ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழையின் கையெழுத்து !நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .

3 posters

Go down

மழையின் கையெழுத்து !நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி . Empty மழையின் கையெழுத்து !நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .

Post by eraeravi Sun Feb 17, 2013 2:36 pm

மழையின் கையெழுத்து !
ஆங்கில மொழி பெயர்ப்புடன் !
SIGN OF RIAN HAIKUS

வெளியீடு நிவேதிதா 822, பெரியார் நகர் ,புதுக்கோட்டை .622003.
செல் 9443126025

நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி
விமர்சனம் கவிஞர் இரா . இரவி .

நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி இனிய நண்பர் .புன்னகையை முகத்தில் எப்போதும் அணிந்திருக்கும் பண்பாளர் .புதுக்கோட்டையின் இலக்கியக்கோட்டையாக திகழ்பவர் .புதுக்கோட்டையில் பிரமாண்ட இலக்கிய விழாக்கள் நடத்தி முத்திரை பதிப்பவர் .மேல் நிலைப் பள்ளியின் தாளாளராக இருந்து கொண்டு பல்வேறு இதழ்களிலும் எழுதி வரும் படைப்பாளி .

இவரது ஹைக்கூ கவிதைகள் மிகவும் புகழ் பெற்றவை .பட்டிமன்ற மேடைகளில் பலரால் குறிப்பாக தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களால் மேற்கோள் காட்டப் பட்ட ஹைக்கூ கவிதைகளை பேராசிரியர் எஸ் .நவநீதன் உதவியுடன் ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து மழையின் கையெழுத்து ! நூலாக வந்துள்ளது .கவியரசர் பாரதியின் வரிகளின் படி தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவிட வழி செய்துள்ளார் .

ஹைக்கூ கவிதை வடிப்பதில் தமிழ் படைப்பாளிகள் சளைத்தவர்கள் அல்ல என்பதை பறை சாற்றும் விதமாக வந்துள்ளது .பக்கத்திற்கு ஒரு ஹைக்கூ இடது புறம் தமிழில் வலது புறம் ஆங்கிலத்தில் உள்ளது .மிக நேர்த்தியான வடிவமைப்பு .

நூல் கிடைத்ததும் இனிய நண்பர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களை செல்பேசியில்அழைத்து பாராட்டி பேசியபோது இந்த நூலின் அடுத்த பதிப்பு ஓவியங்களுடன் அச்சாகி வருவதாக சொன்னார்கள் .இந்த நூல் இன்னும் சிறப்பாக அமையும் .பாராட்டுக்கள் .

ஒரு பானை சோற்றுக்கு சில சோறு பதம் போல நூலில் இருந்து சில மட்டும் உங்கள் ரசனைக்கு .இதோ !
இந்த ஹைக்கூ படித்தவுடன் படித்தவர்களுக்கு அவரவர் காதலி நினைவு கட்டாயம் வரும் .என்று அறுதி இட்டு சொல்லலாம் .

விழிகளில் ஊதி
தூசி எடுத்தாய்
துசி வெளியேற உள்ளே நீ .
.YOU BLEW INTO MY EYES
THE DUST FLEW OFF
YOU BLEW IN.

அரசுப் பேருந்தில் பயணம் செய்தவர்கள் அவசியம் பார்த்து இருப்பார்கள் .முதலுதவிப் பெட்டி மிக மோசமாக இருக்கும் .தற்போது சில பேருந்துகளில் அதுவும் இருப்பதில்லை .எள்ளல் சுவையுடன் படைத்த ஹைக்கூ .

பேருந்தில் இருக்கிற
முதலுதவிப் பெட்டி
இறக்கிற நிலையில் !

THE BUS HAS A FIRST AIID BOX
WHAT WILL HAPPEN
WHEN IT BECOMES MORIBOND ?

இந்த ஹைக்கூ பல்வேறு பட்டிமன்றங்களில் மேற்கோள் காட்டிட நானே கேட்டு இருக்கிறேன் .பட்டிமன்ற சுவைஞர்களுக்கும் , பட்டிமன்ற பேச்சாளர்களுக்கும் சொந்த அனுபவும் உண்டு .

பட்டிமன்றம் முடிந்து
தாமதமாக வீடு வந்தேன்
வழக்காடு மன்றம்!

THE LITERARY DEPATE OVER
REACHED HOME LATE
TO ACRIMONIOUS CHARGE - SHEETS.


இன்று மனிதத்தொல்லையை விட கொசுத்தொல்லை பெருகி விட்டது .நோய்களும் பெருகி வருகின்றது .

மருத்துவமனையில்
ஆரோக்கியமாக
கொசுக்கள் !

MOSQUITOES- THE ONLY
HEALTHY INMATES
OF HOSPITALS.

காதல் நினைவுகளை நாம் மறக்க நினைத்தாலும் மறக்க முடிவதில்லை .அதனை உணர்த்தும் அழகிய ஹைக்கூ .

துடைக்கத் துடைக்க
உன் நினைவுகள்
ஒட்டடையாய் !

LIKE STUBBORN COB- WEBS
YOUR MEMORIES
BAFFLE ALL SCRUBS.

எள்ளல் சுவையுடன் நம் ஊர் சாலைகள் பற்றி ஒரு ஹைக்கூ .

சிரிக்காமலே
குழி விழுகிறது
எங்களூர்ச் சாலைகளுக்கு !

DIMPLES APPEAR
ON OUR ROADS
EVEN WITHOUT SMILE

அரசு அலுவலங்களில் நடக்கும் லஞ்சம் பற்றி நேரடியாக இல்லாமல் குறியீடாக உள்ள நல்ல ஹைக்கூ ஒன்று .

நான்கு கால்களும்
பல கைகளுமாய்
அரசாங்க மேசைகள் !

JUST FOUR LEGS
BUT MANY HANDS
TABLES OF PUBLIC SERVANTS

இது வரை எந்த ஒரு கவிதையும் தாய் மொழியில் இருந்து மிகச்சரியாக பிற மொழியில் மொழி பெயர்க்கப்பட வில்லை என்பதே உண்மை .நாம் படித்துப் பார்த்தால் வேறுபாடு விளங்கும் .எந்த ஒரு மொழி பெயர்பாளருக்கும் படைப்பாளியின் மூலத்தை அப்படியே மொழி பெயர்ப்பில் கொண்டு வந்து விட முடியாது .அதனால்தான் அறிஞர்கள் பலர் தாய் மொழியில் சிந்தித்தார்கள் தாய் மொழியில் எழுதினார்கள் .
குழந்தையின் உள்ளத்தை படம் பிடித்துக் காட்டுகின்றார் .பாருங்கள் .

பட்டாம் பூச்சி
பிடித்துக் கொடுத்தேன்
இறக்கை முளைத்தது மகளுக்கு !

ஆனால் மகளுக்கு சிறகு முளைக்கும் .பட்டாம் பூச்சி சிறகை இழந்து விடும் .

CAUGHT A BUTTERFLY
GAVE IT TO THE KID
SHE GREWWINGS.

ஆங்கிலத்தில் ( DAUGHTER ) என்று வரவேண்டிய சொல் ( KID ) என்று வந்துள்ளதைப் பாருங்கள் ..

மொழி பெயர்ப்பில் இப்படி நிகழ்வது இயல்புதான் .அதனால்தான் காந்தியடிகள் திருக்குறளை இந்தியிலும் ஆங்கிலத்திலும் படித்து திருப்தி அடையாமல் திருக்குறளை மூல மொழியான தமிழில் படிக்க அடுத்த பிறவி இருந்தால் தமிழனாப் பிறக்க வேண்டும் ."என்று ஆசைப் பட்டார் .

அன்று காமராசர் காலத்தில் பெரும் பணக்காரர்கள் கல்விக்கு சேவை செய்ய வந்தார்கள் .ஆனால் இன்று பெரும் பணக்காரர்கள் பகல் கொள்ளை அடிப்பதற்காகவே கல்வித்துறைக்கு வருகின்றனர் என்பதை உணர்த்தும் ஹைக்கூ .

வயல்கள் அழித்துக்
கல்லூரி கட்டினார்கள்
நல்ல அறுவடை !

THEY FALLOWED THE LAND
BUILT COLLEGES
SECURED A GOOD HARVEST.

இன்பம் துன்பம் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை .துன்பம் வந்தால் மனம் கவலை கொள் ளாதீர்கள் என்ற வாழ்வியல் தத்துவம் குறியீடாக விளக்கும் ஹைக்கூ .

இரவின் வலிகள்
பொறுத்தால்
பகலின் பிரசவம் !

BEAR PAINS
AT NIGHT
THE DAY IS A NEW BIRTH .

ஜப்பானிய கவிஞர்களுக்கு தமிழ் கவிஞர்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை மெய்பிக்கும் விதமாக இயற்கையையும் ஹைகூவில் வடித்துள்ளார் .

இரவுக் கூட்டுக்குள்
நட்சத்திரக் குஞ்சுகள்
இறைதேடி அலையும் நிலா !

BIRDLING STARS
IN THE NESTING DARKNESS
THE MOON IS AFTER ITS PREY.

இந்த நூலைப் படித்து முடித்ததும் மொத்தத்தில் நந்தவனத்தில் நடந்து வந்த உணர்வு இனிய நண்பர் கவிஞர் தங்கம் மூர்த்திஅவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

மழையின் கையெழுத்து !நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி . Empty Re: மழையின் கையெழுத்து !நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .

Post by யினியவன் Sun Feb 17, 2013 2:55 pm

விமர்சன பகிர்வு அருமை இரவி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மழையின் கையெழுத்து !நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி . Empty Re: மழையின் கையெழுத்து !நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .

Post by eraeravi Sun Feb 17, 2013 9:19 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

மழையின் கையெழுத்து !நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி . Empty Re: மழையின் கையெழுத்து !நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .

Post by கோவிந்தராஜ் Mon Feb 18, 2013 8:24 am

நல்ல விமர்சன பகிர்வு ! நன்றிகள் கவிஞரே ! மகிழ்ச்சி


மழையின் கையெழுத்து !நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி . 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! மழையின் கையெழுத்து !நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி . 599303
மழையின் கையெழுத்து !நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி . 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! மழையின் கையெழுத்து !நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி . 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

மழையின் கையெழுத்து !நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி . Empty Re: மழையின் கையெழுத்து !நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .

Post by eraeravi Sun Mar 10, 2013 12:19 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

மழையின் கையெழுத்து !நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி . Empty Re: மழையின் கையெழுத்து !நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மழையின் மனதிலே ! நூல் ஆசிரியர் : கவிஞர் புதுயுகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கனவுச் சுவடுகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி ! . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கனவுச் சுவடுகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஒளியின் நெசவு ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
» நம்மை மீட்டும் வீணை ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி ! நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum