ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதன் முதலாய் காதலித்தபோது...

5 posters

Go down

முதன் முதலாய் காதலித்தபோது... Empty முதன் முதலாய் காதலித்தபோது...

Post by யாழவன் Mon Oct 12, 2009 5:35 pm




முதன் முதலாய் காதலித்தபோது... Loveheart_smallஅடுத்த வாரம் இதே ஞாயிற்றுக்கிழமை திருமணம் என்பதால் புதுமாப்பிள்ளை ஆனந்த் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தான். திருமண அழைப்பிதழ் யாருக்கும் கொடுக்கப்படாமல் விடுபட்டுபோய்விடக்கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டினான்.

தன்னுடன் பள்ளி, கல்லூரியில் படித்தவர்களின் முகவரியைக்கூட, தூசி படிந்த 'ஆட்டோகிராப்' வாங்கிய நோட்டில் தேடிக் கொண்டிருந்தான். அந்த நோட்டில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு முகவரியையும் எழுத எழுத அவனது கடந்த கால பள்ளி வாழ்க்கை நினைவுக்குள் வந்து சென்றது.

ஒரு பெயரை பார்த்த மாத்திரத்தில் அவனது பேனா எழுத அடம்பிடித்தது. அந்த பெயரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

முத்து முத்தாய் அழகான எழுத்துக்கள்.

" பள்ளி நாட்கள் இவ்வளவு சீக்கிரத்தில் முடிந்து போனது எனக்கு ஏமாற்றம்தான். ஆனாலும், உனக்குள் நான் இருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். எனக்குள்ளும் நீ இருக்கிறாய் என்பது உனக்குத் தெரியும். காலங்கள் வேகமாக ஓடினால் என்ன, நாம் சேர்ந்து வாழ்வது ஒரு பொழுதானாலும் எனக்கு அதில் சம்மதமே! அன்புடன் உன் ஆனந்தி...'' என்று, அதில் எழுதப்பட்டு இருந்த எழுத்துக்களை மனதுக்குள் வாசித்த ஆனந்த் கண்களில் இருந்து விழுந்த கண்ணீர்த் துளிகள், அந்த அழகான எழுத்துகளுக்கு கசப்பான முத்தம் கொடுத்தன.

மேற்கொண்டு அவனால் அந்த 'ஆட்டோகிராப்' நோட்டை புரட்ட முடியவில்லை. அப்படியே நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான்.பிறந்த ஊரான குட்டம் என்ற கடற்கரையோர கிராமத்தில் அவன் படித்த அரசு உயர்நிலைப்பள்ளி நினைவுக்குள் வந்து சென்றது.அங்குதான் ஆனந்தும், ஆனந்தியும் ஒன்றாக படித்தார்கள். டீன்-ஏஜ் பருவம் அவர்களை காதலுக்குள் சிக்க வைத்தது. இவர்களது காதல் உடல் அழகைப் பார்த்து வந்தது அல்ல; மனதை பலமுறை படித்து வந்த இனம் புரியாத, அப்பழுக்கற்ற உன்னத காதல்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு அவர்கள் இருவரையும் பிரித்தது. அதை விதி எழுதிய தீர்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இருவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், மேல்நிலை கல்வி பயில வெளியூருக்கு பஸ்சில் சென்றுவர வேண்டும் என்பதால் ஆனந்தியின் படிப்பு 10-ம் வகுப்போடு நின்றுபோனது. ஆனந்த் மட்டும் வெளிïர் சென்று விடுதியில் தங்கிப் படித்தான். விடுமுறையில் கிராமத்துக்கு வந்து போவான்.

அவன் மேல்நிலை பள்ளிக்கல்வியை முடித்ததும், கல்லூரி படிப்பை தொடர 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரத்துக்கு சென்றான். அதேநேரம், வயதுக்கு வந்த பெண்ணை வீட்டில் வைத்திருக்கக்கூடாது என்று எண்ணிய ஆனந்தியின் பெற்றோர் உடனடியாக திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்து, அவளுக்கு திருமணமும் முடித்துவிட்டார்கள்.

இந்த தகவல் திருமணம் முடிந்த பிறகுதான் ஆனந்துக்கு தெரிய வந்தது. அவனால் கண்ணீர்விட மட்டும்தான் முடிந்தது. மனதுக்குள் ஆலமரமாய் வேர் விட்டிருந்த முதல் காதலை அவனால் எளிதில் பிடுங்கி எறிய முடியவில்லை.

இன்று அவன் சென்னையில் மிகப்பெரிய நிறுவனத்தில் பணிபுரிகிறான். விரைவில் அவனது மனதில் இன்னொரு பெண் மனைவியாக குடியேறப்போகிறாள். என்றாலும், அந்த மனதின் ஒரு ஓரத்தில் ஆனந்திக்கும் இடம் இருக்கத்தான் செய்கிறது.

திருமணம் ஆன ராமையாவுக்கும், தனது பள்ளிப்பருவ காதலியை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. அப்போதே அவ்வளவு அழகாக இருப்பாள் அவரது காதலி. ஒருநாள் அந்த முன்னாள் காதலி வசித்த கிராமத்துக்குச் சென்றார். அங்கே இங்கே என்று விசாரித்து அவளது வீட்டை அடைந்தார்.

கதவை தட்டினார். ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஒரு குண்டு பெண் கதவை திறந்தார். 'ரம்யா வீடு இதுதானே?' என்று கேட்டார். அதற்கு அந்த பெண், 'நான்தான் ரம்யா' என்று சொல்ல, 'இல்ல... நான் தேடி வந்த ரம்யா வேற...' என்று கூறிவிட்டு, அங்கிருந்து ஓட்டம் பிடித்தவர்தான், நேராக வீட்டுக்கு வந்த பின்னர்தான் அமைதியானார்.

'நல்லவேளை, நம்ம காதல் கைகூடவில்லை. ஒருவேளை அவளை திருமணம் செய்து இருந்தால் இன்னிக்கு நான் என்ன பாடுபட்டிருப்பேன்?' என்று மனதுக்குள்ளேயே நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டார்.

இன்றைய அவசர உலகில் பலருக்கு கடந்த கால வாழ்க்கையை புரட்டிப் பார்க்க நேரமில்லை. ஓய்வு கிடைக்கும் நேரத்தில் அந்த கடந்த கால வாழ்க்கையை சற்று புரட்டினால் அந்த முதல் காதல் அனுபவம் உங்களையும் தழுவிச் செல்லும். இப்படி புரட்டிப் பார்ப்பதை விட்டுவிட்டு, நேராக காதலியை சந்திக்க சென்றால் ராமையாவுக்கு ஏற்பட்ட அனுபவம் உங்களுக்கும் ஏற்படலாம்.

முதன் முதலாய் காதலித்தபோது... Lovers+at+bench

வாழ்க்கையில் இந்த முதல் காதல் தவிர்க்க முடியாத ஒன்று. சிலருக்கு பள்ளிப் பருவத்தில் இந்த அனுபவம் ஏற்படலாம். இன்னும் சிலருக்கு கல்லூரியில் படிக்கும்போது ஏற்படலாம். மிகச்சிலர் பணிக்கு செல்லும் இடத்தில் முதன் முதலாக காதல் வயப்படலாம்.

ஜோடியாக பார்க், பீச், தியேட்டர் என்று சுற்றினால்தான் காதல் என்று அர்த்தமல்ல. ஒருவன் மனதுக்குள் ஒருத்தியோ, ஒருத்தி மனதுக்குள் ஒருவனோ வந்துவிட்டாலே அங்கே காதல் மலர்ந்துவிடுகிறது.

இந்த காதல் நிச்சயமாக நிறைவேறும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு நிறைவேறலாம். பலருக்கு நிறைவேறாமல் போகலாம்.

காதல் நிறைவேறாமல் போனவர்கள் பெற்றோர் பார்க்கும் வரனை திருமணம் செய்து கொள்கிறார்கள். இதில் பிரச்சினை இல்லை. திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தபிறகு முதல் காதலை பற்றியோ, பழைய காதலன் அல்லது காதலியை பற்றியோ பேசும்போதுதான் பிரச்சினையே ஏற்படுகிறது.

அதனால், எக்காரணம் கொண்டும் திருமண வாழ்க்கைக்கு பிறகு, தோல்வியால் முடிவுரை எழுதப்பட்ட காதல் பற்றி துணையிடம் பேசக்கூடாது என்கிறார்கள், மனோதத்துவ நிபுணர்கள்.

மேலும், சில கணவன்மார்களும் தங்கள் மனைவியிடம், அவர்களது முதல் காதல் அனுபவத்தைக் கேட்டு தெரிந்துகொண்டு, அவர்களை சித்ரவதை செய்யத் தொடங்கி விடுகிறார்கள். அதேநேரம், பெண்கள் இதுபற்றி கணவன்மாரிடம் பெரும்பாலும் கேட்காவிட்டாலும், அதுபற்றி கணவரே உண்மையை சொல்லிவிட்டால், அவர்கள் மீதான அன்பை குறைத்துக் கொள்கிறார்கள்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம் ஒன்று இந்த தகவலை தெரிவிக்கின்றது.

இதுபோன்ற முதல் காதல் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம்? அதற்கு மனோதத்துவ நிபுணர்கள் தரும் ஆலோசனைகள் சில :

நீங்கள் திருமணத்திற்கு முன்பு வேறு ஒருவரை காதலித்து இருந்தால், அதுபற்றி துணையிடம் சொல்லி, தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம். துணையே அதுபற்றி கேட்டாலும்கூட சொல்லிவிட வேண்டாம். மீறி சொன்னால், அந்த முதல் காதலை காரணம் காட்டி நீங்கள் துன்புறுத்தப்படலாம். அல்லது மகிழ்ச்சியை இழக்க நேரலாம்

உங்கள் முதல் காதலை ஒப்புக்கொண்டால், இனியும் இவள்(ர்) வேறு ஒரு துணையை தேடலாம் என்கிற சந்தேகம் உங்கள் துணைக்கு வந்துவிடும் வாய்ப்புகள் உண்டு.

காதலிக்கும்போது எழுதிய கடிதங்கள், டைரிகள் மற்றும் காதலன் அல்லது காதலி வாங்கிக்கொடுத்த பரிசுப் பொருட்களை பத்திரப்படுத்தி வைக்காதீர்கள். ஏதாவது ஒரு சூழ்நிலையில் அவை உங்களை காட்டிக்கொடுக்கலாம்.

முன்னாள் காதலன் அல்லது காதலி உடனான தகவல் தொடர்பை திருமணத்திற்கு பிறகு முற்றிலுமாக நிறுத்திவிடுங்கள். வெளியில் செல்லும்போது சந்திக்க நேர்ந்தால், 'இவர் என் தூரத்து உறவினர்' என்று மட்டும் துணைக்கு அறிமுகம் செய்து, அந்த இடத்தைவிட்டு அகன்று விடுங்கள்.

'இனி நாம் நண்பர்களாக பழகுவோமே' என்று உங்கள் முன்னாள் காதலன் அல்லது காதலி வற்புறுத்தினால் அதை ஏற்றுக்கொள்ளாதீர்கள். உங்கள் துணை அருகில் இல்லாதபட்சத்தில், அந்த முன்னாள் காதலனையோ அல்லது காதலியையோ வெளியிடங்களில் சந்திக்கும்பட்சத்தில் 'ஹாய், ஹலோ, எப்படி இருக்கீங்க?' என்பது போன்ற நல விசாரிப்புகளோடு மட்டும் நிறுத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் செய்யும் தொழிலில் உங்கள் முன்னாள் காதலனையோ அல்லது காதலியையோ பங்குதாரராகவோ அல்லது பணியாளராகவோ அனுமதிக்க வேண்டாம். மீறி அனுமதித்தால், உங்கள் குடும்ப வாழ்வில் அதுவே பிரச்சினையாக அமையலாம்.

நீங்கள் ஒருதலையாகவே காதலித்திருக்கும் பட்சத்தில், உங்கள் மனதில் பழைய காதல் எண்ணம் இல்லாவிட்டால் அந்த காதலரையோ அல்லது காதலியையோ நண்பராக ஏற்றுக்கொள்வதில் தவறில்லை.

மொத்தத்தில், முதல் காதலை மனதுக்குள் அவ்வப்போது புரட்டிப் பார்ப்பதோடு நிறுத்திவிடுங்கள். அதுபற்றி விரிவாக துணையிடம் பேசுவது, உங்களது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பங்கம் விளைவிக்கலாம்.

என்ன... உங்கள் மனதிலும் முதல் காதல் அலைபாய்கிறதா? பக்கத்தில் மனைவியோ அல்லது கணவனோ இல்லாவிட்டால் அசைபோடுவதோடு திருப்திப்பட்டுக் கொள்ளுங்கள். யாரிடமாவது பகிர்ந்து கொண்டால்தானே பிரச்சினை...!
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

முதன் முதலாய் காதலித்தபோது... Empty Re: முதன் முதலாய் காதலித்தபோது...

Post by மீனு Mon Oct 12, 2009 5:40 pm

ஜோடியாக பார்க், பீச், தியேட்டர் என்று சுற்றினால்தான் காதல் என்று அர்த்தமல்ல. ஒருவன் மனதுக்குள் ஒருத்தியோ, ஒருத்தி மனதுக்குள் ஒருவனோ வந்துவிட்டாலே அங்கே காதல் மலர்ந்துவிடுகிறது.

இந்த காதல் நிச்சயமாக நிறைவேறும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு நிறைவேறலாம். பலருக்கு நிறைவேறாமல் போகலாம்.


அருமை யாழவன்..ரொம்ப அருமை..நன்றிகள்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

முதன் முதலாய் காதலித்தபோது... Empty Re: முதன் முதலாய் காதலித்தபோது...

Post by kirupairajah Mon Oct 12, 2009 5:42 pm

மீனு wrote:ஜோடியாக பார்க், பீச், தியேட்டர் என்று சுற்றினால்தான் காதல் என்று அர்த்தமல்ல. ஒருவன் மனதுக்குள் ஒருத்தியோ, ஒருத்தி மனதுக்குள் ஒருவனோ வந்துவிட்டாலே அங்கே காதல் மலர்ந்துவிடுகிறது.

இந்த காதல் நிச்சயமாக நிறைவேறும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு நிறைவேறலாம். பலருக்கு நிறைவேறாமல் போகலாம்.

முதன் முதலாய் காதலித்தபோது... 678642


முதன் முதலாய் காதலித்தபோது... Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

முதன் முதலாய் காதலித்தபோது... Empty Re: முதன் முதலாய் காதலித்தபோது...

Post by யாழவன் Mon Oct 12, 2009 5:43 pm

மீனு wrote:ஜோடியாக பார்க், பீச், தியேட்டர் என்று சுற்றினால்தான் காதல் என்று அர்த்தமல்ல. ஒருவன் மனதுக்குள் ஒருத்தியோ, ஒருத்தி மனதுக்குள் ஒருவனோ வந்துவிட்டாலே அங்கே காதல் மலர்ந்துவிடுகிறது.

இந்த காதல் நிச்சயமாக நிறைவேறும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு நிறைவேறலாம். பலருக்கு நிறைவேறாமல் போகலாம்.


அருமை யாழவன்..ரொம்ப அருமை..நன்றிகள்..
இது மீனுவுக்கு ரொம்ப பொருந்தும் போல?
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

முதன் முதலாய் காதலித்தபோது... Empty Re: முதன் முதலாய் காதலித்தபோது...

Post by ரூபன் Mon Oct 12, 2009 5:47 pm

ஜோடியாக பார்க், பீச், தியேட்டர் என்று சுற்றினால்தான் காதல்
என்று அர்த்தமல்ல. ஒருவன் மனதுக்குள் ஒருத்தியோ, ஒருத்தி மனதுக்குள்
ஒருவனோ வந்துவிட்டாலே அங்கே காதல் மலர்ந்துவிடுகிறது.

இந்த காதல் நிச்சயமாக நிறைவேறும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு நிறைவேறலாம். பலருக்கு நிறைவேறாமல் போகலாம்.

முதன் முதலாய் காதலித்தபோது... 67637 முதன் முதலாய் காதலித்தபோது... 67637 முதன் முதலாய் காதலித்தபோது... 67637
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

முதன் முதலாய் காதலித்தபோது... Empty Re: முதன் முதலாய் காதலித்தபோது...

Post by kirupairajah Mon Oct 12, 2009 5:53 pm

என்ன ரூபன் நேற்று இரவு முழுவதும் ஈகரையில் இருந்தீங்க


முதன் முதலாய் காதலித்தபோது... Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

முதன் முதலாய் காதலித்தபோது... Empty Re: முதன் முதலாய் காதலித்தபோது...

Post by மீனு Mon Oct 12, 2009 6:00 pm

யாழவன் wrote:
மீனு wrote:ஜோடியாக பார்க், பீச், தியேட்டர் என்று சுற்றினால்தான் காதல் என்று அர்த்தமல்ல. ஒருவன் மனதுக்குள் ஒருத்தியோ, ஒருத்தி மனதுக்குள் ஒருவனோ வந்துவிட்டாலே அங்கே காதல் மலர்ந்துவிடுகிறது.

இந்த காதல் நிச்சயமாக நிறைவேறும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு நிறைவேறலாம். பலருக்கு நிறைவேறாமல் போகலாம்.


அருமை யாழவன்..ரொம்ப அருமை..நன்றிகள்..
இது மீனுவுக்கு ரொம்ப பொருந்தும் போல?

யாருமே காதலிக்காம இருந்தது இல்லை..பலர் மனசுக்குள்ளேயே வைத்து இருப்பாங்க..நாம வெளியே சொல்லும் ராகம்..யாழவன்..நாம் அம்மாவை அப்பாவை காதலிக்கிறோம் என்று சொல்லாம நிஜம் சொன்னவங்க..ஆமா


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

முதன் முதலாய் காதலித்தபோது... Empty Re: முதன் முதலாய் காதலித்தபோது...

Post by ரூபன் Mon Oct 12, 2009 6:03 pm

kirupairajah wrote:என்ன ரூபன் நேற்று இரவு முழுவதும் ஈகரையில் இருந்தீங்க

ஆமான் கிருபை பகலில் வருவது கடினமாக இருக்கிறது வேலைப்பளு இரவில் அதிக நேரம் இருப்பேன்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

முதன் முதலாய் காதலித்தபோது... Empty Re: முதன் முதலாய் காதலித்தபோது...

Post by kirupairajah Mon Oct 12, 2009 6:07 pm

ஓ அப்படியா! நேற்று நானும் அதிகம் நேரம் ஈகரையில் இருந்தேன்!


முதன் முதலாய் காதலித்தபோது... Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

முதன் முதலாய் காதலித்தபோது... Empty Re: முதன் முதலாய் காதலித்தபோது...

Post by சதீஷ்குமார் Mon Oct 12, 2009 6:09 pm

முதன் முதலாய் காதலித்தபோது... 599303 காதல்

மெதுவாக இதயத்தில் வேரூன்றி முளைத்து

காதல் கொடியாகி பூ முதன் முதலாய் காதலித்தபோது... 154550 பூக்கலாம்

பூக்காமலும் போகலாம்

ஆனால் இதயத்தில் முதன் முதலாய் காதலித்தபோது... 599303 பூத்த காதல் வேர் என்றும் மாறாது


ஆதலால் காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள் முதன் முதலாய் காதலித்தபோது... 942
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

முதன் முதலாய் காதலித்தபோது... Empty Re: முதன் முதலாய் காதலித்தபோது...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum