ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர் Poll_c10 
VENKUSADAS
ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர் Poll_c10 
VENKUSADAS
ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர்

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர் Empty ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர்

Post by தாமு Mon Oct 12, 2009 7:40 am

கடும் முயற்சி விதியை வெல்லும்



ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர் Tblanmegamideanews_54542177916

வானிலிருந்து பெய்யும் மழையே இவ்வுலக மக்களுக்கு வாழ்வளிக்கிறது. மக்களின் உயிரைக் காக்கும் மழைநீர் அமுதம் போன்றதாகும். இத்தகைய மழைநீர் இல்லாவிட்டால் பூவுலகில் சிறு பசும்புல்லினைக் கூடப் பார்க்க முடியாது.
நேராக இருக்கும் அம்பு, பிறருக்கு கொடிய காயத்தைத் தரும். வீணை வளைந்திருக்கும். ஆனால் தன்னை மீட்டி மகிழ்பவர்களின் செவிகளுக்கு இனிய இசையை கொடுக்கும். அதனால் ஒருவரது உருவத்தை வைத்து மட்டும் குணத்தைக் கணிக்கக் கூடாது. அவர்களது செயல்களை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
விதி என்று ஒன்று இருக்கிறது. அதை கண்டு சோர்ந்து விடாமல், மாற்றியமைக்க இயன்ற அளவு முயற்சிக்க வேண்டும். ஆனால், பெயரளவில் முயற்சி இருந்தால் அதனால் பயனேதும் இல்லை. பெருமுயற்சி வேண்டும். அப்படி முயற்சிப்பவன் செய்பவன், விதியையும் வெல்லும் திறம் பெற்றிருப்பான்.
நாம் பேசும் சொற்கள் பொருளுடையதாக இருக்க வேண்டும். பொருளுடைய சொற்களால் பயனுண்டாகும். பயனற்ற வீணான சொற்களைப் பேசுபவன் தன் வாழ்நாளை வீணாக்குபவன் ஆவான். அப்படிப்பட்ட ஒருவனை மக்களுள் பதடி (பயனற்றவன்) என்று தான் அழைக்க வேண்டும்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர் Empty Re: ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர்

Post by தாமு Mon Oct 12, 2009 7:42 am

பணிவுள்ளவனுக்கே பெருமை






* விருப்பு வெறுப்பின்றி அனைவருக்கும் நன்மை செய்யும் இறைவனை போற்றி வழிபடுவோருக்கு இன்பமே அன்றி எந்நாளும் துன்பமில்லை. இறைவனின் பெருமை மிக்க திருவடிகளை வணங்குவதே கற்றதனால் பெற்ற பயனாகும்.


* மதம் கொண்ட யானையைப் போல விளங்கும் ஐம்புலன்களையும் மனவலிமை என்னும் அங்குசத்தால் அடக்கியாளும் திறமை பெற்றவன் உயர்நிலையாகிய வானுலகத்தை அடையும் தகுதி பெறுவான்.


* பிறருடைய வளர்ச்சி கண்டு பொறாமை கொள்வது, பேராசைப்படுவது, கோபம் கொள்வது, கடுஞ்சொல் பேசுவது ஆகிய தீயகுணங்களை விலக்கி வாழ்வதே நல்வாழ்க்கையாகும்.


* ஒருவன் மிகவும் பணிவுள்ளவாகவே இருந்து, இனிமையான சொற்ளைப் பேசி வருவான் என்றால் அவனுக்கு அதைவிட வேறு பெருமை இல்லை.


* மிக நெருக்கடியான தருணத்தில், தன்னால் ஆன உதவியை ஒருவனுக்குச் செய்ய முயற்சிப்பவனின் பெருமை இந்த வையகத்தையும் வாகனத்தையும் விட மேலானது.


* ஆமை போல் ஐந்து உறுப்புக்களையும் தன் ஓட்டினுள் அடக்கிப் பாதுகாத்துக் கொள்வது போல, ஐந்துபுலன்களையும் தன் மனவலிமையால் அடக்கி ஆள வல்லவனுக்கு அவ்வலிமையே பாதுகாப்பாக அமையும்.


-திருவள்ளுவர்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர் Empty Re: ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர்

Post by தாமு Mon Oct 12, 2009 7:42 am

நல்லவர்களுடன் சேருங்கள்



ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர் Tblanmegamideanews_21532839537

தான் சேர்ந்திருக்கும் நிலத்தின் தன்மைக்கேற்ப மணம், சுவை, நிறம் ஆகிய தன்மைகளை தண்ணீர் பெறுகிறது. அசுத்த நீருடன் சேரும்போது, அது அசுத்தமாகிறது. அதேபோல, உடன் பழகுபவர்களின் தன்மைக்கேற்பவே குணங்களும் அமையும். தீயவர்களுடன் சேர்வதால் தீமை உண்டாகுமே தவிர, வேறு நன்மைகள் ஏதும் ஏற்படாது. நல்ல குணமுடையவர்கள், தீயோர்களுடன் நட்பு கொள்ளாமல் விலகியே இருப்பர்.


ஒருவனுக்கு அமையும் நட்பைப் பொறுத்தே, அவனுக்கு அறிவும், நடத்தைகளும் அமைகிறது. நல்லவர்களுடன் சேர்வதால் மனம் சுத்தமாகவும், செயல்கள் நல்லதாகவும் இருக்கும். ஒருவன் தான் செய்த நற்செயல்களால் மட்டுமே இறந்த பின்பும் புகழ்பெற்றிருக்க முடியும். அப்படிபட்ட செயல்கள் பெற நல்ல குணமும், நல்லோர்களின் நட்பும் அவசியம் வேண்டும்.






ஒழுக்கத்துடன் வாழ்வதற்கு நல்லவர் சேர்க்கையை விட, வேறு எதுவும் உதவி செய்யாது. அதேபோல், தீயவழியில் ஈடுபட்டு வீணாக வாழ்ந்து துன்பத்தில் வீழ்வதற்கு, தீயவர் சேர்க்கையைவிட வேறு எதுவும் துணையாக இருக்காது.


ஒரு செயலை செய்யும் முன், அதற்கு வரும் இடையூறுகள், விளையும் பயன், தேவையான பொருள், கருவி, காலம், ஆற்றல், இடம் போன்றவற்றை நன்கு சிந்தித்துவிட்டு அதில் இறங்க வேண்டும். இந்த குணங்கள் நல்ல நண்பர்களின் நட்பினாலேயே வரும். செயலை செய்யத் தொடங்கியவுடன் பார்த்துக் கொள்ளலாம் என்பது முட்டாள்தனம்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர் Empty Re: ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர்

Post by kirupairajah Mon Oct 12, 2009 7:43 am

விருப்பு வெறுப்பின்றி அனைவருக்கும் நன்மை செய்யும் இறைவனை போற்றி வழிபடுவோருக்கு இன்பமே அன்றி எந்நாளும் துன்பமில்லை. இறைவனின் பெருமை மிக்க திருவடிகளை வணங்குவதே கற்றதனால் பெற்ற பயனாகும்.

பிறருடைய வளர்ச்சி கண்டு பொறாமை கொள்வது, பேராசைப்படுவது, கோபம் கொள்வது, கடுஞ்சொல் பேசுவது ஆகிய தீயகுணங்களை விலக்கி வாழ்வதே நல்வாழ்க்கையாகும்.

அருமையா வரிகள், நன்றி தாமு!


ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர் Empty Re: ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர்

Post by தாமு Mon Oct 12, 2009 7:44 am

பகிர்ந்து உண்போம்






* மனம், சொல், செயல் மூன்றாலும் அடங்கி நடப்பவன் உயர்ந்தவர்களின் நன்மதிப்பைப் பெறுவான். அடக்கமில் லாதவன் துன்பத்திற்கு ஆளாவான். புலனடக்கம் பெற்றிருப்பதை விட சிறந்த நன்மை வேறில்லை.


* நடுநிலையுடன் வாழும் ஒருவன் செல்வநிலையில் தாழ்வுநிலை அடைந் தாலும், அத்தாழ்வினை நல்லோர்கள் தாழ்வாக எண்ண மாட்டார்கள். கெட்டாலும் மேன்மக்களாகவே கருதுவர்.


* ஒழுக்க நெறியில் இருந்து விலகினால் ஒருவன் என்றுமே நீங்காத பெரும்பழியைச் சுமக்க வேண்டி வரும். ஆனால், ஒழுக்கத்தினைப் பின்பற்றுபவன் வாழ்வில் என்றும் மிக மேன்மைகளை அடைவான்.


* பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்யப்பட்ட உதவி, அளவில் சிறியதாயினும் செய்தவரின் பண்புநலன்களை ஆராய்ந்து பார்த்தால் அவ்வுதவியின் பெருமை கடலைவிடப் பெரியதாக அமையும்.


* இனிமையான சொற்கள் தமக்கும் பிறருக்கும் இன்பம் தரும் என்று தெரிந்திருந்தும், கெடுதலை உண்டாக்கும் கடுஞ் சொற்களை பேசுவோர், என்ன பயன் கருதிப் பேசுகிறார் களோ தெரியவில்லை.


* தன்னிடம் உள்ள உணவு அளவில் சிறிதாக இருந்தாலும், அதனை பிறருக்குப் பகிர்ந்து கொடுத்து உண்பதே, அறநூல் கூறும் தர்ம நெறிகளிலே தலைசிறந்த நெறியாகும்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர் Empty Re: ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர்

Post by தாமு Mon Oct 12, 2009 7:46 am

படிக்காதவர்களுக்கு கண் எதற்கு?





* உள்ளத்தில் இருக்கும் குற்றங்கள் நீங்கவும், அறவழியில் நடக்கவும் வாய்மையை வலியுறுத்தும் அறநூல்களை தேர்ந்தெடுத்து கற்க வேண்டும். படிப்பதோடு நின்றுவிடாமல் அதன்படி நடக்கவும் வேண்டும். அறவழியில் நடப்பவர்களின் மனம் தூய்மையாக இருக்கும். தூயவர்களுக்கு அனைத்துமே சொந்தமானதாகும்.





* மனிதர்கள் அனைவருக்கும் கண்கள் இருக்கிறது. அதனைக் கொண்டு புறப்பொருளை பார்க்கிறார்கள். இதற்காக கண் உள்ளவர்கள் அனைவரும் பார்வையுடையவர்கள் என்று கருதக்கூடாது. கல்வியை சரியான முறையில் கற்று, அதற்கேற்ப தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்பவரே உண்மையில் கண் உள்ளவர் ஆவார். கல்லாதவர்களுக்கு இருக்கும் கண்கள், புண்களாகவே கருதப்படும். அந்த புண்களுக்கு வலியை மட்டும்தான் உணரமுடியுமே தவிர எதனையும் படித்தறியும் திறன் இருக்காது.


* நிலத்தில் எவ்வளவு ஆழம் தோண்டுகிறீர்களோ அந்த அளவிற்கு நீர் சுரக்கும். மக்களுக்கு கற்பிக்கப்படும் கல்வியும் இதைப்போலவே அறிவை பெருக்கித்தருமே தவிர, சற்றேனும் குறைவாக கொடுக்காது. எனவே, அனைவரும் கற்றுத்தேர வேண்டும்.


* கற்றவர்கள் நற்குணங்கள் உடையவர்களாக இருப்பார்கள். தம்மைவிட மூத்தோருக்கும், குருவிற்கும் பணிந்து நடப்பார்கள். தம்முடன் நீண்டநாள் பழகிய நல்ல நண்பர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் விலகி செல்லும்போது வருத்தம் கொள்வார்கள். இவர்களே, அனைவரிலும் உயர்ந்தவராக கருதப்படுவார்கள்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர் Empty Re: ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர்

Post by தாமு Mon Oct 12, 2009 7:48 am

யாரைத் தேர்ந்தெடுப்பது





* நல்லநெறிமுறைகளில் இருந்து பிறழாதவனும், மக்களின் துன்பத்தை தன் துயரமாகக் கருதுபவனும், வீரம் நிறைந்தவனும், மானம் கொண்டவனுமாக இருப் பவனே நல்ல அரசன்.


* மக்களை ஆட்சி செய்யும் பொறுப்பில் உள்ளவர்கள் கடமையைச் செய்வதில் காலம் தாழ்த்தாதவராகவும், கல்வி அறிவு பெற்றவராகவும், நெஞ்சில் மிகத் துணிவுள்ளவ ராகவும் இருத்தல் வேண்டும்.


* பார்ப்பதற்கு எளியவனாகவும், மக்கள் அணுகும் விதத்திலும், கடுஞ்சொல் என்பதே அறியாதவனாகவும் இருக் கும் மன்னன் எவனோ அவனை மக்கள் போற்றுவர்.


* வருவாய்க்கான நல்ல அற வழிவகைகளை தோற்று விப்பவனும், அவ்வழிகளில் ஈட்டிய பொருளை காத்து மக்களுக்கு அறப்பணிகளைச் செய்பவனுமே நல்ல நிர்வாகியாவான்.


* ஆட்சியில் தவறு நடக்கும்போது இடித்துரைப்பதை ஏற்கும் பக்குவமும், பிறர் கூறும் கடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்ளும் தன்மையும் கொண்டு தன்னை திருத்திக் கொள்பவனின் கீழ் உலகமே அடங்கி நிற்கும்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர் Empty Re: ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர்

Post by தாமு Mon Oct 12, 2009 7:50 am

துன்பத்தை பொறுத்துக் கொள்வோம்





* நிஜமான புகழ் எது தெரியுமா? பொருள் இல்லாத ஏழைகளைக் கண்டு இரக்கப்பட்டு செய்யும் உதவிகளின் மூலம் உண்டாகும் புகழ் மட்டுமே என்றும் நிலைத்து நிற்கும் சிறப்பு கொண்டதாகும்.


* செல்வம் இல்லாதவர்கள் இம்மண்ணுலகில் எதையும் பெற முடியாது. அருள் எனப்படும் செல்வம் இல்லாதவர்களால் மேலுலகத்தில் இன்பம் பெற முடியாது.


* தீயில் காய்ச்சி உருக்கிய தங்கம் எப்படி ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறதோ அதுபோல, துன்பங்கள் நம்மை வருத்தும் போது அதைப் பொறுத்துக் கொள்பவர்கள் யாரோ அவர்களின் வாழ்வில் எல்லா நன்மைகளும் ஏற்படும்.


* தன்னைப் பெற்று ஆளாக்கிய தாயின் பசியைப் போக்குவதாக இருந்தாலும் கூட, ஒருவன் கொடிய செயல்களாகிய கொலை, களவு போன்றவைகளைச் செய்வது கூடாது.


* கண்ணிற்கு அழகு சேர்ப்பது தாட்சண்யம் என்னும் கருணையுள்ள அருட்பார்வை மட்டுமே. அப்படியில்லாமல், பிறரது துன்பத்தைக் கண்டு கொள்ளாமல் செல்பவனின் கண்கள் இரண்டும் முகத்தில் இருக்கும் புண்கள் போன்றதாகும்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர் Empty Re: ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர்

Post by தாமு Mon Oct 12, 2009 7:51 am

நாவடக்கம் மிகவும் அவசியம்



ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர் Tblanmegamideanews_31007021666

* ஒரு மனிதன் எந்தச் சூழ்நிலையிலும் பொதுவாகச் சிந்தித்து நடுநிலையோடு வாழ்வது சிறந்தது. ஒரு நல்ல மனிதனுக்குரிய உயர்ந்த தகுதி நடுநிலையாளராக இருப்பது தான். நல்லவர்கள் செல்வநிலையிலும், ஏழ்மைநிலையிலும் நடுநிலைமையிலிருந்து தவறமாட்டார்கள்.


* அனைத்து செல்வங்கள் இருந்தபோதிலும், ஒழுக்கம் இல்லை என்றால் ஒருவனுக்கு பெருமைஇல்லை. உயிரை விடவும் ஒழுக்கம் மேலானது. நல்ல ஒழுக்கம் கொண்டவர்கள் தவறியும் பிறரைப் பழித்துப் பேசமாட்டார்கள்.


* பட்டினி கிடந்து விரதம் மேற்கொள்பவர்களைக் காட்டிலும் பிறர் செய்யும் குற்றங்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் மேலானவர்கள். ஆசைகளைத் துறந்த துறவிகளை காட்டிலும் பொறுமையுடையவர்கள் உயர்ந்தவர்களாக மதிக்கப்படுவர்.


* தனக்குத் தானே கேடு விளைவித்துக் கொள்ள பகைவனோ, வேறு எதுவோ தேவையில்லை. பொறாமை என்ற ஒன்றே போதும். பிறர் செய்யும் தர்மங்களைக் கண்டு பொறாமை கொள்பவர்களின் குடும்பம் சிதைந்து ஏழ்மைநிலையை அடையும்.


* அடக்கமுடைய மனிதன் வாழ்வில் உயர்வடைகிறான். அவன் தேவர்களுக்கு ஒப்பானவன். எதையும் அடக்காவிட்டாலும் மனிதன் தன் நாக்கையாவது அடக்க வேண்டும்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர் Empty Re: ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர்

Post by தாமு Mon Oct 12, 2009 7:52 am

உழைப்புக்கு உயர்வு உறுதி



ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர் Tblanmegamideanews_17524355650

* பொறாமை,ஆசை,சினம்,கடுஞ்சொல் இவற்றை அகற்றி வாழ்வதே அறவாழ்வாகும். தீயினால் சுட்ட புண்கூட நாளடைவில் ஆறிவிடும். ஆனால், நாவினால் சுட்ட வடு ஆறவே ஆறாது.


* மதிப்பு இல்லாதவரையும் ஒரு பொருட்டாக மதிக்கச் செய்யும் தன்மை பொருள் வளத்திற்கு உண்டு. அப்பொருளைப் போல மதிப்புமிக்க பொருள் வேறொன்று உலகில் இல்லை.


* உழைக்க உறுதி கொண்டவன் எதிலும் வெற்றி பெறு கின்றான். பொது வாழ்விலும் தனிமனித வாழ்விற்கும் உழைப்பே உயர்வு தரும். சோம்பல் ஒருவனை நரகத்திற்குத் தான் கொண்டு போய்ச் சேர்க்கும்.


* எவ்வளவு கிடைத்தாலும் அடங்காத தன்மையுள்ள ஆசையை ஒருவன் அடக்கப் பழகி விட்டால், அப்போதே அவன் பிறப்பில்லாத பேரின்ப நிலையைப் பெறுகிறான்.


* ஒழுக்கத்தினால் சிறப்பு உண்டாவதால் ஒவ்வொருவரும் ஒழுக்கத்தை உயிராக மதித்துப் போற்றி மதிப்பார்கள்.


* தன்னை அகழ்ந்து பள்ளம் உண்டாக்குபவரையும் பொறுத்துக் கொண்டு நிற்கும் பூமியினைப் போல, தம்மை இகழ்ச்சியாக எண்ணுபவரையும் பொறுத்துக் கொள்ள வேண்டும்.


-திருவள்ளுவர்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர் Empty Re: ஆன்மீக சிந்தனைகள் » திருவள்ளுவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum