ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முயன்றால் முடியும்!

+2
பூவன்
அச்சலா
6 posters

Go down

ஈகரை முயன்றால் முடியும்!

Post by அச்சலா Sun Dec 02, 2012 12:02 am

முயன்றால் முடியும்! Thavalai

வாக்குவாக்' எனும் பெயருடைய தவளையும், "கொர்கொர்' எனும் பெயருடைய தவளையும் நண்பர்களாக இருந்தன. அவை இரண்டும் காட்டோரத்தில் வாழ்ந்து வந்தன. குவாக்குவாக் மிகவும் தன்னம்பிக்கை மிக்கது. எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கும். ஆனால், கொர்கொர் தவளையோ ஒரு சோம்பேறித் தவளை. எதைக் கண்டும் அஞ்சும். அற்ப விஷயத்திற்குக்கூட பெரிதாகக் கவலைப்படும்.

இரண்டும் ஒரு நாள் நடந்து சென்றுகொண்டிருந்தன.

அப்போது தொலைவில் ஒரு குடிசை தெரிந்தது. அந்தக் குடிசைக்குள் நுழைந்து பார்க்க விரும்பின தவளைகள். உள்ளே யார் இருக்கிறார்கள், என்னென்ன பொருட்கள் இருக்கின்றனஎன்று பார்ப்பதற்கு அவை இரண்டுமே ஆர்வங்கொண்டிருந்தன. உள்ளே தாவிக் குதித்து விளையாடலாம். தின்பதற்கு ஏதாவது கிடைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

அந்தக் குடிசை பூட்டிக் கிடந்தது. "வீட்டுக்காரர்கள் வெளியே சென்றிருப்பார்கள் போலிருக்கிறது. சன்னல் வழியாக உள்ளே சென்றுவிடலாம்' என்று முடிவு செய்து அவை இரண்டும் சன்னலுக்குத் தாவின. வீட்டிற்குள்ளே இருட்டாக இருந்தது. ஒன்றுமே தெரியவில்லை. ஆர்வ மிகுதியால், உள்ளே குதித்துப் பார்த்துவிடலாம் என்று நினைத்தன தவளைகள்.

குவாக்குவாக் தவளையும், கொர்கொர் தவளையும் சன்னலிலிருந்து குடிசைக்குள் தாவின. அந்தக் குடிசையில் இருப்பவர் பால் வியாபாரம் செய்பவர். பால் நிறைந்த பாத்திரத்தை சன்னலருகில் வைத்துவிட்டு வெளியே சென்றிருந்தார். துரதிர்ஷ்டம்... இருட்டில் ஒன்றும் தெரியாமல் அந்தப் பால் பாத்திரத்திற்குள்ளேயே விழுந்துவிட்டன தவளைகள். முதலில் எங்கே விழுந்திருக்கிறோம் என்றே அவற்றிற்குப் புரியவில்லை.

ஒரு பால் பாத்திரத்திற்குள் விழுந்திருப்பது, சிறிது நேரத்திற்குப் பிறகுதான் அவற்றிற்குத் தெரிந்தது. அவை மிகவும் அதிர்ச்சியடைந்தன. குவாக்குவாக் மனம் தளரவில்லை. எது வந்தாலும் சமாளிப்போம் என்ற உறுதியுடன் நீந்தியது. குவாக்குவாக் தைரியம் கொடுத்துத் தேற்றினாலும்கூட கொர்கொர்ரின் பயம் அகலவில்லை. "ஐயோ..! பெரிய ஆபத்தில் வந்து சிக்கிக்கொண்டோமே..?' என்று முற்றிலும் தளர்ந்தது. எதுவுமே செய்யாமல் மிகவும் அஞ்சி பாத்திரத்திற்குள் மூழ்கிவிட்டது.

எப்படியாவது தப்பித்துவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்தது குவாக்குவாக். அது, அந்த நிலையில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்துகொண்டிருந்தது. அது பாத்திரத்திற்குள்ளேயே வட்டமடித்துச் சுற்றிவந்தது. தன் கால்களைப் போட்டு அடித்துக்கொண்டது. எங்கும் இருட்டு. சன்னல் மட்டும்தான் தெரிந்தது. ஆயினும், அது தொடர்ந்து நீந்தி பாலைக் கலக்கிக்கொண்டிருந்தது.

இடைவிடாமல் நீந்தி பாலைக் கலக்கியதன் விளைவாக, வெகு நேரத்திற்குப் பிறகு பாலில் கட்டியாக வெண்ணெய் திரண்டு வந்தது. குவாக்குவாக் தவளையே அதை எதிர்பார்க்கவில்லை. ஏதோ ஒரு பொருள் கட்டியாக தன்மீது மோதுவதை அது உணர்ந்தது. மிகவும் முயற்சி செய்து அந்த வெண்ணெய்க் கட்டியின் மீது ஏறி நின்றது. அப்போதுதான், அதற்குச் சற்று ஆசுவாசமாக இருந்தது. அப்படியே சற்று நேரம் ஓய்வெடுத்துக்கொண்டது.

ஓய்விற்குப் பிறகு சற்றுத் தெம்பு வந்தது. பிறகு, குவாக்குவாக் சற்றும் தாமதிக்கவில்லை. அந்த வெண்ணெய்க் கட்டியிலிருந்து ஒரே தாவாகத்தாவி சன்னலை அடைந்தது. அங்கிருந்து திரும்பிப் பார்த்தது. இருளில் மங்கலாகத் தெரிந்தது பால் பாத்திரம். அதன் நண்பனான கொர்கொர்ரைக் காணவில்லை. மிகவும் மனம் வருந்தியது குவாக்குவாக். வேறென்ன செய்ய முடியும். அந்த கொர்கொர் தவளையும் சற்று முயற்சி செய்து பார்த்திருக்கலாம்தானே.

நன்றி:கனவே..


முயன்றால் முடியும்! Paard105xzமுயன்றால் முடியும்! Paard105xzமுயன்றால் முடியும்! Paard105xzமுயன்றால் முடியும்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: முயன்றால் முடியும்!

Post by பூவன் Sun Dec 02, 2012 12:18 am

முயற்சியின் பெருமை சொன்ன விதம் அருமை , என்ன கொர் கொர் யோசிக்க வில்லை .....பாவம் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: முயன்றால் முடியும்!

Post by thivyabalan Tue Feb 05, 2013 8:56 pm

அருமையிருக்கு:


thivya :வணக்கம்:
thivyabalan
thivyabalan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 05/02/2013

http://thiviya vasan@gmail.com

Back to top Go down

ஈகரை Re: முயன்றால் முடியும்!

Post by thivyabalan Tue Feb 05, 2013 8:57 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


thivya :வணக்கம்:
thivyabalan
thivyabalan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 05/02/2013

http://thiviya vasan@gmail.com

Back to top Go down

ஈகரை Re: முயன்றால் முடியும்!

Post by Pakee Wed Feb 06, 2013 12:11 am

கதை அருமை சூப்பருங்க


:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012

http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: முயன்றால் முடியும்!

Post by janakiaarthy Thu Jan 16, 2014 5:39 pm

சிறுகதை ஆனாலும் தன்னம்பிக்கை ஓடும் கதை...
வாழ்த்துக்கள்... முயன்றால் முடியும்! 3838410834 
janakiaarthy
janakiaarthy
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 14/01/2014

Back to top Go down

ஈகரை Re: முயன்றால் முடியும்!

Post by பாலாஜி Thu Jan 16, 2014 6:30 pm

நல்ல கதை ...

பகிர்வுக்கு நன்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை Re: முயன்றால் முடியும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum