ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவிலக்கை வலியுறுத்தி"நடைபயணம்".. மீண்டும் முண்டாசு கட்டுகிறார் வைகோ

3 posters

Go down

மதுவிலக்கை வலியுறுத்தி"நடைபயணம்".. மீண்டும் முண்டாசு கட்டுகிறார் வைகோ Empty மதுவிலக்கை வலியுறுத்தி"நடைபயணம்".. மீண்டும் முண்டாசு கட்டுகிறார் வைகோ

Post by Powenraj Fri Dec 07, 2012 5:54 pm

சென்னை: தமிழகத்தில் மதுவிலக்கை வலியுறுத்தி வரும் 12-ந் தேதியன்று திருநெல்வேலி மாவட்டத்தின் உவரியிலிருந்து மதுரை நோக்கி மதிமுக பொதுச்செயலாளர் வைகோநடைபயணம் மேற்கொள்கிறார்.

:-)
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

:-)
இன்று தமிழ்நாட்டில்நடைபெறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் வன்முறைகள், பஞ்சமா பாதகங்கள் அனைத்துக்கும், மதுவே அடிப்படைக் காரணம் ஆகும். அண்ணா மறைவுக்குப்பின் ஆட்சி பீடத்துக்கு வந்த அரசுகள், போட்டிபோட்டுக்கொண்டு மதுவைப் புகுத்தியதன் தீய விளைவு, படிப்படியாக வளர்ந்து, இன்று நினைக்கும்போதே மனதைப் பதற வைக்கும் விபரீத நிலைமை ஏற்பட்டு விட்டது.

:-)
மதுவிலக்கு இருந்தால், கள்ளச்சாராயம் பெருகும் என்பது, முட்டாள்தனமான வாதம்ஆகும். குற்றத் தடுப்புச் சட்டங்கள்இருந்த போதும், கொலையும், களவும், குற்றங்களும் நடக்கின்றன என்பதற்காக, இந்தச் சட்டங்களை அரசுகள் இரத்துச் செய்ய முடியுமா? முடியாது.
இலைமறை காய்மறையாக, ஒளிந்தும் மறைந்தும்மது அருந்திய நிலை மாறி, இன்று தமிழகத்தில் மது அருந்துவது, அன்றாட வழக்கமாக ஆகி விட்டது. ஊருக்கு ஊர்டாஸ்மாக் கடைகள்; வீதிக்குவீதி ஒயின் ஷாப்கள். இதனால், பேராபத்து ஏற்பட்டு விட்டது.
குடிக்கு அடிமையாகி விட்ட ஓர் ஏழைத்தமிழன், ஒவ்வொரு நாளும் ஒரு குவார்ட்டர் பிராந்தி குடித்தால், ஐந்து ஆண்டுகளில், டாஸ்மாக் கடையில், 1 லட்சத்து 26 ரூபாய் இழக்கிறார். அரசிடம் அவருடைய குடும்பம் இலவசமாகப் பெறும் பொருள்களின் மதிப்பு, சுமார் 16 ஆயிரம் ரூபாய் மட்டும்தான்.

:-)
‘உழைப்பே உயர்வு தரும் என்ற கோட்பாட்டையே சிதைக்கும் கேடும், இலவசங்களால் நேர்கிறது.

:-)
இளைஞர்கள் மது அருந்துகிறார்கள். நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மாணவர்களில் பலர் இந்தக் கொடிய பழக்கத்துக்கு நாளும் அடிமையாகி வருகிறார்கள். புள்ளிவிவரங்களைக் குறிப்பிடுவதற்கே, மனம் கூச்சப்படுகிறது. ஆம்; பெண்களும் குடிக்கத் தொடங்கி விட்டார்கள்.

:-)
ஐயோ, நாம் எங்கே போகிறோம்? அனைத்துமேபாழாகுமே? கேடு விளையுமே?

;-(
மதுப்பழக்கம் பெருமளவில் மக்களை வளைத்துவிட்ட நிலையில், இனி மீள முடியுமா? மீட்க முடியுமா? என்று சிலர் மலைத்து நிற்கலாம்.

:-)
ஆனால், மதுவின் கோரப்பிடியில் இருந்து தமிழகத்தை விடுவித்தாக வேண்டியது இமாலயப் பணி என்ற போதிலும், செய்து முடித்திட உறுதி எடுத்துக் கொண்டே, முழு மதுவிலக்கைத் தமிழகத்தில் நிலைநாட்ட, மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக் கழகம் இந்த அறப்போரைத் தொடங்கி உள்ளது.

:-)
டாஸ்மாக் கடைகள், ஒயின் ஷாப்கள், மதுக்கேளிக்கை விடுதிகளால், தமிழ்நாட்டில் ஏற்பட்டுவிட்ட சம்பவங்களை எண்ணிப் பாருங்கள்.

;-(
மது அருந்தப் பணம் தராத தாயைக் குத்திக் கொன்ற மகன்;

;-(
மதுவெறியால் மகளைப் பெண்டாள முனைந்த தகப்பன்;

;-(
சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தையை, பாலியல் இச்சைக்குப்பலியிட முனைந்த காமுகன்!

;-(
இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ?

;-(
உங்கள் பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை, இத்தகைய கொடுமை தாக்கினால், என்ன ஆகும் என்று எண்ணிப் பாருங்கள்.

;-(
எனவேதான், ‘முழு மதுவிலக்கு; அதுவே எமது இலக்கு" என நெஞ்சிலே உறுதி கொண்டு, நானும், எனது தோழர்களும், ஊர் ஊராக, வீதி வீதியாக வந்து நாட்டு மக்களைச் சந்திக்கிறோம்; வேண்டுகிறோம்.

;-(
டிசம்பர் 12- ந் தேதிநெல்லை மாவட்டம் உவரியில் நானும் 1200 இளைஞர்களும் மூன்று மூன்று பேராக அணிவகுத்து, போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல், ஊர் ஊராக மக்களைச் சந்தித்து, மதுவினால் ஏற்படும் பெரும் தீங்கினை எடுத்துரைத்து, 400க்கும் மேற்பட்ட கிராமங்களிலும், வழிநெடுகிலும், பேரூர்களிலும், நகரங்களிலும் பிரசாரம் செய்யும் நடைப்பயணத்தை 25-ந் தேதி, மதுரை மாநகரில்நிறைவு செய்கிறோம்.

;-(
இதே காலகட்டத்தில், டிசம்பர் 16 ஆம் தேதிமுதல் 22 ஆம் தேதிவரை, ஒருவார காலம் தமிழ்நாட்டில்அனைத்து மாவட்டங்களிலும், மாநகரங்கள், நகரங்கள், கிராமங்களில் மதுவிலக்குப் பிரச்சார நடைப்பயணத்தை கழகத் தோழர்கள் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

;-(
மக்களிடம் மதுவிலக்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு, அமைதி வழியில், அறவழியில்,

:-O
கண்ணியமான முறையில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் கடைபிடித்து, பிரசாரப் பயணம் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்.
வைகோவின் 4-வது நடைபயணம் இது.

:-O
இதற்குமுன்னர் திருநெல்வேலியில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், கடலூர் , புதுச்சேரி வழியாக சென்னை வரையிலும், சீருடை அணிந்த 3000 தொண்டர்களுடன் 42 நாட்கள், 1200 கி.மீ."மறுமலர்ச்சி நடைபயணம்" மேற்கொண்டார் வைகோ.

:-O
காவிரி நீரில் தமிழகத்தின் உரிமைக்காக பூம்புகாரில் இருந்து கல்லணை வரையிலும் 7 நாட்கள் 175 கி.மீ. நடைபயணத்தையும் வைகோநடத்தினார்.

:-O
முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்தின்உரிமையை நிலைநாட்ட, மதுரையில் இருந்து கம்பம்-கூடலூர் வரையிலும் வைகோ நடைபயணத்தை நடத்தினார்.

:-O
தற்போது மதுவிலக்குக்காக நடைபயணம் மேற்கொள்கிறார்.

;-(நன்றி ஒன்இந்தியா தளம்...
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

மதுவிலக்கை வலியுறுத்தி"நடைபயணம்".. மீண்டும் முண்டாசு கட்டுகிறார் வைகோ Empty Re: மதுவிலக்கை வலியுறுத்தி"நடைபயணம்".. மீண்டும் முண்டாசு கட்டுகிறார் வைகோ

Post by ரா.ரா3275 Fri Dec 07, 2012 6:00 pm

ஏதாவது நல்லது இந்த மக்களுக்கும் நாட்டுக்கும் நடக்காதா என்பதற்காகவே வைகோ நடக்கிறார்...
அவரது நம்பிக்கைப் பொய்க்காமல் இருக்கட்டும்...
அதை மக்களும் நிறைவேற்ற வேண்டும்...

மதுவிலக்கை வலியுறுத்தி"நடைபயணம்".. மீண்டும் முண்டாசு கட்டுகிறார் வைகோ 224747944

மதுவிலக்கை வலியுறுத்தி"நடைபயணம்".. மீண்டும் முண்டாசு கட்டுகிறார் வைகோ Rமதுவிலக்கை வலியுறுத்தி"நடைபயணம்".. மீண்டும் முண்டாசு கட்டுகிறார் வைகோ Aமதுவிலக்கை வலியுறுத்தி"நடைபயணம்".. மீண்டும் முண்டாசு கட்டுகிறார் வைகோ Emptyமதுவிலக்கை வலியுறுத்தி"நடைபயணம்".. மீண்டும் முண்டாசு கட்டுகிறார் வைகோ Rமதுவிலக்கை வலியுறுத்தி"நடைபயணம்".. மீண்டும் முண்டாசு கட்டுகிறார் வைகோ A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மதுவிலக்கை வலியுறுத்தி"நடைபயணம்".. மீண்டும் முண்டாசு கட்டுகிறார் வைகோ Empty Re: மதுவிலக்கை வலியுறுத்தி"நடைபயணம்".. மீண்டும் முண்டாசு கட்டுகிறார் வைகோ

Post by ஜாஹீதாபானு Fri Dec 07, 2012 6:14 pm

தலைமைப் பொறுப்பு இவர் கையில் வந்தால் இவரும் எப்படியோ...?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மதுவிலக்கை வலியுறுத்தி"நடைபயணம்".. மீண்டும் முண்டாசு கட்டுகிறார் வைகோ Empty Re: மதுவிலக்கை வலியுறுத்தி"நடைபயணம்".. மீண்டும் முண்டாசு கட்டுகிறார் வைகோ

Post by ரா.ரா3275 Fri Dec 07, 2012 6:17 pm

ஜாஹீதாபானு wrote:தலைமைப் பொறுப்பு இவர் கையில் வந்தால் இவரும் எப்படியோ...?

அப்டித்தான் ஒரு சந்தேகத்த நிவர்த்திப் பண்ணிப் பார்க்கலாமே?...

மதுவிலக்கை வலியுறுத்தி"நடைபயணம்".. மீண்டும் முண்டாசு கட்டுகிறார் வைகோ 224747944

மதுவிலக்கை வலியுறுத்தி"நடைபயணம்".. மீண்டும் முண்டாசு கட்டுகிறார் வைகோ Rமதுவிலக்கை வலியுறுத்தி"நடைபயணம்".. மீண்டும் முண்டாசு கட்டுகிறார் வைகோ Aமதுவிலக்கை வலியுறுத்தி"நடைபயணம்".. மீண்டும் முண்டாசு கட்டுகிறார் வைகோ Emptyமதுவிலக்கை வலியுறுத்தி"நடைபயணம்".. மீண்டும் முண்டாசு கட்டுகிறார் வைகோ Rமதுவிலக்கை வலியுறுத்தி"நடைபயணம்".. மீண்டும் முண்டாசு கட்டுகிறார் வைகோ A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மதுவிலக்கை வலியுறுத்தி"நடைபயணம்".. மீண்டும் முண்டாசு கட்டுகிறார் வைகோ Empty Re: மதுவிலக்கை வலியுறுத்தி"நடைபயணம்".. மீண்டும் முண்டாசு கட்டுகிறார் வைகோ

Post by ஜாஹீதாபானு Fri Dec 07, 2012 6:20 pm

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:தலைமைப் பொறுப்பு இவர் கையில் வந்தால் இவரும் எப்படியோ...?

அப்டித்தான் ஒரு சந்தேகத்த நிவர்த்திப் பண்ணிப் பார்க்கலாமே?...

வேணாம் இவர் இப்படியே இருக்கட்டும்... இவரும் கெட்டவர் ஆகவேண்டாம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மதுவிலக்கை வலியுறுத்தி"நடைபயணம்".. மீண்டும் முண்டாசு கட்டுகிறார் வைகோ Empty Re: மதுவிலக்கை வலியுறுத்தி"நடைபயணம்".. மீண்டும் முண்டாசு கட்டுகிறார் வைகோ

Post by ரா.ரா3275 Fri Dec 07, 2012 6:23 pm

ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:தலைமைப் பொறுப்பு இவர் கையில் வந்தால் இவரும் எப்படியோ...?

அப்டித்தான் ஒரு சந்தேகத்த நிவர்த்திப் பண்ணிப் பார்க்கலாமே?...

வேணாம் இவர் இப்படியே இருக்கட்டும்... இவரும் கெட்டவர் ஆகவேண்டாம்

ஓஹோ...அப்டின்னா...திருப்பித் திருப்பி அதே குப்பையிலேயே கொட்டனும்னு சொல்றீங்க?...
வாங்க பாட்டி...வாங்க...உங்க பேரப்பிள்ளைக நாங்க நல்லாருக்கனும்னா நல்லது நடக்கணும்...நல்லதுக்காக நடக்கிறவருக்கு நல்லது நடக்கணும்...மனசு வைக்கணும் உங்கள மாதிரி இந்த ஊரு சனமும்...

மதுவிலக்கை வலியுறுத்தி"நடைபயணம்".. மீண்டும் முண்டாசு கட்டுகிறார் வைகோ 224747944

மதுவிலக்கை வலியுறுத்தி"நடைபயணம்".. மீண்டும் முண்டாசு கட்டுகிறார் வைகோ Rமதுவிலக்கை வலியுறுத்தி"நடைபயணம்".. மீண்டும் முண்டாசு கட்டுகிறார் வைகோ Aமதுவிலக்கை வலியுறுத்தி"நடைபயணம்".. மீண்டும் முண்டாசு கட்டுகிறார் வைகோ Emptyமதுவிலக்கை வலியுறுத்தி"நடைபயணம்".. மீண்டும் முண்டாசு கட்டுகிறார் வைகோ Rமதுவிலக்கை வலியுறுத்தி"நடைபயணம்".. மீண்டும் முண்டாசு கட்டுகிறார் வைகோ A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மதுவிலக்கை வலியுறுத்தி"நடைபயணம்".. மீண்டும் முண்டாசு கட்டுகிறார் வைகோ Empty Re: மதுவிலக்கை வலியுறுத்தி"நடைபயணம்".. மீண்டும் முண்டாசு கட்டுகிறார் வைகோ

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி மக்கள் நலப்பணியாளர்கள் தொடர் உண்ணாவிரதம்
» அ.தி.மு.க., கூட்டணியில் மீண்டும் வைகோ: போயஸ் தோட்டத்தில் சந்திப்பு..!
» பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ
» நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்தாமல் யோகப்பயிற்சி செய்வது பொருத்தமற்றது: நிதீஷ் குமார்
» மதுவிலக்கை தளர்த்த குஜராத் திட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum