ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு அதிகமாகட்டும்

5 posters

Go down

கொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு  அதிகமாகட்டும் Empty கொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு அதிகமாகட்டும்

Post by ராஜு சரவணன் Tue May 21, 2013 9:42 am

கொலை பயத்தைக் காட்டிலும் கொலஸ்ட் ரால் பயம் அதிகம் உள்ள காலம் இது.

'காலில் ஆணி குத்திடுச்சு’ என மருத்துவரிடம் போனால்கூட, சுகரும் கொலஸ்ட்ராலும் செக் பண்ணிருங்க’ என்பதுதான் மருத்துவரின் முதல் அறிவுரை. சர்க்கரை வியாதி இருக்கிறது என்று தெரிந்ததும் அதற்கான மருந்துகளுடன் கொசுறாக, ஒரு கொலஸ்ட்ரால் மருந்தும் கொடுப்பது மருத்துவ ஐதீகமாகிவருகிறது.

ஏன் இந்த கொலஸ்ட்ரால் பயம்? 'பின்னே, மாரடைப்பைத் தடுக்க கொலஸ்ட்ராலைக் குறைக்க வேணாமா? அதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வலி இல்லா மாரடைப்பு வந்துவிடுமே, அதைத் தடுக்கத்தான் கொலஸ்ட்ரால் குறைப்பு மருந்துகள்!’ என்று வாதாடும் மருத்துவர்கள் இன்று ஏராளம்.

கொலஸ்ட்ரால் பெரும்பாலும் உடலின் ஈரலால் உருவாக்கப்படும், உடலுக்குத் தேவையான ஒரு வஸ்து. அதை வஸ்தாது ரேஞ்சில் பார்க்க ஆரம்பித்தது சமீபத்தில்தான். காரணம், மாரடைப்பு நிகழும் 50 சதவிகித மக்களில் அதிக ரத்தக் கொழுப்பு இருந்ததைக் கண்டறிந்த மருத்துவ விஞ்ஞானம், 'கொலஸ்ட்ரால்தான் காரணம்’ என கட்டப்பஞ்சாயத்து பண்ணிவிட்டது. ஆனால், மீதி 50 சதவிகிதத்தினருக்கு கொஞ்சூண்டு கொலஸ்ட்ரால் இருந்ததைக் கவனிக்க மறந்தனரா அல்லது மறுத்தனரா என்பதுதான் இப்போது எழுந்துள்ள மிகப் பெரிய கேள்வி. இந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்கும் முன்னர், இந்த கொலஸ்ட்ரால் குறைக்கும் மருந்தில் 30 பில்லியன் டாலர் வணிகம் கொடி கட்டிப் பறக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

உடலில் கொலஸ்ட்ராலின் கால் பங்கு மூளையில் இருக்கிறது. நரம்பு உறையான myelin-லும் இன்னும் ஒவ்வொரு செல் உறையிலும் கொலஸ்ட்ரால் மிகவும் அவசியமான பொருள். அன்றாடம் இயல்பாக ரத்தக் குழாய் உட்சுவர்களில் நடக்கும் சிறுசிறு வெடிப்பைப் பட்டி பார்த்து பதமாகவைத்திருக்கும் முக்கிய வேலையை கொலஸ்ட்ரால் செய்கிறது. 'இவ்வளவு முக்கியமான ஒரு பொருளை மருந்து கொடுத்து மட்டுப்படுத்துவது எவ்வளவு முட்டாள்தனம்?’ என்கிறார் அமெரிக்காவின் பிரபல இதய மருத்துவர் டாக்டர் செண்டிரா. சமீபத்தில் சி.என்.என். வெளியிட்ட மருத்துவ ஆய்வு நூலின் ஆசிரியரான அவர் சொல்லும் உண்மைகள் கொஞ்சம் அதிரவைக்கின்றன.

உலகில் தேவையில்லாமல் பரிந்துரைக்கப்படும் மருந்துகளில் கொலஸ்ட்ரால் குறைக்கும் ஸ்டாட்டின்கள்தான் முதல் இடத்தில் இருக்கின்றன. இதனை உட்கொள்வதால் இளமையிலேயே கால் வலி, நரம்பு பலவீனம் போன்றவை ஏற்படுகிறது. சிலருக்குப் பயனளிப்பதுகூட, அது கொலஸ்ட்ராலைக் குறைப்பதால் அல்ல. அதன் anti-inflammatory செய்கையால்தான் என்கிறார் அவர். ஒரு புண்ணை ஆற்ற, நோயில் இருந்து நம்மைக் காக்க நடக்க வேண்டிய inflammation,, காரணம் இல்லாமல் நடக்கும்போதுதான் மாரடைப்பு முதல் கேன்சர் வரை வருகிறது என்பதுதான் தற்போதைய மருத்துவ விளக்கம். நாம் தவிர்க்க வேண்டியது எண்ணெயை அல்ல... டென்ஷனையும் சோம்பேறித்தனத்தையும் மட்டும்தான்.

மன இறுக்கமும் பரபரப்பும் அடிக்கடி நிகழும்போது இந்தத் தேவையற்ற inflammation நிகழும். ஒரு சின்ன உதாரணம், தெருவில் தனியாக நடந்துவரும்போது ஒரு நாய் விரட்டுகிறது என வைத்துக்கொள்ளுங்கள். அப்போது உடல் அதிவேகமாக அட்ரீனலையும், கார்டிசால் சுரப்புகளையும் சுரக்கும். பிற பணிகளை எல்லாம் ஒரு சில நிமிடங்கள் உடல் தள்ளிவைக்கும். நீங்கள் நாயிடம் இருந்து தப்பும் வரையோ அல்லது மருத்துவரைப் பார்த்து வாங்கிய நாய்க் கடிக்கு மருந்து எடுக்கும் வரையோ, இந்த பரபரப்புச் சுரப்பு நல்லபடியாக நடக்கும். ஆனால், நவீன வாழ்வில் நம்மை எப்போதுமே ஏதாவது ஒரு நாய் துரத்திக்கொண்டே இருக்கிறது. வேலையில், வீட்டில், சாலையில், சமூகத்தில் என எங்கும் நடக்கும் இந்தத் துரத்தலும் அதற்கான நமது எதிர்வினையும்தான் பெரும்பாலான மாரடைப்புகளுக்குக் காரணம். ஆகவே, மொத்தக் குற்றத்தையும் கொலஸ்ட்ரால் தலையில் சுமத்து வது சரியல்ல.

இந்தியாவிலும் இப்போது பல மூத்த இதய மருத்துவர்கள் இந்தக் கருத்தைப் பேசத் துவங்கிஉள்ளனர்.

டாக்டர் செண்டிரா கூடுதலாகச் சொன்ன கருத்து, 'தேங்காய் எண்ணெய் இதயத்துக்கு நல்லது’ என்பது. 'அதில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் 'அக்யூஸ்ட் நம்பர் ஒன்’னாக இன்றும் பலரால் பார்க்கப்படுவது அர்த்தமற்றது’ என்கிறார் அவர். இயற்கை தரும் கொழுப்பில் அதிகப் பிரச்னை எப்போதும் கிடையாது. மனிதன் உருவாக்கும் வனஸ்பதி, மார்ஜரைன் (பீட்சா, பர்கர், டோனட், பவ், ஹாட் டாக், சிப்ஸ் இன்னும் பல பேக்கரி ரொட்டி அயிட்டங்களில் சேர்க்கப்படுவது) முதலான எண்ணெயில்தான் trans fat எனும் மிகக் கெட்ட கொழுப்பு அதிகம். அதை தவிர்த்தே ஆக வேண்டும்.



''அப்படீன்னா... கொழுப்பு கவலை வேண்டாமா?'' என அவசர முடிவு தேவையில்லை. அக்கறை வேண்டும். காலை நடை கட்டாயம். நேரம் இல்லை எனக் கெஞ்சுவோர், வீட்டில் எப்போதோ ஒரு உத்வேகத்தில் வாங்கிப்போட்டு சில வருடங்களாக ஜட்டி, பனியன் காயப்போடும் ஸ்தலமாக மாறிவிட்ட 'ட்ரெட் மில்’ இயந்திரத்தைத் துடைத்து, எண்ணெய் போட்டு, தினமும் 25 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள். தினசரி உணவில் நிச்சயமாக வெந்தயம், மஞ்சள், பூண்டு, சீரகத்துக்கு இடம் கொடுங்கள். மாரடைப்பு அபாயத்தை தினசரி மூச்சுப் பயிற்சியால் தடுக்க முடியும் எனப் பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. எனவே, யோகா பக்கம் கொஞ்சம் கவனம் செலுத்தித்தான் பாருங்களேன்...

மிக முக்கியமாக மன இறுக்கத்தைக் களைய, வீட்டு வாசலில் செருப்பை விடும்போதே அலுவலகத்தையும் விட்டுவிடுங்கள். வீட்டில் உங்கள் காதுகளில் செல்போன் ஒலிக்க வேண்டாம். குழந்தையின் சிணுங்கலோ, அப்பாவின் முதுமைக் குரலோ ஒலிக்கட்டும். படுக்கையில் உங்கள் மடிக்குச் சொந்தக்காரர் மடிக்கணினி அல்ல. மனைவியோ, கணவரோ மட்டும்தான். ஏனென்றால், இச்சை தரும் காதலும் பச்சைத் தேநீரும் உங்கள் மனசைப் பாதுகாக்கும்; மாரடைப்பைத் தடுக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட பாரம்பரிய உண்மை!

நன்றி - தகவல் - மருத்துவர் கு.சிவராமன்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு  அதிகமாகட்டும் Empty Re: கொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு அதிகமாகட்டும்

Post by பூவன் Tue May 21, 2013 10:20 am

சிறப்பான பதிவு நண்பரே .. சூப்பருங்க

மிக முக்கியமாக மன இறுக்கத்தைக் களைய, வீட்டு வாசலில் செருப்பை விடும்போதே அலுவலகத்தையும் விட்டுவிடுங்கள்.

நான் எல்லாம் அலுவலகத்திலே அலுவலகத்தை விட்டு விடுவேன் ... சிரி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு  அதிகமாகட்டும் Empty Re: கொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு அதிகமாகட்டும்

Post by Muthumohamed Tue May 21, 2013 10:26 am

கொலஸ்ட்ரால் பற்றிய பதிவு சூப்பருங்க



கொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு  அதிகமாகட்டும் Mகொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு  அதிகமாகட்டும் Uகொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு  அதிகமாகட்டும் Tகொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு  அதிகமாகட்டும் Hகொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு  அதிகமாகட்டும் Uகொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு  அதிகமாகட்டும் Mகொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு  அதிகமாகட்டும் Oகொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு  அதிகமாகட்டும் Hகொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு  அதிகமாகட்டும் Aகொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு  அதிகமாகட்டும் Mகொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு  அதிகமாகட்டும் Eகொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு  அதிகமாகட்டும் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு  அதிகமாகட்டும் Empty Re: கொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு அதிகமாகட்டும்

Post by ராஜு சரவணன் Tue May 21, 2013 11:35 am

பூவன் wrote:சிறப்பான பதிவு நண்பரே .. சூப்பருங்க

மிக முக்கியமாக மன இறுக்கத்தைக் களைய, வீட்டு வாசலில் செருப்பை விடும்போதே அலுவலகத்தையும் விட்டுவிடுங்கள்.

நான் எல்லாம் அலுவலகத்திலே அலுவலகத்தை விட்டு விடுவேன் ... சிரி

எனக்கு அலுவலகம் பக்கத்திலே தான் பாஸ் வீடு. எங்க அலுவலகத்த விடுவது. புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு  அதிகமாகட்டும் Empty Re: கொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு அதிகமாகட்டும்

Post by பூவன் Tue May 21, 2013 11:36 am

எனக்கு அலுவலகம் பக்கத்திலே தான் பாஸ் வீடு. எங்க அலுவலகத்த விடுவது.

அதிர்ச்சி விடுங்க ஜாலி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு  அதிகமாகட்டும் Empty Re: கொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு அதிகமாகட்டும்

Post by ராஜு சரவணன் Tue May 21, 2013 11:37 am

எது வேலையவா ?
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு  அதிகமாகட்டும் Empty Re: கொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு அதிகமாகட்டும்

Post by பூவன் Tue May 21, 2013 11:41 am

ராஜு சரவணன் wrote:எது வேலையவா ?

டென்ஷன் விடுங்க நமக்கு எங்க இருந்தாலும் நாம் தான் வேலை பார்க்கணும் ஜாலி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு  அதிகமாகட்டும் Empty Re: கொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு அதிகமாகட்டும்

Post by பார்த்திபன் Tue May 21, 2013 3:03 pm

அருமையான விழிப்புணர்வுக் கட்டுரை! அருமையிருக்கு
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

கொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு  அதிகமாகட்டும் Empty Re: கொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு அதிகமாகட்டும்

Post by சிவா Tue May 21, 2013 4:18 pm

முழுதாக ஆராயப்பட வேண்டிய கட்டுரை! எனவே இதன் கருத்தை இப்பொழுது என்னால் முழுதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை!


கொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு  அதிகமாகட்டும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு  அதிகமாகட்டும் Empty Re: கொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு அதிகமாகட்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum