ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர்

4 posters

Go down

தலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Empty தலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர்

Post by Powenraj Sun Mar 31, 2013 9:29 pm

http://2.bp.blogspot.com/-nRtBTQpUafI/UVfygU-u3fI/AAAAAAAAAhE/4pOfqRhTqkc/s320/kamarajar.jpg
பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த நேரம். தலைமைச் செயலகத்திலிருந்து வெளியில் எங்கோ செல்வதற்காகஅவசரமாகப் புறப்படுகின்றார் காமராஜர்.
பிரதான சாலைக்கு வந்த அவருடைய கார் டிராபிக் போலிஸ் ஒருவரால் நிறுத்தப்படுகிறது. வேறு திசையிலிருந்து வரும் கார்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. கூட இருக்கும் உதவியாளர்கள் பதறுகிறார்கள். பாதுகாப்பு அதிகாரிகள் அந்த டிராபிக் போலிசிடம் என்னென்னமோ சைகை செய்து காட்டுகிறார்கள். பயனில்லை. மற்ற கார்கள் அனைத்தும் போனபின்னர்தான் இந்தக் காருக்கு மேலே செல்லஅனுமதி கிடைக்கிறது.
-
அடுத்தநாள்………. நேற்று தமதுகாரை வழியில் தடுத்து நிறுத்திய போலிஸ்காரரை அழைத்துவரச் சொல்கிறார் காமராஜர். குறிப்பிட்ட அந்தக் கான்ஸ்டபிள் அழைத்துவரப்படுகிறார். சரியான திட்டு காத்திருக்கிறது. தண்டனை காத்திருக்கிறது. குறைந்தபட்சம் பதவிக்குறைப்போ அல்லது வேறுஇடத்திற்கு டிரான்ஸ்பரோ இருக்கப்போகிறது என்று பலவாறாக பயமுறுத்தி அவரை முதல்வரைச் சந்திக்க அனுப்பிவைக்கிறார்கள்.
-
இவரும் பயந்துகொண்டே போய்ச்சந்திக்கிறார். எடுத்த எடுப்பிலேயே “ஐயா சந்தர்ப்பம் அப்படி ஆயிப்போச்சி. தெரியாம செஞ்சுட்டேன். மன்னிச்சுக்கங்க” என்று காமராஜரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடுகிறார்.
“மன்னிப்பெல்லாம் எதுக்குண்ணேன் ? நீ சரியாத்தானே நடந்துகிட்டே? ஒரு போலீஸ்காரன்னா அப்படித்தான் இருக்கணும். பதவியிலிருப்பவனுக்கு ஒரு ரூல் சாதாரண ஜனங்களுக்கு ஒரு ரூல்னெல்லாம் பார்க்கப்படாது. அவனவன் கடமையை அவனவன் ஒழுங்காச் செய்யணும். நீ அப்படித்தான் உன்னுடைய கடமையை ஒழுங்காச் செய்தே. எனக்குண்ணு நீ சலுகைகாட்டியிருந்தாத்தான் தப்பு. நீ உன்னுடைய கடமையை ஒழுங்காச் செய்தேன்னு பாராட்டறதுக்குத்தான் உன்னைக் கூப்பிட்டேன். கடமையில் ரொம்பக் கரெக்டா இருந்த இவருக்கு ஒரு பிரமோஷன் போடுங்க” என்று சொல்லி அவருக்கு ஒரு பதவி உயர்வும் தந்து அனுப்பிவைத்தாராம்.
-
நீண்ட நாட்களுக்கு முன்னர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றில் படித்த இந்தச் செய்தி இப்போது திடீரென்று நினைவு வந்தது.
நீங்கள் வேறு எந்தச் செய்திகளோடும் பொருத்திப்பார்த்துக்கொண்டால் நான் பொறுப்பல்ல.
ஒன்று மட்டும் நிச்சயம்.
தலைவர் என்பவர் இப்படித்தானே இருக்கவேண்டும்!
-
நன்றி-http://amudhavan.blogspot.com/2013/03/blog-post_31.html


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

தலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Empty Re: தலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Mar 31, 2013 9:47 pm

பதிவுக்கு நன்றி...பவன்ராஜ்...இதை நான் முன்பே கேள்விப்பட்டுள்ளேன் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Empty Re: தலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர்

Post by Aathira Sun Mar 31, 2013 11:13 pm

இன்று என்னவோ கர்ம வீரர் பற்றிய நிறைய செய்திகளைப் படித்தேன். மனம் நிறைவாக.. நல்ல வழிகாட்டி. அருமையிருக்கு பின்பற்றினால் நல்ல அரசியல் தலைவர்களாக மிளிரலாம். இப்போது இருக்கும் எந்தத் தலைவரால் முடியும்?


தலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Aதலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Aதலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Tதலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Hதலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Iதலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Rதலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Aதலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Empty Re: தலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர்

Post by யினியவன் Sun Mar 31, 2013 11:34 pm

இது ஏதோ பான்டசி படம் பார்த்ததுபோல் இருக்கு - ஒரு அரசியல்வாதி இப்படியான்னு!!!

அதான் நமக்கு குடுத்து வைக்கல - ரொம்ப நாள் ஆட்சி செய்ய முடியல அவரால.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Empty இது முகநூலில் படித்தது

Post by Aathira Sun Mar 31, 2013 11:46 pm

அது அந்தக்காலம்! அது அந்தக்காலம்!
காமராசர் அவர்கள் முதல்வராக இருந்த போது ஒரு முறை எண்ணெய் தேய்த்துக்கொண்டு குற்றால அருவிக்கு சென்றாராம்.அருவியில் யாரும் குளித்துக் கொண்டிருக்கவில்லையாம்.மக்கள் கூட்டம் ஒரு ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாம் காவலர்களால்.
ஏன்யா அருவி காலியா இருக்கு?சுற்றுலாப் பயணிகள் யாரும் குளிக்கலையா என்று காமராசர் கேட்டிருக்கிறார்.இல்லைங்கைய்யா,முக்கியஸ்தர்கள் வந்தால் எவரையும் அருவியில் குளிக்க அனுமதிப்பதில்லை,இது வெள்ளைக்காரன் காலத்திலிருந்து இருந்து வரும் வழக்கம் என்றார்களாம் அதிகாரிகள்.
உடனே காமராசர் கோபம் கொண்டு,அது வெள்ளைக்காரன் ஆட்சியா,இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சியைய்யா,மக்களுக்காகத்தாம் நாம் இருக்கிறோமே ஒழிய நமக்காக மக்கள் இல்லை,உடனே மக்களை அருவியில் குளிக்க அனுமதிங்கய்யா என்று சொல்லி விட்டு மக்களோடு மக்களாக இவரும் குளித்து மகிழ்ந்திருக்கிறார்.
அதனால்தானய்யா இவர் இன்றைக்கும் கர்மவீரர் காமராசர் என்று உள்ளன்போடு மக்களால் அழைக்கப்படுகிறார்.


தலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Aதலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Aதலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Tதலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Hதலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Iதலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Rதலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Aதலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Empty இதுவும் முகநூலில் படித்தது

Post by Aathira Sun Mar 31, 2013 11:47 pm

இப்படியும் ஒரு வரலாறு !

நிகழ்ச்சியோ, பொதுகூட்டமோ. மக்களோ , தொண்டர்களோ. காலணா அரையணா, ஒரு அணா என்று கொடுப்பார்கள். அதை வாங்கி பையில் போட்டுக்கொள்வார் காமராஜ். சென்னை வந்ததும் பார்ப்பார். ஐந்து ரூபாய், எட்டு ரூபாய் என்று சேர்ந்திருக்கும். அப்படியே கொண்டுபோய் தன் நண்பரான ‘இந்து’ பத்திரிகை முதலாளி கஸ்தூரி ரங்கனிடம் கொடுத்து விடுவார். நீண்ட காலம் அப்படி நீடித்தது.
ஒரு முறை ‘இந்து’ கஸ்தூரிரங்கன் அவர்கள
ுக்கு உடல்நிலை மோசமாகிவிட்டது. பிழைப்போமா என்பதில் அவருக்கே சந்தேகம். காமராஜரை அழைத்தார்.

“சாகும்போது கடன்காரனாக சாக விரும்பபவில்லை. உம் பணத்தை உம்மிடமே ஒப்படைத்துவிடத்தான் அழைத்தேன்” என்றார்/ பெருந்தலைவர் காமராஜருக்கு கண் கலங்கிப்போனது. ‘அப்படி ஏதும் நடக்காது. நீங்கள் நல்லபடியாக எழுந்து நிற்பீர்கள். கவலைப்பட வேண்டாம். இந்த பணத்திற்காகதான் வரச்சொன்னீர் எனத் தெரிந்திருந்தால் வந்திருக்க மாட்டேன்’ என்றார் .

சரி எத்தனை வருடம் எவ்வளவு தொகையை கொடுத்துவந்தீர் என்பதாவது ஞாபகம் இருக்கா? கணக்கு வைத்துள்ளீரா? என்றார்
.
அதெல்லாம் எனக்கு தெரியாது என்றார் காமராஜர்.
வீட்டில் உள்ளவர்களை அந்த நோட்டுபுத்தகத்தை எடுத்துவரச் சொன்னார். தேதிவாரியாக எழுதி வைத்திருந்ததை காட்டி, இத்தனை ஆண்டுகள் இவ்வளவு தொகை இருக்கிறது என்று கூறியதோடு, ‘எனக்கு ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் பணத்தை காமராஜரிடம் ஒப்படைத்துவிடுங்கள்’ என்றும் வீட்டில் உள்ளவர்களிடம் கூறினார்.

பிறகு காமராஜர் நினைப்பை போலவே கஸ்தூரிரங்கன் குணமாகி நல்லபடியாக எழுந்தார். வழக்கம் போலவே ஒருமுறை இருவரும் சந்தித்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ‘ஒரு நல்ல தொகை இருக்கிறது. வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். ஏதாவது செய்துகொள்ளுங்கள்’ என்றார் கஸ்தூரி ரங்கன். பதிலளித்த பெருந்தலைவர் ‘அந்த பணத்தை வைத்துகொண்டு நான் என்ன செய்யப் போகிறேன். சாப்பிடறது ரெண்டு இட்லி. அது எப்படியாவது எனக்கு கிடைச்சுடும். எனக்கெதற்கு பணம்’ என்று யோசித்தவர் ‘ஒன்று செய்யுங்கள் ஐய்யரே. உங்கள் கையாலேயே ஒரு இடத்தை வாங்கிகொடுங்கள்’ என்றார்.

கஸ்தூரிரங்கனுக்கு மகிழ்ச்சி. இடத்தையாவது கேட்டாரே என்று. அலைந்து பிடித்து ஒரு பெரிய நிலத்தை பார்த்தார். விலை பேசினார். காமராஜர் கொடுத்து வைத்திருந்ததைவிட கூடுதல் விலை. அந்த கூடுதல் பணத்தை ஐய்யரே போட்டு நிலத்தை பேசிமுடித்தார். பத்திரபதிவுக்கு பெருந்தலைவரை அழைத்தார். யார் பெயரில் என்று கேட்கிறார். உம் பெயரில்தான் என்ற பதிலை கேட்டு அலறிய காமராஜர் ‘எனக்கு எதற்கு காசு பணம், சொத்து எல்லாம். நானா சம்பாதிச்சேன். மக்கள் கொடுத்த காசு. என் பெயரில் வேண்டாம் என்கிறார். எவ்வளவு கூறியும் கேட்கவில்லை. கடைசியில் காமராஜர் சொன்னபடியே கட்சியின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

அந்த இடம்தான் இன்று அண்ணா சாலையில் உள்ள ‘தேனாம்பேட்டை காங்கிரஸ் கட்சி மைதானமும், பெரிய காமராஜர் அரங்கமும்‘. கோடி கோடியான மதிப்பில் சொத்து. யார் யாரோ, எப்படியெல்லாமோ அனுபவிக்கிறார்கள். அந்த பெருந்தலைவர் இறந்தபோதுகூட அவர் வாங்கிய இடத்தில் அடக்கம் செய்யப்படவில்லை. கிண்டியில் பொது இடத்தில், பொதுசொத்தாகவே அடக்கம் செய்யப்பட்டார்.

’தலைவர்கள்‘ எப்படியெல்லாம் இருந்திருக்கிறார்கள் பாருங்கள்.


தலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Aதலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Aதலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Tதலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Hதலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Iதலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Rதலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Aதலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Empty Re: தலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர்

Post by யினியவன் Sun Mar 31, 2013 11:53 pm

அவர் திருமணமும் செய்து கொள்ளவில்லை - அதையும் சொல்லுங்க ஆதிரா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Empty Re: தலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர்

Post by Aathira Mon Apr 01, 2013 12:04 am

யினியவன் wrote:அவர் திருமணமும் செய்து கொள்ளவில்லை - அதையும் சொல்லுங்க ஆதிரா.
இந்தத் திரியில் அவரைப் பற்றி நிறைவாகச் சொல்லலாம்.


தலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Aதலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Aதலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Tதலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Hதலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Iதலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Rதலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Aதலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Empty Re: தலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர்

Post by யினியவன் Mon Apr 01, 2013 12:09 am

ஓகே ஆதிரா.

நான் எதுக்கு சொன்னேன்னா - அதீத ஆசைகள் பல ரூபத்தில் வரும்.

அதுக்காக மணம் புரியாதவர்கள் அனைவரும் இவரைப் போலவான்னு கேட்டா - இல்லைன்னு தான் சொல்லணும்.

திருமணம் புரியாதவர் ஆனால் மக்கள் மனம் புரிந்தவர் இவர்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர் Empty Re: தலைவரென்றால் இவரன்றோ தலைவர்! - கர்ம வீரர் காமராசர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கர்ம வீரர் காமராசர்
» கர்ம வீரர் காமராஜர் - சிறுவர் பாடல்
» கர்ம யோகமே நம்முடைய வொர்க் எதிக்ஸ்! - ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைவர் என். வகுள்
» ஐசிசி தலைவர் பதவிக்கு முன்னாள் இந்திய வீரர் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வா?..
» லடாக்கில் உயிர் தியாகம் செய்த திபெத் வீரர்.. இறுதி சடங்கில் கலந்து கொண்ட பாஜக தலைவர்..!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum