ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார்.

+3
balakarthik
பாலாஜி
ராஜா
7 posters

Go down

பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார். Empty பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார்.

Post by ராஜா Wed Apr 17, 2013 10:59 am

பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார். 2527094e-61f9-4e16-b3ce-855c45a27019_S_secvpf

பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 92. மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவர் நேற்று தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.

அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். திரையிசையில் தங்களுக்கென்று தனிப்பாணியை உருவாக்கிய விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் மெல்லிசை மன்னர்கள் என்று போற்றப்பட்டனர்.

இருவரும் இணைந்து 700-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளனர். ராமமூர்த்தி, தனியாகவும் பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளார். கலை உலக சேவைக்காக தமிழக அரசின் கலைமாமணி விருதைப்பெற்றவர் ராமமூர்த்தி.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார். Empty Re: பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார்.

Post by பாலாஜி Wed Apr 17, 2013 11:02 am

அன்னாரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார். Empty Re: பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார்.

Post by balakarthik Wed Apr 17, 2013 11:06 am

அன்னாரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார். Empty இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி தனது 92 ஆவது வயதில் காலமானார்

Post by சிவா Wed Apr 17, 2013 1:09 pm

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/555982_10201171573956603_99778689_n.jpg

பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 92 .

மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.மெல்லிசை மன்னர்கள் என பெயர் பெற்ற விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் இணைந்து 700-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளனர். ராமமூர்த்தி, தனியாகவும் பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தேன் மழை, மறக்க முடியுமா, நான், தங்கச் சுரங்கம், காதல் ஜோதி, சங்கமம் ஆகிய படங்களில் இவர் இசையமைத்த பாடல்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. மிகச்சிறந்த வயலின் இசைக்கலைஞரான இவரது பங்களிப்பில் உருவான எங்கே நிம்மதி என்ற பாடல் நீடித்த புகழைப்பெற்ற பாடலாகும். கலை உலக சேவைக்காக தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றவர் ராமமூர்த்தி.


பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார். Empty Re: பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார்.

Post by சிவா Wed Apr 17, 2013 1:15 pm

கருணாநிதி இரங்கல்

மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,

மெல்லிசை மன்னர்கள், இரட்டையர்கள் என்று தமிழ்த் திரைப்பட உலகில் நீண்ட பல ஆண்டுக்காலமாக முத்திரை பதித்தவர்களில் ஒருவரான டி.கே. ராமமூர்த்தி மறைந்து விட்ட செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். 60 ஆண்டுக் கால நட்பு எனக்கும் அவருக்கும் உண்டு. “மறக்க முடியுமா” திரைப்படத்திற்கு நான் எழுதிய “காகித ஓடம்” என்று தொடங்கும் பாடலுக்கு அவர் இசை அமைத்த நாட்கள் எல்லாம் என் நினைவுக்கு வருகிறது. திரைப்பட உலகில் பல இரட்டையர்கள் உண்டு. இசையமைப்பாளர்களில் தமிழில் ஐம்பதாண்டு காலத்திற்கு மேலாகப் புகழ்க்கொடி நாட்டிய அந்த இரட்டையர்களில் ஒருவர் மறைந்து விட்டது தமிழ்த் திரைப்பட உலகிற்கு மிகப் பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத் தினருக்கும், எம்.எஸ். விசுவநாதன் அவர்களுக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.- என்று கூறியுள்ளார்.


பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார். Empty Re: பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார்.

Post by சிவா Wed Apr 17, 2013 1:15 pm

முதல்வர் இரங்கல்

பழம்பெரும் திரை இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,

பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளரும், மெல்லிசை மன்னர்களில் ஒருவருமான டி.கே. ராமமூர்த்தி மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து சொல்லொணாத் துயரமும், மிகுந்த மன வருத்தமும் அடைந்தேன்.

மிகச் சிறந்த வயலின் கலைஞரான ராமமூர்த்தி, இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் இணைந்து தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாள மொழிப் படங்களில் 700-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து முடிசூடா மன்னனாக விளங்கியவர். தனியாகவும் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். அவ்வாறு அவர் தனியாக இசையமைத்த “நான்” திரைப்படத்தில் வரும் “அம்மனோ சாமியோ” என்ற பாடல் மிகவும் பிரபலமாகி மக்களின் வரவேற்பை பெற்றது. அதில் நான் நடித்ததை வாழ்நாளில் மறக்க முடியாது.

இவர் இசையமைத்த பாடல்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் பசுமையாக நிலைத்து நிற்கின்றன. எம்.ஜி.ஆர். நடித்த “பணம் படைத்தவன்” திரைப்படத்தில் “கண்போன போக்கிலே கால் போகலாமா” என்ற பாடலில் வரும் வயலின் இசைக்குச் சொந்தக்காரர் டி.கே. ராமமூர்த்தி. “புதிய பறவை” படத்தில் இவரது பங்களிப்பில் உருவான “எங்கே நிம்மதி” என்ற பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். தமிழ் திரைப்பட இசையில் இவர் ஆற்றிய பணி மகத்தானது.

டி.கே.ராமமூர்த்தியின் மறைவு தமிழ்த் திரைப்படத் துறையினருக்கும், இசைத் துறையினருக்கும் மட்டுமல்லாமல் எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

- என்று கூறியுள்ளார்.


பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார். Empty Re: பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார்.

Post by பாலாஜி Wed Apr 17, 2013 1:18 pm

அன்னாரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார். Empty Re: பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார்.

Post by krishnaamma Wed Apr 17, 2013 1:46 pm

நல்ல இசை அமைப்பாளர் .....அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேன் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார். Empty Re: பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார்.

Post by மாணிக்கம் நடேசன் Wed Apr 17, 2013 4:00 pm

அன்னாரது ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுவோம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார். Empty Re: பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார்.

Post by mbalasaravanan Wed Apr 17, 2013 5:19 pm

சாந்தியடைய வேண்டுகிறேன்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார். Empty Re: பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum