ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி

+3
அசுரன்
ரா.ரா3275
சிவா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி Empty மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி

Post by சிவா Mon Oct 22, 2012 6:42 pm

மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி 22-chinmayi22-600

சென்னை: மறவர் சீமையில் தமிழ் வளர்ச்சி குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். தமிழக மீனவர்களை விமர்சித்து நான் டிவிட் செய்யவில்லை என்று பாடகி சின்மயி விளக்கம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அவர் அளித்துள்ள நீண்ட விளக்கம்....

ஒட்டு மொத்த தமிழர்களுக்கு எதிரானவள், ஒரு குறிப்பிட்ட சாதித் திமிர், மீனவர்கள் குறித்து தரக்குறைவாகப் பேசினேன் என்று பலரும் தங்களுக்குத் தோன்றிய வகையில் மனம் போன போக்கில் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்கள்.

நான் ஒரு தமிழச்சி. பல தமிழர்களின் வீட்டின் செல்லப் பிள்ளை. தமிழர்களின் ஆதரவினாலும், கடவுள் கிருபையினாலும், என் தாயாருடன் ஆசிர்வாததினாலும் வளர்ந்து வரும் இளம் திரைக் கலைஞர்களில் நானும் ஒருவள்.

ஐயங்கார் குடும்பம்


சிறு வயது முதலே என்னை சீராட்டி, பாராட்டி வளர்த்து வருவது இந்தத் தமிழ்ச் சமூகம் தான். பாரம்பரியமாகவே தமிழ் வளர்க்கும் பரம்பரையில் வந்தவள் நான். வித்வான் ரா.ராகவ ஐயங்கார் , முனா ராகவ ஐயங்கார் அவர்களின் பேத்தி என் தாயார். மறவர் சீமையில் தமிழ் வளர்த்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவள் தான் நான்!

உள்ளூர்த் தமிழர்களானாலும் சரி, வெளிநாடுகளில் வசிக்கும் புலம் பெயர் தமிழர்களானாலும் சரி என்னை அவர்களின் சொந்த சகோதரியாகவே பார்த்து வருகிறார்கள். நானும் அவர்களிடத்தில் எனக்குள்ள மதிப்பை கட்டிக் காத்து வருகிறேன். அதிலும் சிறப்பாக இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த வரையில், எங்கள் மறவன் சீமையின் ஒரு Extension ஆகத்தான் நாங்கள் கருதுகிறோம். அவர்களுடைய கஷ்டத்தை இன்னும் அதிகமாக உணர்ந்திருக்கிறோம். நான் இலங்கை தமிழர்களுக்காக நடத்தி வந்த கச்சேரிகளில் பங்கு பெற்று மருத்துவம் மற்றும் படிப்பிற்கு சம்பந்தப்பட்ட Charitieகளுக்கு நிதியுதவி திரட்டியிருக்கிறோம்.

இந்தச் சமுதாயத்தால் வளர்ச்சி பெற்று வரும் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னால் இயன்ற அளவு சமுதாயம் வளரவும் பங்களிப்பு தரவேண்டும் என்ற நம்பிக்கை உடையவள் நான்.

வரவேற்றார்கள், பேசினார்கள், விவாதித்தார்கள்

என்னுடைய கடுமையான பணிகளுக்கு இடையே சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் மூலமாக என்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்வதோடு இல்லாமல் அடுத்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை எப்படி அணுகுகிறார்கள் என்று தெரிந்து கொண்டால் எனக்கு மிகுந்த பயனாக இருக்கும் என்று நம்பினேன். சுமார் இரண்டாண்டுகளுக்கு முன் சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றில் இணைந்து கொண்டேன். உலகெங்கிலும் வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வரவேற்றார்கள். பேசினார்கள். விவாதித்தார்கள்.

திடீரென ஒரு நாள் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதலைக் கண்டிக்கக்கோரி ட்விட்டரில் ஒரு சிலரால் ட்விட்டுகள் வெளியாகின. #TNFisherman என்ற hashடேக் (தொடர் கீச்சு) மூலம் அனைவரும் இலங்கை அரசை கண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தத் தொடங்கினார்கள். என்னையும் கேட்டார்கள். நல்லதொரு காரியத்தில் நானும் இணைந்து செயல்படுவதில் என்றுமே தயங்கியதில்லை. ஆனால் மேற்படி #TNFishermanதொடர்பில் வெளியான பல்வேறு ட்வீட்டுகளில் நம் நாட்டு மூத்த அரசியல் தலைவர்கள் உள்பட பலரை கேவலமாகவும், அவதூறாகவும் திட்டி ட்விட்டினார்கள். எனவே எனக்கு இந்த ஒரு குழுவுடன் இணைந்து (இந்த எண்ணம் நல்லதாக இருந்தாலும்) குறிப்பிட்ட hashtag ஐ ஆதரிக்க மாட்டேன் என்று கூறினேன்.

தொடர் கீச்சில் இணைய மறுத்தேன்

இந்த hashtag இல் மேற்கண்ட காரணங்களுக்காக நான் வெகுவாக புறக்கணிக்கும் ஒரு குழுவினரால் வற்புறுத்தப் பட்டதால் இந்தத் தொடர் கீச்சில் இணைய மறுத்தேன். இதற்கும் மீனவர்கள் மேல் எனக்குள்ள அனுதாபத்திற்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. என் அனுதாபத்தை என்னுடைய முறையில், hashtag போடாமல் நானே தனியாக ஒரு ட்விட் போட்டேன். இவர்களுடன் இணைய மறுத்தேன். இது தவறா? இதில் மீனவர்களுடைய பிரச்னையை பேசுகிறார்கள, அல்லது தங்களுடைய தனிப்பட்ட பிரச்சனைய புகுத்துகிறார்களா?

சாப்பிடுவதும் இல்லை, தொட்டியில் வளர்ப்பதும் இல்லை

அடுத்து "நீங்கள் மீன் சாப்பிடுவது இல்லையா?" என்ற கேள்விக்கு "இல்லை. நான் சைவம்" என்று பதில் கூறினேன். "மீன் தொட்டி வாஸ்துக்காக இருக்கிறதே" என்று அதே ட்விட்டில் பதில் கேலி செய்த பொது, "நான் மீன் சாப்பிடுவது இல்லை, தொட்டியில் வைத்து துன்புறுத்துவதும் இல்லை. PETA supporter" என்று ஒரு "புன்னகை" போட்டேன். இந்த பதில் கூட மேலே சொன்ன#TNFisherman Hash டேக் பிரச்னை நடப்பதற்கு முதல் நாள் வேறொரு கருத்துப் பரிமாற்றத்தின் போது தான்! ஆனால் நான் மீனவர்களைக் கொல்பவர்களைக் கண்டிக்க மாட்டேன்.

மீனவர்கள் மீன்களை கொல்கிறார்கள் என்றெல்லாம் கூறியதாக தகவல் திரித்துக் கூறப்பட்டு இணையம் முழுவதும் பரவியது. இந்த கற்பனை கீச்சுக்குச் சொந்தக்காரர் திருவாளர் @rajanleaks. இதெல்லாம் உண்மை தானா என்று உங்களில் பலர் என் தரப்பு என்று ஒன்று இருக்கவேண்டும் என்று கூட நினைக்கத் தவறியது எனக்கு மிகவும் வருத்தமே. மற்றும் என்னுடைய சாதி, மதம், இனம் என்று சகல வகைகளிலும் ஏசப்பட்டேன் .

அந்த தருணத்தில் எழுந்த உணர்ச்சியின் வெளிப்பாடு

பிறகொரு சமயம் ‘இடஒதுக்கீடு' தொடர்பான கருத்து விவாதத்தில் ஒரு மாணவி நூற்றிக்கு அருகில் மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், 'FC' என்ற காரணத்தினாலும், பண வசதிக் குறைவாலும், தனது மேற்படிப்பு தடைபட்டு போன வருத்தத்தை பகிர்ந்த போது, அந்த தருணத்தில் இந்த இட ஒதுக்கீடு அவசியம் தானா என்று நினைத்தேன். அது அந்த தருணத்தில் எழுந்த உணர்ச்சியின் வெளிப்பாடு. நீங்களும் அப்படித் தான் யோசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் மீண்டும் என் சாதியைப் பிடித்து இழுத்து, ‘இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவள் சின்மயி' என்று பிரச்னை கிளப்பப்பட்டது.

அன்றிலிருந்து இன்று வரை பல சமயங்களில் பல இடங்களில் என்னை நேரடியாகவும், மறைமுகமாகவும் படு கேவலமான வசைச் சொற்களைக் கொண்டு ட்விட்டரில் விமரிசித்து வருகிறார்கள் ஒரு சிலர் கொண்ட கும்பல் ஒன்று.

என் தாய் வருந்தினார்


என்னைப் பெற்று வளர்த்தெடுத்த என் தாய்..என்னுடைய வளர்ச்சிக்காவே தன் நேரம் முழுவதையும் செலவழித்து வரும் என் தாய்.. இந்த மாதிரியான வசைச் சொற்களைக் கண்டு மனம் வருந்தினார். இப்படிப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவு செய்து, இந்த மாதிரி தொடர்ந்து வசைபாடுபவர்களின் பட்டியலைத் தயாரித்து போலீஸ் துறையிடம் கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம்.

பொது வெளியில் இப்படி அநாகரீகமாக நடந்த பலரின் பின்னணியை என் தாயார் கண்டறிந்து இவர்களில் பெரும்பாலானவர்கள் இள வயதும், திருமணம், சிறு குழந்தைகள் என்ற நிலையில் இருப்பதை உணர்ந்து அவசரத்தில் சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவேண்டாம், பொறுமையாக பேசி உணர்த்த முயற்சிக்கலாம் என்று பலரிடம் அலைபேசியிலும், அவர்களின் நண்பர்கள் மூலமாகவும், ஒரு முடிவு காண, என் தாயார் முயற்சித்தார். அதன் விளைவு தான் திரு sharankay அவர்களின் மிக கீழ்த்தரமான கீசுகளின் வெளிபாடு.

இதற்கு பிறகும் நாங்கள் சட்டபூர்வமான நடவடிக்கையை எடுக்காவிட்டால் எங்களுக்கே மிகவும் தீதாத முடியும் என்ற காரணத்தினால் இந்த முடிவிற்கு தள்ளப்பட்டோம். நாங்கள் பரிதாபப்பட்டதை பயந்து விட்டதாக நினைத்து அதன் பிறகு தான் அநாகரிகத்தின் உச்சத்தையும் கடந்துவிட்டனர். மற்றபடி யாரையும் பழிவாங்குவதிலோ, தண்டனை வாங்கி கொடுப்பதிலோ எங்களுக்கு எந்த விதமான மகிழ்ச்சியும் கிடையாது.

என் அம்மாவையும் திட்டினார்கள்

இவற்றைத் தொடர வேண்டாம் என்று ஃபோன் மூலம் என் அம்மா சம்பந்தப்பட்டவர்களிடம் தொடர்பு கொண்டு பேச முயற்சித்த போதும் அதனை மிரட்டல் விடுவதாகக் கூறி திசை திருப்ப முயன்றார்கள். என் அம்மாவையும் மிகத் தரக்குறைவாக கிண்டல், கேலி செய்து ட்விட்டினார்கள்.

அதன்பிறகு சட்டத்தின் துணியை நாடுவதை தவிர வேறு வழில்லாத நிலைக்கு தள்ளப்பட்டோம்.

இதற்குப் பிறகும் ஒரு பத்திரிகையின் கார்ட்டூனிஸ்ட் மூலம் நாங்கள் பேசாத வார்த்தைகளை நாங்கள் பேசியதாகச் சொல்லி பொய்ச் செய்தி பரப்பி உலகம் முழுதும் உள்ள தமிழர்களின் கொந்தளிப்பான உணர்சிகளை தூண்டும் வகையாக விஷயத்தை திசை திருப்பப்பட்டது.

இந்நிலையிலும் ஏராளமான தமிழ்ச் சகோதர, சகோதரிகள் தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் எங்களுக்குச் செய்தார்கள். வழி நடத்தினார்கள். ஆறுதல் சொன்னார்கள்.

இந்தவொரு சிரமமான சூழலில் எனக்கு முழு ஆதரவளித்த ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்துக்கும் நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

தட்ஸ்தமிழ்


மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி Empty Re: மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி

Post by சிவா Mon Oct 22, 2012 6:43 pm

தமிழக மீனவர்களை விமர்சித்து டிவிட் செய்தாரா சின்மயி?

டிவிட்டர், பேஸ்புக்கில் தன்னை இழிவுபடுத்துவதாக குற்றம் சாட்டிய பாடகி சின்மயி மீது இப்போது குற்றச்சாட்டுகள் கொட்ட ஆரம்பித்திருக்கின்றன.

ப்ளாக், ட்விட்டர், பேஸ்புக் என சின்மயி கால்வைத்த இடமெல்லாம் சூடான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன.

'யாரும் தானாக முன்வந்து இவரை அவதூறாக எழுதுவதில்லை. மாறாக இவர் ஒரு விஷயத்தை எழுதப் போய், அதற்கு எதிர்வினையாக இவர் மீது குற்றச்சாட்டுகள் குவிய, ஒரு கட்டத்தில் அது ஆபாச கமெண்டுகளாக மாறியிருக்கிறது,' என்பதுதான் இவரை நீண்ட காலமாக சமூகத் தளங்களில் கவனித்து வருபவர்கள் கருத்தாக உள்ளது.

இந்த நிலையில் தன்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் வக்கிரமாக சிலர் எழுதி வருவதாக சில தினங்களுக்கு முன் போலீசில் புகார் கொடுத்தார் சின்மயி. உடனே சின்மயிக்கு ஆதரவாக ஒரு கோஷ்டியே வேலைப் பார்க்க ஆரம்பித்துவிட்டது.

இந்தப் பெண் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சாதி துவேஷத்தைப் பரப்ப ஆரம்பித்துள்ளதுதான் இப்போது பலரையும் கொதிப்புக்குள்ளாக்கியுள்ளது.

தனது ட்விட்டரில் 'நாங்கள் மீன்களை துன்புறுத்துவதில்லை, வெட்டி கொல்வதுமில்லை', என கூறியிருக்கிறார் சின்மயி என்பதுதான் குற்றச்சாட்டு. இது மீன் உண்பவர்களை மட்டுமல்ல, மீன் பிடித்தலையே தொழிலாகக் கொண்டுள்ள மீனவர்களையும் அவமதிப்பதாகும் என இப்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அதுமட்டுமில்லை.. "மீன்களை மீனவர்கள் கொல்கிறார்கள், மீனவர்களை இலங்கை கடற்படை கொல்கிறது, இரண்டும் ஒன்றுதான், இதில் இலங்கையை கண்டிப்பதற்கு என்ன இருக்கிறது?" என்றும் சின்மயி கூறியிருந்தாராம்.

ஈழத்து மக்களை, மீனவர்களை அவமானப்படுத்தியதோடு, மீனை உணவாகத் தந்து வறியோரின் பசிபோக்கிய இயேசு பிரானையே குற்றம்சாட்டுவதாகத்தான் சின்மயி கருத்து உள்ளதாக இணையத்தில் சின்மயிக்கு எதிரானோர் அணி திரள ஆரம்பித்துள்ளனர்.

திரைப்படங்களில் இனி சின்மயிக்கு எந்த வாய்ப்பையும் வழங்கக் கூடாது என வெளிப்படையான போராட்டங்களை முன்னெடுக்கவும் சில அமைப்புகள் தயாராகி வருகின்றன.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி Empty Re: மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி

Post by ரா.ரா3275 Mon Oct 22, 2012 7:43 pm

பாட்டுப் பாடுனோமா பணம் பார்த்தோமான்னு இல்லாம
நெருப்புல நெய் ஊத்திட்டிங்களேம்மா?....இது போட்டு அது போட்டு இது யாருன்னு கேட்குற
சின்னப் புள்ளைங்க வெளையாட்டு மாதிரி சின்மயி விவகாரம் ஆயிடுச்சே...
ம்ம்ம்ம்...இவுங்கள எல்லாமா நம்ம இனப் போராட்டத்துல இழுக்கணும்?...
கண்டுக்காம விடுங்க பாஸ்...தன்னால பிசுபிசுத்துப் போயிடும்...


மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி 224747944

மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி Rமறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி Aமறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி Emptyமறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி Rமறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி Empty Re: மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி

Post by அசுரன் Mon Oct 22, 2012 8:26 pm

தன்னோடு ஒத்த கருத்துடையவர் அல்லாதவர்களுடன் எதற்கு வாதம் விவாதம் எல்லாம் சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி Empty Re: மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி

Post by Guest Mon Oct 22, 2012 8:32 pm

புஸ்கு மாதிரி பேட்டி ல சொல்லிட்டு அப்டி சொல்லவே இல்லைய்னு சலம்பலாம் ,

முக நூல் , ட்விட்டர் ல நம்ம ஆளுக டவுசர உருவிடுவாங்க .. பார்த்து பேசுங்கப்பா ..
avatar
Guest
Guest


Back to top Go down

மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி Empty Re: மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி

Post by Aathira Mon Oct 22, 2012 8:36 pm

ரா.ரா3275 wrote:பாட்டுப் பாடுனோமா பணம் பார்த்தோமான்னு இல்லாம
நெருப்புல நெய் ஊத்திட்டிங்களேம்மா?....இது போட்டு அது போட்டு இது யாருன்னு கேட்குற
சின்னப் புள்ளைங்க வெளையாட்டு மாதிரி சின்மயி விவகாரம் ஆயிடுச்சே...
ம்ம்ம்ம்...இவுங்கள எல்லாமா நம்ம இனப் போராட்டத்துல இழுக்கணும்?...
கண்டுக்காம விடுங்க பாஸ்...தன்னால பிசுபிசுத்துப் போயிடும்...
இந்த வார்த்தைக்குப் பொருள் புரியலை ரா.ரா.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி Empty Re: மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி

Post by அசுரன் Mon Oct 22, 2012 8:36 pm

புரட்சி wrote:புஸ்கு மாதிரி பேட்டி ல சொல்லிட்டு அப்டி சொல்லவே இல்லைய்னு சலம்பலாம் ,

முக நூல் , ட்விட்டர் ல நம்ம ஆளுக டவுசர உருவிடுவாங்க .. பார்த்து பேசுங்கப்பா ..
ஆபாச படம் வெளியிட்டாங்கன்னு சொன்னது ரீலா?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி Empty Re: மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி

Post by Guest Mon Oct 22, 2012 8:39 pm

அசுரன் wrote:
புரட்சி wrote:புஸ்கு மாதிரி பேட்டி ல சொல்லிட்டு அப்டி சொல்லவே இல்லைய்னு சலம்பலாம் ,

முக நூல் , ட்விட்டர் ல நம்ம ஆளுக டவுசர உருவிடுவாங்க .. பார்த்து பேசுங்கப்பா ..
ஆபாச படம் வெளியிட்டாங்கன்னு சொன்னது ரீலா?

தெரியல அண்ணே .. அந்த மாதிரி செய்திகளுக்கு முக்கித்துவம் தரதில்லை ..
avatar
Guest
Guest


Back to top Go down

மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி Empty Re: மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி

Post by ரா.ரா3275 Mon Oct 22, 2012 8:50 pm

Aathira wrote:
ரா.ரா3275 wrote:பாட்டுப் பாடுனோமா பணம் பார்த்தோமான்னு இல்லாம
நெருப்புல நெய் ஊத்திட்டிங்களேம்மா?....இது போட்டு அது போட்டு இது யாருன்னு கேட்குற
சின்னப் புள்ளைங்க வெளையாட்டு மாதிரி சின்மயி விவகாரம் ஆயிடுச்சே...
ம்ம்ம்ம்...இவுங்கள எல்லாமா நம்ம இனப் போராட்டத்துல இழுக்கணும்?...
கண்டுக்காம விடுங்க பாஸ்...தன்னால பிசுபிசுத்துப் போயிடும்...
இந்த வார்த்தைக்குப் பொருள் புரியலை ரா.ரா.

அவங்க பொழுதுபோக்குத் தொழிலில் பொழப்ப ஒட்டுறவங்கன்னு அர்த்தம்...
இனப் போராட்டத்திற்கு இவர்களை இழுப்பதால் என்ன ஆகப் போகிறதுன்னு அர்த்தம்...
இவங்கள எதுக்கு தேவை இல்லாம தூக்கிப் பிடிக்கணும்னு அர்த்தம்...
பொதுவா கூத்தாடிகளை கொண்டாட வேண்டாம்னு அர்த்தம்...
அறிவுசால் சான்றோர்களை அழைத்து வாருங்கள் என்று அர்த்தம்...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி Empty Re: மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி

Post by Aathira Mon Oct 22, 2012 9:09 pm

ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ரா.ரா3275 wrote:பாட்டுப் பாடுனோமா பணம் பார்த்தோமான்னு இல்லாம
நெருப்புல நெய் ஊத்திட்டிங்களேம்மா?....இது போட்டு அது போட்டு இது யாருன்னு கேட்குற
சின்னப் புள்ளைங்க வெளையாட்டு மாதிரி சின்மயி விவகாரம் ஆயிடுச்சே...
ம்ம்ம்ம்...இவுங்கள எல்லாமா நம்ம இனப் போராட்டத்துல இழுக்கணும்?...
கண்டுக்காம விடுங்க பாஸ்...தன்னால பிசுபிசுத்துப் போயிடும்...
இந்த வார்த்தைக்குப் பொருள் புரியலை ரா.ரா.


அவங்க பொழுதுபோக்குத் தொழிலில் பொழப்ப ஒட்டுறவங்கன்னு அர்த்தம்...
இனப் போராட்டத்திற்கு இவர்களை இழுப்பதால் என்ன ஆகப் போகிறதுன்னு அர்த்தம்...
இவங்கள எதுக்கு தேவை இல்லாம தூக்கிப் பிடிக்கணும்னு அர்த்தம்...
பொதுவா கூத்தாடிகளை கொண்டாட வேண்டாம்னு அர்த்தம்...
அறிவுசால் சான்றோர்களை அழைத்து வாருங்கள் என்று அர்த்தம்...
இங்கும் முரண்பாடாவே பேசுறீங்க.. அப்ப கூத்தாடிங்களுக்கு அறிவு இல்லன்னு சொல்ல வரீங்க?
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி Empty Re: மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum