ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள்

+3
மீனு
ரூபன்
சிவா
7 posters

Go down

சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Empty சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள்

Post by சிவா Mon Oct 12, 2009 1:41 am

இன்று சுகப் பிரசவங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் போலிருக்கிறதே! தனியார் மருத்துவமனைகளில் சுகப்பிரசவம் என்பது ஆச்சரியமான நிகழ்ச்சிதான். இன்னும் நாலைந்து ஆண்டுகளில் 700 சதவீதம் சிசேரியன் பிரசவங்கள் என்றாகி விடுமாம். சிசேரியன் என்பது தாய்சேய் உயிர்காக்க வேண்டிய அவசியம் ஏற்படும் போது மட்டுமே செய்வார்கள். அமெரிக்க அரசின் யுத்தவெறி எல்லையில் வந்து நின்று ரத்தப் பற்களால் சிரித்தபோது ஈராக் கர்ப்பிணி பெண்கள் அவசரமாக மருத்துவமனைகளுக்கு விரைந்து சிசேரியன் செய்து குறைமாதத்திலேயே குழந்தை பெற்றுக் கொண்டார்கள். யுத்தம் தொடங்கிவிட்டால் அப்புறம் மருத்துவ மின்சார வசதிகள் இருக்காது. 2000ம் ஆண்டு முடிந்து புதிய மில்லனியம் பிறந்தபோது தனது குழந்தையும் அந்த நேரத்தில் பிறக்கவேண்டும் என்று உலகம் முழுக்க சிசேரியன் செய்துகொண்டவர்கள் ஏராளம். ஆனால் நாமோ யுத்தமின்றி மில்லனியம் இன்றி வெளிநாடுகளின் சிசேரியன் விகிதத்தை வேகமாக எட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.


சிசேரியன் எண்ணிக்கை அதிகமானது என்பது உண்மைதான். ஆனால் அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கு. விஞ்ஞானம் இவ்வளவு வளர்ந்த பின்னும் நமக்கு கர்ப்ப காலம் பற்றிய முழுமையான அறிவு இல்ல. முறையான செக்கப் உணவு உடற்பயிற்சி பரா மரிப்பு தைரியம்.. இப்படி பல அம்சங்கள் சேர்ந்துதான் சுகப் பிரசவத்துக்கு வழிவகுக்கும். நம்ம பெண்கள்கிட்ட இப்ப கவனக்குறைவு அதிகமாயிட்டே வருது. முன்னெல்லாம் கூட்டுக் குடும்பமா வாழ்ந்தாங்க. வீட்டில் நாலு பெரியவங்க எப்போதும் இருந்தாங்க. நிறைய குழந்தைகளை பெற்ற அனுபவசாலிகள் இருந்ததால் கர்ப்பிணிகளை நல்ல முறையில் கவனிப்பாங்க. இப்படி உக்காராதே அப்படி படுக்காதே குனிஞ்சு நிமிர்ந்து வேலை பாரு என்று கண்காணிப்பு இருந்துகிட்டே இருக்கும். இப்ப எல்லாரும் தனிக்குடித்தனம் போயிட்டாங்க. நிறைய பெண்கள் வேலைக்கு போறாங்க. பிரசவத்துக்கு பத்து நாளைக்கு முன்னாடிதான் லீவு போடுறாங்க. இதனால வெயிட் கூடுது. ரத்த அழுத்தம் கர்ப்பகால ஜன்னி பனிக்குடம் உடையறது அப்படின்னு பல பிரச்னைகளோடதான் டாக்டர்கிட்டே வர்றாங்க. எங்களுக்கு அம்மா குழந்தை இரண்டு பேருடைய உயிரும் முக்கியம். வேற வழி இல்லாம சிசேரியன் செய்ய வேண்டியிருக்கு. அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவம் ஆனா எங்களுக்கு ரொம்ப நல்லது. சீக்கிரம் வீட்டுக்கு அனுப்பிடுவோம். சிசேரியன் நடந்தா பத்து நாள் பெட்ல வெச்சிருந்து அனுப்பணும். மத்த வங்களுக்கும் கஷ்டம்.. என்கிறார் டாக்டர் சுந்தர வல்லி.

அறிவியல் வளர வளர அன்றாட வாழ்க்கைமுறை மாறுது. இது பெண்களின் உடலமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்து என்கிறார் சுந்தரவல்லி. வயித்துல இருக்கிற குழந்தை தானாக வெளியே வரணும்னா இடுப்பு எலும்பு கொஞ்சம் விட்டுக் கொடுக்கணும். முன்னெல்லாம் பதினாறு பதினேழு வயசுல கல்யாணம் ஆனதால எலும்புகள் இளசா இருக்கும். பிரசவம் பிரச்னையாக இல்லை. இப்ப பெண்களுக்கு இருபத்தெட்டு முப்பது வயசுலதான் கல்யாணம் ஆகுது. நல்லா படிச்சு வேலைக்கு போய் சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகுதான் கல்யாணம் பண்றாங்க. கல்யாணத்துக்கு அப்புறமும்கூட உடனே குழந்தை வேணாமேன்னு தள்ளிப்போடுவாங்க. முப்பது வயசுக்கு பிறகு இடுப்பு எலும்பு முதிர்ச்சி அடைஞ்சிடும். வலி பொறுக்க முடியலையே.. சிசேரியன் பண்ணிடுங்க!ன்னு கேக்குறாங்க. நாலு சதவீத சிசேரியன் ஆபரேஷன் உறவுமுறை திருமணங்களால நடக்குது. ரொம்ப நெருக்கமான உறவுகள்ல திருமணம் செய்தால் பல சிக்கல்கள் வரும். எனக்கு தெரிய சில பணக்கார பெண்களுக்கு வேலைன்னா என்ன என்பதே தெரியாது. அவங்களுக்கு சும்மா தண்ணீரை தரையில் ஊற்றி அதை பெருக்கிவிடச் சொல்லுவாங்க. சொகுசான வாழ்க்கைக்கு வந்துட்டா அதோட லாப நஷ்டங்க ளையும் ஏத்துகிட்டு தானே ஆகணும் என்கிறார்.

உடல் பலவீனம் தான் அதிக சிசேரியனுக்கு முதல் காரணம் என்று அடித்து சொல்கிறார் சிவகாமி. நாம கொஞ்ச கொஞ்சமா நாகரீக கோமாளிகளா மாறிட்டு வர்றோம். கருப்பை வளர்ச்சி பதிமூணு வயசுல தொடங்குது. டயட்டுங்கிறது டீன்ஏஜ்லதான் தொடங்கணும். புல்லா கேஸ் அடைச்ச கூல்டிரிங்ஸ் குடிச்சிட்டு பல பொண்ணுங்க காலத்தை ஓட்டுறாங்க. வெறும் சிப்ஸ் சாப்பிட்டு வாழுற பெண்களை எனக்குத் தெரியும். சாதாரணமா வாழவே இவங்களுக்கு கலோரி போதாது. இதுல சுகபிரசவம் எங்கிருந்து சாத்தியம் கர்ப்பமா இருக்கிறபோது மட்டும் ஹார்லிக்ஸா குடிச்சா உடம்புல சத்து வந்துடாது. டீன்ஏஜ்ல இருந்தே சரியான சாப்பாட்டை தொடங்கணும். ஸ்லிம்மா இருக்கணும்னு ஆசைப்பட்டு உள்ளதும் போயிடுது. நிறைய சாப்பிட சொல்லல. சத்தான உணவை சாப்பிடணும். நார்ச்சத்து இரும்புசத்து கால்சியம்னு புரோட்டின் கார்போ ஹைட்ரேட் இதெல் லாம் உடம்புல ஒரு குறிப்பிட்ட அளவு இருக்கணும். இதெல்லாம் கண்டிப்பா நம்ம பாஸ்ட்புட் கடைகள்ல இருக் காது. பெண்கள் உடல் நிலையில் பெற்றவர்கள்கூட போதிய கவனம் செலுத்தறது இல்ல. பீட்ஸா சாப்பிட்டு சுகமா பிள்ளை பெத்துக்கணும்னு ஆசைப்பட்டா எப்படி கோலாக்களை விட்டுட்டு இளநீர் தர்பூஸ் வெள்ளரி மோர்னு சாப்பிடணும். 100 கிராம் சோயா பீன்ஸ்ல 40 கிராம் புரோட்டின் இருக்கு. எல்லா கீரையிலும் சத்துகள் இருக்கு. மூணு வேளைக்கு இரண்டு வேளை உண்ணா விரதம் இருந்து மத்தியானம் கொஞ்சம் தயிர் சாதம் மட்டும் சாப்பிட்டா சிசேரியன் கன்பர்ம்டு! என்று அழுத்தம் திருத்தமாக கண்டிக்கிறார் சிவகாமி.

நவீன ஸ்கேன் கருவி வந்த பிறகும் சிசேரியன் அதிகமாவது எப்படி ?

இந்தியா மொத்தமும் பத்துல இருந்து பதினைந்து சதவீதம்தான் சிசேரியன் கேஸ். மீதியெல்லாம் நார்மல் டெலிவரிதான். சிசேரியன் ஒண்ணும் பெரிய டேஞ்சர் இல்லை. வலி தாங்கமுடியாம ஆபரேஷன் பண்ணச் சொல்லி கேக்கிறவங்க அதிகம். இப்ப எபியூடரல் அனஸ்தீசியாங்கிற முறை வந்தாச்சு. முதுகுத் தண்டுல மயக்க ஊசி போட்டு வலி இல்லாம குழந்தை பெத்துக் கலாம். இது எல்லா மருத்துவமனைக்கும் பரவிய பிறகு சிசேரியன் குறையும். உடம்பு பலவீனமா இருக்கிறவங்கள வெச்சுகிட்டு எத்தனை ஸ்கேன் மெஷின் கண்டுபிடிச்சும் என்ன பலன் நிரந்தர வெற்றிக்காக தற்காலிக தோல்வியை ஏற்கலாம். சிசேரியன் அப்படித்தான். எத்தனையோ தாய்மார்கள் உயிர் அதனாலதான் காப்பாத்தப்படுது. அந்தக் காலத்துல சிசேரியன் தெரியாம செத்துப்போனவங்க எத்தனை பேரோ என்று சிக்கலை ஸ்கேன் செய்து பேசுகிறார்.

அந்தக் காலத்தில் கர்ப்பிணிகள் என்ன உணவு முறைகளை கடைப்பிடித்தனர்?

கண்டிப்பா புழுங்கல் அரிசி சாதம்தான். அதுவும் கைக்குத்தல் அரிசி. மிஷின் வாசமே புள்ளத் தாய்ச்சி உடம்புல பட விடமாட்டோம். சோறு அலுமினிய பாத்திரத்துல ஆக்கமாட்டோம். கர்ப்பிணிகளுக்கு பானை சோறுதான் பதம். சோறு ஒரு வேளைதான். நாட்டு அவரைக்காய் தனியா காஞ்ச மிளகாய் வெங்காயம் சீரகம் மிளகு கருவேப்பிலை இதையெல்லாம் விளக்கெண்ணெய் விட்டு பொன்னாட்டம் வறுப்போம். இதை சாதத்தோடு கலந்து தந்தா இரண்டு வருஷத்துக்கு தாய்ப்பாலுக்கு பஞ்சமில்ல. தாய்ப்பால் கொடுக்க கொடுக்க அடுத்த சினைமுட்டை தள்ளிப்போகும். மொதக் குழந்தைக்காக பானை மாதிரி வந்த வயிறு மொத்தமா இறுகிடும். அப்புறம்தான் அடுத்த பிரசவம். வைத்தியர் வந்து பித்தநாடி கர்ப்பநாடி பாத்துட்டு தேதி சொல்லிட்டு போனாருன்னா தப்பவே தப்பாது. ஏழாவது மாசம் வெந்தயப்பொடி ஓமப்பொடி நார்த்தங்கா ஊறுகாயோடு தாய்வீட்டுக்கு போனா கையில பிள்ளையோட திரும்பி வருவாளுங்க. கர்ப்பமான உடனே தாய்வீட்டுக்கு போனா வேலை செய்யாம ஏமாத்திடுவாங்க. மாமியார்கிட்ட குனிஞ்சு நிமிர்ந்து வேலை பார்த்ததுல சுகப்பிரசவம் உறுதியாயிடும். எங்க ஊர்ல வெறகு பொறுக்க போய் முட்டி போட்டு புள்ளை பெத்து தோள்லயும் வெறகை தலைலயும் தூக்கிட்டு நடந்து வர்றத எங்கண்ணால பாத்திருக்கேன். சாப்பிட்ட ஊட்டம் உடம்புல ஊறி தெம்பு தரும். அப்பல்லாம் பச்ச ஒடம்புக்காரி பதவிசா நடக்கணும்னு சொல்லுவோம் புருசன்கிட்ட. இப்ப ஆப்பரேசன் ஒடம்புக்காரி அண்டாம பாத்துக்கோன்னு சொல்ல வேண்டி இருக்கு. எல்லாம் காலம் செய்ற கோலம்! என்று குறும்பாக சிரிக்கிறார் லிங்கேஸ்வரி.

இந்த காரணங்கள் தவிர குறிப்பிட்ட நாள் நட்சத்திரத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்று சிசேரியன் செய்ய சொல்லி வற்புறுத்துபவர்கள் ஒருபக்கம். தொண்டு என்று இருந்த மருத்தவம் தொழில் என்று மாறியதால் வந்த பணத்தாசை ஒருபக்கம். பெண் பிரசவிக்கும்போது கணவனும் உடனிருக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படும் வேளையில் ஆயுத உதவியால் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை குறைக்கும் பொறுப்பு மக்களிடம் பாதியும் மருத்துவர்களிடம் மீதியும் இருப்பதாகத்தான் சொல்லவேண்டும்.


சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Empty Re: சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள்

Post by ரூபன் Mon Oct 12, 2009 1:50 am

பயனுள்ள மருத்துவத்தகவல் சிவா அண்ணா
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Empty Re: சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள்

Post by மீனு Mon Oct 12, 2009 6:50 am

இப்போது வலி இல்லாமல் குழந்தை பெற விரும்புகிறார்கள்..
ஷிவா அண்ணா அருமையான தகவலை தந்து இருக்கின்றீர்கள்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Empty Re: சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள்

Post by தாமு Mon Oct 12, 2009 8:41 am

அருமை அருமை சிவா அண்ணா.... சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Empty Re: சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள்

Post by சுடர் வீ Mon Oct 12, 2009 8:51 am

ஆனால் அனஸ்திசியா முறையால் பிற்காலத்தில் பெண்கள் பாதிப்படைவதாக அறிகிறேன்.


இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Back to top Go down

சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Empty Re: சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள்

Post by mdkhan Mon Oct 12, 2009 10:21 am

சிசேரியன் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் தகவலை தந்த சிவா அண்ணன் அவர்களுக்கு எனது நன்றிகள். சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் 678642


சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Eegaraitkmkhan
சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Empty Re: சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள்

Post by nandhtiha Mon Oct 12, 2009 11:02 am

வணக்கம்
சிசேரியன் மூலம் குழ்ந்தைகள் பெற்றுக் கொண்டால் மாதவிலக்கு நின்றவுடன் அவர்களுக்குப் பக்கவாத நோயும் வரும் வாய்ப்பு இருக்கிறது என்றும் விஞ்ஞான நூல்கள் கூறுகின்றன.விழிப்புணர்வு உண்டாக்கிய மதிப்புக்குரிய சிவாவுக்கு நன்றி
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள் Empty Re: சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum