ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்

+4
Muthumohamed
அருண்
ஹர்ஷித்
பாலாஜி
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்   Empty விஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்

Post by பாலாஜி Fri Jan 25, 2013 1:06 pm

விஸ்வரூபம் படம் சாதாரணமாக வந்திருந்தால் இந்த அளவு கவனிக்கப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. காரணம், அத்தனை சுலபத்தில் வசீகரிக்காத அதன் கதை!

அமெரிக்காவில் ஆரம்பிக்கிறது கதை. பிராமணப் பெண் பூஜாகுமார், பி.எச்.டி படிப்பதற்காக, அதிக வயசு வித்தியாசம் உள்ள கமலை திருமணம் செய்வதாக ஒப்பந்தம் போட்டு அமெரிக்கா வருகிறார். ஆனால் வந்த இடத்தில் கம்பெனி பாஸுடன் கள்ளக் காதல். நடன ஆசிரியரான கணவருக்கும் அவரது மாணவி ஆன்ட்ரியாவுக்கும் கள்ளத் தொடர்பு இப்பதாக சந்தேகம் பூஜாவுக்கு. இது உண்மையாக இருந்தால் கமலை வெட்டிவிடுவது எளிதாக இருக்கும் என்று ப்ரைவேட் டிடெக்டிவ்வை நியமிக்கிறார். அப்போதுதான் கமல் ஒரு முஸ்லிம் என்பது அம்பலமாகிறது. அதேநேரம் கமலை பின் தொடரும் டிடெக்ட்டிவ் கொல்லப்படுகிறார். அப்பாவி கமலும், வில்லங்க பூஜாவும் வில்லன்கள் கையில் மாட்டிக்கொள்கிறார்கள்.

கமல் திடீரென வீராவேசமாக வழக்கம்போல் ஹீரோ, வில்லன்களை அடித்து நொறுக்க, தனது அப்பாவிக் கணவனா இப்படி என்று பூஜாகுமார் விழிக்க, ஆக்‌ஷன் படமாக வேறு தளத்தில், ஆப்கன் தலிபான் பின்னணியில் விரிகிறது. ப்ளாஷ்பேக்கில் அல்கொய்தாவில் பயிற்சி பெற்ற தீவிரவாதியாக வருகிறார் கமல். ஆனால் உண்மையில் அவர் ரா அதிகாரி. அமெரிக்க எப்பிஐக்கு உதவுகிறார். அமெரிக்காவை பழிவாங்க நியூயார்க் நகரையே அழிக்க புறாக்களைப் பயன்படுத்தி அணுகுண்டு வைக்கும் தலிபான்கள் திட்டத்தை எப்பிஐயுடன் சேர்ந்து கமல் எப்படி முறியடிக்கிறார் என்பது மீதிக்கதை! கமல் நன்றாக நடித்திருக்கிறார்... பிரமாதப்படுத்தியிருக்கிறார் என்பதெல்லாம் ஸ்வீட் இனிப்பாக இருக்கிறது என்று சொல்வது அபத்தத்துக்கு இணை!. மனுஷன் அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். முகத்தில் தெரியும் வயதின் ரேகைகள்தான் கவலை தருகிறது. ஆனால் அதற்கேற்ப கதையை அமைத்துக் கொண்டதுதான் கமல் ஸ்பெஷல்!. பூஜா குமார், ஆன்ட்ரியா இருவருமே சிறப்பாக நடித்துள்ளனர். படத்தில் தெரிந்த பிற முகங்கள் சேகர் கபூர், நாசர் மட்டும்தான். இது வரையிலும் தமிழ்த் திரையில் காட்டப்படாத நியூயார்க் நகரின் ஏனைய இடங்கள் எல்லாம் படமாக்கியுள்ளார்கள். பார்க்காதவர்கள், அட நியூயார்க் இப்படியும் இருக்குமா என்று ஆச்சரியப்பட்டுப் போவார்கள். ஆப்கானிஸ்தான் என்று படமாக்கப்பட்டுள்ள காட்சிகள் அப்படியே நிஜத்தை பிரதிபலித்திருப்பது போலிருக்கின்றன. இதுவரை தலிபான்கள் பற்றி செய்திகளாக, கட்டுரைகளாகப் படித்த அத்தனை விவரங்களையும் நுணுக்கமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் கமல்.

சண்டைக் காட்சிகள் எது நிஜம் எது க்ராபிக்ஸ் என்று தெரியாத அளவு, ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது. பின்னணி இசைக்கு முக்கியத்துவம் தேவையான இந்த படத்திற்கு, அதைத் தரத் தவறியிருக்கிறார் சங்கர் எசான் லாய். ஓளிப்பதிவு அருமை. எடிட்டிங் செய்தவர் கொஞ்சம் தூங்கி விட்டார் போலிருக்கிறது. இன்னும் கொஞ்சம் ஷார்ப்பாக்கியிருக்கலாம். அந்த புறாக்காட்சிகள், ஒரு மெக்சிகன் படத்திலிருந்து தழுவல் போலிருக்கே கமல் சார்! முழுக்க முழுக்க ஆப்கானிஸ்தான், நியூயார்க் என்று என்று காட்சிகள் நிறைந்த இந்த படத்தில் தமிழகத்தை பற்றி எங்கே வருகிறது என்று தேட வேண்டியுள்ளது. ஒரே ஒரு காட்சியில் வில்லன் (தலிபான் தலைவர் முல்லா ஒமர்) தமிழ்நாட்டில் ஒரு வருடம் ஒளிந்து இருந்த போது தமிழ் கற்றுக்கொண்டேன் என்கிறார். அத்தோடு மதுரை, கோவை, அகமதாபாத் என்று பஸ்ஸுக்கு ஆள் கூப்பிடுவது போல் வரிசையாக சில ஊர் பெயர்களை சொல்கிறார். மற்றபடி ஆப்கானிஸ்தானையும், தலிபான்களையும் இவ்வளவு விவரமாக அமெரிக்கப் படங்களில் கூட பார்த்திருக்க முடியாது. ஒரு காட்சியில் பின் லேடன் கூட தோன்றுகிறார். ஆனால் அவரது பெயரை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாகத்தான் சொல்கிறார்கள். ஆளையும் தூரத்தில்தான் காட்டுகிறார்கள். இந்த கூட்டத்தில், தமிழுக்கு தெரிந்த ஒரே முகம் நாசர் மட்டும்தான். பின்லேடன் பற்றி ஒபாமா சொல்லும் போது, பிண்ணனியில் கமல், ஆண்ட்ரியாவின் உரையாடல் இயல்பாக இருக்கிறது.

ரூ. 95 கோடி செலவில் படத்தைத் தயாரித்து அதை தெலுங்கு, இந்தி என டப்பிங் செய்த கமல், ஆங்கிலத்திலும் டப் செய்திருந்தால் அமெரிக்கர்கள் நிச்சயம் கொண்டாடியிருப்பார்கள். அவர்களுக்கு மிகவும் பிடித்தமான சப்ஜெக்ட் அல்லவா இது!. நியூயார்க் நகரை அல் கொய்தா வைக்கும் அணுகுண்டிலிருந்து காப்பாற்றியதற்காக இந்தியர்களுக்கும் மரியாதை கூடியிருக்கும். விஸ்வரூபம் 2 இந்தியாவில் தொடரும் என்று முடித்திருந்தாலும், அது அமெரிக்காவில் தொடரட்டும் என்றுதான் அட்வான்ஸ் கொடுத்திருப்பார் போலிருக்கிறது ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்போன். சராசரி ஹாலிவுட் படங்களை விட நன்றாகவே படமாக்கியுள்ளார் கமல். நடுவில் கொஞ்சம் கத்தரியை போட்டிருக்கலாம். கமலுக்கு இது விஸ்வரூபம்தான்!


-தட்ஸ்தமிழ்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

விஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்   Empty Re: விஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்

Post by ஹர்ஷித் Fri Jan 25, 2013 1:36 pm

விரைவில் படம் அனைத்து தடைகளையும் தாண்டி வெளிவரும் என்று காத்திருக்கிறேன்.திரு.கமலஹாசனின் அடுத்த பரிமானத்தியும் காணவேண்டி ஆவலாய் உள்ளேன்.
எப்போதும் போல அப்பாவித்தமிழனாய்

அட படத்துல பாடலே இல்லையாமே?உண்மையா பாலாஜி அண்ணா?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

விஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்   Empty Re: விஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்

Post by பாலாஜி Fri Jan 25, 2013 1:45 pm

ஹர்ஷித் wrote:விரைவில் படம் அனைத்து தடைகளையும் தாண்டி வெளிவரும் என்று காத்திருக்கிறேன்.திரு.கமலஹாசனின் அடுத்த பரிமானத்தியும் காணவேண்டி ஆவலாய் உள்ளேன்.
எப்போதும் போல அப்பாவித்தமிழனாய்

அட படத்துல பாடலே இல்லையாமே?உண்மையா பாலாஜி அண்ணா?

தெரியவில்லையே ... சோகம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

விஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்   Empty Re: விஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்

Post by அருண் Fri Jan 25, 2013 2:00 pm

28 ஆம் தேதி தெரியும் குதிரை ரேஸ் இல் ஓடி ஜெயிக்குமா? என்று!
அனைவரும் எதிர்பார்ப்புடன் பார்த்துகொண்டு இருக்குறோம்..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

விஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்   Empty Re: விஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்

Post by Muthumohamed Fri Jan 25, 2013 3:36 pm

முஸ்லீம்களை எங்கும் தாக்குவதாக தெரியவில்லையே பிறகு எதற்கு தடை விதித்தார்கள்



விஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்   Mவிஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்   Uவிஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்   Tவிஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்   Hவிஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்   Uவிஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்   Mவிஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்   Oவிஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்   Hவிஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்   Aவிஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்   Mவிஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்   Eவிஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்   D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

விஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்   Empty Re: விஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்

Post by ARR Fri Jan 25, 2013 9:33 pm

கமல் இயக்கத்தை நெனச்சாதான் டரியலா இருக்கு.. ஹே ராம்..!


விஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்   0018-2விஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்   0001-3விஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்   0010-3விஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்   0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

விஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்   Empty Re: விஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்

Post by சிவா Sat Jan 26, 2013 10:15 am

சூப்பருங்க


விஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்   Empty Re: விஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்

Post by பாலாஜி Sat Jan 26, 2013 11:28 am

தொலைக்காட்சி உரிமை ஜெயா டிவியிலிருந்து விஜய் டிவிக்கு கைமாறியதால் இந்த தடை என்று தட்ஸ்தமிழில் இப்போதான் படித்தேன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

விஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்   Empty Re: விஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்

Post by கரூர் கவியன்பன் Sat Jan 26, 2013 11:45 am

பாலாஜி wrote:தொலைக்காட்சி உரிமை ஜெயா டிவியிலிருந்து விஜய் டிவிக்கு கைமாறியதால் இந்த தடை என்று தட்ஸ்தமிழில் இப்போதான் படித்தேன்
சோகம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

விஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்   Empty Re: விஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்

Post by ராஜா Sat Jan 26, 2013 3:06 pm

பாலாஜி wrote:தொலைக்காட்சி உரிமை ஜெயா டிவியிலிருந்து விஜய் டிவிக்கு கைமாறியதால் இந்த தடை என்று தட்ஸ்தமிழில் இப்போதான் படித்தேன்
ஓஹோ , இது தான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணமா ,...... அடபாவிங்களா எது எதுக்கெல்லாம் இப்ப அரசியலை பயன்படுத்துகிறார்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்   Empty Re: விஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum