ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்கு சந்தை பற்றிய தகவல் தொகுப்பு

4 posters

Go down

பங்கு சந்தை பற்றிய தகவல் தொகுப்பு Empty பங்கு சந்தை பற்றிய தகவல் தொகுப்பு

Post by பாலாஜி Thu Mar 21, 2013 1:35 pm

பங்கு பிரித்தல் என்றால் என்ன? அது ஏதற்காக செய்யப்படுகிறது?

சென்னை: பங்குச் சந்தையில் பல தொழில்நுட்ப சொற்கள் உள்ளன. அவற்றில் பங்கு பிரித்தல் (stock split) என்றால் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களை உற்சாகப்படுத்தப் பல திட்டங்கள் உள்ளன. அதில் ஒன்று இந்த பங்கு பிரித்தல். செபி (எஸ்இபிஐ) விதிமுறைப்படி, ஒரு நிறுவனத்தின் பங்குகளின் விலை ஆறு மாத காலமாக ரூ. 500க்கு மேல் விற்கப்பட்டால், அந்த நிறுவனம் அதனுடைய பங்குகளை இரண்டாகப் பிரிக்கலாம். இதையே பங்கு பிரித்தல் என்று கூறுவார்கள்.
பங்குகளைப் பிரிக்கும் போது பங்குகளின் எண்ணிக்கையும், மதிப்பீடும் மாறுமே தவிர மொத்த மதிப்பு மாறுவதில்லை. தற்போது உள்ள டிமேட் முறையில் இந்தப் பங்குப் பிரித்தல் பெரிய வித்தியாசம் சேர்க்கவில்லை. எனினும் பங்குகளைப் பேப்பர் வடிவில் வர்தகம் செய்த காலங்களில், இந்த முறை பயனுள்ளதாக இருந்தது.

பங்குப் பிரித்தலின் அவசியம்?

பங்குகள் அதிக விலையில் விற்கும் போது பங்கு நிறுவனகள் தங்களுடைய பங்குகளைச் சிறிய முதலீட்டாளர்கள் மற்றும் சாதாரண முதலீட்டாளர்கள் வாங்க வேண்டும் என்பதற்காக பங்குகளின் எண்ணிக்கையை உயர்த்தி, விலையைச் சரிப்படுத்துவார்கள். இதனால், பங்கின் நீர்மைத் தன்மை அதிகரிக்கும். ஆனால் வர்த்தக அளவு குறைவாக உள்ள நிறுவனங்கள் இந்தப் பிரிவு நலன் தராது என்றும், முதலீட்டாளர்கள் இதனை வரவேற்க மாட்டார்கள் என்றும் நம்புகின்றன.

கணக்கிடும் முறை:

ஒரு நிறுவனத்தின் 100 பங்குகள் ரூ.1000க்கு விற்கப்படுகிறது என்றால், அதன் மொத்த மதிப்பு ரூபாய் 100X 1000 = ரூ.1,00,000. ஒரு பங்குக்கு நிறுவனம் மற்றொரு பங்கை தரும்போது அது 200 பங்குகளாக மாறும். பங்கின் மதிப்பை ரூ.500க அந்நிறுவனம் நிர்ணயிக்கையில் அதன் மொத்த மதிப்பு 200 X 500 = ரூ.1,00,000 என அப்படியே இருக்கும்.

முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும் பலன்:

பங்கின் நீர்மைத் தன்மைக் கூடுவதால் பங்குகள் விற்பனை அதிகரிக்கும். அதே போல, பங்குகளைப் பிரிப்பதால் அது நன்றாக செல்கிறது என்று முதலீட்டாளர்கள் நினைக்கின்றனர். இதை பங்குகள் வாங்குவதற்கான ஒரு அறிகுறியாகக் கருதுகின்றனர்.
ஆனால் பங்குச் சந்தையில் எதுவும் நிரந்தரமில்லை. பங்குகள் பிரிந்தப் பின்னர் விலை விழவும் செய்யலாம். கவனம் தேவை.

-தட்ஸ்தமிழ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பங்கு சந்தை பற்றிய தகவல் தொகுப்பு Empty Re: பங்கு சந்தை பற்றிய தகவல் தொகுப்பு

Post by mbalasaravanan Thu Mar 21, 2013 1:41 pm

அருமையிருக்கு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

பங்கு சந்தை பற்றிய தகவல் தொகுப்பு Empty Re: பங்கு சந்தை பற்றிய தகவல் தொகுப்பு

Post by பாலாஜி Mon Mar 25, 2013 8:48 pm

பங்கு வர்த்தக கணக்கு துவங்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

சென்னை: பங்கு வர்த்தக கணக்கு துவங்கும் முன்பு சில ஆவணங்களைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். எனினும் தேவைப்படும் ஆவணங்கள் (பங்குத்) தரகருக்கு தரகர் மாறுபடும்.

தேவையான சில அடிப்படை ஆவணங்கள் பின் வருமாறு:

கணக்குத் தொடங்கும் விண்ணப்பப் படிவம்

தரகருக்கு அதிகாரம் அளிக்கும் ஆவணம் (Power of Attorney)(கட்டாயம் இல்லை)

வசிப்பிட முகவரிக்கான ஆதார ஆவணம்

அடையாளத்திற்கான ஆதார ஆவணம்

வங்கிக் கணக்கு மற்றும் டி.பி கணக்குகளை தொடங்குவதற்கான விண்ணப்பம் (உங்களிடம் இக்கணக்குகள் இல்லாமல் இருந்தால்)

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள்

அடையாளத்திற்கான ஆதார ஆவணங்களாக பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் அல்லது ஆதார் அட்டை ஆகியவற்றில் ஒன்ரை பயன்படுத்தலாம்.

ஒரு விண்ணப்பதாரரிடம் பான் கார்டு இல்லை எனில் அவர் பங்கு வர்த்தக கணக்கு தொடங்க இயலாது.

வசிப்பிட முகவரிக்கான ஆதார ஆவணமாக தொலைபேசிக் கட்டண பில், மின் கட்டண பில், மூன்று மாதங்களுக்கான வங்கிக் கணக்கு விவரம், வங்கி பாஸ்புக், குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, பதிவு செய்யப்பட்ட வீட்டு வாடகை ஒப்பந்தம் அல்லது விற்பனைப் பத்திரம், ஓட்டுநர் உரிமம், வீட்டு பராமரிப்பு பில், காப்பீட்டு திட்ட நகல் ஆகியவற்றில் ஒன்றை பயன்படுத்தலாம்.

விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பெயர் மற்றும் வசிப்பிட முகவரி விவரங்கள், அடையாளத்திற்கான ஆதார ஆவணம் மற்றும் வசிப்பிட முகவரிக்கான ஆதார ஆவணத்தில் உள்ள விவரங்களுடன் ஒத்திருக்க வேண்டும்.

நீங்கள் இணையதள பங்கு வர்த்தக கணக்கு தொடங்கி பங்கு வர்த்தகம் செய்யும் போது தான் தரகருக்கு அதிகாரம் அளிக்கும் ஆவணம் தேவைப்படுகிறது. தரகர் தன்னிடம் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனித்தனியான பங்கு வர்த்தக கணக்கினைப் பராமரித்து வருவார். பங்கு வர்த்தக செயல்பாடுகள் தரகரது பெயரில் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் உங்களது டீமேட் கணக்கிற்கு மாற்றப்படும். பல தரகர்கள் தமது வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தி அளிக்கும் விதமாக, பங்கு வர்த்தக கணக்கு, டீமேட் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கு ஆகியவற்றை ஒரே கணக்கில் இயக்கும் வண்ணம் வசதிகளை அளிக்கின்றனர். சில தரகர்கள் இத்தகைய "ஒன்றில் மூன்று" கணக்கினை விருப்பத்தேர்வாகவும் அளிக்கின்றனர்.


தரகருக்கு அதிகாரம் அளிக்கும் ஆவணம் மேற்குறிப்பிட்ட "ஒன்றில் மூன்று" கணக்கினைத் தவிர மற்ற எந்தக் கணக்கு தொடங்கவும் கட்டாயமானது அல்ல. மேலும் தரகருக்கு அதிகாரம் அளிக்கும் ஆவணமானது இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பின் வழிகாட்டுதல்படி தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். அதிகாரம் அளிக்கும் ஆவணத்தினைத் தவறாகப் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில், அதிகாரம் அளிப்பதா வேண்டாமா என்று முடிவு செய்யும் வாய்ப்பு உங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். "ஒன்றில் மூன்று" வகை கணக்கினைத் தொடங்கும் பொழுது டீமேட் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கு ஆகியவற்றுக்கு அதிகாரம் அளிக்காமல், பங்கு வர்த்தகக் கணக்கிற்கு மட்டும் அதிகாரம் அளித்து கையொப்பம் இடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


-தட்ஸ்தமிழ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பங்கு சந்தை பற்றிய தகவல் தொகுப்பு Empty Re: பங்கு சந்தை பற்றிய தகவல் தொகுப்பு

Post by raja sekar.v Mon Mar 25, 2013 9:45 pm

சூப்பருங்க
raja sekar.v
raja sekar.v
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Back to top Go down

பங்கு சந்தை பற்றிய தகவல் தொகுப்பு Empty Re: பங்கு சந்தை பற்றிய தகவல் தொகுப்பு

Post by பாலாஜி Sun Mar 31, 2013 2:30 pm

பங்குகளின் ஐஎஸ்ஐஎன் என்றால் என்ன?

சென்னை: பங்குகள் வாங்கும் போதோ அல்லது விற்கும் போதோ இன்டர்நேஷனல் செக்யூரிட்டீஸ் ஐடென்டிபிகேஷன் எண் (ஐஎஸ்ஐஎன்) வழங்கப்படும். இந்த 12 இலக்க எண், பங்குகளுக்கு பாதுகாப்பையும் ஒரு தனி அடையாளத்தையும் தருகிறது.
இந்த ஐஎஸ்என் எண், பங்குகள், பாண்டுகள் போன்றவற்றைத் தெரிந்து கொள்ள உதவுகிறது. பங்குகளை பரிமாற்றம் செய்யும் போது இந்த ஐஎஸ்என் எண் தேவையாக இருக்கிறது. இந்த எண், நேஷனல் நம்பரிங் ஏஜென்சி (என்என்ஏ) என்ற அமைப்பால் வழங்கப்படுகிறது. இந்த அமைப்பு ஐஎஸ்ஒ (இன்டர் நேஷனல் ஆர்கனைசேஷன் ஆஃப் ஸ்டாண்டர்டைசேஷன்) என்ற அமைப்பால் உருவாக்கப்பட்டதாகும். இந்தியாவில் எஸ்இபிஐ என்ற அமைப்பு நேஷனல் நம்பரிங் ஏஜென்சியாக செயல்படுகிறது.

பங்குகளில் முதலீடு செய்பவர்கள் இந்த ஐஎஸ்ஐஎன் எண்ணை, பங்குகளை பரிமாற்றம் செய்யும் போது மட்டுமே ஆக்டிவேட் செய்ய முடியும்.

எடுத்துக்காட்டாக பார்த்தியின் ஐஎஸ்ஐஎன் எண் ஐஎண்இ397டி0124 - ஐ எடுத்துக் கொள்வோம்.
இந்த 12 இலக்க எண்களில் இருக்கும் முதல் இரண்டு எண்களான ஐஎன், நாட்டினுடைய கோடைக் குறிக்கிறது. மூன்றாவது எண்ணான இ, பங்குகளின் தன்மையை குறிக்கிறது.

அடுத்த நான்கு எண்களான 397டி ஆகியவை பங்குகளை வெளியிடும் நிறுவனத்தைக் குறிக்கிறது. இந்த நான்கு எழுத்துக்களில் முதல் மூன்று எழுத்துக்கள் எண்களிலும் இறுதி எழுத்து ஆங்கில எழுத்திலும் இருக்கும். அடுத்த 2 எண்கள் பங்குகளை வெளியிடுபவரின் பாதுகாப்புத் தன்மையைக் குறிக்கும்.

அடுத்த 2 எண்கள், சிஸ்டத்தில் பதிவு செய்வதற்காக, பங்குகளை வெளியிடுபவரின் பாதுகாப்புக்காக வழங்கப்படுவதாகும். இறுதி எண்ணான 4, டபுள் ஆட் மற்றும் டபுள் செக் செய்வதற்கான எண்ணாகும்.

பங்கு முதலீட்டாளர்கள் தங்கள் கணக்குகளை பீரிஸ் செய்யும் போது இந்த ஐஎஸ்ஐஎன் உதவி செய்கிறது.

-தட்ஸ்தமிழ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பங்கு சந்தை பற்றிய தகவல் தொகுப்பு Empty Re: பங்கு சந்தை பற்றிய தகவல் தொகுப்பு

Post by யினியவன் Sun Mar 31, 2013 11:45 pm

நல்ல பகிர்வு பாலாஜி - திருப்பதி கடவுள் சொன்னா கரீக்ட்டா தான் இருக்கும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பங்கு சந்தை பற்றிய தகவல் தொகுப்பு Empty Re: பங்கு சந்தை பற்றிய தகவல் தொகுப்பு

Post by பாலாஜி Tue Apr 02, 2013 3:58 pm

டிவிடென்ட் வழங்கும் நிறுவனங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்

சென்னை: ஒரு நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு அந்த நிறுவனம் தனது வருமானத்திலிருந்து வழங்கும் தொகையே ஈவுத் தொகை(டிவிடென்ட்) ஆகும். அதாவது நீங்கள் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கியிருந்தால், நீங்கள் வாங்கியிருக்கும் ஒவ்வொரு பங்குக்கும் அந்த நிறுவனத்தின் வருமானத்திலிருந்து ஒரு சிறிய தொகையை அந்த நிறுவனம் வழங்கும்.
பொதுவாக அதிகமான லாபம் ஈட்டும் நிறுவனங்கள் தங்கள் பங்குகளை வாங்கியவர்களுக்கு முறையாக, சீரான இடைவெளியில் இந்த ஈவுத் தொகையை வழங்குகின்றன. அதன் மூலம் அந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்கியவர்களுக்கு அது ஒரு நிரந்தர வருவாயாகவும் இருக்கும்.

டிவிடென்ட் பேஅவுட் ரேஷியோ

பொதுவாக ஆண்டுக்கு ஒரு முறை ஈவுத் தொகை வழங்கப்படும். எனினும் நிறுவனங்கள் தாங்கள் பெறும் லாபத்தைப் பொறுத்து ஈவுத் தொகை மற்றும் அவற்றை வழங்கும் முறையை முடிவு செய்கின்றன. குறிப்பாக ஈவுத் தொகையை அடிக்கடி வழங்கும் நிறுவனங்கள் வலுவான நிதி ஆதாரத்துடன் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளலாம்.
டிவிடென்ட் பேஅவுட் ரேஷியோ என்றால் ஈவுத் தொகையை பகிர்ந்தளித்ததற்கான லாபத்தின் விகிதம் ஆகும். பேஅவுட் ரேஷியோ அதிகமாக இருந்தால், லாபத்திலிருந்து அதிகமான தொகை ஈவுத் தொகையாக வழங்கப்படுகிறது என்று பொருள்.

டிவிடென்ட் ஈல்டு

டிவிடென்ட் ஈல்டு என்றால், ஒவ்வொரு பங்கிற்கும் உள்ள ஈவுத் தொகைக்கும், தற்போதைய பங்கு சந்தையில் பங்குகளின் மதிப்பிற்கும் இடையே உள்ள உறவு ஆகும். டிவிடென்ட் ஈல்டை தெரிந்து வைத்து பங்குகளில் முதலீடு செய்தால்தான் அது முதலீட்டாளர்களுக்கு நல்ல பலனைத் தரும்.

டிவிடென்ட் ஈல்டு ரேஷியோ = ஒரு பங்குக்கான டிவிடென்ட்/பங்குச் சந்தையில் ஒரு பங்குக்கான மதிப்பு
எடுத்துக்காட்டாக அலகாபாத் வங்கி ஒரு பங்கை ரூ.120க்கு விற்கிறது. ஒவ்வொரு பங்கிற்கும் 60 சதவீதம் டிவிடென்டை அதாவது அதன் பேஸ் மதிப்பின்படி ரூ.10 வழங்குவதாக கூறுகிறது. எனவே நீங்கள் இதில் 100 பங்குகளை வாங்கினால் நீங்கள் ரூ.12,000 முதலீடு செய்ய வேண்டும். அதன் மூலம் ஆண்டுக்கு இந்த தொகைக்கு 60 சதவீத டிவிடென்ட் அதாவது ரூ.600 டிவிடன்ட் தொகையாகப் பெறுவீர்கள். இதில் டிவிடென்ட் ஈல்டு 5% ஆகும்.

அறிவிப்பு

நிறுவனத்தின் போர்டு ஆப் டைரக்டர்கள் டிவிடென்ட்டையும், டிவிடென்ட் தொகை வழங்கப்படும் தேதியையும் அறிவிப்பார்கள்.
எக்ஸ் டிவிடென்ட் தேதி
எக்ஸ் டிவிடென்ட் தேதிக்கு முன்பாக ஒருவர் பங்குகளை வைத்திராவிட்டால், அவருக்கு டிவிடென்ட் தொகை வழங்கப்பட மாட்டாது. எனவே பங்குகளை வாங்குவதற்கு முன் எக்ஸ் டிவிடென்ட் தேதியைத் தெரிந்து வைத்திருப்பது நல்லது.

பேமென்ட் தேதி

பேமென்ட் தேதி என்றால் பங்குகளை வாங்கியவர்களுக்கு அந்த நிறுவனம் டிவிடென்ட் தொகையை வழங்கும் தேதியாகும்.

புக் குளோசிங் தேதி

புக் குளோசிங் தேதி என்றால், பங்குகளை வாங்குபவர், இந்த தேதிக்கு முன்பாக தான் பங்குகளின் உரிமையாளர் என்பதைப் பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் அவர் இந்த டிவிடென்ட் தொகைய பெற தகுதியுடையவராவார். பொதுவாக பதிவு செய்ய இரண்டு அல்லது 3 வேலை நாள்கள் தேவைப்படும்.

டிவிடென்ட் தொகைக்கு வரி செலுத்த வேண்டியதில்லை

பங்குகளிலிருந்து பெறும் டிவிடென்ட் தொகைக்கு வரி செலுத்த தேவையில்லை.
ஒரு நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன்பாக அந்த நிறுவனத்தின் நிதி செயல்பாடுகளை சரி செய்து பார்த்த பின்பு முதலீடு செய்வது நல்லது. மேலும் பல நிறுவனங்கள் வழங்கும் டிவிடென்ட் தொகையை ஒப்பிட்டுப் பார்ப்பதும் நல்லது. அதன் மூலம் அதிகமான டிவிடென்ட் தொகையைப் பெற வாய்ப்பு இருக்கிறது.

-தட்ஸ்தமிழ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பங்கு சந்தை பற்றிய தகவல் தொகுப்பு Empty Re: பங்கு சந்தை பற்றிய தகவல் தொகுப்பு

Post by பாலாஜி Mon Apr 29, 2013 12:00 pm

பங்கு வாங்கப் போகிறீர்களா? இதை படித்துவிட்டு போங்க

சென்னை: பங்குச் சந்தையில் பங்குகள் வாங்கவோ, போர்ட்ஃபோலியோவை உருவாக்கவோ எண்ணுகிறீர்களா?
பங்குகள் வாங்கும் முன் மனதில் கொள்ள வேண்டிய சில குறிப்புகள் இதோ.

சில குறிப்புகள் அடிப்படையானவை. இந்த அடிப்படையான குறிப்புகளும் விகிதாச்சாரங்களும் வெவ்வேறு இணையதளங்களிலோ, அந்தந்த நிறுவனங்கள் வெளியிடும் நிதிநிலை அறிக்கைகளிலோ காணப்படும்.

1. ஒரு பங்கின் மூலம் கிடைத்த லாபப் பங்கு (EPS), விலைக்கும் ஈட்டிய மடங்கிற்கும் உள்ள விகிதம்(price to earnings multiple) ஆகியவற்றை கவனியுங்கள்:

ஒரு பங்கின் மூலம் கிடைத்த லாபப் பங்கு மற்றும் ஈட்டிய மடங்கிற்கும் (earnings multiple) உள்ள தொடர்பை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஒரு பங்கின் மூலம் கிடைத்த லாபப் பங்கு மற்றும் விலை/லாபப் பங்கு (P/E) என்னும் விகிதத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். விலைக்கும், லாபப் பங்கிற்கும் உள்ள விகிதம் அதிகமாக இருந்தால் நீங்கள் ஒரு பங்கிற்குக் கொடுக்கும் விலை அதிகமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஒரே துறையைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்களின் பங்குகளை எடுத்துக் கொள்வோம். அவை இரண்டும் வெவ்வேறு விலை/லாபப் பங்கு என்னும் விகிதங்களைக் கொண்டிருந்தால், அவற்றில் ஒன்று விலை அதிகமானது என்று உங்களால் சொல்ல முடியும்.

2. பங்குகளின் 52 வார அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச விலையை கவனியுங்கள்:

பங்குகள் 52 வார அதிகபட்ச அல்லது குறைந்தபட்ச விலைக்கு அருகில் உள்ளனவா என்று பாருங்கள். பங்குகளின் விலை 52 வார குறைந்தபட்ச விலைக்கு அருகில் இருந்தால் அப்பங்குகளின் விலை உயரும் வாய்ப்பு அதிகம். மாறாக, பங்குகள் 52 வார அதிகபட்ச விலைக்கு அருகில் இருந்தால் அவற்றை வாங்குவதைத் தவிர்க்கவும்.

3. பங்குகளின் புக் வேல்யூவை கவனியுங்கள்:

பங்குகளின் விலையானது புக் வேல்யூவைப் போன்று ஒன்று அல்லது இரண்டு மடங்கு இருந்தால் அது நியாயமான விலையில் உள்ளது என்று பொருள். மாறாக 2 மடங்கிற்கு மேல் இருந்தால் அப்பங்கின் விலை அதிகமாக உள்ளது என்று பொருள்.

4. புரமோட்டர் வசம் உள்ள பங்குகளைப் பாருங்கள்:

புரமோட்டர் (promoter) வசம் உள்ள பங்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அவர்கள் அந்நிறுவனத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் என்று பொருள். அந்நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பங்குகளை புரமோட்டர் வைத்திருந்தால் அது நல்ல அடையாளம்.

5. புரமோட்டர் வசம் உள்ள பங்குகள் அடமானம் வைக்கப்பட்டுள்ளனவா என்று பாருங்கள்:

புரமோட்டர் வசம் உள்ள பங்குகள் அடமானம் வைக்கப்பட்டு இருந்தால் அந்நிறுவனத்தின் நிதி ஓட்டம் சீராகவும், ஆரோக்கியமாகவும் இல்லை என்று பொருள். இத்தகைய பங்குகளைத் தவிர்க்கவும்.

6. தொழில்துறையின் மீது முதலீட்டாளர்களுக்கு உள்ள ஆர்வத்தை பாருங்கள்:

தொழில்துறையின் சில பிரிவுகள் மீது மட்டும் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி முதலீடு செய்வார்கள். உதாரணமாக எஃப்எம்சிஜி செக்டரை விட உலோக பிரிவானது முதலீட்டாளர்களிடையே குறைவான கவர்ச்சியைக் கொண்டுள்ளது. எனவே எஃப்எம்சிஜி செக்டர் பங்குகள் அதிகமான விலைக்கும் ஈட்டிய மடங்கிற்கும் உள்ள விகிதத்தைக் கொண்டிருக்கும். ஏனெனில் அத்தகைய பங்குகள் எப்போதும் விலை இறங்காது என்ற நம்பிக்கை மக்கள் மனதில் எழுந்து அதன் காரணமாக அவர்கள் அவற்றை அதிக விலை கொடுத்து வாங்கத் தயாராக இருப்பார்கள்.

7. பங்குகள் முன்னோடி துறையைச்(Bellwether industry stocks) சார்ந்தவையா என்று பாருங்கள்:

முன்னோடி துறையைச் சார்ந்த பங்குகள் (Bellwether industry stocks) என்பவை மருந்துத் துறை, எஃப்எம்சிஜி செக்டர், தகவல் தொழில் துறை போன்ற துறை களைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் ஆகும். இவற்றின் மீது பங்குதாரர்களின் முதலீடு அதிகரித்துக் கொண்டே இருக்கும். பங்குகளின் விலை ஒருபோதும் இறங்காது. இவற்றுக்கான தேவை எப்போதும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
ஒரு முதலீட்டாளர் பங்குகளில் முதலீடு செய்யும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன. அத்தனையையும் இங்கு விவரிக்க இயலாது. நிதி ஓட்டம்(cash flows), எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள், கண்காணிப்பு அமைப்புகளின் சட்ட திட்டங்கள், ஏற்றுமதி போன்ற இடர்கள் உள்ளன. அத்தனையையும் கவனத்தில் கொண்டு பங்குகளில் முதலீடு செய்யுங்கள்.

-தட்ஸ்தமிழ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பங்கு சந்தை பற்றிய தகவல் தொகுப்பு Empty Re: பங்கு சந்தை பற்றிய தகவல் தொகுப்பு

Post by யினியவன் Mon Apr 29, 2013 12:14 pm

தெரிஞ்சு வாங்கு பங்கு
இல்லேன்னா ஊதிடுவாங்க சங்கு

என நல்ல விளக்கம் பாலாஜி / பங்காஜி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பங்கு சந்தை பற்றிய தகவல் தொகுப்பு Empty Re: பங்கு சந்தை பற்றிய தகவல் தொகுப்பு

Post by பாலாஜி Mon Apr 29, 2013 12:20 pm

யினியவன் wrote:தெரிஞ்சு வாங்கு பங்கு
இல்லேன்னா ஊதிடுவாங்க சங்கு

என நல்ல விளக்கம் பாலாஜி / பங்காஜி

தெரிஞ்சு வாங்கு பங்கு
இல்லேன்னா ஊதிடுவாங்க சங்கு - உண்மைதான் தல




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பங்கு சந்தை பற்றிய தகவல் தொகுப்பு Empty Re: பங்கு சந்தை பற்றிய தகவல் தொகுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum