ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிட்டுக்கு மண் சுமந்த பெருமான்..!

2 posters

Go down

பிட்டுக்கு மண் சுமந்த பெருமான்..! Empty பிட்டுக்கு மண் சுமந்த பெருமான்..!

Post by Guest Thu Nov 29, 2012 4:57 pm

பிட்டுக்கு மண் சுமந்த பெருமான்..! Ol25

முன்னொரு காலத்திலே, பாண்டிய நாட்டை அரிமர்த்தன பாண்டியன் என்ற அரசன் ஆண்டு வந்தான். சிவபெருமானிடத்தில் நிறைந்த பக்தியும், நல்ல அறிவும், ஒழுக்கமும் நிறைந்த அரசன் அவன்.

திருவாதவூரான் என்ற சிறந்த அமைச்சரின் ஆலோசனையுடன் நல்லாட்சி புரிந்து வந்தான்.

மதுரை மாநகரிலே, மீனாட்சி அம்மையின் துணையுடன், சோமசுந்தரப் பெருமான் என்னும் திருப்பெயர் கொண்டு அருள்புரியும் சிவபெருமான், பாண்டிய நாட்டிலே ஒரு திருவிளையாடலைப் புரிய விரும்பினார்.

அவரது திருவிளையாடலின் பயனாக, மதுரை மாநகருக்கே அழகு சேர்த்து, அரவணைத்து ஓடும் வைகை ஆறு, பெரும் வெள்ளமாக உருவெடுத்தது.

இராட்சத வேகத்துடன், பொங்கிப் பெருகி வந்த பெருவெள்ளம், ஆற்றின் கரைகளை எல்லாம் 'பட பட ' என்று உடைத்தெறிந்து கொண்டு மதுரை மாநகருக்குள் புகுந்தது. அந்த வெள்ளப் பெருக்குக்குத் துணை செய்வது போன்று, அடைமழை பொழிந்தது. நகரமே மழை இருட்டில் மூழ்கிப் போனது.

மக்களின் வீடுகள், வாசல்கள், மாடங்கள், மரங்கள் யாவும் வெள்ளப் பெருக்கில் சிக்கி அடியற்று வீழ்ந்தன. ஆடு, மாடு முதலிய வீட்டு மிருகங்களை வெள்ளம் அடித்துக் கொண்டு போனது. பெருகி வந்த வெள்ளத்தில், மக்கள் இருக்க இடமின்றி, ஒதுங்கக் கூரையின்றித் துன்புற்றார்கள்.

துன்பப்பட்ட மக்கள் தங்கள் துயரைத் தீர்க்க யாரிடம் செல்வார்கள் ? மக்களுக்கெல்லாம் காவலனாக விளங்குபவன் அரசன் அல்லவா ? அதனால், மதுரை மாநகரத்து மக்கள் யாவரும் அரசனின் மாளிகையை நோக்கி ஓடோடிச் சென்றார்கள்.

அரசனின் மாளிகை வாயிலில் நின்றுகொண்டு, " அரசே, ஆபத்து, .... ஆபத்து,.... எங்களைக் காப்பாற்றுங்கள் ... " என்று கதறினார்கள்.

மக்களின் அவலக் குரலைக் கேட்டு அரிமர்த்தன பாண்டியன் வாயிலுக்கு விரைந்தோடி வந்தான்.

" அரசே,... வைகை ஆற்று வெள்ளம் பெருகி மதுரை மாநகருக்குள் புகுந்து வீடு வாசல்களையெல்லாம் அடித்துக் கொண்டு போகின்றது. வெள்ளத்துடன், மழையும் சேர்ந்துகொண்டு எங்களை வாட்டி வதைக்கிறது. நீங்கள்தான் காக்க வேண்டும்" என்று மக்கள் ஒரே குரலில் கதறினார்கள்.

"கவலைப் படாதீர்கள். ஆற்று வெள்ளத்தினால் உடைக்கப்பட்ட கரைகளையெல்லாம் உடனடியாகக் கட்ட ஏற்பாடு செய்கிறேன். " என்று கூறி அவர்களுக்கு வேண்டிய உணவுப் பொருட்களைக் கொடுத்து அனுப்பிய அரசன், தனது மந்திரிகள், சேனாதிபதிகள் மற்றும் பிரதானிகளை அழைத்து ஆலோசனை செய்தான்.

'வைகை ஆற்றின் கரைகள் மிகவும் நீளமானவை. அதனை உடனே உயர்த்திக் கட்டாவிட்டால், பேரழிவு ஏற்படும். ஒரு சிலரின் துணையுடன் இதைச் செய்து முடிக்க முடியாது. ஆகவே, மதுரை மாநகரத்து மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கரைகளைக் கட்டி முடிக்க வேண்டும்' என்று முடிவு செய்தான் அரசன்.

மதுரை மாநகரத்தில் வாழ்ந்துவந்த குடும்பங்கள் எல்லாவற்றையும் கணக்கிட்டு ஆற்றுக் கரைகளை ஒரு குடும்பத்துக்கு ஒரு பங்கு என்ற விகிதத்தில் பிரிக்கும்படி செய்தான்.

அப்படிப் பிரிக்கப்பட்ட பங்குக்கு உரியவர்கள் அவற்றை மண் போட்டு உயர்த்திக் கட்ட வேண்டும் என்று முரசு அறைந்து அறிவிக்கும்படி சொன்னான்.
முரசு அறைந்து அறிவிப்போர்கள் மாநகர் முழுவதும் வீதிவீதியாகச் சென்று அச் செய்தியை அறிவித்தார்கள்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பங்கு பிரித்துக் கொடுக்கப் பட்டது. அன்று மாலைக்குள் கரையின் பங்குகளை அடைத்துவிட வேண்டும் என்றும், தவறுபவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள் என்றும் அரசன் உத்தரவிட்டான்.

அதன்படி, மதுரை மாநகர மக்கள் அனைவரும் வைகை ஆற்றின் கரையில் கூடினார்கள். அவர்கள் மண்வெட்டிகள், கடப்பாரைகள், கயிறுகள் முதலிய பலவகைக் கருவிகளை எடுத்து வந்தார்கள். உடல் வலிமை குறைந்தவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பகுதியைக் கட்டி முடிக்கக் கூலியாட்களைக் கூட்டி வந்திருந்தார்கள்.

அனைவரும் சேர்ந்து வேகமாக வேலையை ஆரம்பித்தார்கள். சுற்று வட்டாரத்து மேட்டுப் பகுதிகளிலிருந்து மண்ணை வெட்டியெடுத்து, கூடைகளில் நிரப்பி, வைகை ஆற்றுக் கரைகளில் கொண்டுபோய்க் கொட்டி, கரைகளை உயர்த்தும் வேலையில் ஈடுபட்டார்கள்.

இவ்வாறு, மதுரை மாநகரின் எல்லையில் வைகைக் கரைகளை உயர்த்தும் வேலை மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அந்தக் கரையில் ஒரு சிறு பகுதி மட்டும் அடைக்கப்படாமல் கிடந்தது. அந்தப் பங்கை அடைக்க வேண்டிய பொறுப்பு யாருமற்ற ஓர் அநாதைக் கிழவிக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.

அந்த அநாதைக் கிழவியின் பெயர் செம்மனச்செல்வி. அவள் மதுரை மாநகரின் தென்கிழக்குத் திசையில் ஒரு குடிசையில் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு உற்றார் உறவினர்கள் யாருமில்லை.

வயது முதிர்ந்து, முதுகு கூன் விழுந்துவிட்ட அந்த ஏழைக் கிழவி, பிச்சையெடுத்து வயிறு வளர்க்க விரும்பாமல், பிட்டு அவித்து அதனை வீதி வீதியாகச் சென்று விற்று வாழ்க்கை நடத்தி வந்தாள்.


அவள் சிவபெருமான் மீது அளவற்ற பக்தியும், பாசமும் கொண்டவள். தினமும் காலையில், தான் அவிக்கும் பிட்டின் முதற் பங்கைச் சோமசுந்தரக் கடவுளுக்கு நிவேதனம் செய்துவிட்டு அதன்பின்னரே பிட்டு விற்பனையை ஆரம்பிப்பாள்.


வைகை ஆற்றுக்கரையின் ஒரு பகுதியை அடைக்கும் பொறுப்பு அவளுக்குக் கொடுக்கப்பட்டபோது, அவள் மனம் கலங்கிக் கண்ணீர் வடித்தாள். யாருமற்ற அநாதைக் கிழவியான அவள், சோமசுந்தரக் கடவுளின் சந்நிதிக்கு ஓடினாள்.

"ஐயனே, இதுவும் உன் சோதனையா? இந்த அநாதைக் கிழவிக்கு உறவு என்று சொல்லிக்கொள்ள யாருமில்லை. கரையை நானே கட்டுவதென்றால், என் உடம்பில் பலம் இல்லை. கூலிக்கு ஆள் வைத்துச் செய்வதற்கும் கையிலே காசு இல்லை. என்னுடைய பங்குக் கரையை உரிய நேரத்தில் அடைக்காவிட்டால், அந்தப் பகுதியாலே வெள்ளம் பாய்ந்து, கடைசியில் முழுக்கரையையுமே உடைத்துவிடும்.


அரசனின் தண்டனையும் எனக்குக் கிடைக்கும். ஐயா,... தினமும் காலையில் உன்னை என் பிள்ளையாகப் பாவித்துத்தான் எனது முதற் பிட்டை உனக்கு நிவேதனம் செய்து வந்திருக்கிறேன், இந்தக் கஷ்டத்திலிருந்து நீதான் ஐயனே என்னைக் காக்க வேண்டும்... " என்று சிவபெருமான் முன்னிலையில் கண்ணீர் விட்டுக் கதறினாள்.

தினமும் காலையில் அவள் அன்புடன் படைத்த பிட்டை உண்டு மகிழ்ந்திருந்த சோமசுந்தரக் கடவுள் புன்னகை புரிந்தார். அவரது திருவிளையாடல் அரங்கேறும் கட்டம் வந்து விட்டதே.

தம்மையே உற்றம், உறவு என்று எண்ணி அன்பு காட்டிய கிழவிக்கு உதவி புரிந்து, அதன் மூலமே ஒரு திருவிளையாடலை நடத்தத் திருவுளம் கொண்டார்.


உலக மக்களை உய்விக்க எந்தக் கூலியும் எதிர்பாராமல் அளப்பரிய கருணை புரிந்து அருளும் பெருமான், அநாதரவாய் நின்ற அந்த ஏழைக் கிழவிக்கு அருள் புரிவதற்காக ஒரு கூலியாளாக உருவம் கொண்டார்.

காண்பவர்கள் கண்களைச் சுண்டியிழுக்கும் பேரழகுடன், சிவந்த மேனியும், ஒளிவீசும் முகமும் கொண்டு விளங்கிய சிவபெருமான், இடுப்பிலே அழுக்குப் படிந்த பழைய துணியை அணிந்து கொண்டார்.


அவரது தோளின்மீது ஒரு மண்வெட்டி இருந்தது. தலையிலே சும்மாடு வைத்து, அதன்மேலே, மண் அள்ளிக் கொட்டுவதற்குப் பயன்படும் கூடையைக் கவிழ்த்துக்கொண்டு, புன்னைகையுடன் அவளருகே வந்தார்.

செம்மனச்செல்வியின் அருகே சென்ற அவர், எல்லாருக்கும் கேட்கும்படி, " கூலிக்கு ஆள் வேண்டுமா? .... கூலிக்கு ஆள் வேண்டுமா? ..... " என்று குரல் கொடுத்துக் கூவினார்.

கலங்கி நின்ற செம்மனச்செல்வியின் காதுகளில் அந்த வார்த்தைகள் தேனாகப் பாய்ந்தன. கூன் விழுந்த உடலுடன் நின்ற அந்த முதிய கிழவி, தன் தலையை நிமிர்த்தி, தெய்வீக அழகு சொட்டும் அந்தத் திருமுகத்தைப் பார்த்தாள்.

"அப்பனே, நீ கூலிக்கு வேலை செய்வாயா? " என்று கேட்டாள்.

"அதுதானே அம்மா என் தொழில் ? " என்றார் இளைஞன்.

"அப்பா, வைகையாற்றுக் கரையில் ஒரு பங்கை அடைக்கும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டிருக்கிறது. ஆனால், அதனை அடைக்க என் உடம்பிலே பலம் இல்லை. கையிலே காசும் இல்லை. எனக்காக அந்தப் பங்குக் கரையை நீ அடைத்துத் தருவாயா, ஐயனே ?" என்று கேட்டாள் அவள்.

இளைஞன் சிரித்தார். " சரி அம்மா, அப்படியே செய்வேன். ஆனால், அதற்குக் கூலி என்ன தருவாய் ?" என்று கேட்டார்.

"ஐயா, உனக்குக் கூலியாகத் தருவதற்கு என்னிடம் காசு பணம் இல்லை. ஆனால், உனக்குக் கூலியாக உனது பசி தீரச் சுடச்சுட பிட்டு அவித்துத் தருவேன்" என்றாள்.

"சரி தாயே, உன்னுடைய பிட்டையே கூலியாக வாங்கிக் கொள்வேன். இப்போது எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது.

சுடச்சுடப் பிட்டு அவித்து இப்போதே தந்தாயானால், அதை உண்டு பசியாறிவிட்டு நான் உனது பங்குக் கரையை ஒரு நொடியில் அடைத்து விடுவேன்" என்றார் ஈசன்.

பெரும் மகிழ்ச்சியடைந்த செம்மனச்செல்வி, தனது குடிசைக்கு ஓடோடிச் சென்று, தேவையான பொருட்களையும், பாத்திரங்களையும் எடுத்து வந்தாள். ஆற்றங்கரையில், ஒரு மர நிழலில் நெருப்பை மூட்டி விரைவாகப் பிட்டை அவித்து, அதை உதிர்த்துக் கை நிறைய அள்ளி, அந்தத் தெய்வக் கூலியாளிடம் அன்புடன் கொடுத்தாள்.


மகிழ மர நிழலில் அமர்ந்து, அந்தப் பிட்டைச் சுவைத்து ரசித்துச் சாப்பிட்டார் இறைவன். வயிறார உண்டபின், " சரி தாயே, இப்போது பசி தீர்ந்து விட்டது. இனி நான் உன்னுடைய பங்குக் கரையை ஒரு நொடியிலே அடைத்துவிட்டு எனது கூலியை வாங்கிக் கொள்வேன் " என்று கூறிவிட்டு வைகைக் கரையை நோக்கி விரைந்து நடந்தார்.

வைகைக் கரையில், கரையை உயர்த்திக் கட்டும் வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. வேலைகளைக் கண்காணித்துக் கொண்டிருந்த தலையாரியிடம் சென்று, செம்மனச்செல்வியின் பங்குக் கரையைக் கட்டுவதற்குத் தான் வந்திருப்பதாகக் கூறித் தமது பெயரைப் பதிவு செய்துகொண்டார்.

இடுப்புத் துண்டை இறுக்கிக் கட்டிக்கொண்டு வேலையைத் தொடங்கினார்.

ஆனால், அவர் வேலை செய்த விதமே விசித்திரமானதாக, விளையாட்டாக இருந்தது. மண்ணை வெட்டிக் கூடையில் நிரப்புவார்; தூக்கிப் பார்ப்பார். அதிக பாரமாயிருக்கிறதென்று சொல்லி, மண்ணைக் கொட்டி விடுவார். மீண்டும், குறைவாக மண்ணை எடுத்துச் சென்று, ஆற்றின் கரையில் கொட்டிவிட்டு வருவார். பின்பு, கடும் வேலை செய்து களைப்புற்றவர்போல் மர நிழலில் படுத்து விடுவார். சிறிது நேரம் தூங்கியபின் எழுந்து, முன்னரே கிழவியிடம் வாங்கி வைத்திருந்த பிட்டை உண்ணுவார். பின்னர் சிறிது நேரம் வேலை செய்வார். இவ்வாறு மிகவும் நிதானமாக, விளையாட்டாக வேலை செய்தார்.

மாலை வேளை நெருங்கிற்று. தலையாரி கரையைப் பார்வையிட்டுக் கொண்டு வந்தான். செம்மனச்செல்வியின் பங்கு மட்டுமே அடைபடாமல் இருந்ததையும், அதன் காரணமாக் முழுக்கரையுமே உடையும் அபாயம் ஏற்பட்டு இருந்ததையும் கண்டு கடும் கோபம் கொண்டான்.

"இந்தப் பகுதியை அடைக்கும் கூலிக்காரன் எங்கே? " என்று ஆத்திரத்தோடு கேட்டான்.


சற்றுத் தூரத்திலே, ஒரு மர நிழலில் படுத்துறங்கிக் கொண்டிருந்த அந்தத் தெய்வீக இளைஞனைச் சுட்டிக் காட்டினார்கள் சேவகர்கள்.

"அவனை இழுத்து வாருங்கள் " என்று தலையாரி கட்டளையிட்டான். சேவகர்கள் அந்த இளைஞனை உறக்கத்திலிருந்து எழுப்பித் தலையாரியிடம் அழைத்து வந்தார்கள்.

"ஏனடா,... செம்மனச்செல்வியின் பங்கை அடைப்பதற்கு நியமிக்கப்பட்ட கூலிக்காரன் நீதானே?" என்று தலையாரி கேட்டான்.

மாறாத புன்னகையுடன், " ஆம்" என்று தலையசைத்தார், இறைவன்.

"அப்படியானால், உனக்குத் தரப்பட்ட வேலையைச் செய்து முடிக்காமல், விளையாடுவதும், உறங்குவதுமாக நேரத்தை வீணடிக்கிறாயே ? " என்று தலையாரி கோபத்துடன் கேட்டான்.

'எல்லாமே எனது திருவிளையாடல்தான்' என்று கூறுவதுபோல், அந்தத் தெய்வீக இளைஞன் எவ்விதமான பதிலும் கூறாமல் புன்சிரிப்புடன் கம்பீரமாக நின்றார்.

கள்ளங் கபடமற்ற, தெய்வீக அழகு சொட்டும் அவரது முகத்தயும், கம்பீரமான அவரது தோற்றத்தையும் கண்டு, அவரைத் தண்டிக்கப் பயந்த தலையாரி, உடனே அரசனிடம் சென்று முறையிட்டான்.

செய்திகேட்டு வேகமாக அந்த இடத்துக்கு வந்த அரசன் அரிமர்த்தன பாண்டியன், அந்தத் தெய்வீக உருவத்தைப் பார்த்து ஒரு கணம் திகைத்து நின்றான். ஆயினும், அந்த இளைஞனின் விளையாட்டுத் தனத்தால், கரை கட்டும் வேலை பாழாவதையும், மக்கள் படும் துன்பத்தையும் எண்ணி ஆத்திரம் கொண்டான்.


அதே வேளை, நடந்ததெல்லாவற்றையும் கேள்வியுற்று, என்ன நடக்குமோ என்ற கவலையுடன் அந்த இடத்திற்கு வேகமாக வந்து சேர்ந்த செம்மனச்செல்வி, இக் காட்சியைக் கண்டு திகைத்து நின்றாள்.

"அடே கூலிக்காரப் பயலே, நீ என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாய் ? உன்னுடைய பொறுப்பில்லாத தன்மையால் முழுக்கரையுமே பாழாகப் போகிறதே ? இதற்கு என்ன சொல்கிறாய்? " என்று பாண்டியன் கேட்க,.....

அவனை நிமிர்ந்து பார்த்துப் புன்சிரிப்புடன் மௌனமாக நின்றார் அந்தத் தெய்வக் கூலியாள்.

"என்னடா? என்னுடன் பேச மாட்டாயா ? ... நான் இந்த நாட்டு அரசன் என்பதை மறந்து விட்டாயா? " என்று கடுஞ் சினத்துடன் கேட்ட அரிமர்த்தன பாண்டியன், தனது பக்கத்திலே நின்ற அடியாளை நோக்கி, " உம்,... இவனுக்குத் தண்டனை கொடுங்கள் " என்று கட்டளையிட்டான்.


அரசனுக்குப் பக்கத்திலேயே மலைபோல நிமிர்ந்து நின்றிருந்த அடியாள் தன் கையிலிருந்த நீண்ட பிரம்பை வேகமாக உயர்த்தி,...........

அந்தத் தெய்வீக இளைஞனின் சிவந்த முதுகில் ஓங்கி அடித்தான்.

அதே கணம்,............

அந்த அடி,..........

அரசன் மேலும்,.............

அங்கு சூழ்ந்துநின்ற அத்தனை மனிதர் மேலும்,..............

வானத்துத் தேவர் மேலும்,..............

நரகத்து அசுரர் மேலும்,...............

............... ஓங்கி வீழ்ந்தது.

ஓங்கி வீழ்ந்த அடியின் வேதனையைப் பொறுக்க முடியாமல், யாவரும் " ஆ " என்று அலறினார்கள்.


அதே வேளை, ..... தெய்வ மேனியில் அந்த அடியை வாங்கிக்கொண்ட இறைவன், புன்சிரிப்புடன் மறைந்து போனார்.

பல நாட்களாகப் பெய்து கொண்டிருந்த அடைமழையும், பெரு வெள்ளமும் அந்த ஒரே வினாடியில் அடங்கி விட்டன.

வானத்திலிருந்து ஒரு விமானம் இறங்கி வந்து, நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் பார்த்துக் கலங்கி நின்று கொண்டிருந்த செம்மனச்செல்வியின் அருகே நின்றது. பக்திப்பரவசத்துடன், கிழவி அந்த விமானத்திலே ஏறிக்கொள்ள, அந்த விமானம் விண்ணில் விரைந்து, பறந்து சென்று மறைந்தது.


இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் பார்த்து, அதிசயித்து நின்றுகொண்டிருந்த அரிமர்த்தன பாண்டியனும், ஏனைய மக்களும் உண்மையை உணர்ந்து, வந்திருந்தவர் இறைவனே என்பதைத் தெரிந்து கொண்டு, நிகழ்ந்த தவறுகளுக்காக மனம் வருந்தி, " ஐயனே,... ஐயனே,... எங்களை மன்னித்துவிடு, இறைவா ... " என்று அலறி அழுதார்கள்.

அப்போது, விண் மேகங்களுக்கிடையிலே, ஒரு ஜோதிப் பிழம்பாக இறைவனாகிய சிவபெருமான் தமது துணைவியாரான உமாதேவியாருடன் தோன்றி, " அரிமர்த்தன பாண்டியனே, செம்மனச்செல்வியின் பக்தியின் மேன்மையை உலகுக்கு உணர்த்தவே நாம் இந்தத் திருவிளையாடலைப் புரிந்தோம்" என்று கூறி அவர்கள் அனைவரையும் ஆசீர்வதித்து மறைந்தார்.

தெய்வக்குரல் கேட்டு மட்டற்ற மகிழ்ச்சியும், பக்திப் பரவசமும் அடைந்த அரசனும், மக்களும் " தென்னாடுடைய சிவனே, போற்றி,... எந்நாட்டவர்க்கும் இறைவா, போற்றி ... " என்று கூறி, சிவபெருமானின் கருணையைப் போற்றி நின்றார்கள்.

"கடவுளை நம்பினோர், கைவிடப்படடார்"

--
ஹிந்து கிட்ஸ் வேர்ல்ட்
avatar
Guest
Guest


Back to top Go down

பிட்டுக்கு மண் சுமந்த பெருமான்..! Empty A.BALAMURUGAN KAMAKKUR 9095140265

Post by gokul2500 Fri Nov 30, 2012 11:10 am

அருமை நன்றி! :வணக்கம்: பிட்டுக்கு மண் சுமந்த பெருமான்..! Bloganathan


Last edited by gokul2500 on Fri Nov 30, 2012 11:20 am; edited 1 time in total
gokul2500
gokul2500
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 29/11/2012

http://in.linkedin.com/in/gokul2500

Back to top Go down

பிட்டுக்கு மண் சுமந்த பெருமான்..! Empty Re: பிட்டுக்கு மண் சுமந்த பெருமான்..!

Post by Rajan Hamanthkumar Fri Nov 30, 2012 11:16 am

64 திருவிளையடலில் ஒன்றை அருமையாகச் சொன்னீர்கள்...நண்பரே


அன்பு மலர் பொறுத்தது போதும் நிமிர்ந்திடு மீண்டும் ஐ லவ் யூ
ஐ லவ் யூ உலகம் தமிழனைப் போற்றிட வேண்டும் அன்பு மலர்
Rajan Hamanthkumar
Rajan Hamanthkumar
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 26/11/2012

Back to top Go down

பிட்டுக்கு மண் சுமந்த பெருமான்..! Empty Re: பிட்டுக்கு மண் சுமந்த பெருமான்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum