ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம் ஒரு சுவாரஸ்யமான பதிவு.

+7
பூவன்
அசுரன்
பிஜிராமன்
Muthumohamed
Aathira
யினியவன்
ராஜு சரவணன்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Empty சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம் ஒரு சுவாரஸ்யமான பதிவு.

Post by ராஜு சரவணன் Wed Apr 03, 2013 2:42 pm

சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது.

அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே.

- 108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று
அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது.

- Armoured Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி(AVADI)

- chrome leather factory இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் இப்பகுதி
குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று.

- 17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது
இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக
இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது.

- மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது.

- தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது.

- சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது.

- முற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி.

- உருது வார்த்தையான che bage (six gardens என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்.

- சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்.


- சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம்
என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது.

- பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான்
பல்லாவரம்.

- சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக
இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது.

- நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே
இப்பகுதி தியாகராய நகர் என அழைக்கபடுகிறது(தி.நகர்)

- புரசை மரங்கள் மிகுதியாக இப்பகுதியில் இருந்ததால், இப்பகுதி
புரசைவாக்கம் ஆனது.

- அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி
நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று
காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டுவந்தார். அதனால் இவ்விடம்
சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும்
அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி
என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்.

- 17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி 'குணங்குடி
மஸ்தான் சாகிப்'. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள
தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என
அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை.

- முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது.
அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது.

- மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது.

- பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே
பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது.

- சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள்
இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது.

- திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று
அழைக்கப்படுகிறது.

- பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள்
பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர்
உருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணியாகி, தற்போது triplicane என
மாற்றம் கண்டுள்ளது.

- தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் வணிகம் செய்துவந்தார். மக்கள் மத்தியில்
மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே இப்பகுதி பாரிமுனை
(பாரிஸ் கார்னர்) ஆனது.

மின்னஞ்சல்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Empty Re: சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம் ஒரு சுவாரஸ்யமான பதிவு.

Post by யினியவன் Wed Apr 03, 2013 2:50 pm

பெயர் காரணம் சூப்பருங்க

பகிர்வு படா ஜோருங்கோ



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Empty Re: சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம் ஒரு சுவாரஸ்யமான பதிவு.

Post by Aathira Wed Apr 03, 2013 2:55 pm

ஆங்கிலேயர்கள் ஆளுகையின் போது பள்ளமாக இருந்த நகரம் என்னும் பொருளில் டவுன் டவுன் என்று அழைத்தப் பகுதி இப்போது டவுட்டன் என்று மருவியுள்ளது.

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி


சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Aசென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Aசென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Tசென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Hசென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Iசென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Rசென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Aசென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Empty Re: சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம் ஒரு சுவாரஸ்யமான பதிவு.

Post by Muthumohamed Wed Apr 03, 2013 2:57 pm

நல்ல பகிர்வு ராஜு அண்ணா



சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Mசென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Uசென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Tசென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Hசென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Uசென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Mசென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Oசென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Hசென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Aசென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Mசென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Eசென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Empty Re: சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம் ஒரு சுவாரஸ்யமான பதிவு.

Post by யினியவன் Wed Apr 03, 2013 2:58 pm

Aathira wrote:ஆங்கிலேயர்கள் ஆளுகையின் போது பள்ளமாக இருந்த நகரம் என்னும் பொருளில் டவுன் டவுன் என்று அழைத்தப் பகுதி இப்போது டவுட்டன் என்று மருவியுள்ளது.

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி
ஒ அப்படியா?

நா நெனச்சேன் அங்க இருந்தவங்களுக்கு டன் டன்னா டவுட் வரதாலன்னு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Empty Re: சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம் ஒரு சுவாரஸ்யமான பதிவு.

Post by பிஜிராமன் Wed Apr 03, 2013 3:05 pm

அருமை

எனக்கு தெரிந்த இரண்டு ஊர்களின் பெயர் காரணத்தை இத்துடன் இணைக்கிறேன்.....

கொத்தவால் சாவடி - இந்த ஊரின் பெயர் வரக் காரணம், முன்பு இந்த இடத்தில் சுங்கம் வசூலித்து உள்ளனர், அந்த சுங்க சாவடிக்கு பெயர் கோர்ட் வால் (Court Wall ) சாவடி...இதுவே மறுவி கொத்தவால் சாவடி என்றாகியுள்ளது

சாந்தோம் - சாவ் டோம் (Sao Tome) என்பது தான் மறுவி சாந்தோம் என்றாகி யுள்ளது.


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Empty Re: சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம் ஒரு சுவாரஸ்யமான பதிவு.

Post by அசுரன் Wed Apr 03, 2013 3:06 pm

பெயர் பொருத்தம் சூப்பர்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Empty Re: சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம் ஒரு சுவாரஸ்யமான பதிவு.

Post by Aathira Wed Apr 03, 2013 3:09 pm

பிஜிராமன் wrote:அருமை

எனக்கு தெரிந்த இரண்டு ஊர்களின் பெயர் காரணத்தை இத்துடன் இணைக்கிறேன்.....

கொத்தவால் சாவடி - இந்த ஊரின் பெயர் வரக் காரணம், முன்பு இந்த இடத்தில் சுங்கம் வசூலித்து உள்ளனர், அந்த சுங்க சாவடிக்கு பெயர் கோர்ட் வால் (Court Wall ) சாவடி...இதுவே மறுவி கொத்தவால் சாவடி என்றாகியுள்ளது

சாந்தோம் - சாவ் டோம் (Sao Tome) என்பது தான் மறுவி சாந்தோம் என்றாகி யுள்ளது.
ம்ம்ம் சிங்கக்குட்டி. அப்படியே கெல்லீஸ், மெளண்ட் எல்லாவற்றுக்கும் காரணம் உள்ளது. கொஞ்சம் கண்டுபிடித்துச் சொல்லுங்க


சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Aசென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Aசென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Tசென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Hசென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Iசென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Rசென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Aசென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Empty Re: சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம் ஒரு சுவாரஸ்யமான பதிவு.

Post by பிஜிராமன் Wed Apr 03, 2013 3:30 pm

ம்ம்ம் சிங்கக்குட்டி. அப்படியே கெல்லீஸ், மெளண்ட் எல்லாவற்றுக்கும் காரணம் உள்ளது. கொஞ்சம் கண்டுபிடித்துச் சொல்லுங்க


அம்மா,

மவுண்ட் ரோடு என பெயர் வரக் காரணம் - அந்த சாலை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து செயின்ட் தாமஸ் மவுண்ட் வரை உள்ளதால் தான் அங்கு இருந்து செயின்ட் தாமஸ் மவுண்ட் வரை உள்ள சாலையை மவுண்ட் ரோடு என அழைத்துள்ளனர், அந்த மவுண்ட் இற்கு செயின்ட் தாமஸ் மவுண்ட் என பெயர் வர காரணம் செயின்ட் தாமஸ் அவர்களை அங்கு தான் சிலுவையில அரைஞ்சிருகாங்க. ஏன் அவர அப்டி பன்னுனாங்கனு மறந்து போச்சு எதோ மக்களுக்கு பிடிக்காத மதக் கருத்தை சொல்லிருப்பாருனு நினைக்கிறன்.

கெல்லிஸ் கு தெரிந்தவர்கள் கூறட்டும்.


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Empty Re: சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம் ஒரு சுவாரஸ்யமான பதிவு.

Post by பூவன் Wed Apr 03, 2013 3:36 pm

சென்னை என்ற பெயருக்கும் அங்குள்ள பல இடங்களின் பெயருக்கும் அந்த பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? தொடர்ந்து படியுங்கள் :


சென்னை: -
சென்னபசவ நாயக்கன் என்பவன் தான் ஆண்ட பகுதியை 1600 வருடம் வாக்கில் வெறும் 10000 ரூபாய்க்கு கிழக்கிந்திய கம்பனியாரிடம் விற்றுவிட்டாராம். அவர் ஆண்ட பகுதியின் ஞாபகமாய சென்னப் பட்டணம் என்று அழைக்கப்பட்ட இடம் சென்னையாகி விட்டது.

மதராஸ் :-
முகமதியர்கள் பலர் இங்கே பள்ளிவாசல்களை நிறுவி தொழுகை நடத்தியபடி இருந்ததால், மதராஸே என்று அழைக்கப்பட்டது பின் நாளில் மெட்ராஸாகிவிட்டது.

கோடம்பாக்கம் -
கோடா பாக் : குதிரைகளும் அதை வளர்ப்பவர்களும் நிறைந்த பகுதியாய் இருந்த இடம் இன்று கோடம்பாக்கம் ஆகிவிட்டது.

மாம்பலம்:
மாம்லான் எனும் ஆங்கிலேய கலக்டெர் தங்கியிருந்த இடம் இன்று மாம்பலமாகி விட்டது

மற்றொரு பெயர் காரணம்

மா அம்பலம் :-
ஒரு காலத்தில் மிகப் பெரிய சிவாலயம் இங்கிருந்ததாகவும் அந்த ஆலயம் அடங்கிய பகுதி மா அம்பலம் என வழங்கப் பட்டதாம். இன்றைய க்ருஷ்ணவேணி திரையரங்கமே ஒரு கோவில் மிகப் பெரிய திருக்குளம் என்று சொல்லப்படுகிறது.

சைதாப்பேட்டை: சதயு புரம் :
சதயு எனும் மன்னன் 108 சிவாலயங்களை எழுப்பினான். அதில் 108வது சிவாலயம் சதயுபுரத்தில் இருக்கும் திருக்காரணீசன். சதயுபுரம் கூப்பிட வசதியாய் சைதாபேட்டையாகிவிட்டது.

கிண்டி:-
ப்ருங்கி முனிவர் தன்னுடைய தவக்காலத்தில் பூஜைக்கான கிண்டியைப் பொருத்திய இடம் இன்று கிண்டியாகிவிட்டது.

பரங்கிமலை:-
ப்ருங்கி முனிவர் வழிபட்ட சிவாலயம் இன்றும் பரங்கி மலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். சர்ச்சுக்குள் பழைய கோவிலின் கட்டமைப்புகள் இருப்பாதாகச் சொல்லப்படுகிறது (ஆய்வுக்குரியது).

சேத்துப்பட்டு:
மண்பாண்டம் செய்யும் குயவர்கள் அதற்கான மண்ணை இந்த பகுதியில் சேறு போல் குழைத்து மாட்டு வண்டியில் எடுத்துச் செல்வார்களாம். சேறு குழைத்த இடம் சேற்றுப்பட்டு.

எழுமூர்:
இன்றும் சென்னையில் சூர்யோதயம் விழும் முதலிடம் எழுமூர். பூமி மட்டத்தின் மேல் தளத்தில் உள்ளது. சூரியன் எழுமூர் இன்று எழும்பூராகிவிட்டது. இதற்கு சாட்சி, தாஸப்ரகாஷ் அருகிலுள்ள சந்தில் இருக்கும் சிவனுக்கு எழுமீஸ்வரர் என்று பெயர்.திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாய் பாடப்பட்ட திருத்தலம்.

ராயபுரம்:
பல்லவ மன்னனின் அமைச்சரவையில் இருந்த ராயர்களுக்கு ஒதுக்கப்பட்ட மானியம் ராயர்புரம் இன்று ராயபுரம்.

சிந்தாதரிப்பேட்டை: சின்ன தறிப் பேட்டை :
சிறிய அள்விலே தறி வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கான துணிகளை நெய்த பகுதி இன்று சிந்தாதரிப்பேட்டை.

தண்டையார்பேட்டை :
பல்லவ ராஜ்யத்தில் உள்ள கோவில்களின் கைங்கர்ய தொண்டை ப்ரதிபலன் பாராது ஆற்றி வந்த அன்பர்களுக்கான் குடியிருப்புக்கு கொடுக்கப் பட்ட மான்யம் தொண்டையார் புரி இன்று தண்டையார் பேட்டை.

புரசவாக்கம்: புரசைப் பாக்கம்:
புரசுக் காடுகள் மண்டியிருந்த பகுதி இன்று புரசவாக்கம்.

அமிஞ்சிகரை: அமைந்தகரை அமர்ந்தகரை:
ராமபிரான் (லவகுசர்களிடம் போரிட்டு வெற்றி காண முடியாமல்) அமர்ந்த கூவக்கரை இன்று அமைந்தகரை.

செங்கல்பட்டு: செங்கழுநீர் பட்டு :
செங்கழுநீர் பூக்கள் நிறைந்த குளங்களை நிறைய கொண்ட இடம் இன்று செங்கல்பட்டு.

பெருங்களத்தூர் :
பெரிய பெரிய குளங்களை தன்னகத்தே கொண்ட விவசாய பூமி இன்று பெரிய குளத்தூர் இன்று பெருங்களத்தூர்.

பல்லாவரம்:
பல்லவபுரம் பல்லவர்கள் எழுப்பிய சமணப்பள்ளிகள் உள்ள இடம். அனகாபுத்தூர் அருகே இன்றும் காணலாம்.

பரங்கிமலை:-
பரங்கியர் என ஆங்கிலேயருக்குப் பெயர். St. Thomas Mount -ல் பரங்கிப் படையினர் வசித்ததனால், அது பரங்கிமலையாக வழங்கியிருக்க வேண்டும். மற்றோர் உதாரணம் - பரங்கிப் பேட்டை - Porto Novo - போர்த்துகீசியரின் கோட்டை - கடலூர் அருகிலுள்ளது.

பூந்தமல்லி :
பூந்தண் எனும் அசுரனுக்கு ஈசன் மோக்ஷம் கொடுத்த இடம். மல்லிகாடுகள் அடர்ந்த இடம் இன்று பூந்தமல்லி.

நந்தம்பாக்கம்:
நந்தர்கள் எனும் வம்சத்தவர்கள் ராமனை வரவேற்ற இடம் இன்று நந்தம்பாக்கம்.

ராமாபுரம்:
ராமபிரான் தங்கிய மாஞ்சோலை இன்று ராமாபுரம்.

போரூர்:
முருகப்பெருமான் சூரஸம்ஹாரத்திற்கு ஆயுதம் எடுத்த இடம் இன்று போரூர்.

குன்றத்தூர்:
குன்றுகள் நிறைந்த ஊர் (சீக்கிரம் போய் பாருங்க... ஏன்னா மல முழுங்கிங்க புல் டோசரோட காலி பண்ணிக்கிட்டிருக்காங்க).

ஸ்ரீ பெரும் பூதூர்:
அசுர பூதங்கள் நிர்மாணம் பண்ணிய சிவாலயபுரி இன்று ஸ்ரீ பெரும்புதூர்.

சுங்குவார் சத்திரம்:
பழங்காலத்தில் வரி வசூலித்த டோல்கேட் இன்று சுங்குவார் சத்திரம்.

நந்தனம்:-
மா அம்பலத்திலிருந்த சிவாலய நந்தவனம் இருந்த இடம் இன்று நந்தனம். இங்கு பூமியுலிருந்து எடுக்கப்பட்ட நந்தி சிஐடி நகரில் இருக்கிறது.

யானை கவுணி :
திருக்குடை வைபவத்தில் எம்பெருமான் யானை போல் ஒடி தாண்டினாராம்.ஒரே சமயத்தில் இரண்டு ரயில்வே கேட்டுகள் போடப்பட்ட பெரிய நுழைவயில் யானகவுணி.

மாதவரம்:
மாதவன் ஈசனிடம் வரம் பெற்ற இடம் இன்று மாதவரம். புராதன சிவ்-விஷ்ணு ஆலயங்கள் உள்ளன.

வளசரவாக்கம்: வள்ளி சேர் பாக்கம்:
முருகப் பெருமான் வள்ளியோடு சேர்ந்த இடம் இன்று வளசரவாக்கம். இங்கு 7 அடி முருக விக்ரகம் பூமியிலிருந்து கிடைத்து கோவில் கட்டியிருக்கிறார்கள். எல்லா டீவி சீரியலிலும் தவறாமல் இக்கோவில் வரும்.

ஈக்காட்டுதாங்கல் :
ஈர காடு தங்கல் : வருடத்தில் ஒருநாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் இங்கே ராத்தங்கலுக்கு வருவார். எங்குபார்த்தாலும் தண்ணீரில் மிதக்கும் காட்டிற்கு நடுவே எம்பெருமானின் சோலை இருந்ததாம். இன்று ஸ்வாஹா.......

முகப்பேர் : மகப்பேர் ஸந்தானபுரி.

முகலிவாக்கம் :
கோவூர் ஈசனின் க்ரீடம் (மௌளி) இருந்த இடம் மௌளிவாக்கம் இன்று முகலிவாக்கம்.

அயனாவரம்: அயன் (ப்ரஹ்ம்மா பூசித்த சிவன்) வரம் பெற்ற இடம்.


இது zen தள தகவல்கள் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. Empty Re: சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம் ஒரு சுவாரஸ்யமான பதிவு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum