ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரீ சார்ஜ் செய்தால் தண்ணீர்!

2 posters

Go down

ரீ சார்ஜ் செய்தால் தண்ணீர்! Empty ரீ சார்ஜ் செய்தால் தண்ணீர்!

Post by Powenraj Sun Feb 03, 2013 10:46 am

'த ண்ணீருக்கு விலைவைப்பது குறித்து நாம் யோசிக்க வேண்டும்’ - இப்படி திருவாய் மலர்ந்தார் நமது நிதி அமைச்சர் ப.சிதம்பரம். இது அவரது சொந்தக் கருத்து அல்ல. உலக வங்கியின்; உலக வர்த்தகக் கழகத்தின்; சர்வதேச நாணய நிதியத்தின் கருத்து. உலகின் இயற்கை வளங்களை எல்லாம் லாப வெறியுடன் சூறையாடி முடித்துவிட்ட இவர்களின் குறி, இப்போது தண்ணீர்!
-
ஏற்கெனவே தென் ஆப்பிரிக்​காவில் தண்ணீர் தனியார்மயம் ஆக்கப்பட்டது. உங்களுக்குத் தண்ணீர் வேண்டும் என்றால், உங்கள் அக்கவுன்ட்டை ரீ-சார்ஜ் செய்ய வேண்டும். அக்கவுன்ட்டில் பணம் இருக்கும் வரை, குழாயில் தண்ணீர் வரும். அக்கவுன்ட்டில் பேலன்ஸ் தீர்ந்துவிட்டால், தண்ணீர் பாதியில் நின்றுவிடும். அடுத்து எப்போது டாப்-அப் செய்கிறீர்களோ, அப்போது​தான் தண்ணீர். 'குடிக்கத் தண்ணீர் வாங்கக் காசு இல்லாதவன் எல்​லாம் எதுக்கு உயிர் வாழ​ணும்?’ என்பதுதான் உலக​மயத்தின் கருத்து. இப்போது ப.சிதம்பரத்தின் கருத்தும்கூட.
-
தாகத்துக்கான தண்ணீரை லாபத்துக்கானதாக மாற்றும் இந்த அபாயகரமானப் போக்கு குறித்து விரிவாகப் பேச, 'முந்நீர் விழவு’ என்ற நிகழ்ச்சி நடக்கிறது. 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் சார்பாக சென்னை லயோலா கல்லூரியில் ஜனவரி 26-ம் தேதி நடந்த இந்தக்கருத்தரங்கில் தண்ணீர் அரசியல் குறித்து பல்வேறு நிபுணர்களும் பேசினார்கள்.
-
'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் இதுபற்றி நம்மிடம் பேசினார். 'மத்திய அரசு, தண்ணீரைத் தனியார்மயமாக்க ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. 'தேசிய நீர்க் கொள்கை வரைவு 2012’ என்ற திட்ட வரைவை இந்திய நீர்வள அமைச்சகம் சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது. 'இந்தியாவில் மிகவும் அடி​மட்ட விலையில் விற்கப்படும் ஒரே பண்டம் தண்ணீர். இதை மாற்றி அமைக்க வேண்டும்’ என்று சொன்ன திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக்சிங் அலு​வாலியாவின் வழிகாட்டுதலில்இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.
-
உலக வர்த்தகக் கழகத்தின் காட் (GATT) ஒப்பந்தம், தண்ணீரை வர்த்தகப் பண்ட​மாக வரையறுக்கிறது. ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்குத் தண்ணீரை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதைத் தடை செய்யக் கூடாது என்கிறது காட் ஒப்பந்தம். அதாவது சமூக நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று எல்லாம் பேசாமல், தண்ணீர் உள்ளிட்ட இயற்கை வளங்களை எவ்வளவு வேண்டும் என்றாலும் உறிஞ்சிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்கிறது அந்த ஒப்பந்தம். அது மட்டுமல்ல... நீர்க் கழிவு மேலாண்மை, குடிநீர் விநியோகம், நிலத்தடி நீர் மேலாண்மை, விவசாய நீர் மேலாண்மை, அணைகள் கட்டுமானம், தண்ணீர்வியாபாரம் மற்றும் தண்ணீர் போக்குவரத்து போன்றவை பணம் ஈட்டும் நல்வாய்ப்புகள் என்​கிறது காட் ஒப்பந்தம். ஏற்கெனவே பல நாடுகளில் இது அமலில் இருக்கிறது. இந்த வர்த்தகத்தை இவர்கள் 'தாகம்தீர்க்கும் சேவை’ என்று சொல்வதுதான் கொடுமை.
-
தண்ணீர் மூன்று வகைகளில் தனியார்மயமாக்கப்படுகிறது. ஒன்று, ஒட்டுமொத்தமாகத் தண்ணீர் விநியோகத்​தையும் மேலாண்மையையும் தனியாரிடம்ஒப்படைத்துவிடுவது. இது இங்கிலாந்தில் நடை​முறையில் இருக்கிறது. இரண்டாவது, நீர் விநியோகம் மற்றும் மேலாண்மையை நீண்ட காலத்துக்குத் தனியார் நிறுவனங்களுக்குக் குத்தகைவிடுவது. இந்த முறை பிரான்ஸ் நாட்டில் பின்பற்றப்படுகிறது. மூன்றாவது, நீர் மேலாண்மை நிர்வாகத்தை முழுமையாகத் தனியாரிடம் ஒப்படைத்துவிடுவது. உலகமயத்தை வரவேற்கும், காட்ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்ட நாடுகள் தண்ணீர் தனியார்மயமாதலில் மேலே உள்ள மூன்றில் ஒன்றை ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்கப்​படுகின்றன.
-
தண்ணீரின் மீதான மனிதனின் உரிமை என்பது எந்த அரசாங்கமும் சட்டமும் வழங்கியது அல்ல. அது இயற்கை நமக்கு வழங்கிய, பிரிக்க இயலாத உரிமை. ஆனால், 'நிலத்தடி நீரின் மீது நில உரிமை​யாளருக்கு உரிமை இல்லை’ என்கிறது புதிய வரைவுக் கொள்கை. மின்சாரம் போலவே தண்ணீருக்கும் பயன்படுத்தும் அளவுக்கு ஏற்பக் கட்டணம் விதிக்க வேண்டும் என்றும் சொல்​கிறது.
-
ஆண்டுதோறும் சுத்தமான குடிநீர் கிடைக்காமல், உலகம் எங்கும் ஐந்து வயதுக்கு குறைவான 21 லட்சம்குழந்தைகள் இறந்துபோகிறார்கள். எய்ட்ஸ், மலேரியா போன்ற கொடிய நோய்களால் கொல்லப்​படுபவர்களின் எண்ணிக்கையைவிட, குடிநீர் பிரச்னையால் கொல்லப்படுபவர்கள் அதிகம். ஐ.நா-வின் கணக்குப்படி, உலகில் ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 200 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்​குறையால் அவதிப்படுகின்றனர்.
-
தண்ணீர் தனியார்மயமானால், அது மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே சென்ற​டையும். இப்போதே நகரங்களின் குடிநீர் ஆதாரம் கேன் வாட்டர் மூலம் முழுவது​மாக தனியார்மயமாகிவிட்டது. ஒட்டுமொத்த இந்தியாவில் தண்ணீரையும் தனியார்மயப்படுத்தத் துடிக்​கிறார்கள். இதற்கு எதிராகக் கருத்து அளவில் ஒரு தெளிவைப் பெறுவதற்காக, இந்தக் கருத்தரங்கத்தை நடத்துகிறோம். மாபெரும் மக்கள் போராட்டங்கள் மூலமாக மட்டுமே இந்த அபாயத்​தைத் தடுத்து நிறுத்த முடியும்'' என்றார்.
-
இன்னொரு உலகப் போர் நடந்தால், அது தண்ணீருக்காகத்தான் இருக்கு என்று சொன்னது நிஜமாகிவிடுமோ?
-
- பாரதி தம்பி
ஜினியர் விகடன்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ரீ சார்ஜ் செய்தால் தண்ணீர்! Empty Re: ரீ சார்ஜ் செய்தால் தண்ணீர்!

Post by Guna Tamil Mon Feb 04, 2013 2:43 pm

கடைசி வரைக்கும் எந்த தண்ணின்னு சொல்லவேஇல்ல
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும்
» 15 நிமிடம் சார்ஜ் செய்தால் ஒரு வாரத்திற்கு பயன்படுத்தலாம்: புது வித பற்றரி கண்டுபிடிப்பு
» அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ
» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
» ஒரு பக்கக் கதைகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum