ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைக்காக யாகமா? (பகுத்தறிவு சிறுகதை)

2 posters

Go down

மழைக்காக யாகமா? (பகுத்தறிவு சிறுகதை) Empty மழைக்காக யாகமா? (பகுத்தறிவு சிறுகதை)

Post by Powenraj Tue 1 Jan 2013 - 12:42

இங்கர்சால் - அந்த பகுத்தறிவு நாளிதழில் வேலைக்கு சேர்ந்து ஒரு வாரம் ஆகி இருந்தது. அவனுக்கு அந்த பகுத்தறிவு நாளிதழ் அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்ததில் பெருமையும், பெருமிதமும் இருந்தது. இங்கர்சாலின் கனவு அந்த நாளிதழில் எழுத வேண்டும் என்பது. அவன் பெயர்? ஏதோ ஒரு சாமியில் முடியும். குலதெய்வப் பெயர் தான். வாலிப வயதில் இங்கர்சால் என்று புனைப்பெயர் வைத்து கொண்டான்.
:-
அவனை இந்த பத்திரிகை ஆசிரியர் -வேலைக்கு நேர்முக தேர்வு செய்த போது, "இந்த பேருக்காகவே உங்களை வேலைக்கு சேர்த்து கொள்ளலாம். உலக பகுத்தறிவாளர் ஒருவர் எங்கள் பத்திரிகையில் வேலைக்கு இருப்பது எங்களுக்கு பெருமை இல்லையா?" என்று சிரித்தவர், தொடர்ந்தார்."நம்ம பத்திரிகை பகுத்தறிவு பத்திரிகை என்பதை மறந்துடக்கூடாது. தயவு தாட்சண்யமின்றி மூட நம்பிக்கைகளை, பார்ப்பனியத்தை விமர்சிக்கணும்". இந்த ஒரு வாரமாய் சின்ன சின்ன பகுத்தறிவு விஷயங்களை - நாளிதழுக்காக எழுதுகிறான்.
:-
நேற்றைய தினம் வந்த ஒரு செய்தி அவன் பகுத்தறிவை சீண்டி பார்த்தது.. அந்த செய்தி... "பவானி சாகர் அணையில் மழை வேண்டி சிறப்பு யாகம் என்கிற செய்தி. யாகத்தால் மழையை வரவழைக்க முடியுமா?"இதென்ன மடத்தனமான அணுகுமுறை" என்கிற தலைப்பில் - யாக செய்தியை இணைத்து ஒரு சிறு கட்டுரையை எழுதி பொறுப்பாசிரியரிடம் தந்தான். "தம்பி. நல்லா எழுதி இருக்கீங்க. ஆனா இன்னும் வீரியத்தோட எழுதணும். நாம் எழுதிய கட்டுரையை யாகம் நடத்தியவன் வாசிக்க நேர்ந்தால் - அடுத்து இந்தமாதிரியான மூட நம்பிக்கை பக்கம் போகாத அளவுக்கு வீச்சு இருக்கணும். அது அவர்களின் உச்சந்தலையில் ஓங்கி ஒரு குட்டு வைச்ச மாதிரி இருக்கணும். அது தான் அய்யா பாணி. இப்போ பாருங்க நா எழுதறேன்" என்று பொறுப்பாசிரியார் எழுத துவங்கினார்.
:-
அடிக்கடி ஆசிரியரின் பேச்சில், "நாம எழுதுவது - மூடசமூகத்தின் தலையில் குட்டு வைப்பது போல இருக்கவேண்டும்" என்பார். அப்படி பேச்சினுடே சொல்வது அவர் இயல்பு போலும். "மழைக்கு யாகமாம். அசிங்கம், அசிங்கம்" என்று தலைப்பிட்டு எழுத துவங்கினார். "பவானி சாகர் அணையில் மழை வேண்டி சிறப்பு யாகமாம்" மூடநம்பிக்கையான இத்தகைய செயல்களை படிக்கும் பொழுது விஞ்ஞான உலகில் தான் இருக்கிறோமா? அல்லது வேத காலத்தில் இருக்கிறோமா என்று தெரியவில்லை. முதலில் ஒரு கேள்வி.
:-
யாகம் நடத்தி, பூசை போட்டு மனு போட்டு தான் வருண பகவான் மக்களுக்குத் தேவையான மழையைக் கொடுக்க வேண்டுமா? ஒழுக்கமான, நாணயமான நல்லறிவு படைத்தவனாக இருந்தால் மக்களுக்கு தேவையான மழையைப் பருவ காலத்துக்கேற்பக் கொடுக்கவேண்டாமா? இதற்கு முன்பு இது மாதிரி யாகங்கள் நடத்தப்பட்டதே அப்பொழுதெல்லாம் ஏன் மழை பொழியவில்லை என்று ஒரு பொழுதாவது சிந்தித்த துண்டா? கலச ஆவாதனம்; நவக்கிரக ஆவா தனம் - சப்த சமுத்திர ஆவாதனம் போன்ற பூசைகள் விடிய விடிய நடத்தப்பட்டதாம்!
:-
வெட்கக்கேடு - யாகத்திற்கு பிறகு, மழை உடனே கொட்டு கொட்டு என்று கொட்டித் தீர்த்து, நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடி விட்டதா? மழை ஒரு சொட்டுக்கூட பெய்யவில்லையே. ஆண்டவனுக்கு சக்தி போய்விட்டதா" என்று முடித்திருந்தார். ஆசிரியர், ஆசிரியர் தான். அருமையாக எழுதிவிட்டார். நாம் எடுத்து தந்த ஒரு செய்தியை கட்டுரையாக்கி கொடுத்து விட்டாரே. "தம்பி.இம்மாதிரியான செய்திகளை எடுத்து கொடுங்க. என்னால் எல்லா தினசரிகளையும் வாசிக்க நேரமில்லை. முட்டாள் மத நம்பிக்கையாளர்களின் மண்டையில் ஓங்கி குட்டு வைத்து கொண்டே இருப்போம்" என்றார்.
:-
இங்கர்சாலுடன் பணிபுரியும் மற்றொரு தோழர், "பரவாயில்லை. பொறுப்பாசிரியர் அவ்வளவு சீக்கிரம் யாரையும் பாராட்ட மாட்டார். அதற்குள் நீங்க பாராட்டு வாங்கிட்டிங்க" என்றார். முன்பொருமுறை ஒரு தேவாலயத்தின் வெளிப்புறத்தில் "மழை வேண்டி சிறப்பு ஜெபம்" என்கிற சுவரொட்டியை பார்க்க நேர்ந்தது. இணையத்தில் அது குறித்த செய்தி ஏதும் கிடைக்கிறதா என்று தேடி கொண்டிருந்த போது - மற்றொரு செய்தி கண்ணில் பட்டது. "மழை வேண்டி சிறப்பு தொழுகை". ஆக, மழைக்காக யாகம், ஜெபம்,தொழுகை என்று அனைத்து மத நம்பிக்கையாளர்களாலும் நடக்கத்தான் செய்கிறது போலும்.
:-
அது பற்றி மும்மதத்தையும் அடக்கினாற் போல ஒரு செய்திகுறிப்பை எழுதி ஆசிரியர் மேஜையில் வைத்தான். பொறுப்பாசிரியரும் மேலதிகவிஷயங்களை எழுதி கட்டுரையாக்கலாம். மத மூட நம்பிக்கைகளுக்கு ஒரு குட்டு வைப்பார் - தம் கட்டுரைகளால். "நேற்றைய கட்டுரை நன்றாக இருந்தது" எத்தனை பேரின் மூளைக்குள் இறங்கியதோ - ஆசிரியர் சொன்ன சேதி. அப்போது பணியிலிருக்கும் சக தோழர் கேட்டார். "ஆசிரியர் மேஜையில் என்ன வைச்சிங்க" என்று. இங்கர்சால் - ஆசிரியர் மேஜை மீது வைத்த செய்தி குறிப்புகளை எடுத்து, சக தோழரிடம் காட்டினான்.
:-
"மழையை இறைவனா கொடுக்கிறார்" என்று தலைப்பிலிருந்த கட்டுரையைவாசித்தவர் - "ஆசிரியர் மேஜையில் வைச்சிடுங்க" என்று சிரித்தவாறு கொடுத்தார். "ஏன் தோழரே சிரிக்கிறிங்க" என்று கேட்டான் இங்கர்சால்."நான் சிரிக்கலயே" என்று மீண்டும் சிரித்தார் தோழர். "சிரிச்சிட்டு சிரிக்கலங்கன்னு சொல்றிங்க" என்றவாறு வேறு வேலையை பார்க்க துவங்கினான். சக ஊழியரின் சிரிப்பில் நக்கல் இருப்பதாக தோன்றியது. அன்றைய நாளிதழுக்கு தேவையான செய்தி கட்டுரைகளை தொகுத்து பொறுப்பாசிரியர் கொடுக்க - தாம் தந்த செய்தி கட்டுரையாகி உள்ளதா என்று பார்த்தான்.
:-
இல்லை. அது குறித்து ஆசிரியரிடம் கேட்டான்."அது இப்ப தேவையில்லை தம்பி. நேற்று தானே யாகத்தை "கிழி கிழி"ன்னு கிழிச்சோம். இன்னிக்கு அதேமாதிரி செய்தி எதுக்கு. அப்புறம் தம்பி - நீங்க நாங்க சொல்றதை மட்டும் செய்ங்க.உங்க இஷ்டத்துக்குஎழுதக்கூடாது. புரிஞ்சதா?"என்று குறிப்பெழுதி கொடுத்திருந்த காகிதத்தை கசக்கி குப்பையில் போட்டார். கோபப்பட்டது போலதெரிந்தது. தூரத்திலிருந்ததோழர் சிரிப்பது போல தெரிந்தது. ஏன் சிரித்து கொண்டே இருக்கிறார். அவர் மேஜை அருகே சென்றான்."கொடுத்த செய்தி கட்டுரையாயிடுச்சா" என்று கேட்டார்.
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

மழைக்காக யாகமா? (பகுத்தறிவு சிறுகதை) Empty Re: மழைக்காக யாகமா? (பகுத்தறிவு சிறுகதை)

Post by Powenraj Tue 1 Jan 2013 - 12:46

"இல்ல. கசக்கி போட்டுட்டார். ஏன் போட்டார்ன்னு தெரியல. கசக்கி போட்டது கஷ்டமா இருக்கு. உண்மையை தானே எழுதினேன். " என்றான் இங்கர்சால். "நீங்க ஆசிரியர் எதிர்பார்ப்புக்கேற்ப்ப பகுத்தறிஞ்சு எழுதி இருக்க மாட்டீங்க" என்று சிரித்தார். இவர் ஏன் சிரித்து கொண்டே இருக்கிறார். "இல்லையே. ஆசிரியர் சொன்ன மாதிரி எதையும் பகுத்தறிவோட தானே எழுதறேன். ஒரு மத மூட நம்பிக்கைக்கே அவ்வளவு பொங்கியவர் - சர்வ மத மூட நம்பிக்கைகளுக்கு எரிமலை ஆகி இருக்க வேண்டாமா" என்றான் இங்கர்சால்.
:-
"ஆனா தோழரே - ஆசிரியரோட பகுத்தறிவு என்னன்னு தெரிஞ்சுக்காம்ம எழுதினா எப்படி" என்று புதிர் போட்டு தொடர்ந்தார் சக ஊழியர். "தோழரே. உலக பகுத்தறிவுங்கிறது ஒரே வகை. ஆனா நம்ம பகுத்தறிவு அப்படி அல்ல. இங்க பகுத்தறிவுங்கிறது - அடிப்படையில வேண்டியவன், வேண்டாதவங்கிறது... இது தான் அடிப்படை. எல்லாத்துக்கும் பொங்கி எழுவார்ன்னு கற்பனை பண்ணிடாதிங்க. புரிஞ்சதா பகுத்தறிவு. புரிஞ்சிருக்கணுமே" என்று இழுத்தார்.
:-
இங்கர்சால், "புரிஞ்சது" என்று தலையை சொறிந்தான்."ஆசிரியர் செயல் ஓங்கி மண்டையில் ஒரு குட்டு வைச்ச மாதிரி இருந்து இருக்குமே" என்று சிரித்தார். இத்தனை நேரமும் சிரித்த காரணம் தெரிந்தது. "ஆமா" என்றான் இங்கர்சால். பகுத்தறிவின் பாலபாடம் புரிந்தது. ஆசிரியர் சரியாக தான் குட்டு வைத்து இருக்கிறார்.
:-
நன்றி ஓசை முகநூல்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

மழைக்காக யாகமா? (பகுத்தறிவு சிறுகதை) Empty Re: மழைக்காக யாகமா? (பகுத்தறிவு சிறுகதை)

Post by ரமணி Tue 1 Jan 2013 - 18:45

கதையின் செய்தி அருமை!
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

மழைக்காக யாகமா? (பகுத்தறிவு சிறுகதை) Empty Re: மழைக்காக யாகமா? (பகுத்தறிவு சிறுகதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum