ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொழுது போக்கல்ல, வக்கிரம்.

5 posters

Go down

பொழுது போக்கல்ல, வக்கிரம். Empty பொழுது போக்கல்ல, வக்கிரம்.

Post by DERAR BABU Mon Nov 26, 2012 6:08 pm

20 ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதாரத்திலும், வளர்ச்சியிலும் பின்தங்கிய நிலையில் இருந்தது இந்தியா என்பதற்கு இப்போதுள்ள வளர்ச்சியே சாட்சி. உலகப் பொருளாதாரமயம்தான் இந்த வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம்.

இது ஒருபுறம் இருந்தாலும், எந்த வளர்ச்சியும் சில கட்டுப்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டியது அவசியம். சில துறைகள் கடிவாளம் போட முடியாத அளவுக்குப் பெருகி வருகின்றன. இதனால் பலன் உண்டு என்றாலும், பாதிப்புகளும் உண்டு. இந்த பாதிப்பு நாளைய சமூகத்தை பாதிக்கும் என்றால், அதற்குக் கட்டுப்பாடு அவசியம்.

இதற்கு உதாரணம் தொலைக்காட்சி. இவற்றின் எண்ணிக்கை பெருகுவதால் அரசின் கருவூலம் நிறைகிறது. ஆனாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு யார் பொறுப்பு?

தனியார் தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் வியாபார நோக்கத்தை முன்னிறுத்தியே தயாரிக்கப்படுகின்றன. கேட்டால், பொதுமக்கள் விரும்பிப் பார்க்கின்றனர் என்பது அவர்களது வாதம். அப்படியே எடுத்துக் கொண்டாலும், ஆபாசக் காட்சிகளுக்குத் தடை விதிப்பது ஏன்? இதைப் பார்க்கவும் ஆதரவாளர்கள் அதிகமாக உள்ளனர்தானே.

காலை 10 மணியில் இருந்து தொலைக்காட்சி தொடர்களின் ஒளிபரப்புகள் நள்ளிரவு வரை தற்போது நீள்கின்றன. இடையில் சில நேரங்களில் மட்டும் மற்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி. அதிலும் முன்னணி வகிப்பது சினிமா தொடர்பானவை.

தொடர் நாடக ஒளிபரப்புகளில் குடும்பத்தில் ஏற்படும் சாதாரண பிரச்னைக்காக, அவர்களது முகபாவங்களைக் காட்ட வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரின் முகத்தையும் "குளோஸப்'பில் திரும்பத் திரும்பக் காட்டுகின்றனர். இது பார்வையாளர்களை வெறுப்படையவே செய்கிறது. அதிலும் வில்லனாகவும் வில்லனின் கையாளாகவும் நடிப்பவர்களின் தங்கப்பல், சொத்தைப்பல் போன்றவற்றைக் காட்டும்போது அருவறுப்பே அதிகமாகிறது.

பாடல், ஆடல் நிகழ்ச்சிகளில், "ஜட்ஜஸ் என்ன சொல்றாங்கனு கேட்போம்' என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்கும்போது, பாட வந்தவரை வானளாவ பாராட்டுவதும், சரியில்லை என்றால் மானாவாரியாகப் பேசுவதும், திட்டுவது போல் வந்து பாராட்டுவதும் (ஷாக் தர்றாங்களாம்...), மதிப்பெண் கொடுப்பது இல்லையென்றால், கலர் கலர் அட்டைகளை எடுத்துக் காட்டுவது, எடிட் செய்யப்பட வேண்டிய காட்சிகளை அப்படியே ஒளிபரப்புவது என என்னவெல்லாம் தங்களால் செய்ய முடியுமோ அனைத்தையும் நிகழ்ச்சிகளில் அரங்கேற்றுகின்றனர்.

பிஞ்சுக் குழந்தைகளைப் பாட, ஆட வைப்பதும், நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாகக் காட்டுவதும் நிறுவனங்களுக்கு வேண்டுமானால் வியாபார யுக்தி என்றாலும், அதனைப் பார்க்கும் மற்ற குழந்தைகளை, "அந்தக் குழந்தையைப் பார்த்தாயா? நீயெல்லாம் என்னத்த கிழிக்கிற?' என வீட்டில் உள்ளவர்கள் பிற குழந்தைகளை வைவதும் பெரும்பாலான குடும்பங்களில் நடக்கிறது.

இவை குழந்தைகளின் மனநிலையைப் பாதிக்கும் என்பதை சமுதாய நோக்கில் புரிந்துகொள்ள வேண்டும்.

எல்லோருக்கும் எல்லாத் திறமையும் வருவதில்லை. அவர்களால் முடிவதை மட்டுமே செய்யத் தூண்ட வேண்டும். இந்த நிகழ்ச்சிகள் நம் குழந்தைகளின் தகுதியை, தரத்தை எப்படித் தீர்மானிக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்களது தரத்தை (ரேட்டிங்) உயர்த்த மேற்கொள்ளும் இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு தருவதுபற்றி யோசிக்க வேண்டும்.

பொதுத் தேர்வுகளில் பெயிலாகி விட்டோம், குறைந்த மதிப்பெண் பெற்றுவிட்டோம் என்று மன உளைச்சலுக்கு ஆளாகி மாணவர்கள் தற்கொலை செய்வது பள்ளி முதல் கல்லூரி வரை நடக்கிறது.

இதில், இதுபோன்ற நிகழ்ச்சி ஒளிபரப்புகளால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளும் சிறுவர்களுக்குப் பிரச்னையை ஏற்படுத்த வேண்டுமா? அரசு சட்டம் போட்டால்தான் இதற்குத் தீர்வு கிடைக்கும் என்பது வெற்றுப் பேச்சு. சட்டங்களைவிட சுய கட்டுப்பாடுகள்தான் எதற்கும் தீர்வு. திரைப்படங்களாகப் பல நூறு முறை ஒளிபரப்பாகி, வானொலியிலும் தொலைக்காட்சியிலும் ஆயிரம் முறை கேட்ட பாடல்களைத்தான் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் பாடுகின்றனர். அதிலும் குரல்வள நிபுணர்கள் குழந்தைகளுக்கு அதிக சிரமம் இல்லாமல் பாடப் பயிற்சி தருகின்றனர். ஓரளவுக்கு வசதியான, கலாசார ரீதியாக முன்னேறிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள்தான் பெரும்பாலும் பங்கேற்கின்றனர். அவர்களுடைய பாடலுக்கு வாசிப்பதும் கைதேர்ந்த இசைக்குழுவினர். இப்படியெல்லாம் வாழ்க்கையில் பிறருக்குக் கிட்டாத வசதிகள், விளம்பரங்களுடன் பாடப்படும் நிகழ்ச்சிகள்தான் தொகுக்கப்பட்டு ஒளிபரப்பாகின்றன என்பதே புரியாமல் அந்தக் குழந்தையே "ஞானசம்பந்தரை'ப் போல பாடிவிட்டதாக பார்வையாளர்கள் புளகாங்கிதம் அடைகின்றனர்.

""கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா'', ""வடு மாங்கா ஊறுதுங்கோ'' போன்ற பாடல்களைக் குழந்தைகளைவிட்டுப் பாடச் சொல்லி ரசிப்பதற்கு வக்கிரமான புத்திதான் தேவை. அது இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் இருக்கிறது.

பணம் புகழுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடுப்பது என்கிற "தியாக மனப்பான்மை' அவர்களை அழைத்துச் செல்லும் அப்பா, அம்மாக்களிடமும் தாத்தா பாட்டிகளிடமும் நிரம்பவே இருக்கிறது. இந்த வெட்கங்கெட்ட கூத்துக்கு தமிழ்நாட்டில்தான் எத்தனை வரவேற்பு?

முன்பெல்லாம் எப்படியோ, இப்போது தமிழ் இனத்துக்கு எல்லா துறைகளிலும் தரக்குறைவானவற்றை ரசிப்பதிலேதான் அலாதி இன்பம் போலிருக்கிறது. தினமணி .
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

பொழுது போக்கல்ல, வக்கிரம். Empty Re: பொழுது போக்கல்ல, வக்கிரம்.

Post by Guest Mon Nov 26, 2012 6:18 pm

சூப்பருங்க நல்ல கட்டுரை ... பாரதி யார் என்று ஒரு பள்ளி சிறுவனை கேட்டால் விவேக் என்றானே பார்க்கணும் ... என்ன கொடுமை சார் இது
avatar
Guest
Guest


Back to top Go down

பொழுது போக்கல்ல, வக்கிரம். Empty Re: பொழுது போக்கல்ல, வக்கிரம்.

Post by ஆச்சார்யரஜ்னீஷ் Mon Nov 26, 2012 10:30 pm

இவை அனைத்தும் மிக சரியாக விளக்கப்பட்ட கட்டுரைதான் .... குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் படித்தவர்களும் புரிந்துகொள்ளவேண்டும் . கலாச்சாரம் இப்படிதான் கண்னுக்கு தெரியாமல் கெட்டு போகிறது .
ஆச்சார்யரஜ்னீஷ்
ஆச்சார்யரஜ்னீஷ்
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 07/11/2012

Back to top Go down

பொழுது போக்கல்ல, வக்கிரம். Empty Re: பொழுது போக்கல்ல, வக்கிரம்.

Post by baskars11 Tue Nov 27, 2012 10:31 am

அவர்களின் வயதிற்கு மீறி அழுத்ததை கொடுக்கும்போது பாவம் அந்த பிஞ்சுகள் என்ன செய்யமுடியும்.....
நன்றியுடன்,
பாஸ்கர், சு.
baskars11
baskars11
பண்பாளர்


பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011

Back to top Go down

பொழுது போக்கல்ல, வக்கிரம். Empty Re: பொழுது போக்கல்ல, வக்கிரம்.

Post by ராஜா Tue Nov 27, 2012 10:36 am

முன்பெல்லாம் எப்படியோ, இப்போது தமிழ் இனத்துக்கு எல்லா துறைகளிலும் தரக்குறைவானவற்றை ரசிப்பதிலேதான் அலாதி இன்பம் போலிருக்கிறது. தினமணி .
நன்றி உண்மையான வார்த்தை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பொழுது போக்கல்ல, வக்கிரம். Empty Re: பொழுது போக்கல்ல, வக்கிரம்.

Post by பார்த்திபன் Tue Nov 27, 2012 2:12 pm

மீடியா வெளிச்சத்தை அடைய மிரட்டி வளர்க்கப்படுகிறார்கள் குழந்தைகள். இந்நிலை கண்டிப்பாக மாறவேண்டும். நல்ல கட்டுரை. ஆமோதித்தல்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

பொழுது போக்கல்ல, வக்கிரம். Empty Re: பொழுது போக்கல்ல, வக்கிரம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum