ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்!

2 posters

Go down

ஈகரை கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்!

Post by Powenraj Sat Feb 16, 2013 8:13 am

தொழில் நேர்மை எல்லாத் துறைகளிலும் குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாகஅநீதியை அம்பலப்படுத்த வேண்டிய சட்டத் துறையிலேயே இத்தகைய நேர்மையின்மை புகுந்துவிட்டது. இதற்கு அடிப்படைக் காரணம் படித்தவர்கள் மத்தியில் நாணயத்தையும், நேர்மையையும்விட, பதவியும் பணமும்தான் பிரதானம் என்கிற மனப்போக்கு மேலெழுந்து விட்டதுதான்.
-
அண்மையில், "2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீட்டில் சி.பி.ஐ. தரப்பில் வாதிடும் வழக்குரைஞர் ஏ.கே. சிங் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதற்குக் காரணம், இவர் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய "எதிரி'யான (குற்றஞ்சாட்டப்பட்டவர்)"யுனிடெக்' நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சஞ்சய் சந்திராவிடம், சி.பி.ஐ.-க்கு கிடைத்துள்ள தகவல்கள், அவரைக் குறுக்குவிசாரணை செய்வதற்கான கிடுக்கிப்பிடி போடும் கேள்விகள் குறித்து விவரித்துள்ளதாகத் தெரியவந்திருப்பதுதான்.
-
இருவரும் பேசியதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடலின் ஒலிப்பதிவு தற்போது தடயவியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல, இந்த வழக்கில் மற்றொரு"எதிரி'யான ஷாகித் பல்வாவுடன் சி.பி.ஐ. வழக்குரைஞர் பேசியுள்ளார் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இப்போதைய கவலையெல்லாம் சி.பி.ஐ. வழக்குரைஞர் கட்சி மாறியது எப்போது? இதுவரை நடைபெற்ற வழக்கின் போக்கில் இது எந்த அளவுக்குபாதிப்பை ஏற்படுத்தும் என்பதுதான்.
-
அரசு வழக்குரைஞர்கள்"எதிரி'க்கு ஆதரவாக மாறக் காரணம், அரசு தரும் சம்பளம் குறைவு என்பதாக ஒரு கருத்துநிலவுகிறது. "எதிரி'யின் வழக்குரைஞர் ஒரு மணி நேரத்துக்கு சில லட்சங்கள் சம்பளம் வாங்கும்போது, இவர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளம் குறைவு என்பதாகவும் கூறப்படுகிறது. சம்பளம் குறைவு என்பதற்காக விலைபோய்விடுவதா? பணத்தைவிட பதவியின் கௌரவம் முக்கியம் என்பதுகூடவா இந்த மெத்தப் படித்த மேதாவிகளுக்கும், அதிகாரம் படைத்த பொறுப்பில் இருப்பவர்களுக்கும் தெரியாமல் போய்விட்டது?
-
ரூ.1.76 லட்சம் கோடி வரை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில், "எதிரி'கள் எத்தகைய பணக்காரர்களாக இருப்பார்கள் என்பதும், இவர்கள் மிக அதிக சம்பளம் கொடுத்து வழக்குரைஞர்களை நியமிப்பார்கள் என்பதும் தெரிந்த ஒன்றுதானே? அவர்களுக்கு இணையாக அரசு வழக்குரைஞர்களுக்கும் சம்பளம் கேட்பது நியாயமாகுமா?
புலனாய்வில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கும்கூட சம்பளம் குறைவுதான். அவர்களும் விலைபோவது என்றால், என்ன ஆதாரங்கள் கிடைக்கும்? உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்தைவிடஅதிகமாக வழக்குரைஞர்கள்"2ஜி' அலைக்கற்றை வழக்கில் சம்பாதிக்கக்கூடும். அதற்காக, நீதிபதிகளும் விலைபோனால் என்ன ஆகும்?
-
மக்கள் பணம் கொள்ளை போகிறது, அவ்வாறு கொள்ளையடித்தவர்களை சட்டத்தின் கூண்டில் ஏற்றி தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்கிற தார்மிக ஆத்திரமும், கடமை உணர்வும் இல்லாதவர்களால் புலனாய்வும் செய்ய முடியாது, வழக்காடவும் முடியாது. சம்பளம் குறைவு என்பது ஒரு காரணம் அல்ல. தொழில் நேர்மையை மறக்கும் அளவுக்குப் பேராசை அதிகம் உள்ளவர்களை இதுபோன்ற பதவிகளில் அமர்த்துவதால் ஏற்படும் பாதிப்பு இது. இதற்குக் காரணம் அவர்களுக்குப் பரிந்துரைத்த அல்லது பதவி வாங்கிக் கொடுத்த அரசியல்வாதியாகத்தான் இருக்க முடியும்.
-
இதுபோல, எதிர்மனுதாரரின்"மறைமுக' வழக்குரைஞராக மாறும் அரசு வழக்குரைஞர்கள் சரியாக வாதிடவில்லை என்று விலக்கப்படுவது உண்டே தவிர,தற்போது வழக்குரைஞர் ஏ.கே.சிங் - சஞ்சய் சந்திரா உரையாடல் பதிவுபோல, யாரும் சிக்கியது இல்லை. இந்த விவகாரத்திலும், இது உண்மை என்று தடயவியல் ஆய்வில் தெரியவந்தால், இவர்மீது எத்தகைய நடவடிக்கையை "பார் கவுன்சில்' மேற்கொள்ளும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
இந்த விவகாரம், "2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீடு என்பதால் இந்திய அளவில் பேசப்படுகிறது. ஆனாலும் சாதாரண நிலைகளில், அரசு சாராத வழக்குகளிலும்கூட இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறக்கூடும். நீதியை நிலைநாட்ட வேண்டியவர்கள் விலைபோக நேர்வதும், சட்டத்தின் ஓட்டைகளைத் திறந்துவிட்டு குற்றவாளிகளைத் தப்ப விடுவதும் அரசு வழக்குரைஞர்களின் சாமர்த்தியமாகக் கருதப்பட்டால், அது மிக மோசமான விளைவுகளுக்கு வழிகோல நேரிடும்.
தப்பாட்டம் ஆடும் வீரருக்கு "மஞ்சள் அட்டை' காட்டவும், களத்தைவிட்டு வெளியேற்றவும் விளையாட்டுப் போட்டிகளில்"ஆட்டநடுவர்' இருப்பதைப்போல, தொழிலுக்குக் களங்கம் விளைவிக்கும் வழக்குரைஞர்களை, அவர்களது வாதத்தை வைத்தே அடையாளம் காணவும், கருப்புப் பட்டியலில் சேர்க்கவும்"பார் கவுன்சிலால்' மட்டுமே முடியும்.
- வழக்குரைஞர்கள் எதிர்க்கட்சியினருடன் நேரடியாகத் தொடர்பு கொள்வது தொழில் தர்மம் அல்லஎன்பது பார் கவுன்சிலின் விதிகளில் ஒன்று. ஏ.கே. சிங் அந்த தர்மத்தை மீறியிருக்கிறார் என்பது தெளிவு.
கருப்பு அங்கிக்குள் புகுந்துவிட்ட கருப்பு ஆடுகளை அடையாளம் கண்டு, நீதித்துறைக்கு வலிமை சேர்க்க வேண்டிய "பார் கவுன்சில்' பார்வையாளராக மாறிடாமல், இந்தப் போக்குக்கு முற்றுப்புள்ளிவைக்காவிட்டால், நேர்மையும், தொழில் தர்மமும் உள்ள பெருவாரியான வழக்குரைஞர்கள் அனைவருக்குமே களங்கம் கற்பிக்கப்படும் சூழல் உருவாகும். பார் கவுன்சிலில் அரசியல் கலக்காமல் இருப்பதும், அரசுவழக்குரைஞர்கள் நியமனங்களில் அரசியல்வாதிகளின் தலையீடு தவிர்க்கப்படுவதும்தான் இதற்கு நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்.
-
வையகம் காப்பவ ரேனும்-சிறு
வாழைப் பழக்கடை வைப்பவரேனும்
பொய்யகலத் தொழில் செய்தே-பிறர்
போற்றிட வாழ்பவர் எங்ஙணும் மேலோர்! -பாரதியார்
-
தினமணி


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஈகரை Re: கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்!

Post by யினியவன் Sat Feb 16, 2013 8:53 am

பாரதியார் சொன்னது போல் இன்று பொய்யகலத் தொழில் செய்து பிறர் போற்றிட வாழ்பவர் குறைந்து கொண்டே வருகிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வையகம் காப்பவ ரேனும் - சிறு
வாழைப் பழக்கடை வைப்பவரேனும்
பொய்கலந்து தொழில் செய்தே - பிறர்
தூற்றிட வாழ்பவர் எங்ஙணும் கீழோர்!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» இலவச ஆடுகள் திட்டத்துக்கு ரூ. 925 கோடி-7 லட்சம் பேருக்கு தலா 4 ஆடுகள்-ஆடுகளின் காதில் ஐடி கார்டு!
» அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
» கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள்
» மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன
» மின்னல் தாக்கி8 ஆடுகள் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum