ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகிற்கும் ஆரோக்கியத்திற்க ும் 'சப்போர்ட்டா' இருக்கும்...."சப்போட்டா!"

3 posters

Go down

அழகிற்கும் ஆரோக்கியத்திற்க ும் 'சப்போர்ட்டா' இருக்கும்...."சப்போட்டா!" Empty அழகிற்கும் ஆரோக்கியத்திற்க ும் 'சப்போர்ட்டா' இருக்கும்...."சப்போட்டா!"

Post by Powenraj Sun Feb 10, 2013 3:28 pm

வெப்ப மண்டலப் பழங்களில் சப்போட்டாவிற்கு த் தனிச் சிறப்புண்டு. இதன் தாயகம் மெக்சிகோ ஆகும். ஆங்கிலத்தில் ‘சப்போட்டா’
(sapota) என்றும் ‘சப்போடில்லா’ (sapodilla) என்றும் கூறப் படுகிறது. இதன் தாவர இயல் பெயர், ‘அக்ரஸ் சப்போட்டா’ (Achars sapota).. சப்போட்டேசியே (sapotceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. சப்போட்டா விற்கு, ‘அமெரிக்கன்புல் லி’ என்று ஒரு சிறப்புப்பெயர், செல்லப் பெயர் உண்டு.
-
* சீமை இலுப்பை:
‘சப்போட்டா’ என்ற ஆங்கிலப் பெயரையே பெரும்பாலும் தமிழில் சப்போட்டா என்று பேச்சு வழக்கில் சொல்லியும், எழுதியும் வருகி றோம். இதன் தூய தமிழ்ப்பெயர், ‘சீமை இலுப்பை’ ஆகும். இலுப்பைப் பழத்தைப் போல் உருவ முடையதால் இப்பெயர் வந்தது. ஆனால், இலுப்பைப் பழத்தை விட அளவில் பெரியது சப்போட்டா பழம்.
-
* பயிரிடப்படும் மாநிலங்கள்:
இந்தியாவில் சுமார் ஆயிரம்ஆண்டுகளாக சப்போட்டா பயிரிடப்படுகிறத ு. குஜராத்தில் அதிக பரப்பளவில் பயிரிடப்படுவதால ், குஜராத்திற்கு ‘சப்போட்டா மாநிலம்’ என்று ஒரு சிறப்புப் பெயர் உள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு , கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் கணிசமான பரப்பளவில் சப்போட்டா பயிரிடப்படு கிறது.
-
* வகைகள்:
சப்போட்டா பழத்தில் உருண்டை வடிவம், முட்டை வடிவம்போன் ற பல வகைகள் உண்டு. இதே போல், சிறியளவு, பெரிய அளவு கொண்டதும் உள்ளன.
இவற்றுள், சிறிய அளவு கொண்டது நாட்டு ரகங்கள். பெரிய அளவு கொண்டது, அதிக விளைவு தருவதாகும். இவை ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்ப ட்டவை ஆகும். இரண்டிலும், பெரும்பான்மையும ், ஒரே மாதிரியான சத்துக்கள் அடங்கி உள்ளன. ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்ப ட்ட உயர் விளைச்சல் தரும் வகைகள் கோல்கத்தா ரவுண்ட், பாதாம், கிரிக்கெட் பால், துவார புரி, கீர்த் திபத்தி, ஓவர் முதலியன ஆகும்.
-
* சத்துப் பொருட்கள்:
நாம் சாப்பிடும் நூறு கிராம் சப்போட்டாப் பழத்தில் கீழ்க்கண்ட அளவு சத்துப்பொருட்கள ் அடங்கியுள்ளன. புரதம் 1.0 கிராம், கொழுப்பு 0.9 கிராம், நார்ப்பொருள் 2.6 கிராம், மாவுப் பொருள் 21.4 கிராம், கால்சியம் 2*.1 மில்லி கிராம், பாஸ்பரஸ் 27.0 மி.கி, இரும்புச் சத்து2.0 மி.கி, தரோட்டின் 97 மைக்ரோகிராம், ரைபோஃபிளோவின் 0.03 மி.கி, நியாசின் 0.02மி.கி, வைட்டமின் சி 6.1 மி.கி.
-
* எப்படிச் சாப்பிடலாம்:
சப்போட்டா நன்கு பழுத்தபின், நன்கு கழுவிச் சுத்தம் செய்து, உள்ளி ருக்கும் கறுப்புநிற விதைகளைக் களைந்து விட்டு, சாப்பிட வேண்டும். பழங்களில் மிகு ந்த இனிப்புச் சுவை கொண்டது சப்போட்டா தான். பழக்கூழ், ஜாம், சிரெப், கா ண்டி முதலியன தயாரித்துச் சாப்பிட லாம். சப்போட்டா பழக்கூழுடன், காய்ச்சின பால்சேர்த்து சப்போட்டா கீர்’’ செய்து பருகலாம். சப்போட்டா பழத்தைக் கொண்டுபாயசம், கேசரி, பர்பி முதலியன தயாரித்து இனிப்புப் பலகாரமாக சாப்பிடலாம்.
-
* மருத்துவப் பயன்கள்:
நமது சருமத்தை மிருதுவாக்கி, அழகுக்கு சப்போர்ட் கொடுப்பதில் சிறந்தது சப்போட்டா! அதிக ஈரப்
பதத்தைத் தன்னுள் கொண்ட சப்போட்டா பழத்தின் அழகு மற்றும் ஆரோக்கிய பலன்களைப் பார்க்கலாம். ஒல்லியாக இருப்பவர்களுக் கு புறங்கை மற்றும் முழங்கையில் நரம்பு புடைத்து கொண்டு, முண்டு முண்டாகத் தெரியும். இதற்கு தீர்வு தருகிறது சப்போட்டா.
தோல் மற்றும் கொட்டை நீக்கிய சப்போட்டா பழத்துடன் 4 டீஸ்பூன் பால் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதில் 2 டீஸ்பூன் எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் வெள்ளரி விதை பவுடர் கலந்து, குளிப்பதற்கு முன் கை, முழங்கை, விரல்களில் நன்றாகப்பூசுங்க ள். சப்போட்டா வில் உள்ள ஈரப்பதம், கைகளை பொலிவாக்குவதுடன ் பூசினாற்போலவும் காட்டும்.
-
ஒட்டிய கன்னங்கள், மொழு மொழு வென பிரகாசிக்க வேண்டுமா? சிறிது சப்போட்டா சதையுடன் ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர், அரைடீஸ் பூன் சந்தன பவுடர் கலந்து கிரீம் போல குழைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகம் முதல் கழுத்து வரை இட, வலமாக பூசுங் கள். தடவிக் கொண்டிருக்கும்ப ோதே இந்த பேஸ்ட் உலர்ந்துவிடும். அதனால் லேசாக தண்ணீரைத் தொட்டு 5 முதல் 6 முறை தேயுங்கள். பிறகு சூடான நீரில் முகத்தை க் கழுவுங்கள். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் பளபளவென மின்னுமே கன்னம் ‘எனக்கு ஆப்பிள் கன்னம்தான். ஆனாலும் பளபளப்பு இல்லையே..” என்கிறவர்கள், ஒரு டீஸ்பூன் கனிந்த சப் போட்டா பழ விழுதுடன் தலா ஒரு டீஸ்பூன் பால் மற்றும் கடலை மாவு கலந்து முகத்தில் ‘பேக்’ போட் டு, பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை இப்படி செய் தால் ‘ப்ளீச்’ செய்தது போல முகம் பளிச் சென்று இருக்கும்.
-
கொத்து கொத்தாக முடி கொட்டுகிற தே..’ என்று கவலைப்படுகிறவர் களுக்கு கைகொடுக்கிறது ‘சப்போட்டா கொட்டை தைலம்’. ஒரு டீஸ்பூன் சப் போட்டா கொட்டை பவுடருடன், ஒரு கப் நல்லெண்ணெய், கால் டீஸ்பூன் மிளகுத்தூள் கலந்து அடுப்பில் வைத்து கை பொறுக்கும் சூட்டில் காய்ச்சுங்கள். ஆறியதும் வடிகட்டுங்கள். இந்த தைல த்தை பஞ்சில் நனைத்து, தலை யில் தேய்த்து, அரை மணி நேரம் ஊறவிடுங்கள். பிற கு கடலைமாவு, சீயக்காய் தேய்த்து குளியுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி குளித்து வந் தால், ஒரே மாதத்தில் தலை மேல் பலன் கிடைக் கும்.
கண்டிஷனராகவும் கலக்குகிறது சப்போட்டா. காய வைத்த சப்போட்டா தோல் 100 கிராம், சப்போட்டா கொட்டை 50 கிராம். இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் கொட்டை எடுத்த புங்கங்காய் 100 கிராம், கொட்டை எடுத்த கடுக்காய் 10 கிராம், உலர்ந்த செம்பருத்தி பூ 50 கிராம், வெந்தயம் 100 கிராம்.. என எல்லாவற்றையும் சேர்த்து மெஷினில் அரைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது சீயக்காய்க்கு பதிலாக இந்தபவுடரை தேய்த்துக் குளித்தால், நுனி முடி பிளவு குறைவதுடன், முடியின் வறட்டுத் தன் மை நீங்கி, பளபளப்பு கூடும்.
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

அழகிற்கும் ஆரோக்கியத்திற்க ும் 'சப்போர்ட்டா' இருக்கும்...."சப்போட்டா!" Empty Re: அழகிற்கும் ஆரோக்கியத்திற்க ும் 'சப்போர்ட்டா' இருக்கும்...."சப்போட்டா!"

Post by Powenraj Sun Feb 10, 2013 3:34 pm

ஒரு டீஸ்பூன் பயத்தமாவுடன்அரை டீஸ்பூன் சப்போட்டா பழ விழுது, 4 துளி விளக்கெண்ணெய் கலந்து, குளிப்பதற்கு முன் உள்ளங்கை, விரல், நகம், பாதங்க ளில் தடவி, குளியுங்கள். தோலின் வறட்சி நீங்கி, மெழுகுபோல மிளிரும் பாதங்கள்!சப்போட ்டா பழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொழுப்பை நீக்குகிறது. வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூல நோய் மற்று ம் மலச்சிக்கலுக்கு ம் தீர்வு தந்து, சிறந்த நோய் நிவாரணியாக செயல்படுகிறது. உடம்பு சூட்டை தணித்து, குளிர்ச்சி தருகிறது. 100 கிராம் சப்போட்டா பழத்தி ல் 28 மி.கிராம் கால்சியமு ம், 27 மி.கிராம் பாஸ் பரஸூம் இருக்கிறது. தினமும் 2 சப் போட்டா பழம் சாப்பிட்டால் எலும்புகள் வலுப்பெறும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். சரும பளபளப்பு கூடும்.
-
பித்தத்தால் ஏற்படும் வாந்தி, மயக்கத்தை சப்போட்டா போக்கும். சப் போட்டா பழத்துடன் ஒரு டீஸ்பூன் சீரகத்தை சேர்த்து சாப்பிட, பித்தம் நீங்கும். சப்போட்டா பழ ஜூஸூடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கல ந்து சாப்பிட்டால் சளித்தொல்லை நீங்கும். சப்போட்டா உடம்பில் உள் ள தேவையில்லாத கொழுப்பை குறைத்துவிடும். சப்போட்டா பழத் தை அப்படியே சாப்பிட பிடிக்காத வர்கள், இரண்டு பழத்துடன், ஒரு டம்ளர் பால்சேர்த்து, மிக்ஸியில் அடித்து மில்க் ஷேக் செய்து சாப்பி டலாம்.
2 சப்போட்டா பழத்துடன், ஒன்றரை டீஸ்பூன் டீ தண்ணீரை கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கி ன் போது ரத்தம் கலந்து வெளியேறு வது குணமாகும். இரவெல்லாம் தூக்கம் இல்லாமல் தவிக்கிறவர்க ள், சப்போட்டா ஜூஸை குடித் துவிட்டு படுத்தால், அடுத்த நொடி தூக்கம் கண்களை தழுவும். பனைவெல்லம், சுக்கு , சித்தரத்தை மூன்றும் தலா ஒரு சிட்டிகை எடுத்து அதனுடன் ஒரு சப்போட்டா பழ பேஸ்ட்டை கலந்து லேகி யம்போல சாப்பிட்டால், திடீர் ஜுரம் வந்தவேகத்தில் காணா மல் போய்விடும்.
-
சப்போட்டா பழத்திலுள்ள சிலசத்துப்பொருட்கள ும், வைட்டமின்க ளும், இரத்த நாளங்களைச் சீராக வைக்கும்குணம் கொண்டவை. இவை, இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும். கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர் களுக்கு இது இயற்கை மருந்தாகும். தினம் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நலன் பயக்கும்.
-
இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்தி ற்கு உண்டு என அமெரிக்காவில் மேற்கொண் ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது .-
சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும்.
சப்போட்டா பழக்கூழ், கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும், தாகத்தையும் தணிக்கும் தன்மையது.
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள ், இரவில் படுக்கைக்குப் போகும் முன்ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான நித்திரைதான்.
ஆரம்பநிலை காசநோய் உள்ளவர்கள் சப்போட்டா பழக்கூழ்குடித்த ு, ஒரு நேந்திரன் பழமும் தின்று வர, காசநோய் குணமாகு ம்.
-
மூலநோய் உள்ளவர்களுக்கு, குறிப்பாக இரத்த மூலம் உள்ளவர்களுக்கு சப்போட் டாபழம் நல்ல எளிய இயற்கை மருந்து.
பித்தத்தைப் போக்கும் குணம் சப்போட்டா பழத்திற்கு உண்டு. சப்போ ட்டா பழத்தைத் தின்று, பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும். பித்த மயக்கத்திற்கும் இது நல்மருந்து.
சப்போட்டா கூழுடன், சிறிது சுக்கு, சித்தரத்தை பொடித்திட்டு, கொஞ்சம் கருப்பட்டியும் பொடித்திட்டு நன்கு கா ய்ச்சிக் குடித்தால், சாதாரண காய்ச்ச ல் குணமாகும்.
-
சப்போட்டா பழத்தை அடிக்கடிசாப்பிட்டு வருபவர் களுக்கு, குடல் புற்று நோய்ஏற்படாது.
இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும்.
சப்போட்டா கூழுடன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும்.
சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டுவந்தா ல், மேனியைப் பளபளப்பாக வைக்கும்.
-
விதை2விருட்சம்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

அழகிற்கும் ஆரோக்கியத்திற்க ும் 'சப்போர்ட்டா' இருக்கும்...."சப்போட்டா!" Empty Re: அழகிற்கும் ஆரோக்கியத்திற்க ும் 'சப்போர்ட்டா' இருக்கும்...."சப்போட்டா!"

Post by மஞ்சுபாஷிணி Sun Feb 10, 2013 8:16 pm

அருமையான பயனுள்ள பகிர்வு.

சாப்பிட மறந்த சப்போட்டாவை வீட்டுக்கு வந்ததும் முதலில் சாப்பிட்டுட்டு தான் இந்த பகிர்வு எழுதறேன்...

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அழகிற்கும் ஆரோக்கியத்திற்க ும் 'சப்போர்ட்டா' இருக்கும்...."சப்போட்டா!" 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அழகிற்கும் ஆரோக்கியத்திற்க ும் 'சப்போர்ட்டா' இருக்கும்...."சப்போட்டா!" Empty Re: அழகிற்கும் ஆரோக்கியத்திற்க ும் 'சப்போர்ட்டா' இருக்கும்...."சப்போட்டா!"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum