ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க மண்ணில் தமிழ்க் கல்வி!

+5
ராஜா
யினியவன்
ஹர்ஷித்
ராஜு சரவணன்
சாமி
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அமெரிக்க மண்ணில்  தமிழ்க் கல்வி! Empty அமெரிக்க மண்ணில் தமிழ்க் கல்வி!

Post by சாமி Sun Mar 31, 2013 7:07 am

பிறந்த மண்ணுக்கும் புலம்பெயர்ந்த வெளிநாட்டுக்கும் பெருமை சேர்த்து வருகிறார் தமிழுணர்வுள்ள வெற்றிச்செல்வி இராசமாணிக்கம். எந்த நாட்டில் வாழ்ந்தாலும், தங்களின் பண்பாட்டையும், கலாசாரத்தையும், மொழி வளத்தையும் பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்கிற ஆர்வமும் சமுதாய நலனும், அவற்றை அடுத்தடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற ஆர்வமும் துடிப்பும் இவரிடம் அபரிமிதமாகவே இருக்கிறது.

÷திருமணம் முடித்து அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்து சென்ற வெற்றிச்செல்வி, "கலிஃபோர்னியா தமிழ்க் கழகம்' என்னும் அமைப்பை நிறுவி 15 ஆண்டு காலமாக, அங்கு வசிக்கும் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மட்டுமன்றி, வெளிநாட்டவருக்கும் தமிழ் பயிற்றுவிக்கிறார். இத்தமிழ்க் கழகம் இன்று உலகளாவிய அளவில் வெற்றிக்கொடி நாட்டி வருகிறது.

÷"யார் இந்தத் தமிழ்ப் பற்றுள்ள பெண்மணி? வாழச்சென்ற நாட்டில் தமிழ் வளர்க்கிறாரே!' என்று வியந்தபோது, முன்னாள் அமைச்சர் செ.மாதவனின் மகள் என்கிற கூடுதல் தகவல் மேலும் பிரமிப்பை ஏற்படுத்தியது. பணி நிமித்தமாக சென்னை வந்திருந்த அவரைச் சந்தித்து, வெற்றிச்செல்வியின் வெற்றியின் ரகசியத்தைப் பற்றி கேட்டபோது...

தாங்கள் உருவாக்கிய தமிழ்க் கழகத்தின் தோற்றம் எப்போது?
1998-ஆம் ஆண்டு 13 மாணவர்களுடன் தொடங்கப்பட்டதுதான் "கலிஃபோர்னியா தமிழ்க் கழகம்' (CALIFORNIA TAMIL ACADEMY). இன்று மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுடன் 400-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுடன் இயங்கி வருகிறது. முதன் முதலில் கூப்பர்டினோவில் தொடங்கி, தற்போது அமெரிக்காவில் மட்டுமே ஆறு கிளைகளையும் பதின்மூன்று இணைக்கல்வி நிறுவனங்களையும் இயக்கி வருகிறது. ÷தமிழ்மொழி, தமிழ்க்கலை, தமிழ்ப் பண்பாடு முதலானவற்றை அமெரிக்கவாழ் தமிழ்ப் பிஞ்சு நெஞ்சங்களில் பதிவு செய்ய வேண்டும் என்பதும், குழந்தைகள் தமிழ் கற்பதை ஒரு சுமையாக எண்ணக்கூடாது; மதிப்பெண்கள் மட்டுமே முக்கியமல்ல; அவர்களை நம் மொழியைப் புரிந்துகொள்ள வைப்பதும் நேசிக்க வைப்பதும்தான் எங்களின் குறிக்கோள். அதற்காகத் தொடங்கப்பட்டதுதான் இந்த அமைப்பு.

இப்படியொரு அமைப்பைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?
இதற்குக் காரணம் என் தந்தையும் அவருடைய நெருங்கிய நண்பர்களும்தான். புலம்பெயர்ந்து வாழச்சென்றவர்கள் தங்களின் தாய்மொழியை மறந்துவிடக் கூடாது என்பதற்கும், அவர்களின் பிள்ளைகள் தங்கள் தாய்மொழியை அறிந்து கொள்ளாமல் இருந்துவிடக் கூடாது என்பதற்காகவும்தான் இது உருவாக்கப்பட்டது.

பாடத்திட்ட முறைகள் என்னென்ன?
ஞாயிற்றுக்கிழமை ஒன்றரை மணி நேரம் மட்டும்தான் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. ஆண்டுக்கு 29 நாள்கள் மட்டுமே! ஒவ்வொரு வகுப்பிலும் 8:1 என்ற மாணவர் - ஆசிரியர் விகிதாசாரம் பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு வகுப்பிற்கும் ஏற்றவாறு பாடப்பகுதியை உள்ளடக்கிய பாடத்திட்டமும் வீட்டுப் பாடமும் அமைக்கப்பட்டுள்ளது. எழுதவும் வாசிக்கவும் பயிற்சியளிக்கும் வகையில் குறுந்தகடும், பாடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. மாதந்தோறும் தேர்வு நடத்தி மாணவர்களின் தரத்தை உறுதிப்படுத்துகிறோம்.

÷வெளிநாடுகளில் வாழும் குழந்தைகள் எவ்வளவு தூரம் தமிழ் பேசுகிறார்கள், தமிழ்ப் படிக்க எவ்வளவு நேரம் ஒதுக்குகிறார்கள், நம் வம்சாவளியினருக்கு எவ்வளவு தூரம் தமிழ் புரிகிறது, பெற்றோர்களுடன் எவ்வளவு நேரம் தமிழில் பேசுகிறார்கள், பெற்றோர் பிள்ளைகளுடன் எப்படி உரையாடுகிறார்கள்? போன்றவற்றை உடனிருந்து ஆராய்ந்து பாடத்திட்டத்தை வகுத்துத் தந்துள்ளவர்கள் முனைவர் பொன்னவைக்கோ, பேராசிரியர் வி.கணபதி, முனைவர் இ.கோமதிநாயகம் ஆகிய மூவர்.

பாடத்திட்டத்தில் எந்தெந்த அணுகுமுறைகளைக் கையாள்கிறீர்கள்?
1. அறிமுக நிலையில் உரையாடல் மூலம் கற்பித்தல்.
2. உடன் நிகழ்வாகவே பொதுவான கதைகளையும், கவிதைகளையும் வாசிக்கவும், எழுதவும் தூண்டுதல்.
3. தமிழ் நாட்டுக்கே உரித்தான கலையையும், பாரம்பரியத்தையும் அறிமுகப்படுத்துதல்.
4. மொழிவளம், பண்பாடு, கலாசாரத்தை அறிமுகப்படுத்துதல்.

தமிழ்க் கல்வியைத் தவிர வேறு கலைகளில் ஈடுபடுத்துவதுண்டா?
ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு விழா, பொங்கல் திருநாள், ஹாலோவீன், கிறிஸ்துமஸ், தீபாவளி திருநாள் ஆகியவை கொண்டாடப்படுகிறது. மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்தவும், நாடகம், பாடல், நடன வடிவங்களில் கற்றல் வழிமுறைகளில் வேடிக்கையினைச் சேர்க்கவும், கலாசார விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது.

வெற்றியின் ரகசியம்..?
கலிஃபோர்னியா தமிழ்க் கழகத்தில் பணிபுரியும் அனைவரும் தன்னார்வத் தொண்டூழியர்கள். மொழிப்பற்றும் புரிதலும் மிக்கவர்கள். மொழிப்பற்றுதலும் கல்வியில் புதுமை படைக்கும் சிந்தனையுமே அடிப்படையாக இருந்தாலும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆர்வமும், ஒத்துழைப்புமே இதன் வெற்றியின் ரகசியம்.

எந்த மாதிரியான திட்டங்கள் உள்ளன?
÷"தமிழ்ப் படிப்பதால் என்ன நன்மை?, நாங்கள் ஏன் தமிழ்ப் படிக்க வேண்டும்? திருக்குறள் படித்து என்ன செய்யப் போகிறோம்? ழ, ல, ர, ற உச்சரிப்பு (எழுத்துகள்) தேவையா? ஒரே எழுத்தைப் பயன்படுத்தினால் என்ன? பேச்சுத் தமிழா? எழுத்துத் தமிழா?' இப்படி பல வினாக்களை எழுப்புகின்றனர். இதற்கு தீர்வுகாணும் வகையில் சென்ற ஆண்டு முதல் மாநாட்டை நடத்தினோம். அதன் தீர்மானங்கள் நிறைவேறிய பிறகுதான் அடுத்த மாநாடு என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

தந்தையிடமிருந்து தாங்கள் கற்றுக்கொண்டவை...?
தந்தை அடிக்கடி கூறுவார் ""நேர்மைதான் மிகப்பெரிய சொத்து. விலை கொடுத்து வாங்க முடியாத அன்பு ஒன்றுதான் உலகில் மிகப்பெரியது. "தான்' என்ற எண்ணம் எப்போதும் கூடாது. கோபப்படும் போது, கோபத்துக்கு ஆளானவர்களின் நிலையில் உன்னை வைத்துப்பார். அப்போது உனக்குப் பரிதாபம்தான் வரும். எதையுமே சட்டப்படித்தான் செய்யவேண்டும்'' என்பார். என் தந்தையின் அறிவுரைகளும் வழிகாட்டுதலினாலும்தான் "கலிஃபோர்னியா தமிழ்க் கழகம்' தற்போது உலகளாவிய அளவில் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது.
(இடைமருதூர் கி.மஞ்சுளா - நன்றி தினமணி)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

அமெரிக்க மண்ணில்  தமிழ்க் கல்வி! Empty Re: அமெரிக்க மண்ணில் தமிழ்க் கல்வி!

Post by ராஜு சரவணன் Sun Mar 31, 2013 9:24 am

நல்ல தகவல் நன்றி நண்பரே
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

அமெரிக்க மண்ணில்  தமிழ்க் கல்வி! Empty Re: அமெரிக்க மண்ணில் தமிழ்க் கல்வி!

Post by ஹர்ஷித் Sun Mar 31, 2013 10:08 am

அருமை,அன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்தனர் நம் முன்னோர்,இன்று கழகம் வைத்து கலிபோர்னியாவில் தமிழ் கற்ப்பிக்கிறார்கள்.வாழ்க தமிழ்,வளர்க அவர் தொண்டு.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

அமெரிக்க மண்ணில்  தமிழ்க் கல்வி! Empty Re: அமெரிக்க மண்ணில் தமிழ்க் கல்வி!

Post by யினியவன் Sun Mar 31, 2013 10:14 am

வாழ்த்துகள் அவருக்கு.

இங்கு நாமும் நம் மொழியின் சிறப்பை உணர்ந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அமெரிக்க மண்ணில்  தமிழ்க் கல்வி! Empty Re: அமெரிக்க மண்ணில் தமிழ்க் கல்வி!

Post by ராஜா Sun Mar 31, 2013 12:57 pm

வாழ்த்துக்கள் உங்களுக்கு :வணக்கம்: ,

உங்கள் தந்தை முன்னாள் அமைச்சர் என்று சொல்லுறீங்க !!ஆனா இது தான் உதைக்குது புன்னகை

தந்தையிடமிருந்து தாங்கள் கற்றுக்கொண்டவை...?
தந்தை அடிக்கடி கூறுவார் ""நேர்மைதான் மிகப்பெரிய சொத்து. விலை கொடுத்து வாங்க முடியாத அன்பு ஒன்றுதான் உலகில் மிகப்பெரியது. "தான்' என்ற எண்ணம் எப்போதும் கூடாது. கோபப்படும் போது, கோபத்துக்கு ஆளானவர்களின் நிலையில் உன்னை வைத்துப்பார். அப்போது உனக்குப் பரிதாபம்தான் வரும். எதையுமே சட்டப்படித்தான் செய்யவேண்டும்'' என்பார்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அமெரிக்க மண்ணில்  தமிழ்க் கல்வி! Empty Re: அமெரிக்க மண்ணில் தமிழ்க் கல்வி!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Mar 31, 2013 2:02 pm

வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
பதிவுசெய்த சாமி அவர்களுக்கு நன்றி புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

அமெரிக்க மண்ணில்  தமிழ்க் கல்வி! Empty Re: அமெரிக்க மண்ணில் தமிழ்க் கல்வி!

Post by Muthumohamed Sun Mar 31, 2013 2:23 pm

ஹர்ஷித் wrote:அருமை,அன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்தனர் நம் முன்னோர்,இன்று கழகம் வைத்து கலிபோர்னியாவில் தமிழ் கற்ப்பிக்கிறார்கள்.வாழ்க தமிழ்,வளர்க அவர் தொண்டு.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் உங்களின் இந்த பணி சிறக்க வாழ்த்துக்கள்



அமெரிக்க மண்ணில்  தமிழ்க் கல்வி! Mஅமெரிக்க மண்ணில்  தமிழ்க் கல்வி! Uஅமெரிக்க மண்ணில்  தமிழ்க் கல்வி! Tஅமெரிக்க மண்ணில்  தமிழ்க் கல்வி! Hஅமெரிக்க மண்ணில்  தமிழ்க் கல்வி! Uஅமெரிக்க மண்ணில்  தமிழ்க் கல்வி! Mஅமெரிக்க மண்ணில்  தமிழ்க் கல்வி! Oஅமெரிக்க மண்ணில்  தமிழ்க் கல்வி! Hஅமெரிக்க மண்ணில்  தமிழ்க் கல்வி! Aஅமெரிக்க மண்ணில்  தமிழ்க் கல்வி! Mஅமெரிக்க மண்ணில்  தமிழ்க் கல்வி! Eஅமெரிக்க மண்ணில்  தமிழ்க் கல்வி! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அமெரிக்க மண்ணில்  தமிழ்க் கல்வி! Empty Re: அமெரிக்க மண்ணில் தமிழ்க் கல்வி!

Post by raja sekar.v Sun Mar 31, 2013 3:26 pm

சூப்பருங்க
raja sekar.v
raja sekar.v
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Back to top Go down

அமெரிக்க மண்ணில்  தமிழ்க் கல்வி! Empty Re: அமெரிக்க மண்ணில் தமிழ்க் கல்வி!

Post by ஆரூரன் Mon Apr 01, 2013 12:53 pm

ராஜா wrote:வாழ்த்துக்கள் உங்களுக்கு :வணக்கம்: ,

உங்கள் தந்தை முன்னாள் அமைச்சர் என்று சொல்லுறீங்க !!ஆனா இது தான் உதைக்குது புன்னகை

தந்தையிடமிருந்து தாங்கள் கற்றுக்கொண்டவை...?
தந்தை அடிக்கடி கூறுவார் ""நேர்மைதான் மிகப்பெரிய சொத்து. விலை கொடுத்து வாங்க முடியாத அன்பு ஒன்றுதான் உலகில் மிகப்பெரியது. "தான்' என்ற எண்ணம் எப்போதும் கூடாது. கோபப்படும் போது, கோபத்துக்கு ஆளானவர்களின் நிலையில் உன்னை வைத்துப்பார். அப்போது உனக்குப் பரிதாபம்தான் வரும். எதையுமே சட்டப்படித்தான் செய்யவேண்டும்'' என்பார்.

தாயைப்போலத்தானே பிள்ளை... அப்பாதானே அமைச்சர்.... !
அதனால ஓகே...
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

அமெரிக்க மண்ணில்  தமிழ்க் கல்வி! Empty Re: அமெரிக்க மண்ணில் தமிழ்க் கல்வி!

Post by ராஜா Mon Apr 01, 2013 1:23 pm

ஆரூரன் wrote:தாயைப்போலத்தானே பிள்ளை... அப்பாதானே அமைச்சர்.... !
அதனால ஓகே...
அப்ப சரி சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அமெரிக்க மண்ணில்  தமிழ்க் கல்வி! Empty Re: அமெரிக்க மண்ணில் தமிழ்க் கல்வி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மலேசியாவில் தமிழ்க் கல்வி – 200 ஆண்டுகள்!
» மலேசியாவில் 200 ஆண்டு தமிழ்க் கல்வி – தமிழில் கையெழுத்திட்ட பிரதமர் நஜிப்!
» பள்ளிக்கூடக் கல்வி, மார்க்கக் கல்வி இரண்டில் எது நமக்கு சிறப்பு..?
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
» இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அமெரிக்க இந்தியர் நியமனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum