ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?

+2
யினியவன்
ஜாஹீதாபானு
6 posters

Go down

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? Empty இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?

Post by ஜாஹீதாபானு Mon May 13, 2013 1:40 pm

கேள்வி: அவன் என்ற சொல் நடைமுறையில் மரியாதைக் குறை வான வார்த்தையாகக் கருதப்படுகிற போது, முஸ்லிம்களாகிய நீங்கள் இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? இவ்வாறு முஸ்லிமல்லாத நண்பர்கள் கேட்கும் நியாயமான கேள்விக்கு என்ன பதில்? - அபூமுஜாஹிதீன், அஜ்மான், யு.ஏ.இ.



பதில்: இது மார்க்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்லை. மொழி, வரலாறு, பழக்க வழக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும். இது தமிழ் மொழி போன்ற சில மொழிகளுக்கு மட்டும் ஏற்படும் பிரச்சனை என்பது முதல் அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாய் மொழியான அரபு மொழியில் இத்தகைய நிலை ஏற்படாது. அவன்' என்று ஒருவனைக் குறிப்பதற்கு அரபு மொழியில் ஹூவ' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். அவர்கள்' என்று பலரைக் குறிப்பதற்கு ஹூம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள் ஒருவனைக் குறிக்கும் போது மரியாதைக்காக ஹூம்' (அவர்கள்) என்று கூறவே மாட்டார்கள். அல்லாஹ் தன்னைப் பற்றிக் குறிப்பிடும் போது ஹூவ' (அவன்) என்று தான் குர்ஆனில் பயன்படுத்தியுள்ளான்.

தன்னைப் பற்றிக் குறிப்பிடும் போது ஹூம்' (அவர்கள்) என்று அல்லாஹ் பயன்படுத்தவில்லை. அது போலவே தீயவர்களான இப்லீஸ், ஃபிர்அவ்ன் போன்றவர்களுக்கும் ஹூவ' (அவன்) என்று தான் இறைவன் பயன்படுத்தியுள்ளான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிக் குறிப்பிடுவதாக இருந்தாலும் ஹூவ'என்று என்று தான் கூற வேண்டும்.

மரியாதைக்காக ஒருமையைப் பன்மையாக மாற்றுவது அரபு மொழியில் கிடையாது. ஹூவ' (அவன்) என்ற குறிப்பிடும் போது 'பலரைப் பற்றிக் கூறப்படவில்லை. ஒரு நபரைப் பற்றி மட்டும் தான் கூறப்படுகிறது' என்று தான் அரபுகள் விளங்குவார்களே தவிர, அவர் மரியாதைக்குரியவரா அல்லவா என்பதை இவ்வார்த்தையிருந்து புரிந்து கொள்ள மாட்டார்கள். இதே போல் ஒருவரைக் குறிப்பிடுவதற்கு ஆங்கிலத்தில் ஐங் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது.

பலரைக் குறிப்பிடுவதற்கு பட்ங்ஹ் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது. ஒருவரைப் பற்றி குறிப்பிடும் போது மரியாதைக்காக பட்ங்ஹ் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவதில்லை. இன்னும் ஏராளமான மொழிகளிலும் இந்த நிலை தான் உள்ளது. தமிழ் மொழியிலும் ஆரம்ப காலத்தில் இந்த
நிலை தான் இருந்தது. அவன் என்பது ஒருவரைக் குறிக்கும். அவர் என்பது பலரைக் குறிக்கும். இது தான் தமிழ் இலக்கண விதி. நடைமுறையும் ஆரம்பத்தில் இப்படித் தான் இருந்தது.

ஒரு நபரைக் குறிப்பிடும் போது, பலரைக் குறிப்பிடுவதற் குரிய சொல்லை (அவர் என்ற பன்மைச் சொல்லை) மரியாதைக்காகப் பயன்படுத்துவது பிற்காலத்தில் வழக்கமானது. அதுவும் போதாதென்று பன்மையை மீண்டும் பன்மையாக்கி அவர்கள்' என்று பயன்படுத்துவதும் வழக்கத்திற்கு வந்தது.

மரியாதை கொடுக்காத போது அவன் எனவும், மரியாதை கொடுக்கப்பட வேண்டியவரை குறிப்பிடும் போது அவர் எனவும், அதிகம் மரியாதை கொடுக்கப்பட வேண்டியவரை அவர்கள் எனவும் பிற்காலத்தில் மாற்றி விட்டனர். மரியாதைப் பன்மை தமிழில் வழக்கத்திற்கு வருவதற்கு முன் வாழ்ந்தவர்கள் எவ்வளவு மரியாதைக்குரியவர்களாக இருந்தாலும் அவன்' என்றே குறிப்பிடப்பட்டனர். இன்றும் கூட அவ்வாறே குறிப்பிடப்படுகின்றனர். வள்ளுவன் சொன்னான் கம்பன் கூறுகிறான் ராமன் வில்லை ஒடித்தான் என்றெல்லாம் இன்றும் கூட குறிப்பிடப்படுவதைக் காணலாம்.

அது போலவே மரியாதைப் பன்மை தமிழில் வழக்கத்திற்கு வருவதற்கு முன், கடவுளைப் படர்க்கையாகக் குறிப்பிடும் போது அவன்' என்றும், முன்னிலையாகக் குறிப்பிடும் போது நீ' என்றும் தான் குறிப்பிடப்பட்டது. அதுவே இன்றும் தொடர்கிறது. மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வந்த பின்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமிழ் இலக்கியத்திற்கு அறிமுகமானதால் அவர்களைக் குறிப்பிடும் போது அவர்கள்' என மரியாதைப் பன்மையில் குறிப்பிட்டனர்.

கம்பன் சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு என்று கூற மாட்டோம். கருணாநிதிசொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு என்போம். மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வந்து விட்ட பின் கருணாநிதி வாழ்கிறார்; மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வராத காலத்தில் கம்பன் வாழ்ந்தான் என்பதே இதற்குக் காரணம். கடவுள் சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு அல்ல. நபிகள் நாயகத்தை அவ்வாறு கூறினால் அது மரியாதைக் குறைவு என்று கருதுகிறோம்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வந்த பின்பு தான் தமிழ் இலக்கியத்தில் இடம் பிடித்தார்கள் என்பதே இதற்குக் காரணம். அல்லாஹ்வை அவன் என்று குறிப்பிடுகின்ற முஸ்லிம்கள் மற்ற எந்தச் சமுதாயமும் கடவுளுக்கு அளிக்கும் மரியாதையை விட அதிக மரியாதை அளிப்பதைக் காணலாம். எவ்வளவு துன்பங்கள் ஏற்படும் போதும் கடவுளைப் பற்றி தரக்குறைவாகப் பேசாத ஒரே சமுதாயம் முஸ்லிம் சமுதாயம் தான்.


இன்னொரு காரணத்துக்காகவும் முஸ்லிம்கள் இறைவனை அவன்' என்று ஒருமையில் குறிப்பிடுகின்றனர். 'அல்லாஹ் கூறினார்கள்' எனக் கூறும் போது நிறைய அல்லாஹ் இருப்பது போன்ற தோற்றத்தை அது ஏற்படுத்தி விடும். வார்த்தையில் காட்டும் மரியாதையை விட ஏகத்துவம் மிகவும் முக்கியமானதாகும். அல்லாஹ்வை அவர்கள்' என்று கூறிப் பழகி விட்டால் நிறைய அல்லாஹ்கள் இருந்திருப்பார்களோ என்று எதிர்காலத்தில் நினைத்து விடலாம். அவ்வாறு நினைத்தால் இஸ்லாத்தின் அடிப்படையே வீழ்ந்து விடும். மரியாதையை விட ஒருவன் என்று கூறுவது தான் முக்கிய மானது என்பதால் அல்லாஹ்வை அவன்' என்று கூறுவதைத் தமிழ் கூறும் முஸ்லிம்கள் பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டுள்ளனர்.

அதே சமயத்தில் மார்க்கத்தில் இப்படி எந்தக் கட்டளையும் இல்லை. அல்லாஹ்வை அவர்' என்றோ நீங்கள்' என்றோ ஒருவர் கூறினால் மார்க்கத்தில் இது குற்றமாகாது. அவ்வாறு கூறும் உரிமை அவருக்கு உள்ளது. மரியாதையை மனதில் வைத்து ஓரிறைக் கொள்கைக்கு பங்கம் வராமல் அவன்' எனக் கூறுவதே சிறந்தது என்பது நமது கருத்தாகும்.


பீஜே எழுதிய அர்ததமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து


இந்தப் பதிவு யார் மனதையேனும் புண்படுத்தினால் நீக்கி விடலாம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? Empty Re: இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?

Post by யினியவன் Mon May 13, 2013 1:50 pm

நல்ல விளக்கம். சூப்பருங்க

கடவுளோடு அல்லது நமக்கு ரொம்ப குளோசா ஆயிட்டவங்கள கூட அவன் இவன் போடா வாடா ன்னு தான் சொல்லுவோம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? Empty Re: இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?

Post by ஜாஹீதாபானு Mon May 13, 2013 2:06 pm

யினியவன் wrote:நல்ல விளக்கம். சூப்பருங்க

கடவுளோடு அல்லது நமக்கு ரொம்ப குளோசா ஆயிட்டவங்கள கூட அவன் இவன் போடா வாடா ன்னு தான் சொல்லுவோம்.

நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? Empty Re: இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?

Post by Md_YaSaR Thu Jun 02, 2016 7:37 pm

Nalla Thelivaana Vilakkam Masha Allah
Md_YaSaR
Md_YaSaR
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 02/06/2016

Back to top Go down

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? Empty Re: இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?

Post by விமந்தனி Thu Jun 02, 2016 10:13 pm

மிக நல்ல பகிர்வு பானு.


இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? Empty Re: இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?

Post by விமந்தனி Thu Jun 02, 2016 10:19 pm

பானு wrote:முஸ்லிம்களாகிய நீங்கள் இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?
அவனின்றி அணுவும் அசையாது, எல்லாம் அவன் செயல்....
.
.
.
.
இந்துக்களும் (தமிழர்கள்) அப்படித்தான் சொல்கிறார்கள். யாரும் அந்த ஈசனை ஈசர் என்றோ சிவர் என்றோ சொல்வதில்லை. பக்தி மனதில் இருக்கையில் வார்த்தையில் 'ர்' விகுதி வந்தால் அது அன்னியமாகி விடுமே.....   :வணக்கம்: :வணக்கம்:


இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? Empty Re: இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?

Post by M.Jagadeesan Fri Jun 03, 2016 1:59 pm

உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன்? அவன்
மயர்வு அற மதி நலம் அருளினன் எவன்? அவன்
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே !

நம்மாழ்வார் , எப்படியெல்லாம் இறைவனை அர்ச்சனை செய்கிறார் பாருங்கள் ! எவ்வளவு
உரிமையோடு " எவன் , அவன் " என்று அழைக்கிறார் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? Empty Re: இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?

Post by ஸ்ரீரங்கா Fri Jun 03, 2016 2:40 pm

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? 3838410834 இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? 103459460


வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Back to top Go down

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? Empty Re: இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum