ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி .

2 posters

Go down

கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Empty கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi Wed Oct 24, 2012 8:10 am

கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் அவர்கள் மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தில்
"முயற்சி திருவினையாக்கும்" என்ற தலைப்பில்ஆற்றிய உரை .

தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
.
இன்று தன்னம்பிக்கை பயிற்சி என்றால் ஏதோ மேல் நாட்டில் பரவலாகப் பேசப்படும் அரைகுறை ஆங்கிலத்தில் பேசுபவர்க்கும் புரியாமல் , அதை கேட்பவர்களுக்கும் புரியாமல் ஏதோ சந்திர மண்டலத்திற்கு அழைத்துச் செல்வது போன்ற உணர்வுகளை ஏற்படுத்துகின்றனர் .நம்மவர்களும் தன்னையும் , தன் மொழியையும் அறியாததால் பணத்தைச் செலுத்தி புரியாதந்திலேயே உழல்கின்றனர். வாழ்வின் பெரும்பகுதி சோதிடம் ,வாசுத்து,சகுனம் அனைத்திற்கும் செலவழித்து பின் தன்னம்பிக்கை பயிற்சி என ஆங்காங்கே அல்லலுருகின்றனர்.

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் இத்தகவல்களை அறிந்ததால்தான் "முயற்சி திருவினையாக்கும்" என்ற தலைப்பை கவிஞர் இரா .இரவி வழங்கி உள்ளார். ஐயன் திருவள்ளுவரின் குறட்பாவிலிருந்து தலைப்பை வழங்கி உள்ளத்திலிருந்து தன்னம்பிக்கைக்கும் வாழ்க்கைக்கும் பொய்யாமொழியார் வழங்கிய கருத்துக்கள் நாம் அறிந்துகொண்டாலே வாழ்வில் வெல்லலாம் .

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும் . ( குறள் 616 )

உங்களுடைய அனைத்து முயற்சிகளும் மேன்மையைத் தரும் எறும்பிலிருந்து அனைத்து உயிர்களும் முயல்வதைக் காண்கிறோம் .ஆறறிவுள்ள மனிதர்கள் முயன்றால் உலகத்தையே நம் கைக்குள் கொண்டுவரலாம் .முயற்சி இல்லையெனில் வறுமையும் , வெறுமையும் நம்மைப் பற்றிக் கொள்ளும் .
வள்ளுவப் பெருந்தகை எண்ணங்கள் எப்படி? இருக்க வேண்டும் என்று கூறுகிறார் பாருங்கள் .

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்; மற்றுஅது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து . ( குறள் 596 )

சிந்தனை அனைத்தும் உயர்வாக சிந்தியுங்கள் .நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையோடு சிந்தியுங்கள். அந்த சிந்தனையின் உன் உணர்வுதான் வெற்றி என்பதை உணருங்கள் .தன்னம்பிக்கை நட்சத்திரமாக இக்குறளைக் கொள்ளலாம் .பல துறைகளில் நட்சத்திரங்களை உருவாக்கிய குறள் இக்குறள்.
சிந்தனைக்குப் பின் செயலிற்குவள்ளுவர் கூறுகிறார் .உள்ளுணர்வோடு கேளுங்கள் .

எண்ணித் துணிக கருமம் ; துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு . ( குறள் 467 )

சிந்தித்த சிந்தனையை செயலாக்கும் முன் பல முறை எண்ணித் தொடங்குங்கள் . அதன் சிகரத்தை தொடும் வரை மாற்று சிந்தனைக்கு இடம் கொடுக்காதீர்கள் என்ற ஆணித்தரமாகக் கூறுகிறார் .
எண்ணித் தொடங்கும் செயலை சரியான காலத்தில் தொடங்குங்கள் .என்பதை வள்ளுவப் பெருமான் சொல்லும் குறளைப் பாருங்கள் .

அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின் ? ( குறள் 483 )

காலம் என்பதை ராகு காலம் எமகண்டம் என்று எண்ணாதீர்கள் .நாம் செய்யும் செயலுக்கேற்ற காலம். விவசாயி என்றால் உழ,விதைக்க ,நாற்றுநட ,அறுவடை என அனைத்திற்கும் காலம் உண்டல்லவா தொழிலகம் எனில் பொருள்கள் தேவைக்கேற்ப உற்பத்தி என்பதைக் கொள்ள வேண்டும் .கல்வி எனில் கல்விக்கான ஆண்டு என்பதைக் கருத்தில் கொள்க .சரியான காலமும் அதற்குத் தேவையான கருவிகளும் கொண்டு செயலைச் செய்தால் வெற்றிச் செயலாக முடியும் .

காலம் மட்டுமல்ல பாதுகாப்பான இடத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டும் .என பொய்யா மொழியார் பகிர்கிறார் .

ஆற்றாரும் ஆற்றி அடுப, இடன்அறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின். ( குறள் 493)

சிந்தனை செயல் காலம் கருவி இதனோடு பாதுகாப்பான இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் .நாம் எத் தொழில் செய்கிறோம் அதற்கு வலிமை சேர்க்கும் வண்ணம் இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் .தற்போது பெருந்தொழில் புரிவோர் கூட வாசுத்து என்று பொருளையும், நேரத்தையும் வீணடிக்கின்றனர் .
அனைத்தையும் கூறிய பேராசான் வாள்ளுவர் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று கூறுகிறார் நோக்குங்கள் .

முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்
இன்சொ லினதே அறம். (குறள் 93 )

உவகையோடு முகமன் கூறுதலும் இனிய பார்வை நோக்கலும் ,மனத் தூய்மையான செயலாக்கமும், இனிய சொற்களைப் பேசும் அறங்கள் வேண்டும் .எனக் கூறுகிறார் .

தன்னம்பிக்கைச் சின்னங்களே யாம் மேற்குறிப்பிட்ட செயலோடு இக்குறளின் அறச் சாரங்களையும் நடைமுறைப் படுத்தினால் வெற்றி நிச்சயம் . அனைத்தையும் திட்டமிட்டு நடைமுறைப் படுத்தினாலும் யார் எவர் நம் சிந்தனைக்கு ஏற்றவாறு செல்கிறார்களா? நிறுவனம் செல்கிறதா? என்பதைஅறிய ஒருவரை நியமிப்போம் அவரும் சரியானவரா ? என அறிய வள்ளுவர் குறும் நெறியைக் காணுங்கள் .

ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல் ( குறள் 588 )

ஒருவர் நம் நிறுவனம் குறித்துக் கூறினாலும் அவரும் சரியாகக் கூறுகிறாரா ?என ஒற்று அறிந்து உண்மையைத் தெளிவுற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .

எச்செய்தாலும் இடர்பாடுகள் வருவது இயல்பு .அதை எப்படிக் கடக்க வேண்டும் என ஆசான் வள்ளுவர் கூறுவதைக் கேளுங்கள் .

மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து ( குறள் 624 )

பாரத்தை சுமக்கும் எருது மேட்டுப் பகுதி வரும்போது தடைகளை மீறி முயன்று ,முயன்று இழுக்கும் . அதைப்போன்று நாம் எடுக்கும் முயற்சியில் சிக்கல் வரும் .அதை முயன்று ,முயன்று வெற்றிகொள்ள வேண்டும் .
வாழ்வில் வெற்றி பெற்று இந்த வையமும் மகிழ்ச்சியில் திளைக்க குறளாசான் வழங்கும் வழியைப் பாருங்கள் .
பகைநட்பாம் காலம் வருங்கால் முகம்நட்டு
அகம்நட்பு ஒரீஇ விடல் . ( குறள் 830 )

உலகில் உள்ள அனைத்து மனித முன வேறுபாடுகளையும் குறள் வழி உணர்த்திய பெருமான் .நமக்கு குடும்பத்திற்கும், பணிக்கும், கொள்கைகளுக்கும் ,நிறுவனதிற்கும் உடன்படாத மாந்தரிடத்தும் காணும் வாய்ப்பு வருமானால் முகத்தால் சிரித்து அகத்தில் தெளிவோடு இருங்கள் என உணர்த்துகிறார் .
இத்தனையும் கூறிய அறிவாசான் வள்ளுவர் ஏற்காத பேதைகள் கண்டிக்கும் கண்டிப்பாய் கூர்ந்து நோக்குங்கள் .

ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும்
தான்புக்கு அழுந்தும் அளறு . ( குறள் 835 )

செய்ய வேண்டிய கடமைகளை விடுத்து விலக வேண்டிய கயமைகள் விடுத்து தற்பெருமைக்காக ஒருவன் ஒரு செயலைச் செய்வானானால் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் சோதனைத் துன்பத்தில் மூழ்குவான் பேதை என எச்சரிக்கிறார் .

வாழ்கையின் செழுமைக்குக் வழி கூறிய வள்ளுவர் வாழ்வின் எல்லா நிலைகளிலும் தாங்கள் உயர்ந்த போது எளியவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என மனிதநேயக் குல விளக்கு குறளார் கருத்தை ஊன்றிக் கவனியுங்கள் .

சாதலின் இன்னாதது இல்லை இனிது அதூஉம்
ஈதல் இயையாக் கடை . ( குறள் 230 )

நாம் எல்லா வகையிலும் மேம்பட்டு இருக்கும்போது உலகில் நம்மோடு வாழும் எளியவருக்கு கொடுத்து ஈகைக் குணம் இல்லையென்றால் சாதலே மேல் எனக் கூறுகிறார் .
பெருமக்களே , தன்னம்பிக்கை சிங்கங்களே வாழ்வில் வெற்றிபெறுவது எளிது .வள்ளுவர் கூறிய தடத்தில் பயணித்தால் வெற்றி நிச்சயம் என்னுடிய வெற்றிப் பாதை குறள் வழிப் பாதை .இப்பாதைதான் தன்னம்பிக்கை பாதை. மாறுவோமானால் நம்முடைய தோல்விக்கு நாமே பொறுப்பாகிறோம் .

தீதும் நன்றும் பிறர் தர வாரா .
என்ற கனியன் பூங்குன்றனார் வரியினை நினைவுறுத்தி விடை பெறுகிறேன் .நன்றி .வணக்கம் .


--

--




நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Empty Re: கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி .

Post by அசுரன் Wed Oct 24, 2012 9:12 am

அருமையான சொற்பொழிவை எங்களுக்கு தொகுத்தளித்த கவிஞர் இரவி அவர்களுக்கு எனது நன்றிகள்.. இதை எனது மாணவர்களுக்கு பயன்படுத்திக்கொள்கிறேன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Empty Re: கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi Sun Mar 10, 2013 12:29 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Empty Re: கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கற்றபின் நிற்க ... ! நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» யாதும் ஊரே ! நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
» மு .வ .பொன்மொழிகள் தொகுப்பு ம .ரா .போ. நூலிலிருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி
» உயிர்களின் நேசர் திருவள்ளுவர் கவிஞர் இரா. இரவி.
» மதுக்கடைகளை மூடு தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum