ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெல்லி பலாத்காரம் - சத்குருவின் பார்வை ! கண்டிப்பாக படியுங்கள் !!

+6
தர்மா
மாணிக்கம் நடேசன்
சதாசிவம்
அபிரூபன்
கே. பாலா
krishnaamma
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

டெல்லி பலாத்காரம் - சத்குருவின் பார்வை ! கண்டிப்பாக படியுங்கள் !! Empty டெல்லி பலாத்காரம் - சத்குருவின் பார்வை ! கண்டிப்பாக படியுங்கள் !!

Post by krishnaamma Fri Jan 04, 2013 8:06 pm

டெல்லி பலாத்காரம் - சத்குருவின் பார்வை ! கண்டிப்பாக படியுங்கள் !! Img1130104029_1_1

23 வயதான ஒரு இளம் பெண்ணை 6 பேர் சேர்ந்து மிகக் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தேசம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் மூர்க்கத்தனமான, மிருகத்தனமான தாக்குதலால் அந்தப் பெண்ணிற்கு கடுமையான உள்காயங்களுடன், மூளைச் சேதமும், நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்ட நிலையில், 13 நாட்கள் போராட்டத்திற்குப் பின் அவர் உயிர் இழந்தார்.

இந்நிலையில், அனைத்துத் தரப்பு இந்தியர்களும் இக்கொடூரத்தை செய்த அந்த 6 நபர்களுக்கும் உயர்ந்த பட்ச தண்டனையாக விரை நீக்கம் செய்ய வேண்டும் அல்லது தூக்கில் போட வேண்டும் என்று ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தத் தீர்வு சரியானதாகத் தெரிந்தாலும், சட்ட ஒழுங்கினால் மட்டுமே நம் சமுதாயத்தில் வேர் விட்டு பரவியிருக்கும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியுமா? “இல்லை” என்கிறார் சத்குரு. “கணக்கெடுப்புகள், 96% பாலியல் பலாத்காரங்கள் வீட்டின் நான்கு சுவற்றுக்குள் நடப்பதாகச் சொல்கின்றன. இது சட்டத்தின் முன் வருவதேயில்லை. அதனால் இப்பிரச்சனையை சட்ட ஒழுங்கினால் தடுக்க முடியாது, “உடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நம் மனநிலையால்” நிகழ்கிறது என்கிறார் சத்குரு.

ஈஷா யோகா மையத்தில் நடந்த சத்சங்கத்தில் இந்தக் கேள்வியை ஒருவர் சத்குருவிடம் எழுப்ப, பாலியல் பலாத்காரம் பற்றியும், இது ஏன் நிகழ்கிறது, இதைத் தடுப்பதற்கு வழிகள் என்ன என்றும் சத்குரு சொன்னதலிருந்து சில உங்களுக்காக...

ஏன் பாலியல் பலாத்காரம்?

பலாத்காரம் செய்வதற்கு பாலியல் தூண்டுதல் ஒரு காரணம் என்றாலும், பாலுணர்வு மட்டுமே இதற்குக் காரணம் அல்ல. ஏதோ ஒன்றை அடைய வேண்டும் என்ற உந்துதலால் இது ஏற்படுகிறது. ஒன்றை அடைய வேண்டும் என்கிற வெறிக்கு பல காரணங்கள் உண்டு. ஆண்கள், அதிலும் இளைஞர்களின் மனதில், பெண்களை ஒரு போகப்பொருளாக, உடைமையாக்கிக் கொள்ளக் கூடிய பொருளாக சித்தரித்து இருப்பது இன்று எல்லா சமூகங்களிலும் நடைபெறும் அடிப்படைத் தவறு. ஒரு பெண் என்பவள் சுய அறிவோ, மனமோ, விருப்பு வெறுப்போ இல்லாத ஒரு ஜடம் என்ற எண்ணம் எங்கோ அடிமனதில் வேரூன்றி இருக்கிறது. சில இடங்களில் இது விழிப்போடு விதைக்கப் பட்டிருக்கிறது, பல இடங்களில் விழிப்பில்லாமல் இந்த எண்ணம் ஊடுறுவி இருக்கிறது. எது எப்படியோ, இந்த எண்ணம் மனிதர்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது.

இதெல்லாம் போதாதென்று, இன்று கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட மிகப் பிரபலமான ‘கற்பழிக்கும்’ வீடியோ கேம்கள் இருக்கிறதாம். இதில் மிகப் பிரபலமான ஒரு வீடியோ கேமில், ஒரு பெண்மணி தன்னுடைய இரு மகள்களோடு இரயில் நிலையத்தில் இரயிலுக்காகக் காத்திருக்கிறார். அந்தப் பெண்னை எப்படி பலாத்காரம் செய்வது என்பதே விளையாட்டு. இதில் வெற்றி அடைந்துவிட்டால், விளையாட்டின் அடுத்த நிலையாக இரு மகள்களில் ஒருவர் கிடைப்பார். இந்த வீடியோ கேமை விலைக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் இது விற்றும் தீர்ந்துவிட்டது.

இரகசியமாக பலர் வீடுகளிலும் அலுவலகங்களிலும் இவ்விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். குரூரமான, சீக்குப்பிடித்த ஒரு உலகை ஊட்டி வளர்த்துவிட்டு, இது போன்ற சம்பவங்கள் நிஜத்தில் நடக்கக் கூடாது என்றால், அது சாத்தியமாகுமா என்ன? இப்படிப்பட்ட மனநிலையில் நாம் இருக்கும் வரை, இது போன்ற சம்பவங்கள் நடக்கும், நடக்கத்தான் செய்யும்.

நமது தலைநகரத்தில், ஒரு பேருந்தில் இந்த பலாத்காரம் நடந்திருப்பதால் பெரும் குற்றம் என்று திக்கெட்டிலும் கதறுகிறார்கள். காட்டுத் தீப்போல் மக்களிடையே ஆக்ரோஷமும் எதிர்ப்பும் எழும்பியிருக்கிறது. நிச்சயமாக இது தேவைதான், ஆனால் இந்த சம்பவம் ஊர் பேர் தெரியாத ஒரு இடத்திலோ குக்கிராமத்திலோ நடந்திருந்தால் புள்ளிவிவரங்களில் மட்டுமே இருந்திருக்கும். புகார் செய்ய எவரும் முன்வரவில்லை என்றால், புள்ளிவிவரங்களில்கூட காணாமல் போயிருக்கும்.

தொடரும் ........


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டெல்லி பலாத்காரம் - சத்குருவின் பார்வை ! கண்டிப்பாக படியுங்கள் !! Empty Re: டெல்லி பலாத்காரம் - சத்குருவின் பார்வை ! கண்டிப்பாக படியுங்கள் !!

Post by krishnaamma Fri Jan 04, 2013 8:08 pm

டெல்லி பலாத்காரம் - சத்குருவின் பார்வை ! கண்டிப்பாக படியுங்கள் !! Img1130104029_2_1

பலரின் எண்ணத்தில், பெண் என்றாலே சில உடல் அங்கங்கள்தான். மார்பு, தொப்புள், உடல் வளைவுகள், நீள முடி... இவையெல்லாம் சேர்ந்ததுதான் ஒரு பெண் என்கிற எண்ணம் பலர் மனதில் உரக்க ஒலிக்கிறது. ஒரு பெண், வெறும் உடல் அங்கங்களின் சேர்க்கையாக உங்கள் எண்ணத்தில் வியாபித்திருப்பது ஏன்? இது ஆண்களிடம் மட்டும்தான் காணப்படுகிறது என்றில்லை. பெண்களும் அப்படித்தான் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

இக்குற்றத்திற்கு தண்டனை வேலை செய்யுமா?

மக்களின் கவனமும், புரிதலும் உடல் சார்ந்ததாக இருப்பதுதான் இப்பொழுது இருக்கும் அடிப்படை பிரச்சனையே. நம்முடைய புரிதலும் உணர்தலும் கொஞ்சமாவது இந்த உடலைத் தாண்டி செல்லும் என்றால் இது போன்ற அசம்பாவிதங்கள் குறைந்துவிடும். குற்றம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், தண்டனை மூலமாக குற்றத்தை கட்டுப்படுத்துவது முடியாத காரியம். 10 - 20 சதவிகித மக்கள் குற்றம் செய்கிறார்கள், அவர்கள் அத்தனை பேரையும் தண்டிப்பது நடைமுறைக்கு ஒத்துவராத விஷயம். ஒரே ஒரு சதவிகித மக்கள் மட்டும் குற்றம் செய்தால், அவர்களுக்கு தண்டனை கொடுத்து நிலைமையை சரி செய்யலாம். ஆனால் 20 சதவிகித மக்களை தூக்கிலிட வேண்டுமா என்ன? அப்படிச் செய்தால் அது பாலியல் பலாத்காரத்தை விட கொடியதாகிப் போகும்.

தண்டனை கொடுத்தால், குற்றம் இல்லாமல் செய்துவிடலாம் என்று நினைக்கிறீர்கள். ஆனால் அதிக முன்யோசனையோடு சாதுர்யமாக குற்றங்களை செய்யத் துவங்குவார்கள். அதிக முன்யோசனை தேவைப்படுவதால், குற்றத்தின் எண்ணிக்கை வேண்டுமானால் சற்றுக் குறையலாம். ஆனால் இப்படிப்பட்ட எண்ணங்கள் மனதில் சதா ஓடிக் கொண்டே இருக்கும்போது, எப்போது வாய்ப்புக் கிடைக்கிறதோ, அப்போது இது நிஜத்தில் அரங்கேறும் என்பது மட்டும் நிச்சயம்.

ஒரு கட்டாயம் பல கட்டாயங்களுக்கு மூலமாகிறது!

ஒரு பெண்ணையோ ஆணையோ அல்லது ஒரு குழந்தையையோ கட்டாயத்திற்கு உள்ளாக்கி அவர்களுக்கு எதிராக செய்யும் ஒரு செயல், வன்முறைக்கும் குற்றத்திற்கும் சமம். கட்டாயத்தின் பேரில் செய்யப்படும் செயலுக்கு இன்று நாம் உடன்படுகிறோம் என்றால், அதிலிருந்து நிச்சயமாக இன்னொன்று முளைக்கும். நம் வீட்டிலிருந்துதான் இது துவங்குகிறது.

ஒரு குழந்தையை நீங்கள் கட்டாயப்படுத்தி உணவு உண்ணச் செய்ய முடியும் என்றால், நாளைக்கே கட்டாயப்படுத்தி பாலியல் குற்றமும் செய்ய முடியும்தானே? குற்றங்கள் இப்படித்தான் துவங்குகின்றன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்குத் தீர்வு?

குற்றவாளிகள் எல்லாம் வேற்று கிரகங்களில் இருந்து குதித்தவர்கள் அல்ல. இன்னும் சொல்வதென்றால், நீங்கள் தினமும் இவர்களுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இவர்கள் உங்கள் பிள்ளைகள், கணவன்மார்கள், அண்ணன்கள், தம்பிகள்தான். இவர்கள் மிக நல்லவர்களாக இருக்கலாம், ஆனால் யாரும் இவர்களை கவனிக்காத பட்சத்தில், முற்றிலும் வேறுவிதமாக இவர்கள் செயல்படக் கூடும்.

இது மாற வேண்டும் என்றால், இதற்கு தனி மனித மாற்றம் மிக மிக முக்கியம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதில் நேரமும், முயற்சியும் செலவிடத் தயங்கினால், இன்றிருக்கும் நிலையை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். காலப் போக்கில், இதை விட மோசமான சூழ்நிலைகளையும் கூட சந்திக்கும் நிலை ஏற்படும். 'நீங்கள் யார்' என்பதை உங்களை‌ச் சுற்றி இருப்பவர்களோ, அவர்களின் மதிப்பீடுகளோ, அபிப்பிராயங்களோ முடிவு செய்யக் கூடாது. ஒவ்வொரு குழந்தையும் இப்படிபட்ட சூழ்நிலையில் வளரும் வாய்ப்பை பெற்றோர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், அதுமட்டுமின்றி யாரையும் பிரித்துப் பார்க்காமல் அனைவரையும் சேர்த்துக் கொள்ளும் உணர்வோடு குழந்தைகள் வளர வேண்டும்.

இந்த தனி மனித மாற்றத்தை ஆன்மீகம் உண்டாக்குகிறது. உடலையும் தாண்டிய பரிமாணங்கள் வாழ்வில் இருப்பதை ஆன்மீகம் நமக்குத் திறந்து காட்டுகிறது. அதனால் உடல் தாண்டிய பரிமாணத்தை உணர்வதே இதற்கான ஒரே தீர்வு.

நன்றி வெப் துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டெல்லி பலாத்காரம் - சத்குருவின் பார்வை ! கண்டிப்பாக படியுங்கள் !! Empty Re: டெல்லி பலாத்காரம் - சத்குருவின் பார்வை ! கண்டிப்பாக படியுங்கள் !!

Post by கே. பாலா Fri Jan 04, 2013 8:10 pm

உடலையும் தாண்டிய பரிமாணங்கள் வாழ்வில் இருப்பதை ஆன்மீகம் நமக்குத் திறந்து காட்டுகிறது. அதனால் உடல் தாண்டிய பரிமாணத்தை உணர்வதே இதற்கான ஒரே தீர்வு.
சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

டெல்லி பலாத்காரம் - சத்குருவின் பார்வை ! கண்டிப்பாக படியுங்கள் !! Empty Re: டெல்லி பலாத்காரம் - சத்குருவின் பார்வை ! கண்டிப்பாக படியுங்கள் !!

Post by krishnaamma Fri Jan 04, 2013 8:16 pm

கே. பாலா wrote:
உடலையும் தாண்டிய பரிமாணங்கள் வாழ்வில் இருப்பதை ஆன்மீகம் நமக்குத் திறந்து காட்டுகிறது. அதனால் உடல் தாண்டிய பரிமாணத்தை உணர்வதே இதற்கான ஒரே தீர்வு.
சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆமாம் பாலா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டெல்லி பலாத்காரம் - சத்குருவின் பார்வை ! கண்டிப்பாக படியுங்கள் !! Empty Re: டெல்லி பலாத்காரம் - சத்குருவின் பார்வை ! கண்டிப்பாக படியுங்கள் !!

Post by அபிரூபன் Fri Jan 04, 2013 8:20 pm

அருமையான பதிவு சூப்பருங்க அருமையிருக்கு


டெல்லி பலாத்காரம் - சத்குருவின் பார்வை ! கண்டிப்பாக படியுங்கள் !! Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

டெல்லி பலாத்காரம் - சத்குருவின் பார்வை ! கண்டிப்பாக படியுங்கள் !! Empty Re: டெல்லி பலாத்காரம் - சத்குருவின் பார்வை ! கண்டிப்பாக படியுங்கள் !!

Post by சதாசிவம் Sat Jan 05, 2013 7:46 am

பக்குவமானவர்களுக்குப் புரியும் பயனுள்ள பதிவு,


சதாசிவம்
டெல்லி பலாத்காரம் - சத்குருவின் பார்வை ! கண்டிப்பாக படியுங்கள் !! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

டெல்லி பலாத்காரம் - சத்குருவின் பார்வை ! கண்டிப்பாக படியுங்கள் !! Empty Re: டெல்லி பலாத்காரம் - சத்குருவின் பார்வை ! கண்டிப்பாக படியுங்கள் !!

Post by மாணிக்கம் நடேசன் Sat Jan 05, 2013 8:34 am

நல்ல கருத்து, அனைவரும் உணர வேண்டிய உன்னத படைப்பு.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

டெல்லி பலாத்காரம் - சத்குருவின் பார்வை ! கண்டிப்பாக படியுங்கள் !! Empty Re: டெல்லி பலாத்காரம் - சத்குருவின் பார்வை ! கண்டிப்பாக படியுங்கள் !!

Post by தர்மா Sat Jan 05, 2013 9:55 am

சில சமயம் இப்படி அறிவுரை சொல்லும் சாமியார்களே இது போன்ற போகத்தில் தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்பது தான் நிதர்சன உண்மை.


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

டெல்லி பலாத்காரம் - சத்குருவின் பார்வை ! கண்டிப்பாக படியுங்கள் !! Empty Re: டெல்லி பலாத்காரம் - சத்குருவின் பார்வை ! கண்டிப்பாக படியுங்கள் !!

Post by ஜாஹீதாபானு Sat Jan 05, 2013 2:04 pm

நல்ல பகிர்வு நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டெல்லி பலாத்காரம் - சத்குருவின் பார்வை ! கண்டிப்பாக படியுங்கள் !! Empty Re: டெல்லி பலாத்காரம் - சத்குருவின் பார்வை ! கண்டிப்பாக படியுங்கள் !!

Post by dhilipdsp Sat Jan 05, 2013 2:06 pm

சூப்பருங்க
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

டெல்லி பலாத்காரம் - சத்குருவின் பார்வை ! கண்டிப்பாக படியுங்கள் !! Empty Re: டெல்லி பலாத்காரம் - சத்குருவின் பார்வை ! கண்டிப்பாக படியுங்கள் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» இதை கண்டிப்பாக படியுங்கள்
» நுகர்வோருக்கு விழிப்புணர்வு தேவை! - கண்டிப்பாக படியுங்கள் :)
» உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா? கண்டிப்பாக இதை படியுங்கள்.
» ஆண்மையப் பார்வை Vs பெண்ணியப் பார்வை – ஆறு வித்தியாசங்கள் ப்ளீஸ்…
» சூழ்நிலை சிரீயஸ்...நீங்கள் சீரியஸ் ஆக வேண்டாம்! கொரோனாவை எதிர்கொள்ள சத்குருவின் டிப்ஸ்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum