ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்..

+4
பாலாஜி
balakarthik
ரா.ரா3275
அகல்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்.. Empty எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்..

Post by அகல் Fri Apr 26, 2013 5:29 pm

IPL இல் சன் ரைசர் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் இலங்கை கிரிகெட் வீரர் குமர சங்ககராவை சென்னையில் நேற்று நடைபெற்ற IPL போட்டியில் விளையாட அனுமதிக்காததற்கு இன்று காலை எழுத்தாளர் ஞானி தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை இட்டார். அதைப் பற்றிய எனது பார்வையே இந்த கட்டுரைக்குக் காரணம். வாருங்கள் அது என்னவென்று பார்ப்போம்.

http://4.bp.blogspot.com/-D_s03ytTQTc/UXpl2i4s2oI/AAAAAAAACD0/DPO3NxanD7Q/s1600/GNANI+DOLLOR+NAGARAM.JPG

ஞானியின் முகநூல் ஸ்டேடஸ்....

இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாராவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ‘தமிழர்கள்’ என்று சொல்லிக் கொள்வோரின் ஆர்ப்பாட்டம் அறிந்து வருத்தப்படுகிறேன். 1983 இனக்கலவரத்தின்போது சங்ககாரா ஆறு வயது சிறுவன். அவரது தந்தையும் வழக்கறிஞருமான சிக்சானந்த சங்ககாரா தன் வீட்டில் 35 தமிழர்களுக்கு ( குறிப்பாக பல சிறுவர்களுக்கு) அடைக்கலம் கொடுத்து கலவர காலம் முழுவதும் அவர்களைக் காப்பாற்றியவர். ஈழத் தமிழர்களின் இன்றைய அசல் எதிரிகள், இங்கே சிங்களவர்களுக்கு எதிராக அர்த்தமற்ற ஆர்ப்பாட்டங்கள் செய்வோர்தான் என்ற என் கருத்து வலுப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

எனது கருத்தும் கேள்வியும்...

உங்களை நல்ல எழுத்தாளர் என்று சொல்லும் பலரிடம், நீங்கள் சூழலுக்கேற்ப பேசும் அரசியல் தந்திரவாதி, என்று சொல்லிய என் கருத்தும் இப்போது வலுப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஞானி அவர்களே ஒன்றை முதலில் புரிந்துகொள்ளுங்கள். இந்தத் தடை சங்ககராவிற்கு மட்டுமான தடையல்ல. ஒட்டுமொத்த இலங்கை வீரர்களுக்கான தடை. இலங்கை என்ற நாட்டிற்கான தடை. இந்தத் தடையால் இதுவரை என்ன நடந்துவிட்டது ? என்று நீங்கள் கேட்கலாம்.

இதுவரை தமிழக மாணவர்கள் எதற்காக போராடுகிறார்கள் என்ற காரணத்தை தமிழகம் தாண்டி வேறெந்த மாநில மக்களுக்கும் தெரிந்திருக்கவில்லை. இலங்கையில் 1,40,000+ தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. வெளிமாநிலத்திலும் நாடுகளிலும் வாழும் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்கள் அதற்கு சாட்சி.

இந்தத் தடைமூலம், மற்ற மாநில இளைஞர்கள் அதன் காரணத்தை தெரிந்துகொள்ள முற்படுகின்றனர். சக தமிழ் நண்பர்களிடம் கேட்கிறார்கள். இதைப் பற்றிய செய்தியும், தமிழர்களின் இனப்படுகொலையை செய்யப்பட்டதின் பின்னணியும் மற்றவருக்கும் புரியும்படியான ஒரு துருப்புச் சீட்டாக இது அமைகிறது. ஒரு வகையில் இது இலங்கை மீது சர்வதேச அழுத்தம் தேவை என்ற கருத்தை வலுப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியாமல் போனது வேடிக்கையாக இருக்கிறது.

அதோடு உங்கள் ஸ்டேடஸ் பார்க்கையில் எனக்கு சில கேள்விகள் மனதில் உதிக்கிறது. முடிந்தால் பதில் அளிக்க முயற்சிக்கவும்.

1. இது சங்ககராவிற்கு மட்டுமேயான தடை இல்லை என்பது உங்களுக்கும் தெரியும். சங்ககராவை நாங்கள் கெட்டவன் என்றும் சொல்லவில்லை. இருந்தும், ஒரு தகப்பன் நல்லவன் என்பதால் அவனுக்கு பிறக்கும் மகனும் நல்லவனாகவே இருப்பான் என்று நீங்கள் நினைப்பது மிகவும் குழந்தைத் தனமாகவே இருக்கிறது. நல்ல தந்தைக்கு பிறந்த மகன்கள் பலர் சுயநல வாதியாக, ஊதாரியாக, சமூகப் பொறுப்பில்லாமல் திரிவதை உங்கள் வீடு எனது வீட்டின் பக்கத்திலேயே பார்க்கலாம்.

உங்கள் கூற்றுப்படி, சக்ககரா நல்ல தந்தைக்குப் பிறந்ததால் நல்லவர், அவருக்கு தடைவிதிக்கக் கூடாது என்றால், தவறான தந்தைக்குப் பிறந்த மகனும் தவறானவன் என்று சொல்வீர்களா ?

2. இதேபோல் இனப்படுகொலை, நிறவெறியில் ஈடுப்பட்ட பல நாடுகளை சர்வேதேச அரங்கம் நிராகரித்திருப்பதற்கு தேவைக்கு அதிகமாக வரலாற்றுச் சான்றுகள் உள்ளது. உதாரணமாக, தென் ஆப்பிரிக்கா அணியை 22 வருடங்கள் சர்வேதேச கிரிக்கெட்டில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதையை உலகம் அறியும்.

இப்போது தமிழகத்தில் இலங்கை வீரர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை சங்ககராவிற்கு எதிரானதென்றால், தென் ஆப்பிரிக்காவிற்கு விதிக்கப்பட்ட தடை அந்த பதினோரு வீரர்களுக்கு மட்டுமே எதிரான தடை, நாட்டிற்கு எதிரானதல்ல என்பீர்களா ? இல்லை என்றால் உங்களின் நிலைப்பாடுதான் என்ன ?

3. தென் ஆபிரிக்க மக்கள் இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர்கள் அல்ல. இருந்தும் நிறவெறி பிடித்த அந்த நாட்டோடு இந்திய அணியை அந்த காலகட்டத்தில் விளையாட அனுமதிக்கவில்லை என்ற வரலாறு உங்களுக்குத் தெரியாதா ?

4. தமிழகத்தில் பல பிரச்சனைகள் இருக்கையில் ஈழப் பிரச்னையை இங்கு பேச வேண்டியதில்லை என்ற கண்ணோட்டத்தில் உங்களது கமெண்ட் பார்த்தேன். அப்படியானால் நீங்கள் இதுவரை எழுதியது தமிழகத்தைப் பற்றி மட்டும் தானா ? வேறு நாடுகளைப் பற்றி எழுதியதே இல்லையா ? சூழலுக்கேற்ற வேடம் ஏன் ?

5. மற்ற இலங்கை வீரகளுக்கான தடையைப் பற்றி வாய்திறக்காத நீங்கள், சன் ரைசர் சங்ககராவைப் பற்றிமட்டும் பேசுவது ஏன் ? (அவரின் அப்பா நல்லவர் என்பதாலா ? இல்லை சன் ரைசர் என்பதாலா ?). இதில் பெருத்த உள்நோக்கம் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் பெருமளவில் புதைந்து கிடக்கின்றன.

6. சில விதமான தடைகள் மூலமே, ஒரு நாட்டிற்கு அழுத்தம் கொடுத்து சர்வதேச அரங்கம் அடிபணிய வைக்க முடியும் என்பதை பாமரனும் அறிவான், இனபடுகொலை செய்த அரசை அடிபணியவைக்க இது துளியேனும் உதவும் என்பது உங்களுக்குத் தெரியாதா ?

7. ஈழத்தமிழர்களுக்காக போராடும் தமிழர்கள்தான் அவர்களுக்கு அசல் எதிரி என்றால், அவர்களுக்காக போராடாத நண்பர் நீங்கள் என்னத்தை வாரி வாரி நல்லது செய்துவிட்டீர்கள் ? அவர்களுக்கு எதிராக எழுதுவதா ? இல்லை உணர்வுகளை கொச்சைப் படுத்துவதா ?

8. ஈழத்தில் என்ன வேண்டும் என்பதை ஈழத்தமிழர்களே முடிவு செய்ய வேண்டும் தமிழர்கள் அல்ல என்று சொல்லும் நீங்கள், எத்தனை ஈழத்தமிழர்களின் கருத்துக்களை கேட்டிருக்கிறீர்கள் ? வெளிநாடுகளில் தனி ஈழம் வேண்டும் என்று போராடும் ஈழத்தமிழர்கள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா ? இல்லை அவர்களின் வாசகம் உங்களுக்கு புரியவில்லையா ?

9. இலங்கையில் எங்களுக்கு சாப்பிட மட்டுமே வாய்திறக்க அனுமதி உண்டு எனச் சொல்லும் ஈழத்தமிழர்களை உங்களுக்கு தெரியுமா ? எங்களுக்குத் தெரியும். வெட்டி வசனம் பேசுவதை விட்டுவிட்டு அவர்களோடு பேசிப்பாருங்கள், உங்களுக்கும் தெரியும்.

முறைப்படி இந்தியா முழுவதும் இலங்கை வீரர்களுக்கு தடை விதிக்க போராடி இருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தடை கோரியது தமிழர்கள் செய்த தவறு என்று இப்போது எனக்குப்படுகிறது.

பல ஆண்டுகளாக எழுதும் நீங்கள், சற்று அடிப்படையை ஆராய்ந்து எழுதுங்கள். அரசியல் விமர்சகர் என்றால் எதை வேண்டுமானாலும் எழுதலாம், இஷ்டத்திற்கு விமர்சிக்கலாம் என்பதல்ல. இனியேனும் உங்கள் உள்நோக்கத்தை ஓரம் கட்டிவிட்டு உண்மையை எழுத முயற்சி செய்யுங்கள்.

நன்றி !

Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/04/blog-post_26.html

அன்புடன்,
அகல்


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்.. Empty Re: எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்..

Post by ரா.ரா3275 Sat Apr 27, 2013 11:14 am

சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு
சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு
சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு
சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

அகல்...அருமை அருமை அருமை...
ஞானி போன்ற 'தான் மட்டுமே நடுவுநிலை அறிவாளிகள்' என்ற போர்வையில் இயங்கும்
பூனை மனிதர்கள் கண்மூடும்போது பூலோகமே இருண்டுவிடும் என்ற மனப்பான்மை நிலைக்கு மரண சவுக்கடி உங்கள் பதிவு. முத்தம்

மனதிற்கு மிக நெருக்கமாய் வாசித்தேன். அன்பு மலர்


எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்.. 224747944

எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்.. Rஎழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்.. Aஎழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்.. Emptyஎழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்.. Rஎழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்.. A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்.. Empty Re: எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்..

Post by balakarthik Sat Apr 27, 2013 11:18 am

ஏம்ப்பா அகல் இந்தாளு ஞானி பேச்செல்லாம் இவ்வுலோ சீரியஸாவா எடுத்துக்கறது அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்.. Empty Re: எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்..

Post by பாலாஜி Sat Apr 27, 2013 11:22 am

சிறப்பான பதிவு அகல் சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்.. Empty Re: எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்..

Post by ரா.ரா3275 Sat Apr 27, 2013 11:25 am

balakarthik wrote:ஏம்ப்பா அகல் இந்தாளு ஞானி பேச்செல்லாம் இவ்வுலோ சீரியஸாவா எடுத்துக்கறது அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

சிரி


எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்.. 224747944

எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்.. Rஎழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்.. Aஎழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்.. Emptyஎழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்.. Rஎழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்.. A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்.. Empty Re: எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்..

Post by ராஜா Sat Apr 27, 2013 11:25 am

பகிர்வுக்கு நன்றி அகல் , ஞானியின் கருத்துக்களில் ஒரு சில தவிர எனக்கும் உடன்பாடு இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்.. Empty Re: எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்..

Post by அகல் Thu May 02, 2013 9:01 pm

ரா.ரா3275 wrote: சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு
சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு
சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு
சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

அகல்...அருமை அருமை அருமை...
ஞானி போன்ற 'தான் மட்டுமே நடுவுநிலை அறிவாளிகள்' என்ற போர்வையில் இயங்கும்
பூனை மனிதர்கள் கண்மூடும்போது பூலோகமே இருண்டுவிடும் என்ற மனப்பான்மை நிலைக்கு மரண சவுக்கடி உங்கள் பதிவு. முத்தம்

மனதிற்கு மிக நெருக்கமாய் வாசித்தேன். அன்பு மலர்
மிக்க நன்றி ரா ரா அண்ணா ...


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்.. Empty Re: எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்..

Post by அகல் Thu May 02, 2013 9:02 pm

balakarthik wrote:ஏம்ப்பா அகல் இந்தாளு ஞானி பேச்செல்லாம் இவ்வுலோ சீரியஸாவா எடுத்துக்கறது அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
ஹா ஹா... சரிதான் பாஸ்... என்ன செய்ய ஒரு மூட்டப் பூச்சிதானேனு வீட்டுகுள்ளவிட்டா அது வீட்டையே கொளுத்த வச்சாலும் வைக்கலாம்.... புன்னகை


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்.. Empty Re: எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்..

Post by அகல் Thu May 02, 2013 9:03 pm

பாலாஜி wrote:சிறப்பான பதிவு அகல் சூப்பருங்க
நன்றிகள் பாலாஜி அண்ணே..


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்.. Empty Re: எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்..

Post by யினியவன் Thu May 02, 2013 9:11 pm

அகல் இந்தப்பதிவை அவர் பக்கத்தில் பதிவிட்டீர்களா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்.. Empty Re: எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum