல்லியல் குறுமகள் உள்ளிச்
செல்வல் அத்தை ; சிறக்க, நின் நாளே!


ஒல்லுவது - முடிவது
அனைத்தாகியர் - அத்தன்மையில் சேர்ந்தது
குயின்றன்ன - இழைத்தாற் போன்று
முனியேன் - வெறுக்கிலேன்
வளி - காற்று
செல்வல் - செல்கிறேன்

அன்பன்,
சுந்தரம்




Last edited by sundaram77 on Sun Jun 02, 2013 7:30 am; edited 5 times in total
sundaram77
sundaram77
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Back to top Go down

ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Empty Re: ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun May 26, 2013 8:06 am

அருமையான விளக்கம்....சுந்தரம் அவர்களே. மிகவும் நன்று....நன்றி மகிழ்ச்சி

சுந்தரம் என்று பெயர் உள்ளவர்கள் எல்லோரும் பெரும்பாலும் சீரிய சிந்தனையாளர்களாய்த்தான் இருப்பார்கள் போல் தெரிகிறது அருமையிருக்கு ஆறுதல்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Empty Re: ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!!

Post by sundaram77 Sun May 26, 2013 8:24 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அருமையான விளக்கம்....சுந்தரம் அவர்களே. மிகவும் நன்று....நன்றி மகிழ்ச்சி

சுந்தரம் என்று பெயர் உள்ளவர்கள் எல்லோரும் பெரும்பாலும் சீரிய சிந்தனையாளர்களாய்த்தான் இருப்பார்கள் போல் தெரிகிறது அருமையிருக்கு ஆறுதல்

நன்றி சுந்தரராஜ் அவர்களே !
நான் இட்டு சில நொடிகளிலேயே உங்களின் பாராட்டு என்னை நெகிழச் செய்கிறது !
சுந்தரம் என்ற பெயரில் என்ன இருக்கிறது ...உங்களுக்குப் பொருந்தலாம் ...எனக்கல்ல !!
ஒரு உண்மையை இங்கு சொல்லிவிடுகிறேன் ; அடியேன் கணிதம் பயின்றவன் ; பயிற்றுவித்தவன் . என் கல்லூரி நாட்களில் இருந்தே நான் கொண்ட தமிழ்ப் பித்தே
என் இடுகைகளின் நதிமூலம் .
இதனை நான் ' சங்க இலக்கியம் ' பிரிவிலும் இடலாமா ..!?
இன்னும் கூடுதலானோரைப் போய்ச்சேரும் என்ற ஆசையே...
அன்புடன்,
சுந்தரம்
sundaram77
sundaram77
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Back to top Go down

ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Empty Re: ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!!

Post by சிவா Sun May 26, 2013 4:01 pm

sundaram77 wrote:
இதனை நான் ' சங்க இலக்கியம் ' பிரிவிலும் இடலாமா ..!?
இன்னும் கூடுதலானோரைப் போய்ச்சேரும் என்ற ஆசையே...
அன்புடன்,
சுந்தரம்

மகிழ்ச்சி, சங்க இலக்கியம் பகுதியிலேயே பதிவிடுங்கள்!


ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Empty Re: ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!!

Post by mohu Sun May 26, 2013 7:27 pm

அருமையான விளக்கம் ,
நன்றி
mohu
mohu
பண்பாளர்


பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012

http://www.dhuruvamwm.blogspot.com

Back to top Go down

ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Empty Re: ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!!

Post by Muthumohamed Sun May 26, 2013 7:56 pm

சங்க இலக்கிய பதிவு அருமையிருக்கு



ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Mஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Uஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Tஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Hஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Uஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Mஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Oஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Hஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Aஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Mஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Eஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Empty Re: ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum