ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரிஸானா… பதற வைக்கும் கொடூரம் – மனுஷ்யபுத்திரன் கட்டுரை

2 posters

Go down

ஈகரை ரிஸானா… பதற வைக்கும் கொடூரம் – மனுஷ்யபுத்திரன் கட்டுரை

Post by செம்மொழியான் பாண்டியன் Mon Feb 18, 2013 9:12 am

சமீபத்தில் இலங்கையைச் சேர்ந்த ரிஸானா நபீக் (முஸ்லிம் தமிழ்ப் பெண்) என்ற இளம் பெண்ணிற்கு சவுதி அரேபியாவில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை உலகத்தின் மனசாட்சியை உலுக்கிகொண்டிருக்கிறது.

கடந்த ஜனவரி 9-ம் தேதி சவுதி அரசாங்கம் ஒரு மைதானத்தில் ரிஸானாவை வெள்ளை ஆடை உடுத்தி, கைவிலங்கிட்டு, மண்டியிடவைத்து பொதுமக்கள் முன்னிலையில் அவள் தலையை சீவி எறிந்தது.

கடந்த 2005-ம் ஆண்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சவுதிக்கு சென்ற ரிஸானா தனது எஜமானரின் குழந்தையை கொலை செய்தாள் என்பதே ரிஸானா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும். இந்தக் குற்றச் சாட்டு விசாரிக்கப்பட்டு ரிஸானா குறிப்பிட்ட குழந்தையை கொலை செய்தார் என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து சவுதி தவாமி நீதி மன்றம் ரிஸானாவுக்கு மரண தண்டனை விதித்து 2007-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. தவாமி நீதி மன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ரியாதில் உள்ள இலங்கைத் தூதரகம், ஹாங்காங்கில் உள்ள ஆசிய மனித உரிமைகள் அமைப்பின் உதவியுடன் ரியாத் உயர்நீதி மன்றத்தில் ரிஸானாவுக்கு ஆதரவாக வழக்குத் தாக்கல் செய்தது.

ஆனால் மேல் முறையீட்டிலும் ரிஸானாவின் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. ரிஸானா அனுப்பிய கருணை மனுவும் சவுதி அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டது. சவுதி ஷரியத் சட்டத்தின்படி பாதிக்கப்பட்டவர் விரும்பினால் குற்ற வாளியை மன்னிக்கலாம். ஆனால் இறந்துபோன குழந்தையின் பெற்றோர் ரிஸானாவை கடைசிவரை மன்னிக்கத் தயாராக இல்லை. இலங்கையிலிருந்து வேலைக்கு வந்த சில நாட்களிலேயே இந்த துயரம் நடந்தது. பாலூட்டும்போது குழந்தை மூச்சுத்திணறி இறந்ததே ஒழிய நாலுமாதக் குழந்தையைக் கொல்ல தனக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்ற ரிஸானாவின் குரல் யாருக்கும் கேட்கவில்லை. சவுதி அரசாங்கத்திற்கு ரிஸானா அனுப்பிய கருணை மனுவில் தன் துயரக் கதையை அவளே சொல்கிறாள்.

“நான் 01.04.2005-ல் சவுதி அரேபியாவுக்கு வந்தேன். நான் சவுதி அரேபியாவில் ஒன்றரை மாதங்கள் வீட்டில் வேலை செய்தேன். இந்த வீட்டில் சமைத்தல், கழுவுதல், 4 மாதக் குழந்தையை பார்த்தல் ஆகியவற்றை செய்து கொண்டு இருந்தேன்.

குறித்த சம்பவ தினம் ஞாபகமில்லை. அது ஒரு ஞாயிற்றுக் கிழமை பகல் 12.30 மணியிருக்கும் அப்போது யாரும் வீட்டில் இருக்கவில்லை. அங்குள்ள 4 மாதக்குழந்தைக்கு நானே பால் கொடுப்பேன். வழமை போல அன்றும் பாலூட்டிக்கொண்டிருக்கும் போது குழந்தையின் மூக்கின் மூலம் பால் வெளியேவர ஆரம்பித்தது. அப்போது நான் குழந்தையின் தொண்டையை மெதுவாக தடவினேன். குழந்தை கண் மூடியிருந்தபடியால் குழந்தை தூக்கமென நினைத்தேன்.

குழந்தையின் தாய், எனது எஜமானி 1.30 மணியளவில் வந்து சாப்பிட்டு விட்டு பிள்ளையைப் பார்த்தார். அதன் பின்னர் அந்த எஜமானி என்னை செருப்பால் அடித்துவிட்டு குழந்தையை எடுத்துக்கொண்டு போனார். எஜமானி மூக்கிலும் கன்னத்திலும் அடித்த அடியினால் எனக்கு இரத்தம் வந்து கொண்டிருந்தது.

பின்னர் என்னை போலீசுக்கு கொண்டு போய் அங்கு ஒரு பட்டியால் அடித்தார்கள். குழந்தையின் கழுத்தை நசித்ததாக கூறுமாறு அடித்து வற்புறுத்தினார்கள். அவ்வாறு கூறும் வரை கரண்ட் பிடிக்கப்போவதாக (எலக்ட்ரிக் ஷாக்) கூறினார்கள்.

இந்த நிலையில்தான் அவர்கள் எழுதிய பேப்பரில் கையொப்பம் வைத்தேன். அப்போது எனக்கு பயங்கரமாக இருந்தது. ஞாபக சக்தி அப்போது எனக்கிருக்கவில்லை. அல்லாஹ் மீது சத்தியமாக குழந்தையை கொல்ல நான் கழுத்தை நசுக்கவில்லை. மேற்படி எனது வாக்கு மூலம் வாசித்து விளங்கிய பின்னர் உறுதியென உணர்ந்து கையொப்பமிடுகின்றேன்.’’

ரிஸானா சித்ரவதை செய்யப்பட்டு வாக்குமூலம் வாங்கப்பட்டாள் என்பது தெளிவாக இந்தக் கடிதத்தில் இருக்கிறது. இந்த சம்பவம் நடந்த போது ரிஸானாவின் உண்மையான வயது 17 தான். பாஸ்போர்ட்டில் அவளுக்கு கூடுதல் வயது குறிப்பிடப்பட்டு வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்டிருக்கிறாள். சர்வதேச மனித உரிமை சாசனத்தின்படி மைனர் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படக் கூடாது.

ரிஸானா கடைசி வரை தன் வீட்டுக்கு- சொந்த நாட்டிற்கு திரும்பிவிடுவோம் என்று நம்பிக் கொண்டிருந்தாள். மரண தண்டனை நிறைவேற்றப்படும் அன்றுகூட அவள் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தாள். ரிஸானாவை அவள் கொல்லப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் சந்தித்த மௌலவி ஏ.ஜே.எம். மக்தூம் ரிஸானாவின் பெற்றோருக்கு எழுதிய கடிதம் யாருடைய இதயத்தையும் உடையச் செய்து விடும். அந்தக் கடிதத்திலிருந்து சில பகுதிகள்:

“…சவுதி அராபியாவில் பணிப் பெண்ணாக வேலை செய்து கொலைக் குற்றம் சுமத்தப் பட்டு பின் சென்ற புதன்கிழமை (09.01.2013) 11 மணியளவில் மரண தண்டனை நிறைவேற்றப் பட்ட உங்கள் மகள் ரிஸானாவை அவருக்கு அத்தண்டனை நிறை வேற்றப்படுவதற்கு ஓரிரு மணித் தியாலங்களுக்கு முன் சந்தித்தோம். அவரை சந்தித்ததும் அவரிடம் ‘இறுதி ஆசைகள் மற்றும் மரண சாசனம் ஏதும் இருக்கிறதா?’ என்று வினவினேன். அவருக்குப் புரியவில்லை, விளங்கப்படுத்தினேன்.

அதற்கு பதில் சொல்லாது ‘ஊருக்கு நான் எப்போது செல்வது?’ என்று வினவினார். அப்போது அவர் ஊருக்கு சென்று விடலாம் எனும் எதிர்பார்ப்பிலேயே இங்கு வந்துள்ளார் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

‘சரி, என்ன தீர்ப்பு உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது’ என்று வினவிய போது, அவரின் முழு கதையையும் சொல்லி விட்டு பின் ‘மரண தண்டனை இப்போது விதிக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார். அந்த இறுதி நேரத்திலும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த கொலைக் குற்றத்தை அவர் மறுத்தார்.

‘உங்களுக்கு மரண தண்டனை இன்றுதான் நிறைவேற்றப்படப் போகிறது’ என்று தடுமாற்றத்துடன் கூறினேன். அதற்கு அவர் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார். அப்போது ‘நான் உங்கள் பெற்றோர், சகோதரிகளுக்கு ஏதும் சொல்ல வேண்டுமா?’ என்று கேட்டேன். என்ன சொல்வது? என்று பதற்றத்துடன் என்னிடம் தாழ்ந்த குரலில் வினவினார்.

‘என்னை மன்னித்து விட்டுட சொல்லுங்க நானா?’ என்று கெஞ்சிய குரலில் அவர் கூறியது எனது உள்ளத்தை உருக்கிவிட்டது “அப்படி அவர்கள் மன்னிக்க மறுத்து விட்டால், உங்கள் மரண தண்டனை இன்று நிறைவேற்றப்படும். உங்களிடம் ஏதாவது பணம், பொருட்கள் இருந்தால் அதனை என்ன செய்வது?’ என்று வினவிய போது, மொத்தம் ஐநூறு சவுதி ரியால்கள் சொச்சம் இருப்பதாகவும், அதனை சதகா (தானம்) செய்திடுமாறும் வேண்டிக் கொண்டார்.

இறந்த குழந்தையின் உறவினர்களுடன் நீண்ட நேரம் பேசியும் பலனில்லாமல் போய்விட்டது. அதன் பிறகு அவருக்கு நியமிக்கப்பட்டிருந்தது போன்றே சென்ற புதன்கிழமை காலை 11 மணியளவில் அவரின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இறுதி பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்த பிறகு அவரை தண்டனை நிறைவேற்ற கொண்டு செல்லும் போது ‘இறைவா! இவர் அநியாயமாக தண்டிக்கப்படுகிறார் என்றால் அநியாயக்காரர்கள் மீது உனது தண்டனையை உடனே இறக்கிவிடுவாயாக’ என்று கூட பிரார்த்தித்தேன்” என்று அந்தக் கடிதம் செல்கிறது.

மரண தண்டனைக்கு எதிராக உலகமே போராடிக் கொண்டிருக்கும்போது ஒரு குழந்தையை கொல்வதற்கு எந்த காரணமும் இல்லாத ஒரு பெண் சிரச் சேதம் செய்யப்பட்டிருக்கிறாள். மேற்படி கடிதத்தை படிக்கும்போது அவளது தரப்பை அவள் சொல்வதற்குக் கூட முறையான மொழிபெயர்ப்பு வசதிகள் இல்லை என்று தெரிகிறது. ஒரு சிறுமியாக அவள் இருந்த போது நடந்த இந்த சம்பவத்திற்காக ரிஸானா சிரத்சேதம் செய்யப்பட்டிருப்பது உலகின் மனித நீதிக்கும் அறத்திற்கும் விடப்பட்ட மிகப் பெரிய சவால்.

இஸ்லாம் கருணையையும் மன்னிப்பையும் வரலாறு முழுக்க போதித்திருக்கிறது. ஷரியத் என்பது ஒரு வாழ்க்கை முறை தத்துவம். ஆனால் இன்று அது கொடிய தண்டனைகளுக்கான வெறும் சட்ட புத்தகமாக சுருக்கப்பட்டுவிட்டது. சவுதி ஊடகங்களும் பொது மக்களும் கூட ரிஸானா மன்னிக்கப்பட வேண்டும் என்றே விரும்பினர். சவுதி இளவரசர் பெரும் தொகையை நஷ்ட ஈடாக வழங்க முன் வந்தும் அந்தக் குழந்தையின் பெற்றோர் மன்னிக்க மறுத்து விட்டனர்.

‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ என்ற பழிவாங்கும் தண்டனைகள் நாகரிக சமூகத்தின் நியதிகளை அவமதிக்கின்றன. போர்வெறி கொண்ட பழங்கால இனக்குழு சமூகங்களின் தண்டனை முறைகளை அப்படியே இன்று பின்பற்ற விரும்புவது என்ன நியாயம்? திருமணத்திற்கு அப்பாற்பட்ட பாலியல் உறவுகளுக்காக பெண்களை கல்லால் அடித்துக்கொல்வது, திருட்டுக் குற்றங்களுக்கு கையை வெட்டுவது, கசையடி, பிரம்படி, பொது இடத்தில் தலையை வெட்டுவது போன்ற கொடிய தண்டனைகளை சவுதி அரேபியா, மலேசியா, பாகிஸ்தான் போன்ற சில இஸ்லாமிய நாடுகளே பின்பற்றுகின்றன.

பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் இந்த தண்டனை முறைகளை கைவிட்டு விட்டன. சவுதி அரேபியா போன்ற நாடுகளில் அதிகாரத்தில் இருக்கும் ஜனநாயக விரோத மன்னராட்சியினர் பழமைவாத மத குருக்களின் துணையுடன் இத்தகைய கொடிய தண்டனைகளை தங்கள் அதிகாரத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர்.

வீட்டு வேலைகளுக்காக 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு பெண்கள் சவுதியில் பணிபுரிகின்றனர்.

பெரும்பாலானோர் ஆசிய நாட்டவர்கள். அவர்கள் கடும யான பாலியல் சுரண்டலுக்கும் உழைப்புச் சுரண்டலுக்கும் ஆளாகின்றனர். தங்கள் எஜமானர்களின் கருணையைத் தவிர அவர்களுக்கு எந்த சட்டப் பாதுகாப்பும் இல்லை. பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் பெண்கள் கள்ளக் காதல் குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்படும் சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

சவுதி போன்ற நாடுகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடாக குருதிப் பணம் கொடுத்து தண்டனையிலிருந்து தப்பிக்கும் வழக்கமும் இருக்கிறது. இந்த வகையில் பெரும் தொகை வசூலிக்கப்படுகிறது. பணம் கொடுக்க முடியாதவர்கள் தண்டனைக்கு ஆளாகிறார்கள்.

இந்தக் கொடிய தண்டனை முறைகள் இஸ்லாமிய சமூகத்திற்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த மனித சமூகத்திற்கே பெரும் அவமானம்.

-நன்றி: நக்கீரன்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

ஈகரை Re: ரிஸானா… பதற வைக்கும் கொடூரம் – மனுஷ்யபுத்திரன் கட்டுரை

Post by சதாசிவம் Mon Feb 18, 2013 10:33 am

பூலோக நரகம் சவூதி, இதே தவறை ஒரு அமெரிக்கப்பெண் செய்திருந்தால் பணம் வாங்கி அனுப்பியிருக்கும் இந்த அரசு.

இக்கட்டுரையை வெளியிடக்கூடாது என்று பல தமிழ் பத்திரிக்கைகள் மிரட்டப்பட்டன என்ற செய்தியை இணையத்தில் படிக்க நேர்ந்தது. மிகக்கொடுரமான தண்டனை முறையை இன்னும் இதுபோன்ற முட்டாள் அரசுகள் கடைபிடிக்கின்றன. தீவிரவாதம் செய்பவனை தூக்கில் இடுவதருக்கு இங்கு பல ஆண்டுகள் ஆகிறது, அதற்கு எதிராகவும் போராட்டம் செய்ய முட்டாள்கள் இங்குள்ளனர். கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் சட்டம் தான் சரி என்று வாதாடும் கூட்டம் இந்தியாவிலும் உள்ளது, தங்களுக்கு என்று திருமண சட்டம் வைத்து பாவிக்கும் இவர்கள், இதுபோன்ற தண்டனைச் சட்டங்களையும் தங்கள் மதத்தினர் மேல் திணிக்க வேண்டும். அப்போது தான் இந்த வேதனை புரியும். .



சதாசிவம்
ரிஸானா… பதற வைக்கும் கொடூரம் – மனுஷ்யபுத்திரன் கட்டுரை 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum