ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு . விமர்சனம் கவிஞர் இரா .இரவி

4 posters

Go down

பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Empty பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு . விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Wed Jan 23, 2013 8:43 pm


பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !

நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .

விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

மானமிகு பதிப்பகம் 3/20 A.ஆதி பராசக்தி நகர் ,திருப்பாலை ,மதுரை .14.
விலை ரூபாய் 60.

நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .B.S.N.L நிறுவனத்தில் பணி
புரிந்துக் கொண்டே இலக்கியப் பணியும் செய்து வருபவர் .விடுதலை, உண்மை
பத்திரிக்கைகளில் படைத்தது வரும் படைப்பாளி .முனைவர்
வெ .இறையன்பு அவர்களின் படைப்புகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்
.முனைவர் பட்டநெறியாளர் பேராசிரியர் கலைமாமணி
கு .ஞானசம்பந்தன் .தியாகராசர் கல்லூரியில் நடைபெற்ற முனைவர் பட்ட தகுதித்
தேர்வு அன்று சென்று இருந்தேன் .பலரும் பாரட்டினார்கள் நூல் ஆசிரியர் வா
.நேருவை .

நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு என்னுரையில் மிக வித்தியாசமாக
எழுதி உள்ளார் .

" நான் பிறவிக் கவிஞன் அல்ல .சரஸ்வதி நாவில் வந்து குடியேறினால்தான்
கவிதை வரும் என்று நம்புபவனும் அல்ல .என்னைப் பாதித்த ,எனக்கு
சரிஎனப்பட்ட கருத்துக்களைக் கூற இக்கவிதை வடிவத்தை எடுத்திருக்கிறேன்
.கொடுத்திருக்கிறேன் ."

பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் ! நூலின் தலைப்பே வித்தியாசமாக
உள்ளது .நூலின் தலைப்பில் உள்ள கவிதையில் ஊரில் திருவிழா என்றால்
வீட்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் ஆயிரம் வீடுகளில் வசூல் செய்து
கரகாட்டம், பட்டிமன்றம் ,டாஸ்மாக் என்று தட புடலாக செலவு செய்வார்கள்
.ஆனால் ஊரில் உள்ள பள்ளியை கண்டு கொள்ள மாட்டார்கள் .அதனை உணர்ந்து
எழுதியுள்ள கவிதை நன்று .

பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !

ஊரில் உள்ள
ஒரே ஒரு பள்ளிக்கூடம்
கரும்பலகையும்
இல்லாமல்
ஒழுகும் கூரையோடு
கேட்பாரற்றுக் கிடக்கிறது
ரொம்ப நாளாய் !

இறுதி மூச்சு உள்ளவரை மனித சமுதாயத்திற்காக உழைத்திட்ட மாமனிதர் தந்தை
பெரியார் பற்றிய கவிதை மிக நன்று .

மனிதருக்கெல்லாம் மாமருந்தாய் !

ஈரோட்டுப் பூகம்பமே !
நீ மறைந்து ஆண்டுகள் பல ஆனாலும்
நீ ஏற்படுத்திய அதிர்வலைகள்
கடல் அலைகளாய்
ஓயாமல் உலகெங்கும் !

நூல் ஆசிரியர் வா .நேரு பகுத்தறிவாளர் கழகத்தில் மாநிலத் தலைவராக உள்ள
பகுத்தறிவாளர் என்பதால் ,சமரசத்திற்கு இடமின்றி மனதில் பட்ட கருத்துக்களை
துணிவுடன் புதுக் கவிதையாக வடித்துள்ளார் .எதையும் ஏன் ? எதற்கு ? எப்படி
? எங்கு? எதனால் ?என்று தந்தை பெரியார் வழியில் சிந்தித்த காரணத்தால்
நன்கு படைத்துள்ளார் .

அறிஞர் அண்ணா பற்றிய கவிதை நன்று .

உனது நூல்களே முறியடிக்கும் !

தந்தை பெரியாரின் தலைமகனே பிரிந்து விட்டார் !
தந்தையும் மகனும் அய்யாவின் கொள்கைக்கு கொள்ளி வைப்பார் !
என்று எதிர்பார்த்த மூதறிஞர்களின் எதிர்பார்ப்பில்
மண்ணை அள்ளிப் போட்ட மகத்தான சரித்திரமே !

அறிஞர் அண்ணா தமிழக முதல்வரானதும் எனது ஆட்சியே தந்தை பெரியாருக்கு
காணிக்கை என்று சொல்லி பெரியாரின் கொள்கைகளை சட்ட வடிவமாக்கியவர் .சுய
மரியாதை திருமணத்திற்கு சட்ட வடிவம் தந்தவர் அறிஞர் அண்ணா.அறிஞர்
அண்ணாபற்றிய மதிப்பீடு மிக நன்று .
மூட நம்பிக்கைகளை சாடி பல கவிதைகள் உள்ளது .பதச் சோறாக சில மட்டும்
உங்கள் பார்வைக்கு !

ஒரு பக்கம் சந்திரனைச் சென்றடைந்த
சந்திரயான் விண்கலம் !
மறு பக்கம் இருபத்தி எழு பெண்டாட்டி வீடுகள்
அதில் ஒரு வீடான தனுசுவிலிருந்து
இன்னொரு வீடான மகரத்திற்கு
குரு பகவான்
போகின்றார் .
குரு பெயர்வது கிடக்கட்டும்
இவர்களின் புத்தி பெயர்வு
எப்போது ?

மாணவர் தேர்வில் ராம ஜெயம் எழுதியதைக் கண்டு எழுதிய கவிதை ஒன்று !

நம் மூளையில் திணிக்கப்பட்டுள்ளது
திணிக்கப்பட்ட குப்பைகளை தூக்கி
வீசாமல்
முன்னேற்றம் என்பது
முயற்கொம்பே !

காதலைப் பாடாமல் கவிதை நிறைவு பெறாது .நூல் ஆசிரியர் வா .நேருவும்
காதலைப் பாடி உள்ளார் .

ஆதலினால் காதலிப்பீர் !

காதல் வலு சேர்க்கும் !
காதல் சமூகத்தின்
சாதி நோய் போக்கும் !
காதல் சமூகத்தின்
மதப் பொய்மை நீக்கும் !
ஆதலினால் காதலிப்பீர் !

தீபாவளி மூட நம்பிக்கை கதையைச் சாடி உள்ளார் .கவிதைகள் வசன நடையில்
இருந்தாலும் சிந்திக்க வைத்து வெற்றி பெருகின்றது.பாராட்டுக்கள்.

பிள்ளையார் (சுழி ) அழி !

பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு !
என நம்மை ஏமாற்றி
என்றும் ஏதுமறியா
சுழியன்களாய் நம்மை
வைத்திருக்க சூது செய்யும்
பிள்ளையார் ஊர்வலச்
சதி அறிவோம் !

என் கை பட்டால் நோய்கள் குணமாகும் என்று சொல்லி ஏமாற்றி பணம் பறிக்கும்
சாமியார்களின் மோசடிகளை தோலுரிக்கும் விதமாக ஒரு கவிதை இதோ !

பக்தி வியாபாரிகள் !

அறிவியல் மருந்துகளை
மறுத்து வெறும் பிராத்தனையால்
ஓடி விடும் ! நோய்கள் !
என மன நோயாளிகளாய்மனிதர்களை மாற்றிவிடும்
அயோக்கியத்தனம் !

மூட நம்பிக்கையில் மூழ்கி கிடக்கும் சமுதாயம் திருந்தும் கவிதைகள் படைத்த
நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு அவர்களுக்கு பாராட்டுக்கள்
.தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் .இந்நூலை தரமாக அச்சிட்டு மானமிகு
பதிப்பகத்தின் முதல் வெளியீடாக வெளியிட்ட பகுத்தறிவாளர் நண்பர் பா
.சடகோபன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Empty Re: பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு . விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by பூவன் Wed Jan 23, 2013 8:53 pm

ஒரு பக்கம் சந்திரனைச் சென்றடைந்த
சந்திரயான் விண்கலம் !
மறு பக்கம் இருபத்தி எழு பெண்டாட்டி வீடுகள்
அதில் ஒரு வீடான தனுசுவிலிருந்து
இன்னொரு வீடான மகரத்திற்கு
குரு பகவான்
போகின்றார் .
குரு பெயர்வது கிடக்கட்டும்
இவர்களின் புத்தி பெயர்வு
எப்போது ?

மூடநம்பிக்கையின் சாடல் நன்று சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Empty Re: பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு . விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by Aathira Wed Jan 23, 2013 9:08 pm

பதச்சோறுகள் பசியைக் கிளப்பி விட்டன. ருசித்து அருந்த நல்ல பதம்.


பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Aபங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Aபங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Tபங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Hபங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Iபங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Rபங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Aபங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Empty Re: பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு . விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by கரூர் கவியன்பன் Wed Jan 23, 2013 9:12 pm

" நான் பிறவிக் கவிஞன் அல்ல .சரஸ்வதி நாவில் வந்து குடியேறினால்தான்
கவிதை வரும் என்று நம்புபவனும் அல்ல .என்னைப் பாதித்த ,எனக்கு
சரிஎனப்பட்ட கருத்துக்களைக் கூற இக்கவிதை வடிவத்தை எடுத்திருக்கிறேன்
.கொடுத்திருக்கிறேன் ."
சூப்பருங்க மிக அருமை
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Empty Re: பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு . விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Sun Mar 10, 2013 12:21 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Empty Re: பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு . விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இறையன்பு படைப்புகளில் தன்னம்பிக்கையும் மனிதநேயமும் நூல் ஆசிரியர் : முனைவர் வா. நேரு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» சூரியக் கீற்றுகள் (கவிதைகள்) நூலாசிரியர் : முனைவர் கவிஞர் வா. நேரு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» சூரியக் கீற்றுகள் (கவிதைகள்) நூலாசிரியர் : முனைவர் கவிஞர் வா. நேரு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வான் தொட்டில் ! நூல் ஆசிரியர் : காவல் உதவி ஆணையர், கவிஞர் முனைவர் ஆ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum