ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பித்தம் நீக்கும் அகத்திக்கீரை!

+6
அருண்
jenisiva
சிவா
ரா.ரா3275
gokul2500
அச்சலா
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஈகரை பித்தம் நீக்கும் அகத்திக்கீரை!

Post by அச்சலா Thu Nov 29, 2012 7:18 pm

பித்தம் நீக்கும் அகத்திக்கீரை! Agathi%20Keerai24
வெற்றிலைக்கொடி படர்வதற்காகக் கொடிக்கால்களில் பயிரிடப்படும் சிறு மென்மையான மர வகை அகத்தி. தமிழ்நாடு எங்கும் வளர்க்கப்படுகிறது. கீரை, பூ, பிஞ்சு ஆகியவை சமைத்து உண்ணப்படுகின்றன. இலை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. பொதுவாக வெப்பு அகற்றியாகவும், கீரை மலமிளக்கியாகவும், வேர் உடல் தரும் மருந்தாகவும் பயன்படுகிறது.

அகத்தியில் இருவகையுண்டு, வெள்ளைப் பூ உடையது அகத்தி என்றும், செந்நிறப் பூவுடையது செவ்வகத்தி எனப்படும்.

வேறு பெயர்கள்: அச்சம், முனி, கரீரம், சாழை அகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி,

ஆங்கிலத்தில்: Sesbania grandiflora

அகத்திக்கீரையின் மருத்துவக் குணங்கள்:

அகத்திக் கீரையை வாரம் ஒருமுறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பம், மலச்சிக்கல், காபி, டீ, ஆகியவற்றைக் குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும். அகத்தி மரப்பட்டை, வேர்ப்பட்டை வகைக்கு கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி.யாகச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி 100 மி.லி. அளவு இருவேளை குடித்து வர காய்ச்சல், தாகம், கைகால் எரிச்சல், மார்பு எரிச்சல், உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைக் காய்ச்சல் குணமாகும்.

அகத்தி இலைச்சாறும், நல்லெண்ணெய்யும் வகைக்கு 1 லிட்டர் கலந்து பதமாகக் காய்ச்சி வடிப்பதற்கு முன்பு கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கிச்சிலிக்கிழங்கு, விளாமிச்ச வேர் வகைக்கு 20 கிராம் பொடி செய்து போட்டுக் கலக்கி வடிகட்டி வாரம் ஒருமுறை தலையிலிட்டுக் குளித்துவரப் பித்தம் தணிந்து தலைவலி நீங்கும். கண்கள் குளிர்ச்சிபெறும்.

சிறிது உப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்ட இக்கீரையை வேறு மருந்துகள் உண்ணும் காலங்களில் உண்ணக் கூடாது. ஏனெனில் மருந்துகளின் வீரியத்தை அகத்திக் கீரை குறைக்கவும் அழித்துவிடவும் செய்யும்.

இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தம் கெட்டுப் போகும் வாய்ப்புண்டு. சொறி, சிரங்கும் தோன்றலாம். இரத்தம் குறைந்து இரத்த சோகை ஏற்படலாம். வயிற்று வலியும் பேதியும் உண்டாகலாம்.

காய்ச்சல் நேரத்தில் இக்கீரையைப் பிழிந்து அதன் சாற்றில் இரு துளி மூக்கில் விட்டால் காய்ச்சல் நீங்கும். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி நெற்றியை இலேசாக அனலில் காண்பிக்க கடுமையான தலைவலி நீங்கும்.

சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ நிறைய உள்ளது. போதுமான பால் சுரக்காத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கும். இக்கீரை சமைக்கும்போது நன்றாக வேக வைத்து உண்ண வேண்டும். வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் சக்தி இக்கீரைக்கு உண்டு. மலச்சிக்கல் நீங்கும்.

குழந்தைகளுக்கு நீர் கோர்த்துக் கொண்டால், இக்கீரையின் சாற்றை ஐந்துக்கு ஒரு பங்கு தேன் கலந்து தலை உச்சியில் தடவினால் நீர்க்கோவை மறையும். அகத்தியிலையை அவித்து அரைத்துக் காயங்களுக்கு கட்ட விரைவில் ஆறும். அகத்திப் பூச்சாறை கண்களில் பிழிய கண்நோய் குணமாகும்.

அகத்தி வேர்ப்பட்டை, ஊமத்தன் வேர் சம அளவாக எடுத்து அரைத்து வாதவீக்கத்திற்கும், கீல் வாயுக்களுக்கும் பற்றிட குணமாகும். இது வாயுவை உண்டாக்கும் இயல்புடையது. எனவே வாய்வுக் கோளாறு உள்ளவர்கள் இக்கீரையை உண்ணக் கூடாது.

நன்றி:தமிழ்க்கூடல்..


பித்தம் நீக்கும் அகத்திக்கீரை! Paard105xzபித்தம் நீக்கும் அகத்திக்கீரை! Paard105xzபித்தம் நீக்கும் அகத்திக்கீரை! Paard105xzபித்தம் நீக்கும் அகத்திக்கீரை! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை காமக்கூர்

Post by gokul2500 Fri Nov 30, 2012 9:04 pm

அகத்திக்கீரையின் மருத்துவக் குணங்கள் பற்றி விரிவாக கூறினீர்கள் மிக்கநன்றி! :வணக்கம்:


A.பாலமுருகன் காமக்கூர்
gokul2500
gokul2500
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 29/11/2012

http://in.linkedin.com/in/gokul2500

Back to top Go down

ஈகரை Re: பித்தம் நீக்கும் அகத்திக்கீரை!

Post by அச்சலா Fri Nov 30, 2012 11:23 pm

gokul2500 wrote:அகத்திக்கீரையின் மருத்துவக் குணங்கள் பற்றி விரிவாக கூறினீர்கள் மிக்கநன்றி! :வணக்கம்:
பித்தம் நீக்கும் அகத்திக்கீரை! Bloganathan
நன்றி..இது ஏன் இணைத்தீர்கள்..
பயமாக உள்ளது..


பித்தம் நீக்கும் அகத்திக்கீரை! Paard105xzபித்தம் நீக்கும் அகத்திக்கீரை! Paard105xzபித்தம் நீக்கும் அகத்திக்கீரை! Paard105xzபித்தம் நீக்கும் அகத்திக்கீரை! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: பித்தம் நீக்கும் அகத்திக்கீரை!

Post by ரா.ரா3275 Fri Nov 30, 2012 11:45 pm

அகத்திக் கீரையும் அகத்தியரைப் போல சக்தி மிக்கதுதான் போல...
அப்புறம் அந்த வெற்றிலைக் கொடிக்கால்களை நினைவூட்டியதற்கு சிறப்பு நன்றிகள் அச்சலா...
அதன் ஓரம் நடக்கும்போது அந்த சில்லிப்பும் சிலிர்ப்பும் முழங்காலுக்குக் கீழே அடிக்கும் பாருங்கள்...அடடா...அடடா...அது ஓர் ஆனந்த ரகசிய சுகம்...

பதிவுக்கு-பகிர்வுக்கு நன்றி அச்சலா...


பித்தம் நீக்கும் அகத்திக்கீரை! 224747944

பித்தம் நீக்கும் அகத்திக்கீரை! Rபித்தம் நீக்கும் அகத்திக்கீரை! Aபித்தம் நீக்கும் அகத்திக்கீரை! Emptyபித்தம் நீக்கும் அகத்திக்கீரை! Rபித்தம் நீக்கும் அகத்திக்கீரை! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரை Re: பித்தம் நீக்கும் அகத்திக்கீரை!

Post by அச்சலா Sat Dec 01, 2012 12:09 am

நன்றிகள் ரா.ரா.. மகிழ்ச்சி


பித்தம் நீக்கும் அகத்திக்கீரை! Paard105xzபித்தம் நீக்கும் அகத்திக்கீரை! Paard105xzபித்தம் நீக்கும் அகத்திக்கீரை! Paard105xzபித்தம் நீக்கும் அகத்திக்கீரை! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: பித்தம் நீக்கும் அகத்திக்கீரை!

Post by சிவா Sat Dec 01, 2012 9:51 am

அகத்திக் கீரை பற்றிய தகவலுக்கு நன்றி அச்சலா!


பித்தம் நீக்கும் அகத்திக்கீரை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: பித்தம் நீக்கும் அகத்திக்கீரை!

Post by அச்சலா Sat Dec 01, 2012 10:15 am

நன்றிகள் சிவா...வீட்டில் அவசியம் சமைக்க சொல்லுங்கள்..
கடைச்சாப்பாடு வேண்டாம்


பித்தம் நீக்கும் அகத்திக்கீரை! Paard105xzபித்தம் நீக்கும் அகத்திக்கீரை! Paard105xzபித்தம் நீக்கும் அகத்திக்கீரை! Paard105xzபித்தம் நீக்கும் அகத்திக்கீரை! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: பித்தம் நீக்கும் அகத்திக்கீரை!

Post by jenisiva Sat Dec 01, 2012 3:09 pm

உங்கள் பதிவை பார்த்தபிறகாவது திருந்தி அகத்தி கீரையை உணவில் சேர்த்துகொள்ளலாம் என முடிவு செய்திருக்கிறேன் .பதிவிற்கும் பகிர்வுக்கும் நன்றி அக்கா மீண்டும் சந்திப்போம்
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

ஈகரை Re: பித்தம் நீக்கும் அகத்திக்கீரை!

Post by அருண் Sat Dec 01, 2012 6:19 pm

எது தின்றால் பித்தம் குறையும் என்பவர்களுக்கு நல்லா பயன்படும் இந்த பதிவு.!
பகிர்விற்கு நன்றி அச்சலா அக்கா!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரை Re: பித்தம் நீக்கும் அகத்திக்கீரை!

Post by அச்சலா Sat Dec 01, 2012 7:14 pm

jenisiva wrote:உங்கள் பதிவை பார்த்தபிறகாவது திருந்தி அகத்தி கீரையை உணவில் சேர்த்துகொள்ளலாம் என முடிவு செய்திருக்கிறேன் .பதிவிற்கும் பகிர்வுக்கும் நன்றி அக்கா மீண்டும் சந்திப்போம்
நன்றிகள் ....


பித்தம் நீக்கும் அகத்திக்கீரை! Paard105xzபித்தம் நீக்கும் அகத்திக்கீரை! Paard105xzபித்தம் நீக்கும் அகத்திக்கீரை! Paard105xzபித்தம் நீக்கும் அகத்திக்கீரை! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: பித்தம் நீக்கும் அகத்திக்கீரை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum