ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்....

+2
ஆரூரன்
Powenraj
6 posters

Go down

ஈகரை மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்....

Post by Powenraj Wed May 22, 2013 7:26 am

பரபரப்பான வாழ்க்கையில் பொதுமக்களின் இன்றியமையாததேவை போக்குவரத்து வசதிதான். எல்லா இடங்களுக்கும் ரெயிலில், பஸ்களில் செல்லமுடியாதவர்கள், அவசர,அவசியத்துக்கு நாடிச்செல்வது ஆட்டோ ரிக்ஷாக்களைத்தான். வெளிநாடுகளில் இருந்து, வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்குள் காலடி எடுத்துவைக்கும் சுற்றுலாபயணிகள் என்றாலும் சரி, தமிழ்நாட்டுக்கு உள்ளேயே ஒரு ஊரில் இருந்து இன்னொருஊருக்கு செல்லும் மக்கள் என்றாலும் சரி, விமான நிலையம், ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் முதலில் தேடுவது ஆட்டோவைத்தான். ஆக, தமிழ்நாட்டு மண்ணில் முதல் அனுபவமே இவர்களுக்கெல்லாம் ஆட்டோக்கள்தான். ஆனால், அதுவே ஒரு கசப்பான அனுபவமாக மக்களுக்கு இப்போது ஆகிவிட்டது.
-
2012-ம் ஆண்டு கணக்குப்படி தமிழ்நாட்டில் 2 லட்சத்து 10 ஆயிரம் ஆட்டோரிக்ஷாக்களும், சென்னையில் 66 ஆயிரத்து 679 ஆட்டோக்களும் ஓடுகின்றன. இதில் எந்த ஆட்டோவிலும் மீட்டர் போட்டு ஓட்டுவது இல்லை. பிளாட்பாரத்தில் உள்ள கடைகளில் பேரம் பேசி பொருட்களை வாங்குவது போல் ஆட்டோ டிரைவர்கள் ஒரு கட்டணத்தைச் கேட்க, பயணிகள் ஒரு கட்டணதைச்சொல்ல, ஒருவழியாய், இருவருக்கும் இடையே பேரம் படிந்து, யார் திறமை உள்ளவர்களோ அவர்கள் சொல்வதே கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, கூப்பிட்ட எல்லா இடங்களுக்கும் ஆட்டோ வருவது இல்லை. லக்கேஜ் வைத்து இருந்தால் அதற்கு தனி கட்டணம். செல்லும் இடங்களைப்பொருத்து அதற்குஒரு கட்டணம் என்று ஆட்டோ ரிக்ஷா டிரைவர்கள் வைத்ததுதான் கட்டணம் என்பது இப்போதைய நடைமுறையாக உள்ளது.
-
தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் இப்போது எவ்வளவு? என்றால் பயணிகளுக்கும் தெரியாது. ஆட்டோ டிரைவர்களுக்கும் தெரியாது. எந்த ஆட்டோ டிரைவரும் மீட்டர் போட்டு ஓட்டுவது இல்லை. இதற்கு ஆட்டோ டிரைவர்களை மட்டும் குறை சொல்லி பயன் இல்லை. 7 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது உள்ள பெட்ரோல் விலையில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திலேயே இப்போதும் ஓட்ட சொன்னால், எப்படி ஓட்ட முடியும்? இது ஒரு நியாயமான கூற்றுஆகும்.
-
ஆட்டோ கட்டணத்தை உயர்த்தினால் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடுமோ என்ற அச்சமே தேவையில்லை. அப்படியொரு பயத்தின் காரணமாகத்தான் இதுவரை ஆட்டோ கட்டணத்தை உயர்த்தாமல் இருந்திருக்கிறார்கள். பொதுமக்கள் விவரம் தெரியாதவர்கள் அல்ல. பெட்ரோல் விலைக்கு ஏற்ப நாம் கட்டணம் கொடுக்கவேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆட்டோ ரிக்ஷா கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும். அனைத்து ஆட்டோக்களிலும் எலக்ட்ரானிக் மீட்டர் பொறுத்தப்பட்டு, அந்த கட்டணம்தான் வசூலிக்கப்படவேண்டும் என்று மக்கள் எவ்வளவோ குரல் எழுப்பியும், போக்குவரத்துத்துறை கவனிக்காமல் இருந்தது.
-
எந்த ஒரு கோரிக்கை என்றாலும் இப்போது பொதுமக்களுக்கு கடைசி புகலிடம் நீதிமன்றம்தான். அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த வக்கீல் எஸ்.வி.ராமமூர்த்தி சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த ஒரு வழக்கில், நீதிபதிகள், ஜூலை 6-ந் தேதிக்குள், தமிழக அரசு, ஆட்டோ கட்டணத்தை நிர்ணயித்து, அது நிர்ணயிக்கப்பட்ட தகவலை, தலைமைச் செயலாளர், வாக்குமூலமாக தாக்கல் செய்யவேண்டும்:: என்று உத்தரவிட்டுள்ளார்கள். இதுபொதுமக்களுக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் பெரு மகிழ்ச்சியை அளித்துள்ளது.இனி, இன்பத்தமிழ்நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகள் என்றாலும் சரி, தமிழக மக்கள் என்றாலும் சரி இனிமையான ஆட்டோ பயணத்தை மேற்கொள்வார்கள். மீட்டர் கட்டணத்தை கொடுத்து, நினைத்த இடத்துக்கு இனிமேல் போகலாம். இதுமட்டுமல்லாமல், சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தசுற்றுலா நட்பு ஆட்டோ ரிக்ஷா திட்டத்தையும் மீண்டும் அமல்படுத்த வேண்டும். மீட்டரில் கட்டணநிர்ணயம் மூலம் ஆட்டோ உங்கள் நண்பன் என்ற நிலையைஉருவாக்கிவிடலாம். ஆட்டோ ரிக்ஷா கட்டணத்தை இப்போது நிர்ணயிப்பது மட்டுமின்றி, பெட்ரோல் விலையில் மாற்றம் ஏற்படும்போது அதற்கு ஏற்ப கட்டணத்தைத் திருத்தி அமைக்கவும் போக்குவரத்துத்துறை ஏற்பாடு செய்யவேண்டும்.
-
தினந்தந்தி


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஈகரை Re: மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்....

Post by ஆரூரன் Wed May 22, 2013 10:02 am

எனக்கு ஒரு (சில) டவுட்டு!

- ஊருல இருக்குற எல்லா தொழிற்சாலையிலும் சிவப்புக்கொடி ஏத்தி "முன்னுக்கு" கொண்டுவர்றாங்களே நம்ம கம்யூனிஸ்ட்டுங்க ?!?!?! அவங்களோட கன்ட்ரோல்லதானெ இந்த ஆட்டோக்களெல்லாம் இருக்குது.

நல்லா முன்னேத்தலாமே!

- மும்பைக்கு போயிருந்தேன். ஆட்டோகாரன் 50 காசு சில்லறையைக் கூட தர்றான். மீட்டர் பக்காவா இருக்குது. எவ்வளவு ஆகும்னு கேட்டா "மீட்டர் சார்ஜ் கார்டு' எடுத்துக் கொடுக்கிறான். அங்க முடியும்போது இங்கு முடியாதா?
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

ஈகரை Re: மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்....

Post by சதாசிவம் Wed May 22, 2013 10:08 am

ஆரூரன் wrote:எனக்கு ஒரு (சில) டவுட்டு!

- ஊருல இருக்குற எல்லா தொழிற்சாலையிலும் சிவப்புக்கொடி ஏத்தி "முன்னுக்கு" கொண்டுவர்றாங்களே நம்ம கம்யூனிஸ்ட்டுங்க ?!?!?! அவங்களோட கன்ட்ரோல்லதானெ இந்த ஆட்டோக்களெல்லாம் இருக்குது.

நல்லா முன்னேத்தலாமே!

- மும்பைக்கு போயிருந்தேன். ஆட்டோகாரன் 50 காசு சில்லறையைக் கூட தர்றான். மீட்டர் பக்காவா இருக்குது. எவ்வளவு ஆகும்னு கேட்டா "மீட்டர் சார்ஜ் கார்டு' எடுத்துக் கொடுக்கிறான். அங்க முடியும்போது இங்கு முடியாதா?

கண்டிப்பாக முடியும்,

கண்டிப்புடன் ஆட்டோ பயன்படுத்தும் அனைவரும் மீட்டர் இருந்தால் தான் வருவேன், இல்லையேல் போய்ச் சேரு என்று தெளிவுடன் இருந்தால் இது நடைபெறும். மக்களின் போனாப் போகுது, சின்ன விஷயம் தானே என்ற தெளிவில்லாத நிலையே இது போன்ற தவறுகளுக்கு வழி வகுக்கிறது.


சதாசிவம்
மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்.... 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

ஈகரை Re: மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்....

Post by ராஜா Wed May 22, 2013 10:51 am

தமிழ்நாட்டில் அதுவும் சென்னையில் ஆட்டோ தொழிலில் ஈடுபடுபவர்கள் கட்டைபஞ்சாயத்து ரவுடிகளும் , போலீஸ் அதிகாரிகளும் தான். ஒவ்வொருவரும் 50 ஆட்டோக்களுக்கு குறையாமல் வைத்து கொண்டு பினாமி பெயரில் தொழில் பண்ணிக்கொண்டு இருப்பார்கள்.

நாமே மீட்டர் போட்டால் தான் வருவேன் என்று சொன்னாலும் வெகு சில !! உண்மையான ஆட்டோ ஓட்டுனர்கள் வேண்டுமானால் வருவார்கள். ஆனால் வாயில் பான்பராக்கை போட்டுகொண்டு போலீஸ்காரரின் ஆட்டோவை ஓட்டும் பார்ட்-டைம் ரவுடிகள் வரமாட்டார்கள் பதிலுக்கு நமக்கு காதில் கேட்கமுடியாத கெட்ட வார்த்தைகள் தான் பதிலாக வரும்.


ஆனால் அதே நேரத்தில் , மாஸ்டர் டிகிரி முடித்துவிட்டு நியாயமாக ஆட்டோ ஒட்டி சம்பாதிக்கும் ஓட்டுநர்களையும் நான் பார்த்திருக்கிறேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்....

Post by Muthumohamed Wed May 22, 2013 1:33 pm

சதாசிவம் wrote:
ஆரூரன் wrote:எனக்கு ஒரு (சில) டவுட்டு!

- ஊருல இருக்குற எல்லா தொழிற்சாலையிலும் சிவப்புக்கொடி ஏத்தி "முன்னுக்கு" கொண்டுவர்றாங்களே நம்ம கம்யூனிஸ்ட்டுங்க ?!?!?! அவங்களோட கன்ட்ரோல்லதானெ இந்த ஆட்டோக்களெல்லாம் இருக்குது.

நல்லா முன்னேத்தலாமே!

- மும்பைக்கு போயிருந்தேன். ஆட்டோகாரன் 50 காசு சில்லறையைக் கூட தர்றான். மீட்டர் பக்காவா இருக்குது. எவ்வளவு ஆகும்னு கேட்டா "மீட்டர் சார்ஜ் கார்டு' எடுத்துக் கொடுக்கிறான். அங்க முடியும்போது இங்கு முடியாதா?

கண்டிப்பாக முடியும்,

கண்டிப்புடன் ஆட்டோ பயன்படுத்தும் அனைவரும் மீட்டர் இருந்தால் தான் வருவேன், இல்லையேல் போய்ச் சேரு என்று தெளிவுடன் இருந்தால் இது நடைபெறும். மக்களின் போனாப் போகுது, சின்ன விஷயம் தானே என்ற தெளிவில்லாத நிலையே இது போன்ற தவறுகளுக்கு வழி வகுக்கிறது.

நிதர்சனமான உண்மை தான் அய்யா



மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்.... Mமீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்.... Uமீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்.... Tமீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்.... Hமீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்.... Uமீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்.... Mமீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்.... Oமீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்.... Hமீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்.... Aமீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்.... Mமீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்.... Eமீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்.... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்....

Post by பார்த்திபன் Wed May 22, 2013 6:53 pm

பெங்களூருவைக் காட்டிலும் சென்னையில் எரிபொருள் விலை குறைவு. ஆனால் கடந்தமுறை தமிழ்நாட்டு ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கும் விடயத்தில் பெங்களூரு ஆட்டோ கட்டணத்தின் அடிப்படையில் அமைக்கலாம் என்ற பேச்சு வந்தபோது, சென்னை ஆட்டோ ஓட்டிகள் கொதித்தெழுந்து விட்டார்கள். அது கொஞ்சம் கூட கட்டுப்படியாகாதாம்.
ஆனால் பெங்களூருவில் மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டும் பழக்கம் இன்னும் இருக்கிறது.(இப்போதுதான் நிறைய பேர் மீட்டர் போட மறுக்கிறார்கள். கேட்டால் சென்னையை உதாரணம் சொல்கிறார்கள்).
பெங்களூருவில் உங்களைவிட அதிக விலைக்கு டீசல் போடும் ஆட்டோகாரர்களுக்கு இந்த விலை கட்டுப்படியாகும்போது உங்களுக்குக் கட்டுப்படியாகாதா? என்று கேட்டால் பதில் இல்லை. அராஜகம் மற்றும் பேராசையின் உச்சம் இது. கோபம்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மாத வருமானம் ரூ.1,500 வரை உள்ளவர்கள் மாதம் ரூ.25 கட்டணத்தில் ரெயிலில் 150 கிலோ மீட்டர் பயணம் செய்யலாம்
» மீட்டர் வட்டி வசூலிப்பவர் மீது நடவடிக்கை: எஸ்.பி.யிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் புகார்
»  இனி சாதாரண கட்டணத்தில் எல்லா நேரத்திலும் பயணம் செய்யலாம்! புதிய கால் டாக்ஸி அறிமுகம்!
» சலுகைக் கட்டணத்தில் பயணம்… பிஸினஸ் கிளாஸுக்கு வசூல்: கிரண் பேடியின் முறைகேடுகள் அம்பலம்!
» அனுபவம் ஆட்டோ ரிக்ஷா பயணம் - இனியும் தாமதம் வேண்டாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum